உபாகமம் 2:20 அதுவும் இராட்சதருடைய தேசமாக எண்ணப்பட்டது; முற்காலத்தில் இராட்சதர்அதிலே குடியிருந்தார்கள், அம்மோனியர் அவர்களைச் சம்சூமியர் என்று சொல்லுகிறார்கள்.
இந்த ராட்சதர்கள் பற்றி நான் இந்துக்கள் புராணத்தில்தான் படித்திருக்கிறேன் அவர்கள் இங்கு எப்படி வந்தார்கள்?
இறைவன் ஆதாம் ஏவாள் என்ற மனுஷர்களைதான் பூமியில் படைத்தார் என்று விவிலியம் சொல்கிறது. இந்த ராட்சதர்களை படைத்ததற்கு எந்த ஆதாரமும் இல்லையே? அல்லது யார் எப்படி ராட்ச்சதராக மாறினார்கள் என்பதற்கும் போதிய ஆதாரம் இல்லை.
இதற்க்கான பதில் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் பதில்தர வேண்டுகிறேன்.
வேதாகமத்தில் எல்லா கேள்விக்கும் பதில் இருக்கிறது என்று கருதும் சகோதரர்கள் நிச்சயம் இந்த கேள்விக்கு பதில் அறிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். என்னை நீண்டநாளாக குழப்பிவரும் இந்த கேள்விக்கு பதில் தெரிந்த சகோதர சகோதரிகள் இந்த இராட்சதர்கள் எவ்வாறு உருவானார்கள் என்பதற்கு ஏதாவது வசன ஆதாரம் இருந்தால் தயவுசெய்து தரும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
ஆதியிலே (ஆறாம் நாள்) தேவன் ஆதாமை ஆணும், பெண்ணுமாக (அர்த்த நாரி, சிவ சக்தி)சிருஷ்டித்து அவர்களை தன்னுடைய பிரதினிதியாக பூமியை ஆளும்படி வைத்தார். அவர்களும் தேவ பிரதினிதியாக பூமியை அரசாண்டனர். ஆனால் பல வருடங்களுக்கு பிறகு ஆதாமுக்கு தனித்து இயங்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. ஆதாமுக்கு இந்த ஆசை வந்த உடனே அவனிடமிருந்த தேவ சாயல் எடுக்கப்பட்டு ஜீவாத்துமாவாக உருவாக்கப்பட்டு பூமியில் ஏதேன் தோட்டத்தை காத்துக் கொள்ளும்படி வைக்கப்பட்டான். (எட்டாம் நாள்?)
ஆதி 2.7. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
8. தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.
மேலும் அவனோடு இருந்த சக்தியை அவனிடம் இருந்து பிரிக்கும்படிக்கு அவனுக்கு தேவன் அயர்ந்த நித்திரை வரப் பண்ணினார். தூங்க விரும்பாத அந்த சக்தி ஆதாமிடம் சண்டையிட்டு (தூங்க கூடாது என்று) ஆதாமை விட்டு பிரிந்து போனது. இதன் மூலம் தேவன் ஆதாமின் சக்தியை பல மடந்து குறைத்தார். (சாத்தானுடன் சேர்ந்து மிக பெரிய சக்தியாக உருவாகும் வாய்ப்பு இருப்பதால்) அதன் பிறகு அவனுடைய விலா எலும்பிலிருந்து ஏவாளை படைத்தார்.
ஆதி 2.21. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.
22. தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.
ஆதாமிடமிருந்து பிரிந்த சக்தி பல சக்திகளாக பிரிந்து இந்த உலகம் முழுவதும் பரவியது.
(இதுவே இந்து மதத்தில் தன் தந்தையின் யாகத்திற்க்கு செல்ல வேண்டும் என சக்தி சிவனுடன் சண்டையிட்டு யாகத்தில் விழுந்து உயிர் நீத்த கதையாக சொல்லபடுகிறது. சக்தியின் இறந்த உடலை பார்த்து சிவன் கதற கதற அழுதது புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த சக்தியின் அழுகிய உடலை உயிர் பிழைக்க வைக்க சிவன் வைத்தியரை தேடி சுமந்து செல்ல அந்த உடல் அழுகி விழுந்த இடங்கள் சக்தி தலங்களாகின.
அதன் பிறகு சக்தி பூமியில் வந்து பிறக்க (ஏவாள்) சிவன் மனிதனாக பூமிக்கு வந்து சக்தியை மணந்ததாக புராணங்கள் சொல்கின்றன)
இந்த சக்தியே உலகம் முழுவதும் பரவியுள்ள பெண் தெய்வ வழிபாட்டுக்கு காரணமாகும். இந்த சக்தி கடவுளும், சாத்தானும் அல்லாமல் உலகம் முழுவதும் பரவி உள்ள ஒரு சுதந்திரமான (LIBERTY) சக்தியாகும். இந்த சக்தியின் ஒரு சில அம்சங்கள் மனிதனுக்கு நன்மை செய்பவையாகவும். சில அம்சங்கள் மனிதனுக்கு தீமை செய்பவையாகவும் உள்ளன. மற்றும் சில மனிதனின் எதிர்காலத்தை சொல்பவையாக உள்ளன. தீமை செய்யக்கூடிய சில சக்திகள் மந்திர தந்திரங்களால் கட்டுப்படுத்தப்பட்டு ஒரு சில மனிதர்களால் (ஆதி சங்கரர் போன்ற) நன்மை செய்யக்கூடிய சக்தியாக மாற்றப்பட்டன.
இந்த சக்தி மகா பாபிலோன் என்ற பெயரால் குறிப்பிடப்பட்டு அதற்கென்று தியாயத் தீர்ப்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மகா பாபிலோன் என்பது ஒரு நகரத்தையும் குறிக்கும். ஆகவே இந்த சக்திக்கும் அந்த நகரத்துக்கும் ஒரே நேரத்தில் நியாயத்தீர்ப்பு உண்டு என் அறியலாம். இந்த சக்தி பவுலின் வாழ்க்கையிலும் குறுக்கிட்டது.
அப்.16.16. நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள். 17. அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள். 18. இப்படி அநேகநாள் செய்துகொண்டுவந்தாள். பவுல் சினங்கொண்டு, திரும்பிப்பார்த்து: நீ இவளை விட்டுப்புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று.
காயீனுடைய கொலையால் மனம் நொந்த ஆதாம் பல வருடங்களுக்கு ஏவாளை சேராமல் தவத்தில் இருந்ததாக தெரிகிறது. அவ்வாறு தவத்தில் இருந்த ஆதாமின் விருப்பமில்லாமல் ஆதாமை சேர்ந்து அதன் விளைவாக ஆதாம் சிந்திய விந்து துளிகளால் இந்த சக்தி பல விசித்திர உருவமுள்ள உயிர்களை உண்டாக்கியதாக தெரிகிறது (யானை தலையுடன் (தன் மேலிருந்த அழுக்கை (விந்து?) ஒன்று திரட்டி, குரங்கு முகத்துடன், நாங்கு கைகளுடன் இப்படி பல) இப்படி பிறந்த உயிர்களும் (ஆவிகளும்) சில நேரங்களில் மனிதர்களுக்கு நன்மை செய்வதாக உள்ளன. டார்வின் கொள்கையை நிரூபிக்க இந்த (குரங்கு முக) உயிர்கள் வாழ்ந்த ஆதாரத்தை தேடி வருகின்றனர். ஒரு நாளில் இவைகள் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால் இவை ஆதாமிடமிருந்து முறையற்ற விதமாக உண்டாக்கப்பட்டவை. இவைகள் உண்மையில் EVOLUTION அல்ல DEVOLUTION
ஆதி 5.3. ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.
மேற்கண்ட வசனத்திலிருந்து ஆதாம் பல வருடங்களுக்கு தன் சாயலாக. தன் ரூபத்தின்படி இல்லாமல் பல உயிர்களை பெற்றது தெரிய வரும்.
யோபு 31.33. நான் ஆதாமைப்போல என்மீறுதல்களை மூடி, என் அக்கிரமத்தை என் மடியிலே (ஒளித்து) வைத்துவைத்தேனோ?
அக்கிரமத்தை மடியில் ஒளித்து வைப்பது என்பதற்க்கு இதுதான் அர்த்தம் என்று சொல்லலாம்.
இந்த சக்திக்கு குழந்தை பெறும் பாக்கியமோ அல்லது பால் கொடுக்கும் பாக்கியமோ இல்லை என்று தெரிய வருகிறது.
ஆதாமுக்கு பிறகு காயீனின் விருப்பத்துடன் இந்த சக்தி சேர்ந்து பல உயிர்களை உருவாக்கியதாக தெரிகிறது. இராட்சதர்கள் என்பவர்கள் இந்த சக்தியால் காயின் அல்லது ஆதாமிடமிருந்து உண்டாக்கப்பட்டவர்கள் என்று அறியலாம்.
தீமை செய்யும் இந்த சக்தியின் அம்சம் லிலித் என்னும் பெயரால் வழங்கபடுகிறது. இந்து மதத்தில் நன்மை செய்யும் இந்த சக்தியின் அம்சம் லலிதா என்னும் பெயரால் வழங்கபடுகிறது. இஷ்டார் என்னும் பெயரால் இந்த சக்தி நெபுகாத்னேச்சர் காலத்தில் வணங்கபட்டது. இன்னும் பல பெயர்களில், பல தன்மை உடையனவாய் பல இடங்களில் வணங்கபடுகிறது. (பார்க்க படம்)
காயீனுடைய கொலையால் மனம் நொந்த ஆதாம் பல வருடங்களுக்கு ஏவாளை சேராமல் தவத்தில் இருந்ததாக தெரிகிறது. அவ்வாறு தவத்தில் இருந்த ஆதாமின் விருப்பமில்லாமல் ஆதாமை சேர்ந்து அதன் விளைவாக ஆதாம் சிந்திய விந்து துளிகளால் இந்த சக்தி பல விசித்திர உருவமுள்ள உயிர்களை உண்டாக்கியதாக தெரிகிறது
சகோதரர் சந்தோஷ் அவர்களே உங்கள் பதிவு இந்து புராணத்தோடு சம்பந்தம் உள்ளதாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது.
இந்த கருத்துக்களை தாங்கள் எவ்வாறு அறிந்து கொண்டீர்கள் என்பதை நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
அதாவது தேவனிடமிருந்து வெளிப்பாடுகள் எதுவும் பெற்றீர்களா? அல்லது நீங்களே ஆராய்ந்து இந்து புராணத்துக்கும் கிரிஸ்த்தவத்துக்கும் தொடர்பு இருப்பதை அறிந்து அதன் அடிப்படையில் வசனங்களை தியானித்து அறிந்தீர்காளா? அல்லது அதற்க்கு ஏதாவது தொடுப்பு இருக்கிறதா?
நான் கேட்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது எனவே தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்!
இந்த கட்டுரை தரிசனம் அல்ல. எனக்குள்ளே ஏற்ப்பட்ட கேள்விகளால் பல புத்தகங்களை படித்ததும் மற்றும் அவைகளை பற்றி ஆராய்ந்ததும் வேதத்தில் அதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று தேடியதும் ஆகும். அதன் பிறகு எனக்கு கிடைத்த பதில் வெளிப்பாடாக கூட இருக்கலாம். சில வேளைகளில் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கும் போதே என்னுடைய ஆவியால் (உள்ளுணர்வால்) தூண்டப்பட்டு நான் எழுத எண்ணம் கொள்ளாதவைகளையும் எழுதியிருக்கிறேன். (அவை உண்மையாக இருக்கும் பட்சத்தில்)
நான் பொதுவாக, எழுத வேண்டியவைகளை பற்றி தியானித்து எனக்குள் அனல் மூண்ட பிறகே எழுதுகிறேன். அவ்வாறு இல்லாத சில கட்டுரைகளை நான் எழுதி முடித்திருந்தும் நான் எதிர்பார்க்கும் தாக்கம் அந்த கட்டுரைகளில் இல்லாததால் பதிவிடாமல் நிறுத்தி வைத்திருக்கிறேன்.
எந்த கேள்வியாக இருந்தாலும் எல்லா மத கருத்துக்களையும் ஆராய்வது என் வழக்கமாகும். அதற்காக கிருத்துவ நூல்களை தவிர பல மத நூல்களை படிப்பது வழக்கம். அனேகர் வேதத்தை மட்டும் படிக்கின்றனர். அவர்களை ஆதாரம் என்ற பெயரில் இந்த புத்தகத்தை படித்து பாருங்கள் என திசை திருப்ப நான் விரும்பவில்லை. எனினும் குமுதம், நக்கீரன் போன்ற புத்தகங்கள் படிப்பவராக இருந்தால் அந்த புத்தகம் படிக்கும் நேரத்தில் இந்த கட்டுரைக்கு சம்பந்தபட்ட கீழ் காணும் தொடுப்பை படித்து பார்க்கலாம். இந்த கருத்துக்கள் யூத மத ரபீக்களால் சொல்லப்பட்டவை.
ஏற்கனவே இதே கருத்தை In those days - II என்னும் தலைப்பில் எழுதியிருக்கிறேன். இந்த கட்டுரை உண்மையில் அதன் தொடர்ச்சியே ஆகும்.
முக்கியமாக எழுத வேண்டும் என நான் நினைத்திருக்கும் சில கட்டுரைகளை இன்னும் எழுதவில்லை. அவைகளை விட்டு விட்டு மற்ற தலைப்புகளினால் கவரப்பட்டு அவைகளை பற்றி எழுதி கொண்டிருக்கிறேன்.
இறைனேசன் விரும்பினால் இந்த கட்டுரையை வெளிப்பாடுகள் பகுதிக்கு மாற்றி கொள்ளலாம்.
சகோதரர் சந்தோஷ் அவர்களே, சில நாட்களுக்கு முன்னர் ஒரு அபூர்வ ஆன்மீக புத்தகம் ஓன்று படிக்க நேர்ந்தது. அப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்த பல கருத்துகள் வேதாகமம் சம்பந்தப்படதாகவும் உண்மை போலவும் உங்கள் கருத்துக்கு இசைவாக இருந்ததால் இக்கேள்வியை கேட்டேன்.
ஒருவேளை இறைவன் அதை உங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தால் அதில் உண்மை இருக்கலாம் என்று எண்ண தோன்றியது. ஆனால் நீங்களும் பல புத்தகங்களை படித்து ஆராய்ந்து உங்கள் கருத்தை எழுதி இருப்பதால் அதன் உண்மை தன்மை என்னவென்பதை பற்றி ஒரு முடிவுக்கு என்னால் வரமுடியவில்லை!
நீங்கள் வேதாகமத்தின் விடுபட்டபகுதியாகிய ஏனோக்கின் புத்தகத்தை படிக்கவும்.. அல்லது book of enoch தகவலிறக்கம் செய்தும் படிக்கலாம்..
(யூதா1:14,15) ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்..
ஏனோக்கு இவ்வாறாக சொன்னதை பழைய ஏற்ப்பாடு எங்கும் நீங்கள் அறிய முடியாது.. எனவே தனியாக தகவலிறக்கம் செய்து படிக்கவும்.. இம்மனிதன் தேவனோடு குடும்ப வாழ்கையில் இருக்கும் போதே உறவாடினவர் ..கர்த்தரால் எடுத்துகொள்ளபட்டவர்.. இவர் நோவா காலத்திற்கு முற்பட்டவர் ..
இவரது இப்புத்தகத்தில் தேவ தூதர்களின் விழுகை பற்றியும், ராட்சசர்கள் பற்றியும், ஆதி தூதர்கள் பற்றியும், அவர்களின் வேலை பற்றியும், பெண்கள் மீது தேவ தூதர்கள் மோகம் கொண்டதையும்..வெளிபடுத்தின விசேஷத்திற்கு ஒத்த வசனங்களையும் காணலாம்..
-- Edited by JOHN12 on Thursday 8th of December 2011 12:21:48 PM
தமிழில் நானறிந்து ஏனோக்கின் புத்தகம் இன்னும் மொழிபெயர்ப்படையவில்லை. சில சேர்ப்புக்கலான யுதித்து,தானியேல் ஆகமத்தில் சில சேர்ப்புக்கள் ,மக்கபேயர் ஆகமம் போன்ற புத்தகங்களை பழைய கத்தோலிக்க மொழிபெயர்ப்புகலில் காணலாம்..
ஏனோக்கின் புத்தகத்தை நேரடியாக மூல பாஷையிலிருந்து நமது Local- மொழிபெயர்ப்பாளர்கள் (தற்போதைய மொழிப்பெயர்ப்பை மேலும் மொழிபெயர்பதை விடுத்து )தருவித்தால் கூட நன்றாக தான் இருக்கும்..
-- Edited by JOHN12 on Wednesday 15th of May 2013 03:59:31 PM
இவர்கள் ஆதாமின் வழி வந்தவர்கள். சேத் ஆதாமின் மூன்றாவது குமாரன் மேலும் தேவ திட்டத்திற்காக தேவன் அவனை தெரிந்ததால் அவன் வாரிசுகள் தேவ பிள்ளைகளானார்கள். ஆதாமின் வழிவந்தவர்கள் சாபத்தால் கொட்டியதை செய்து தீமையான வழிகளில் பிரவேசித்தார்கள். இவர்களைத்தான் அரக்கர்கள் என்று தமிழ் மொழிபெயர்ப்பு கூறுகிறது. மொழிபெயர்ப்பில் உள்ள சிறு குறை இது. எபிரேய மொழியில் இந்த குறை காணப்படாது. மேலும் ஆதாமின் வாரிசுகளும், சேத்தின் வாரிசுகளும் உறவுகொள்வதை தேவன் விரும்பவில்லை. சேதத்தை புனித திட்டத்திற்காக தேவன் வைத்திருந்தார். ஆனால் அவர்களில் பலர் ஆதாமின் வம்சத்து பெண்களின் அழகில் மயங்கி அவர்களோடு சேர்ந்தனர். இதனால் புனித குலைச்சல் உண்டாகியது. எனவே தேவன் ஜலப்ரளையம் கொண்டு உலகை மீண்டும் புதிதாக்கினார். சேத்தின் வம்சத்தார் தேவகுமாரர் என்றும். வேட்டையாடுவதில் பறக்கரமத்திலும் நிறைந்திருந்த காயனின் வாரிசுகளை ராட்சதர்கள் என்றும் வேதம் கூறுகிறது.
பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்தி களோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்...
இவர்கள் ஆதாமின் வழி வந்தவர்கள். சேத் ஆதாமின் மூன்றாவது குமாரன் மேலும் தேவ திட்டத்திற்காக தேவன் அவனை தெரிந்ததால் அவன் வாரிசுகள் தேவ பிள்ளைகளானார்கள். ஆதாமின் வழிவந்தவர்கள் சாபத்தால் கொட்டியதை செய்து தீமையான வழிகளில் பிரவேசித்தார்கள். இவர்களைத்தான் அரக்கர்கள் என்று தமிழ் மொழிபெயர்ப்பு கூறுகிறது. மொழிபெயர்ப்பில் உள்ள சிறு குறை இது. எபிரேய மொழியில் இந்த குறை காணப்படாது. மேலும் ஆதாமின் வாரிசுகளும், சேத்தின் வாரிசுகளும் உறவுகொள்வதை தேவன் விரும்பவில்லை. சேதத்தை புனித திட்டத்திற்காக தேவன் வைத்திருந்தார். ஆனால் அவர்களில் பலர் ஆதாமின் வம்சத்து பெண்களின் அழகில் மயங்கி அவர்களோடு சேர்ந்தனர். இதனால் புனித குலைச்சல் உண்டாகியது. எனவே தேவன் ஜலப்ரளையம் கொண்டு உலகை மீண்டும் புதிதாக்கினார். சேத்தின் வம்சத்தார் தேவகுமாரர் என்றும். வேட்டையாடுவதில் பறக்கரமத்திலும் நிறைந்திருந்த காயனின் வாரிசுகளை ராட்சதர்கள் என்றும் வேதம் கூறுகிறது.
பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்தி களோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்...
என்னை பொறுத்தவரை இந்த கருத்து பலரால் தவறாக போதிக்கப்டும் ஒரு கருத்து
ஆதாம் என்பவன் தேவனால் உண்டானவன் எனவே அவன் வம்சத்தில் வந்த எல்லோருமே தேவ பிள்ளைகள்தான் "எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமையை இழந்து போனோம்" என்று வசனம் சொல்லும் பட்ச்சத்தில். அதில் ஒருவன் தேவ குமாரன் என்றும் இன்னொருவரின் ராட்ச்ச்சான் என்று சொல்லும் அவளுக்கு வேதத்தில் வேறு எங்கும் ஆதாரம் இல்லை பிரதர்.
ஆதியாகமம் 6:2தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
the sons of God saw that the daughters of humans were beautiful, and they married any of them they chose.
இந்த உலகம் தோன்றுவதற்கு முன்னரே தேவ புத்திரர்கள் {SON OF GOD) என்பவர்கள் இருந்தார்களாக என்பதற்கு கீழ்கண்ட வசனம் ஆதாரம்.