இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புதிய உடன்படிக்கையின் மேன்மை!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
புதிய உடன்படிக்கையின் மேன்மை!
Permalink  
 


புதிய உடன்படிக்கை என்றால்என்ன? அது பழைய உடன் படிக்கையில் இருந்து
எவ்வாறு வேறுபடுகிறது? புதிய ஏற்பாடுகால விசுவாசத்தின் மேன்மை என்ன அதை எவ்வாறு நிறைவேற்றுவது?  புதிய உடன்படிக்கை என்பது எதன் அடிப்படையில் செயல்படுகிறது? எதன்  அடிப்படையில்
ஒருவர் தேவனின் பழையஏற்பாட்டு கட்டளையை மீறி செயல்பட அதிகாரம் பெறுகிறார்? போன்ற அடிப்படை கேள்விகளுக்கு சரியான பதிலை அறியாமலேயே பலர் பலவித வைராக்கியத்தில் இருப்பதை  பார்ப்பதில் எனக்கு  மிகுந்த ஆச்சர்யமாக இருக்கிறது! புதிய உடன்படிக்கை என்றால் என்னவென்று அறியாதவர்கள் எப்படி புதிய உடன்படிக்கையை நிறைவேற்றபோகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.
 
தேவாதி  தேவனின் வார்த்தைகள் என்பது விளையாட்டு அல்ல "நேற்று எழுதி கொடுத்தேன் இன்று மாற்றினேன், நாளை  நீ உன் இஸ்டத்துக்கு செயல்படு"   என்று சொல்வதற்கு!  அது  வானத்தையும் பூமியையும் ஆளும் வார்த்தை. வானம் பூமியும் ஒழிந்துபோனாலும் ஒளிந்துபோகாத  வார்த்தை. அதை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஒரு  வெண்கலப்பலகையில் எழுதப்பட்ட எழுத்துகளை எப்படி மாற்றுவது சுலபம அல்லவோ அதுபோலவே தேவனின் வார்த்தைகளும்.  உலகில் உள்ள  எல்லாம் அழிந்துபோகும் ஆனால் தேவனின் வார்த்தைமட்டும் என்றும் நிற்கும்.      
 
ஏசாயா 40:8 புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்லென்று உரைத்தது.

ஆண்டவராகிய இயேசு நியாயபிரமாண புத்தகத்தில் தன்னைப்பற்றி சொல்லப் பட்டிருக்கும் எல்லா காரியங்களையும்  நிறைவேறி, புதிய உடன்படிக்கையை ஸ்தாபிக்கவே  மாம்சத்தில் இறங்கிவந்தார். அந்த புதிய உடன்படிக்கைபற்றி அவர் தனது ஊழியநாட்களில் பலமுறை பேசியிருந்தாலும் அவர்நாட்களில் புதிய உடன்படிக்க நடைமுறைக்கு வரவில்லை. 
 
புதிய உடன்படிக்கையின் நிறைவேறுதல் என்பது பரிசுத்த ஆவியானவர் பூமிக்கு வந்தபிறகே ஆரம்பமானது. புதிய உடன்படிக்கை அடிப்படையில் அனைத்து செயல்பாடுகளையும் அருமையாக  நிறைவேற்றிய ஒரு உன்னதமான மனிதன்
யாரென்றால் அவர் பவுல் அப்போஸ்தலரே.  அவர் புதிய உடன்படிக்கையின் வழியில் சரியாக நடந்ததோடு நான் கிறிஸ்த்துவை பின்பற்றுவதுபோல என்னை பின்பற்றுங்கள் என்று  தயக்கமின்றி சொல்கிறார்
 
I கொரிந்தியர் 4:16 ஆகையால், என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்களென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
I கொரிந்தியர் 11:1 நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்.

மேலும் பல அப்போஸ்தலர்களுடைய  நடபடிகள் நம்முடைய வேதத்தில் இல்லை எனவே அவர்களின் நடபடிகளை பற்றி முழுமையாக அறிய முடியவில்லை
இவ்வாறு இருமுறை பவுல் தன்னை  தன்ன புதியஏற்பாட்டு விசுவாசத்துக்கு மாதிரியாக சுட்டிக்காட்டியும்,  எத்தனைபேர் அவர் மாதிரியை பின்பற்றி நடக்கிறார்கள் என்பது இன்று ஒரு  பெரிய கேள்விகுறியே. மேலும் 'இன்றைய தேவ ஊழியர்கள் ஆதி அப்போஸ்த்தலர்கள்  போல் நடக்கவில்லை' என்று அக்கலாய்க்கும் சிலர் ஆவியில் நடத்தபடுதல் என்றால் என்னவென்றே அறியாமல் இருப்பது அதைவிட ஆச்சர்யம் ! 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

பழைய உடன்படிக்கை  Vs புதிய உடன்படிக்கை 
 
பழைஉடன்படிக்கை என்பது  மத்தியஸ்தர்கள் மூலம் தேவனால் எழுதி கொடுக்கப்பட்ட வார்த்தைகளை  (கட்டளைகளை நியாயங்களை) நம்முடைய மனித அறிவால் அமர்ந்து  ஆராய்ந்து அதன்படி  நம்மை நாமே  நடத்துவது  அல்லது அதன்படி நடக்க நாம்  பிரயாசம் எடுப்பது  ஆகும்.   
 
ஆனால் புதியஉடன்படிக்கை என்றால் முற்றிலும் தேவனால் நடத்தப்படும் ஒரு நிலை. இங்கு மனித முயற்ச்சிக்கு இடமே இல்லை. நம்முள் இருக்கும் ஆவியானவர் நம்மை நடத்துவார். அவ்வாறு நடத்தபடுபவர்களுக்குதான் ஆக்கினைதீர்ப்பு இல்லை. மற்றவர்கள் எல்லோருமே பழைய நிலையிலேதான் இருக்கின்றனர் என்பதை அறிய வேண்டும்.
 
ரோமர் 8:1ஆனபடியால், கிறிஸ்துஇயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி  நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
 
இவ்வாறு தேவஆவியில் நடத்தபடுபவர்களுக்கு நியாயபிரமாணத்தின நீதி தானாக நிறைவேறும். ஏனெனில் இங்கு நடத்திசெல்பவர் நியாய பிரமாணத்தை கொடுத்த தேவனே!    

ரோமர் 8:4
மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.
 
புதிய ஏற்பாட்டு காலத்தில்  ஆவியானவர்  பல பரிசுத்தவாங்களுடன் பேசி கரம்பிடித்து வழி நடத்தினார் என்பதை அனேக வசனங்கள் மூலம் உறுதிபடுத்த முடியும்.  
 
அப்போஸ்தலர் 13:2   பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார்.
அப்போஸ்தலர் 20:23 பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்
அப்போஸ்தலர் 21:11  பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் .
ரோமர் 8:16  ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.
அப்போஸ்தலர் 8:29 ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்;
 
இவ்வாறு தேவனின் ஆவியானவரால்  போதித்து/ கண்டித்து/ பேசி/  தடுத்து வழி நடத்துதலே ஆவியால் நடத்தபபடுதல் ஆகும். இவ்வாறு ஆவியை பெற்று நடக்காதவர்கள் ஆவியில் நடத்தப்படவில்லை என்பதை அறிய வேண்டும்.  

இப்பொழுது பழைய புதிய உடன்படிக்கைக்கு இடையே  உள்ள வேறுபாட்டை ஒரு சிறு  உதாரணம்  மூலம்  பார்க்கலாம். 
 
நான் என் மகனிடம் சென்னை எழும்பூருக்கு  எவ்வாறு போகவேண்டும் என்று ஒரு காகிதத்தில் எழுதிகொடுத்து "எழுதியிருக்கிறபடி பார்த்து நடந்து  சரியாக போய் சேர்" என்று சொல்வது பழைய ஏற்பாடு.
 
ஆனால் புதிய ஏற்ப்பாடு என்பது "நானே என் மகனை கரம்பிடித்து போதித்து என்னுடனே  அழைத்து சென்று எழும்பூரில் கொண்டுபோய்  விடுவது." 
 
இந்நிலையில் நான் முன்பு எழுதிகொடுத்த வழி முறைகள் அவனுக்கு நிச்சயம் தேவையில்லைதான். அவனும்  நான் எழுதிகொடுத்த பழைய வழிகளை கையில் வைத்துகொண்டு, அப்பா அங்கு போககூடாது, இங்கு போககூடாது என்று என்னிடம்\ சொல்லமுடியாது. நான் அவசரத்தினிமித்தம் வேறுவழியாக கூட அவனை அழைத்து செல்லலாம் ஆனால் நிச்சயம் அவனை எழும்பூர் கொண்டு சேர்த்து விடுவேன். எனவே நான் அவனை அழைத்துசொல்லும் அந்நேரத்தின் நான் என்ன சொல்கிறேன் என்று கேட்டு நடந்தால் மட்டும் போதுமானது
 
அதேபோல்  அனைத்தும்  அறிந்த நம் தேவன், ஆவியாய்  நம்முள் வந்துதங்கி, நமக்கு  போதித்து  நம்மை  கரம்பிடித்து அழைத்து செல்லும் நிலைதான் புதிய ஏற்பாட்டு நிலை. அவ்வாறு அவர் ஆவியில் நம்மை வழிநடத்தி செல்லும்போது நாம் எதற்கும் பயப்படாமல், ஒரு சில  பாரம்பரிய கட்டளைகளை மீறினாலும் அவர் இழுத்து செல்லும் வழியில் அவருக்கு கீழ்படிந்து சென்றால்  மட்டுமே போதுமானது.   
 
வசனப்படி கீழ்கண்ட விளக்கத்தை தரமுடியும்: :
 
எரேமியா 7:23  நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மை உண்டாகும்படிக்கு நடவுங்கள்
 
நீங்கள் நடவுங்கள் என்று நமக்கு கட்டளையிடுவது பழைய ஏற்பாட்டு பிரமாணம்.
 
யோவான் 16:13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார் 
 
உங்களை நடத்துவார்  என்று நமக்கு வாக்குகொடுப்பது புதியஏற்ப்பாடு பிரமாணம்  
 
எனவே நாம் இந்த புதியஏற்பாட்டு காலத்தில் முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டியது நம்முள் சத்திய ஆவியானவர் தங்கி இருக்கிறாரா? என்பதைத்தான். அதை எவ்வாறு அறிந்துகொள்வது? ஆதி அப்போஸ் த்தலர்களை வழி நடத்தியது போல் அனுதினம்  நமக்கு போதித்து/ கடிந்துகொண்டு/ தடுத்து/ ஆட்கொண்டு வழி நடத்துகிறாரா என்பதான் அடிப்படையிலேயே!
 
"அப்பாவின் வார்த்தைக்கும்" "அடுத்த வீட்டுகாரனின் வார்த்தைக்கும்" உள்ள வேறுபாடு எப்படி நமக்கு நன்றாக  தெரியுமோ, அதுபோல் ஆவியானவரின் குரலை அடிக்கடி  கேட்டு பழகபழக ஆண்டவரின் வார்த்தையை நாம்மால் சுலபமாக அறிய முடியும்.
 
இவ்வாறு நடத்தப்படும் நிலையில் நாம் தேவனின் எந்த வார்த்தையையும் கைக் கொண்டு நடக்க  தேவையில்லையா?   என்ற கேள்வி எழலாம். அதற்க்கு 'நாம் ஆவியானவரால் எவ்விதத்தில் நடத்தப்படுகிறோம்' என்பதன் அடிப்படையிலேயே பதில் தரமுடியும்.  அதைப்பற்றி பார்க்கலாம்.  .    

இதை தொடர்ந்த பதிவிற்கு இங்கே சொடுக்கவும்  

ஆவியில் நடத்தப்படுதலின் மூன்று நிலைகள்!  


-- Edited by SUNDAR on Thursday 3rd of June 2010 12:20:27 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

ஆவியானவர் நடத்துதல் பற்றி இந்த திரியில் எழுதப்பட்டுள்ள முக்கியமான பலருக்கு பயனுள்ள கருத்துகளிநிமித்தம்  மீண்டும் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

 
ஆவியால் நடத்தபடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு துணிந்து பாவம் செய்பவர்களுக்கு இது ஓர் எச்சரிக்கை செய்தி. 
 
படித்து பயனடையுங்கள். தேவனுக்கு மகிமையுண்டாவதாக.     

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard