இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு ஓய்வுநாள் பிரமாணத்தை மீறினாரா? ஏன்?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
இயேசு ஓய்வுநாள் பிரமாணத்தை மீறினாரா? ஏன்?
Permalink  
 


சில நாட்களுக்கு முன், இயேசு ஓய்வுநாள் கற்பனையை ஏன் மீறினார் என்ற தலைப்பில் ஒரு திரி துவக்கப்பட்டதாக ஒரு ஞாபகம். அதில் நானுங்கூட ஒரு பதிவை இட்டதாகவும் ஞாபகம். ஆனால் தற்போது அத்திரியைக் காணவில்லை.

ஏதேனும் காரணத்திற்காக அத்திரி நீக்கப்பட்டிருந்தால், அக்காரணத்தைத் தெரிவித்து திரி நீக்கம் பற்றிய அறிவிப்பையும் வெளியிடுவதே முறையானது என்பதை தளநிர்வாகியின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.


-- Edited by இறைநேசன் on Friday 28th of May 2010 02:33:30 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
திரி நீக்கப்பட்டதா?
Permalink  
 


anbu57 wrote:

சில நாட்களுக்கு முன், இயேசு ஓய்வுநாள் கற்பனையை ஏன் மீறினார் என்ற தலைப்பில் ஒரு திரி துவக்கப்பட்டதாக ஒரு ஞாபகம். அதில் நானுங்கூட ஒரு பதிவை இட்டதாகவும் ஞாபகம். ஆனால் தற்போது அத்திரியைக் காணவில்லை.

ஏதேனும் காரணத்திற்காக அத்திரி நீக்கப்பட்டிருந்தால், அக்காரணத்தைத் தெரிவித்து திரி நீக்கம் பற்றிய அறிவிப்பையும் வெளியிடுவதே முறையானது என்பதை தளநிர்வாகியின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.



சகோதரர் அன்பு  அவர்கள்  மன்னிக்க வேண்டும். தங்களின் கருத்துக்கு நன்றி. தங்களின் ஞாபகங்கள்  எல்லாம் சரியானதே . .   
 
தாங்கள் சுட்டியுள்ள அத்திரியில்,  வசனங்களின் அடிப்படையில் தேவனின் வார்த்தைகளின் வல்லமையை விளக்குவதற்காக  நான் எழுதிய கருத்தில் எந்த தவறும் இல்லாதபோதிலும்  அது  சர்ச்சைக்குரிய ஒன்றாக இருபதாலும் அது பலருக்கு குழப்பத்தை ஏற்ப்படுத்தும் என்பதற்காகவும் அது மறைக்கப்பட்டது.
 
மேலும்  அத்திரியில் நமது அன்பு  சகோதரர் சில்சாம்,  கருத்தை சரிவர அறியாமலே:
 
"  இதுபோல கண்ட அரைவேக்காடுகளும் கண்டதையும் எழுதிவிடமுடியாது..!"
 
"நியாயபிரமாண போதகர் அன்பு" 
 
என்பது போன்ற அவரது பாணிக்கே உரிய  சில இனிய வார்த்தைகளை உபயோகித்துள்ளார். அதற்க்கு சரியான பதில் கொடுத்தால் அவர் மனம் புண்பட வழிசெய்யும் என்று கருதியும் அத்திரி நீக்கப்பட்டது. தேவையற்ற விவாதம் தேவையற்ற வார்த்தைகளை பதிவிட வழி செய்யும். ஆண்டவரின் மதிப்பு எவ்விதத்திலும் குறையவேண்டாம் என்று கருதியே அத்திரி நீக்கப்பட்டது. 
 
மற்றபடி நான் வேதவசனம்  சொல்வதைத்தான் அங்கு எழுதினேன்.  
 
யோவான் 5:18 அவர்( இயேசு) ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.

மேலேயுள்ள வசனம் இயேசு ஓய்வுநாள் கட்டளையை மீறி செயல்பட்டார் என்று
மிக தெளிவாக வேதத்தில் பதிவாகியுள்ளது. அதருக்கு வேறு பொருள் கற்ப்பிக்க நினைத்தாலோ அல்லது வேறு ஒரு வசனத்தின் மூலம் இவ்வவசனத்தை தவறானது  என்று தீர்த்தாலோ அதற்க்கு என்னால் பதில்தர முடியாது.
 
ஒருவேளை சகோதரர்கள் கருதுவதுபோல் பரிசேயர் பார்வைக்கு அப்படி தெரிந்திருந்தால் "என்று பரிசேயர் கருதியதால்" என்றோ அல்லது "பரிசேயரின் கண்களுக்கு அப்படி தவறாக  தெரிந்ததாலேயே" என்ற பதங்களை பயன்படுத்தியிருக்க முடியும். 
 
தேவனுடைய வார்த்தைகளின் வல்லமை தெரியாமல் உலக நிலைகளோடு அதை ஒப்பிட்டு விளக்கம் கொடுத்தால் நமக்கும் உலகத்தாருக்கும் இடையே வேறுபாடு இருக்காது. நான்  எவனோ உலகத்தான் சொன்ன கட்டளையையா உண்மை என்று நிரூபிக்க முயல்கிறேன்  தேவாதி தேவனின் வாத்தைகளைதானே?  
 
பிரசங்கி 8:5 கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான் 

லேவியராகமம் 18:5
ஆகையால் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர்

நீதிமொழிகள் 4:4
அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளக்கடவது; என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
 
என்று வேதம் சொன்னால் நிச்சயம் அது நிறைவேறும். அதற்க்கு விதிவிலக்கு அது இது என்று எதுவும் கிடையாது. எதாவது ஒரு இடத்தில் தேவனின் வார்த்தையை
மீறினாலன்றி யாருக்கும் ஒரு தீங்கும் வரவே வராது.  அவரது வார்த்தையே நமக்கு  கேடகம் அதுவே நம்மை பாதுகாக்கும். 
 
அவர் வார்த்தையின் வல்லமை குறைந்துவிட்டால் அன்று  நான் இந்த  உலகத்தில் இல்லை, ஏனெனில் அதைமட்டும் நம்பித்தான் இன்று பூமியில் வாழ்கிறேன் ஆனால் வானம் பூமி ஒழிந்து போனாலும் தேவனின் வார்த்தைகளின் வல்லமை ஒருநாளும்  குறையாது.
 
நான் ஏதாவது தவறாக எழுதினால் என்னை தேவ ஆவியானவர் நிச்சயம் தூங்க விடவேமாட்டார். அதுபோல் எழுதிவிட்டு பலமுறை நான் தவித்திருக்கிறேன் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறேன்.  மறுநாளே அதை சரிசெய்தும் இருக்கிறேன். அதுபோல் இக்காரியத்தை பொறுத்தவரை தவறில்லை என்றாலும் தேவையற்ற
வார்த்தைகளுக்கு இடம்தராமல் இருக்க ஆண்டவர் நீக்கும்படி உத்தரவிட்டதால்  நீக்கப்பட்டுவிட்டது .

 



-- Edited by SUNDAR on Monday 24th of May 2010 04:01:58 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சகோ.சுந்தர் அவர்களின் விளக்கத்திற்கு நன்றி.

உங்கள் அடிமனதின் எண்ணம் மற்றும் வேதவசனத்தின் கருத்து தவறாது என்பதில் உங்களுக்குள்ள நம்பிக்கை ஆகியவற்றை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஒருசில கருத்துக்கள் மிகவும் sensitive ஆனவை என்பதால், அவற்றை எல்லாராலும் good sense-ல் எடுக்க இயலாது.

இயேசுவை தேவனுடைய குமாரன் என வேதாகமம் நேரடியாகவும் மிகத்தெளிவாகவும் கூறியிருந்துங்கூட, இவ்வுண்மையை எடுத்துச் சொல்பவர்களை பெருங்குற்றவாளிகளாக கருதுகிற பலர் உண்டு. அந்த அளவு உணர்வு பூர்வமானவர்களிடம், இயேசு கற்பனையை மீறியதாக வேதாகமம் கூறுவதாக நீங்கள் சொன்னால், அவர்களால் அதை எப்படி தாங்க இயலும்?

யோவான் 5:18-ஐ மட்டும் வைத்து, இயேசு கற்பனையை மீறியதாக வேதாகமம் கூறுவதாகக் கூறுகிறீர்கள். ஆனால் அவர் தமது மரணபரியந்தம் தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்ததாக பிலிப்பியர் 2:8 கூறுகிறது. தேவனின் கற்பனையை மீறியவரைப் பார்த்து, தேவனுக்குக் கீழ்ப்படிந்தவர் என பவுல் எவ்வாறு கூறஇயலும்?

நீங்கள் கூறுகிற பிரகாரம் யோவான் 5:18-ஐ நாம் புரிந்துகொண்டால், அதுவும் பிலிப்பியர் 2:8-ம் ஒன்றுக்கொன்று நேரடி முரணாகிவிடுமே?

எனவே யோவான் 5:18-ஐ நீங்கள் புரிந்துகொண்டதில் ஏதோ தவறு உள்ளது என்ற ரீதியில் ஆராயவேண்டும்.

யோவான் 5:18 உட்பட வேதாகமத்தின் ஒவ்வொரு வசனமும் தமிழில் நேரடியாகக் கூறப்பட்டவையல்ல. ஒருவர் தமிழில் நேரடியாக ஒன்றைச் சொல்லும்போதே, அதற்கு வெவ்வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்படுவதை நாம் அறிவோம். அப்படியிருக்க, வேறு ஏதோ ஒரு மொழியில் எழுதப்பட்டு, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு வசனத்தின் கருத்துக்கு பற்பல அர்த்தங்கள் கற்பிக்கப்படவும், அவற்றில் பல மூலபாஷை கருத்துக்கு வேறுபடவும் வாய்ப்புண்டல்லவா?

எனவே, ஒன்றுக்கொன்று முரண்பாடாகக் காணப்படும் வேதவசனங்களின் கருத்து என்னவென்று முடிவெடுப்பதில் மிகவும் நிதானம் வேண்டும். யோவான் 5:18 மற்றும் பிலிப்பியர் 2:8 ஆகியவற்றைப் பொறுத்தவரையில், பிலிப்பியர் 2:8 தான் நேரடியான கருத்தை உடையதாக இருக்கிறது. யோவான் 5:18-ஐப் பொறுத்தவரை, அது வேதபாரகர்/பரிசேயரின் கருத்தை பிரதிபலிப்பதாக இருப்பதற்குத்தான் அதிக வாய்ப்புள்ளது.

ஆகிலும், அதை உங்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லையெனில், இவ்விஷயத்தில் அமைதி காப்பதுதான் நல்லதும் சரியானதுமாகும் என்பது எனது கருத்து.


-- Edited by anbu57 on Monday 24th of May 2010 10:11:39 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

////நண்பரே, சூழ்நிலைக்கு பொருந்தாத ஒரு குறள் ஞாபகத்துக்கு வருகிறது; 'ச்சும்மா' சொல்லிவைக்கிறேன்;"எண்ணித் துணிக கருமம் பின் எண்ணுவம் என்பது இழுக்கு"///
 
இந்த  குறளை  இங்கு ஏன் பயன்படுத்துகிறீர்கள் என்று எனக்கு சரிவர புரியவில்லை எனினும். ஏதோ நான் தவறான ஒரு கருத்தை எழுதிவிட்டு பின்வாங்கினேன் என்று சுட்டிக் காட்டவே இதை எழுதுகிறீர்கள் என்று கருதுகிறேன். தவறான கருத்தை எழுதிவிட்டு ஆண்டவர் கடிந்துகொள்ளும்போது பின்வாங்குவதில் ஒரு தவறும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை சகோதரே! ஆனால் சரியான ஆதாரம் இல்லாமல்  தவறான கருத்தை உண்மை என்று நிலைநாட்ட நினைப்பதுதான் மிகுந்த தவறு. 

ஆகினும் இக்கருத்தை பொறுத்தவரை தவறு என்ற நோக்கில் நான் அதை நீக்கவில்லை. நான் சொல்வதற்கு அடிப்படை வேத வசனம் மற்றும் சம்பவ சூழ்நிலை எல்லாவற்றையும் எடுத்து கூறியிருக்கிறேன். தெளிவாக வசனம் சொல்லும் போது அவ்வசனத்தில்  தவறு இருக்கிறது என்று சொன்னால் அதற்க்கு நான் எவ்விதத்திலும் விளக்கம் தரமுடியும்?
 
////ஒரு பொருளை விவாதிக்கும் போது என்னைப் போன்றவர்கள் மதியீனமான கேள்விகளைக் கேட்டு சர்ச்சைகளை எழுப்பினாலும் அதற்கு தாங்கள் அளிக்கும் பதிலில் தெளிவு வர வாய்ப்புண்டு;////

நீங்கள் சகோ. அன்பு அவர்கள் எழுதியதுபோல் ஒரு வசனத்தை சுட்டிகாட்டி, நான் எழுதியதில் தவறு இருக்கிறது என்று குறிப்பிட்டால் நான் நிச்சயம் அதை ஏற்றுக்கொண்டு  அதற்க்கான எனது பதிலை தருவேன். (ஆகினும் வசனமே தவறு அல்லது மொழிபெயர்ப்பில் தவறு என்றால் என்னால் பதில் தரமுடியாது) ஆனால் வசன ஆதாரத்தோடு தந்த பதிவிற்கு, எந்த எதிர்வாசனமோ அல்லது விளக்கமோ தராமல் "அரை வேக்காடு" என்ற வார்த்தைகளை பயன்படுத்துவது ஒரு கிறிஸ்த்தவருக்கு அழகா?     
 

////சிலுவை மரணத்தை நிறைவேற்றவே ஆண்டவர் திட்டமிட்டு ஓய்வுநாள் பிரமாணத்தை மீறினார் என்பது தங்களது அதீதமான வேதத்துக்குப் புறம்பான கற்பனையான செய்தி என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்கமுடியாது..!////

எந்த ஆதாரமும் இல்லாமல் யாரும் எக்கருத்தையும் உறுதியாக பிடித்து வைத்துகொள்ள முடியும், அவ்வாறு
செய்வதால் அது உண்மையாகிவிடுமா என்ன? 
தங்களின் நம்பிக்கைக்கு ஆதாரம் என்னவென்பதை தெரிவியுங்கள் விவாதித்து, இறுதியில் உண்மை என்னவென்பதை அறியலாம்.
 
 


-- Edited by SUNDAR on Tuesday 25th of May 2010 04:23:58 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

ANBU wrote:
///யோவான் 5:18-ஐ மட்டும் வைத்து, இயேசு கற்பனையை மீறியதாக வேதாகமம் கூறுவதாகக் கூறுகிறீர்கள். ஆனால் அவர் தமது மரணபரியந்தம் தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்ததாக பிலிப்பியர் 2:8 கூறுகிறது. தேவனின் கற்பனையை மீறியவரைப் பார்த்து, தேவனுக்குக் கீழ்ப்படிந்தவர் என பவுல் எவ்வாறு கூறஇயலும்?///
 
சகோதரர் அவர்களே, தேவனுக்கு கீழ்படிவதர்க்கும், தேவனால் எழுதிகொடுக்கப்பட்ட கட்டளைகளுக்கு கீழபடிவதர்க்கும் இடையே சில வேறுபாடுகள் இருக்கிறது என்பதை நீங்கள் அறியவேண்டும். தாங்கள் சுட்டிய வசனம் இயேசு மரணபரியந்தம் கீழ்படிந்தார் என்றுதான் சொல்கிறது
 
பிலிப்பியர் 2:8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்
 
இயேசுவும் "என் பிதாவின் சித்தம் செய்யவே வந்தேன் அவருக்கு பிரியமானதையே செய்கிறேன்" என்று கூறியிருக்கிறார். அவர் தேவனுக்கு முழுமையாக கீழ்படிந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் அவர் கற்பனைகளுக்கு முழுமையாக கீழ்படிந்தார் என்று  வசனம் சொல்கிறதா என்பதைத்தான் பார்க்கவேண்டும்.
 
இன்றும், என்னை பொறுத்தவரை கற்பனைகளுக்கு கீழ்படிவதைவிட தேவனுக்கு முழுமையாக கீழ்படிவதுதான் மிக மிக சிறந்தது.  தேவனுக்கு கீழ்படிவதர்க்கும் கற்பனைகளுக்கு கீழ்படிவதர்க்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை நாம் அறிய வேண்டும். கற்பனைகளும் நீதிநியாயங்களும் பொதுவாக எல்லோருக்கும் எழுதி கொடுக்கப்பட்டவைகள். ஆனால் தேவனுக்கு கீழ்படிதல் என்பது, தேவன் சில நேரங்களில் பலருடைய நன்மையை  கருத்தில்கொண்டு,  தான் தெரிந்துகொண்ட சிலரை,    சில தனிப்பட்ட விசேஷ வழிகளில் நடத்துவார். அப்பொழுது சில வார்த்தைகளை  பொருட்படுத்தாமல்  கடந்துபோகும்படி அவரே  நம்மை  வழிநடத்துவார் அதுபோல் ஒரு நிலையை நான் அனுபவித்திருக்கிறேன் அதற்க்கு ஆதாரமாக கீழ்கண்ட வசனங்களை எடுத்து கொள்ளமுடியும்!
 
எரேமியா 7:22. நான் உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துவந்த நாளிலே, தகனபலியைக்குறித்தும், மற்றப் பலிகளைக்குறித்தும் நான் அவர்களோடே பேசினதையும் கட்டளையிட்டதையும்பார்க்கிலும்,
23
என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்;
 
அதாவது இங்கு புரிதல் என்பது மிகசுலபம்!.  உலகமா? தேவனின் கட்டளையா? என்று வரும்போது தேவனின் கட்டளைதான்  உயர்ந்தது! ஆனால் தேவனா? அவர் எழுதிகொடுத்த கட்டளையா? என்று வரும்போது தேவன் சொல்வதுதை செய்வதுதான் சிறந்தது. இந்நிலையில் அவர் ஒரு கட்டளையை மீறசொல்லலாம் ஆனால் அதினால் நமக்கு நிச்சயம் ஒரு தீங்கு உண்டு ஆனால்  ஆயிரம் ஆயிரம்பேருக்கு அதில் நன்மை இருக்கும். இந்நிலையில் நாம் தேவனுக்கு கீழ்படிந்து அவர் சொல்வதை செய்வதுதான் சிறந்தது.  அவ்விதத்தில் பிதா என்ன சொல்லி அனுப்பினாரோ அதற்க்கு அப்படியே இயேசு  கீழ்படிந்து அனைத்தையும் செய்து முடித்தார். பலரது நன்மையை கருத்தில்கொண்டு சில காரியங்களை மீறிசெயல்பட்டார்.
 
இனியும் இதில் குற்றம்கண்டுபிடிக்க நினைத்தால் அதற்க்கு என்னிடம் பதிலில்லை. தேவனின் நேரடி வழிநடத்துதலை அறிந்தவர்கள் மட்டுமே இதை புரிந்துகொள்ள முடியும்! 
 


-- Edited by SUNDAR on Tuesday 25th of May 2010 08:59:09 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

sundar wrote:
//சகோதரர் அவர்களே, தேவனுக்குக் கீழ்படிவதற்கும், தேவனால் எழுதிகொடுக்கப்பட்ட கட்டளைகளுக்குக் கீழ்படிவதர்க்கும் இடையே சில வேறுபாடுகள் இருக்கிறது என்பதை நீங்கள் அறியவேண்டும்.//

கொலை செய்யாதே என்பது கற்பனைகளில் ஒன்று. ஆனால், யுத்தங்களில் ஒருவரையொருவர் கொல்லுதல், மற்றும் குற்றம் செய்த ஒருவனுக்கு மரணதண்டனை விதித்து கொல்லுதல் ஆகியவை கொலை செய்யாதே என்ற கற்பனையை மீறியதாகக் கருதப்படுவதில்லை, தேவனும் கருதவில்லை.

ஒருவன் கற்பனைக்குக் கீழ்படிகிறானா இல்லையா என்பது, சம்பந்தப்பட்ட நபரைப் பொறுத்தும் சூழ்நிலையின் அடிப்படையிலும்தான் தீர்மானிக்கப்படும். 

பாகாலின் தீர்க்கதரிசிகளில் பலரை ஒரு பொய் மூலம் தந்திரமாகக் கொன்றுபோட்ட யெகூவைப் பார்த்து தேவன் இவ்வாறு கூறினார்.

2 ராஜா. 10:30 கர்த்தர் யெகூவை நோக்கி: என் பார்வைக்குச் செம்மையானதை நீ நன்றாய்ச் செய்து, என் இருதயத்தில் இருந்தபடியெல்லாம் ஆகாபின் குடும்பத்துக்குச் செய்தபடியினால், உன் குமாரர் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் நாலு தலைமுறையாக வீற்றிருப்பார்கள் என்றார்.

உங்கள் பார்வையில் பொய் சொல்லி கற்பனையை மீறிய யெகூவுக்கு, தீமையை அல்ல, நன்மையையே தேவன் பலனாகத் தந்தார்.

யெகூவிடம்: நீ பொய் சொல்லி பாகாலின் தீர்க்கதரிசிகளைக் கொல்லு என தேவன் கூறவில்லை. ஆனால், பாகாலின் தீர்க்கதரிசிகளைக் கொல்ல வேண்டியது ராஜாவாகிய யெகூவின் பொறுப்பாக இருந்தது. பாகாலின் தீர்க்கதரிசிகளைக் கொல்வதுதான் தேவனின் சித்தம் என்பதை அறிந்திருந்த யெகூ, தேவசித்தத்தை நிறைவேற்ற பொய்யை ஒரு கருவியாக எடுத்துக் கொண்டார். அவரது இச்செயல், கற்பனை மீறுதலாகக் கருதப்பட முடியாது.

பொய் சொல்லிய யெகூவைப் பார்த்து: என் பார்வைக்குச் செம்மையானதை நீ நன்றாய்ச் செய்தாய் என தேவன் கூறுகிறார். தமது பார்வைக்குச் செம்மையானதை யெகூ செய்ததாக சொல்லிய தேவன், பொய் சொல்லாதே எனும் கற்பனையை யெகூ மீறியதாகச் சொல்வாரா? கற்பனையை மீறியதற்காக, யெகூவுக்கு ஒரு தீங்கு நேர அனுமதிப்பாரா?

பிரசங்கி 8:5-ஐ மேற்கோள் காட்டி, ஒருவன் கற்பனையை மீறினால்தான் அவன் கொல்லப்படமுடியும் எனக் கூறுகிறீர்கள்.

ஆதாமின் மகனான ஆபேலின் சாவுக்குக் காரணம் என்ன? ஆபேல் எந்தக் கற்பனையை மீறினார்?

விளக்கம் சொல்லும்படி வேண்டுகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

chillsam wrote:
//ஒரு திரியை நீக்கியபிறகு தொடர்ந்து அதைக் குறித்து பேசிக் கொண்டிருப்பது மடத்தனமாகும்;//

நீதிமொழிகள் 26:4 மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
RE: இயேசு ஓய்வுநாள் பிரமாணத்தை மீறினாரா? ஏன்?
Permalink  
 


திரியில் விவாதிக்கப்படும் கருத்தை அடிப்படையாக கொண்டு திரியில் தலைப்பு 

இயேசு ஓய்வுநாள் பிரமாணத்தை மீறினாரா? ஏன்?  

என்று மாற்றப்படுகிறது.
 




__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 


CHILLSAM WROTE:
// ஆசியாவின் ஏழு சபைகளூக்கு சொல்லப்பட்ட வசனஙகளில் இந்தியா சேராத போதும், ஜெயங்கொள்ள வேண்டிய தேவை இருப்பதால் தனக்கு சாதகமாக, தனக்கு மட்டுமே சொல்லப்பட்ட வசனஙகளாக எடுத்துக் கொள்ளலாம், தவறில்லை;ஆனால் யோவான் 5:18 மட்டும் மிகவும் சரியாக கொடுத்திருக்கபட வேண்டும். வெளீ சுவி 2 மற்றும் 3 யாருக்கு கொடுக்கப்பட்டாலும் அது நமக்குத்தான் சேரும்.
நண்பர் சந்தோஷ் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் மேற்கண்ட வரிகள் யாருடைய கருத்து..?

அவை மேற்கோள் காட்ட தரப்பட்டவை என்றே எண்ணுகிறேன்////


இல்லை  சகோதரரே!  இது  மேற்கோள் காட்டபட்ட கருத்து அல்ல. நீக்கப்பட்ட திரியில் இக்கருத்து இல்லை   




-- Edited by SUNDAR on Saturday 29th of May 2010 10:56:49 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Anbu  wrote:
///கொலை செய்யாதே என்பது கற்பனைகளில் ஒன்று. ஆனால், யுத்தங்களில் ஒருவரையொருவர் கொல்லுதல், மற்றும் குற்றம் செய்த ஒருவனுக்கு மரணதண்டனை விதித்து கொல்லுதல் ஆகியவை கொலை செய்யாதே என்ற கற்பனையை மீறியதாகக் கருதப்படுவதில்லை, தேவனும் கருதவில்லை///
 
தேவன்  ஒரு  ஜாதியை  யுத்தம் பண்ணி  அழிக்க சொல்கிறார்  
என்றால்  நிச்சயம் அவர்கள் தேவனின் கற்பனைகளை அதிகமதிகமாக மீறி மரணத்துக்கேதுவான பாவம் செய்கிறார்கள் என்றுதான் பொருள்.
 
லேவியராகமம் 18:27 இப்பொழுது உங்களுக்கு முன் இருந்த ஜாதிகளைத் தேசம் கக்கிப்போட்டதுபோல, நீங்கள் அதைத் தீட்டுப்படுத்தும்போது அது உங்களையும் கக்கிப்போடாதபடிக்கு,

லேவியராகமம் 20:22 ஆகையால் நீங்கள் குடியிருப்பதற்காக நான் உங்களைக் கொண்டுபோகிற தேசம் உங்களைக்
கக்கிக்போடாதபடிக்கு, நீங்கள் என் கட்டளைகள் யாவையும் கைக்கொண்டு நடவுங்கள்.

மற்றபடி எல்லோருடனும் யுத்தம்செய்து கையில் கிடைத்தவரை எல்லாம் கொன்று போடும்படி அவர் ஒருபோதும் சொல்வதும் இல்லை அவ்வாறு சொல்லும் அளவுக்கு நமது தேவன் இரக்கமற்றவர் அல்ல.

///ஒருவன் கற்பனைக்குக் கீழ்படிகிறானா இல்லையா என்பது, சம்பந்தப்பட்ட நபரைப் பொறுத்தும் சூழ்நிலையின் அடிப்படையிலும்தான் தீர்மானிக்கப்படும்.////
 
தங்கள் செய்யும் தவறுக்கும் தாங்கள் கட்டளையை மீறி செயல்படுவதற்கும் அவரவர்  ஏதாவது நியாயமான காரணம் வைத்திருப்பார்கள். அவ்வாறு பார்த்தால் யாருமே குற்றவாளி இல்லை என்று ஆகிவிடும்.  ஒருவர் தெரிந்து கட்டளையை மீறுகிறாரா அல்லது தெரியாமல் செய்கிறாரா என்பதன் அடிப்படையிலேயே தண்டனை தீர்மானிக்கப்படும்.
 
  ///பாகாலின் தீர்க்கதரிசிகளில் பலரை ஒரு பொய் மூலம் தந்திரமாகக் கொன்றுபோட்ட யெகூவைப் பார்த்து தேவன் இவ்வாறு கூறினார். உங்கள் பார்வையில் பொய் சொல்லி கற்பனையை மீறிய யெகூவுக்கு, தீமையை அல்ல, நன்மையையே தேவன் பலனாகத் தந்தார்.
 பொய் சொல்லிய யெகூவைப் பார்த்து: என் பார்வைக்குச் செம்மையானதை நீ நன்றாய்ச் செய்தாய் என தேவன் கூறுகிறார். தமது பார்வைக்குச் செம்மையானதை யெகூ செய்ததாக சொல்லிய தேவன், பொய் சொல்லாதே எனும் கற்பனையை யெகூ மீறியதாகச் சொல்வாரா? கற்பனையை மீறியதற்காக, யெகூவுக்கு ஒரு தீங்கு நேர அனுமதிப்பாரா?///
  
2. நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி
7.  நீயும் உன் பிதாக்களும் அறியாத அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி இரகசியமாய் உன்னை ஏவிவிட்டால்
9. அவனைக் கொலைசெய்துபோடவேண்டும்; அவனைக் கொலைசெய்வதற்கு, முதல் உன் கையும் பின்பு சகல ஜனத்தின் கையும் அவன்மேல் இருக்கக்கடவது.

 
"உன்தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் அவரன்றி உனக்கு வேறு தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்" என்ற அவரது முதல் கட்டளையை மீறி பாகாலை சேவித்தவர்ககளையே  யெகூ கொலைசெய்தான். அவர்கள் கர்த்தரின் பார்வையில் மரணத்துக்கு பாத்திரவான்களாக இருந்தார்கள் எனவே அவரின் சித்தத்தை நிறைவேற்றியதற்கு அவர் பாராட்டினார்.  
 
பொய் சொல்லுதல் என்பது ஒரு  பாவமானாலும் பழைய ஏற்பாட்டு காலத்தை பொறுத்தவரை அது மரணத்துக்கு ஏதுவான பாவம்அல்ல. எதற்க்காக யாரிடம் பொய் சொல்கிறோம் என்பதன் அடிப்படையிலேயே பொய் சொல்வதற்கான தண்டனை உண்டு. இங்கு கர்த்தரின் சித்தத்தை நிறைவேறவே அவன் பொய் சொன்னான் எனவே அவனுக்கு பெரிய தண்டனை கிடைத்திருக்க வாய்ப்பில்லை   
 
 ////பிரசங்கி 8:5-ஐ மேற்கோள் காட்டி, ஒருவன் கற்பனையை மீறினால்தான் அவன் கொல்லப்படமுடியும் எனக் கூறுகிறீர்கள்.////

ஆதாமின் மகனான ஆபேலின் சாவுக்குக் காரணம் என்ன? ஆபேல் எந்தக் கற்பனையை மீறினார்? விளக்கம் சொல்லும்படி வேண்டுகிறேன்.///
 
நீதிமான் என்ற வார்த்தையில் பல படிகள் உண்டு ஆதாமின் மகன் ஆபேல் ஒரு நீதிமான் என்றுதான்  வேதம்  சொல்கிறதேயன்றி தேவனின் எல்லா கட்டளையும் சரியாக கைகொண்டு நடந்தான் என்று  வேதம்  சொல்லவில்லை.
 
மேலும் ஆவியின் பிரமாணம் இல்லாத நிலையில் எல்லோரும் மரணத்துக்கு பாத்திரரே. கட்டளையை கைகொண்டவனை மரணத்துக்கு ஒப்பு கொடுப்பதும் தாவீதை போல கட்டளையை மீறியவனை கொலைசெய்ய ஒப்புகொடுக்கா திருப்பதும் ஆண்டவரின் சித்தம். ஆனால் ஆவியில் அபிஷேகம் பெற்று அனைத்து காரியங்களிலும் தேவனின் சித்தப்படி சரியாக நடப்பவர்கள் தெரிந்தே ஏதாவது ஒரு மரணத்துக்கேதுவான கட்டளையை மீறினாலன்றி அவர்களை யாரும்  கொலை செய்யமுடியாது என்பது  வேதத்தின் அடிப்படையில் நான் அராய்ந்து அறிந்த உண்மை.
 
இவ்வாறு  புதியஏற்பாடு பரிசுத்தவான்கள் அநேகர் மரணத்தை சந்தித்தது இந்த ஓய்வு நாள் பிரமாணத்தின் அடிப்படையிலேயே ஆனால் இரட்சிப்பை மக்கள் சுதந்தரிப்பதர்க்காக,  அது தேவனின் சித்தமும் வழி நடத்துதலுமாய்
இருப்பதால் மாமிசத்தில் மரித்தாலும் அவர்கள் ஆவியில் நித்தியத்தை சுதந்தரிக்கின்ற்றனர்.  இங்கு தேவனின்  கட்டளைகளின்  வல்லமைமாறாமல் அவர்சித்தம்  நிறை வேருகிறது   
 
 
  

 

-- Edited by SUNDAR on Saturday 29th of May 2010 11:11:14 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard