இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேத புத்தகம் ஒரு மந்திரக்கோல் அல்ல!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
வேத புத்தகம் ஒரு மந்திரக்கோல் அல்ல!
Permalink  
 


சில வருடங்களுக்கும் முன் நாங்கள் ஒரு கிறிஸ்த்தவர்  வீட்டில் குடித்தனம் இருந்தோம்.  அந்த வீட்டு ஓனருக்கும் பக்கத்து  வீட்டு ஓனருக்கும் இடையே நிலதகராறு இருந்ததால், அந்த பக்கத்து வீட்டு இந்து சகோதரர் மந்திரம் செய்து ஒரு குட்டிசாத்தானை ஏவிவிட்டு,  இந்த வீட்டில் யாரும் வந்து வாடகைக்கு இருக்க முடியாதபடி செய்துவிடார். 
 
வீடு மிக அருமையாக இருந்தாலும் யாருமே வந்து அங்கு தங்க முடியாது. ஏதாவது பிரச்சனை விபத்து என்று ஏற்பட்டு ஆட்கள் உடனுக்குடன் காலி செய்து விடுவதொடு, அடிக்கடி அந்த குட்டி சாத்தான் அந்த காம்பவுண்டுக்குள் நடமாடு வதையும் பார்க்க முடிந்ததது. இந்த செய்தி  தெரியாமல் நாங்கள் அந்த வீட்டுக்கு குடித்தனம் போய் விட்டோம். போய் சில மாதங்களிலேயே அங்கு குடித்தனம் இருந்த இன்னொரு சகோதரிக்கும் என் மனைவிக்கும் இடையே கடும்  சண்டை ஏற்பாட்டு அவர்கள் வீட்டை  காலிபண்ணி போய்விட்டனர். நாங்கள் மட்டும் அங்கு குடித்தனம் இருந்தோம். 
 
இந்த நிலையில் அந்த குட்டிசாத்தான் என் மனைவியை அடிக்கடி வந்து பயம்காட்ட ஆரம்பித்துவிட்டது. அதாவது சரியாக மதியம் 12 மணிக்கு கண்களை கட்டிக் கொண்டு நிற்கவே முடியாத அளவுக்கு தூக்கம் வருமாம், போய் படுத்து சிறிது கண் அயர்ந்த உடன்,  அந்த குட்டி சாத்தான் வந்து ஜன்னலில் எட்டி பார்ப்பதுவும் வீட்டினுள் வருவதுவும் நன்றாக தெரியுமாம். ஒரு மணி நேரத்துக்கு பிறகு தூக்கமும் போய்விடும்  காட்சியும் நின்றுவிடுமாம். 
 
இதனால் பயந்துபோன என் மனைவி  ஒரு நாள் இதுபோல் 12 மணி தூக்கம் வரும் போது வீட்டில் ஆண்டவருடைய பாடலை சத்தமாக பாடவைத்து கொண்டு வேத புத்தகத்தை எடுத்து  தலையின் கீழ் வைத்துகொண்டு படுத்துகொண்டாராம். ஆகினும் சிறிது நேரத்தில் வீட்டின் பெட்ரூம் வாசலுக்கே வந்துநின்ற அந்த குட்டி சாத்தான்
"நீ சத்தமாக பாடலை வைத்தாலோ அல்லது பைபிளை தலையில் கீழ் வைத்து படுத்தலோ நான் வரமாட்டன் என்று நினைத்தாயா?  இதற்க்கெல்லாம்  நான் பயப்படமாட்டேன் என்று சொன்னதாம்" (அனால் நான் வீட்டில் இருக்கும் நாட்களில் அது வராது என்னை அது ஒருநாளும் பயம்காட்டியதும் கிடையாது)
 
ஆம்! அன்பானவர்களே,  ஆண்டவர் பாடலை சத்தமாக பாடவிடுவதாலோ ஆண்டவர்
வசனத்தை நாள் முழுவதும்  ஓட விடுவதாலோ அல்லது கழுத்தில் சிலுவையை தொங்கவிட்டு கொள்வதாலோ, பைபிளை தலையின் கீழ் வைத்து படுப்பதாலோ சாத்தான் பயப்பட்டு  ஓடுவதில்லை. வேத புத்தகத்தில் உள்ள  வாத்தைகள் நம்முடய உள்ளத்தின் ஆழத்தில் எவ்வளவு பதிந்து நமது  வாழ்க்கை நிலையில் எவ்வளவு பிரதிபலிக்கிறது என்பதை பொருத்தும் அதற்க்கு பயப்படாமல் ஆவியின் பட்டயமாகிய வார்த்தையை நாம் சாத்தனுக்கு எதிராக பயன்படுத்துவதை வைத்துமே அது நம்மிடம் வருவதில்லை.
 
கர்த்தருடைய  உடன்படிக்கை  பெட்டியின் வல்லமையை எல்லா இஸ்ரவேலரும் அறிந்திருந்தனர். யோர்தனுக்குள் ஆசாரியர் அப்பெட்டியுடன் இறங்கிய உடனேயே, யோர்தான்  பிரிந்து வழிவிட்டது. மேலும் கர்த்தரின் பெட்டி  இருக்கும் இடத்தில் எல்லாம் கர்த்தரின் மகிமை பிரகாசித்து கொண்டு இருந்தத்தோடு அங்கு மோசேயுடன் கர்த்தர் முகமுகமாக பேசியதும் உண்டு!    
  
ஆனால் ஏலியின் நாட்களிலே பெலிஸ்தியர் இஸ்ரவேல் ஜனங்களோடு யுத்தத்துக்கு வந்தபோது அந்த பெட்டியை எடுத்து பாளையத்துக்கு கொண்டு போனால்  வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்று எண்ணி எல்லா இஸ்ரவேலரும் சேர்ந்து, பெட்டியை பாளையத்துக்கு கொண்டு போனபோது பெட்டியே பெலிஸ்தியரால் பிடிக்கப்பட்டு போயிற்று. அத்தோடு இஸ்ரலேருக்குள் மஹா சங்காரமும் உண்டானது.
 
I சாமுவேல் 4:17   இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்; ஜனங்களுக்குள்ளே பெரிய சங்காரம் உண்டாயிற்று; உம்முடைய குமாரராகிய ஓப்னி பினெகாஸ் என்னும் இருவரும் இறந்துபோனார்கள்; தேவனுடைய பெட்டியும் பிடிபட்டுப் போயிற்று என்றான்.

தேவனுடைய பெட்டியை போன்றே பரிசுத்த வேதாகமமும்! அதன் வார்த்தைகள் அதீத  வல்லமை உள்ளதுதான்! ஆனாலும்  அவ்வார்த்தைகள் நாம் வாழ்வில் செயல் படும்போதுதான் அது நமக்குள்  ஜீவனை கொடுத்து பயனளிக்குமேயன்றி, அதை கையில் எடுத்து காட்டியவுடம் காரியம் நடப்பதற்கும் பார்த்தவுடன் சாத்தான் பயந்து ஓடுவதற்கும்  அது ஒரு மந்திரக்கோல் அல்ல! 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

எரேமியா மூலம் கர்த்தரால் நேரடியாக சொல்லபட்டு பாரூக்கால் எழுதப்பட்ட இறை வார்த்தைகளாகிய சுருள்களை கூட   யோயாக்கீம் என்னும் யூதா ராஜா தீயில் போட்டு எரித்த சம்பவங்கள் கூட வேதத்தில் உண்டு.

 
எரேமியா 36:4. அப்பொழுது எரேமியா நேரியாவின் குமாரனாகிய பாருக்கை அழைத்தான்; பாருக்கு என்பவன் கர்த்தர் எரேமியாவுடனே சொல்லிவந்த எல்லா வார்த்தைகளையும் அவன் வாய் சொல்ல ஒரு புஸ்தகச் சுருளில் எழுதினான்.

23 யெகுதி மூன்று நாலு பத்திகளை வாசித்த பின்பு, ராஜா ஒரு சூரிக்கத்தியினால் அதை அறுத்து, சுருளனைத்தும் கணப்பிலுள்ள அக்கினியிலே வெந்து போகும்படி, கணப்பிலிருந்த அக்கினியில் எறிந்துபோட்டான்.
 
எனவே:  நாம் இயேசுவிலும்  இறைவனின் வார்த்தை நம்மிடத்திலும் நிலைத்திருந்தால் மட்டுமே நமக்கு பலன் உண்டு 
.
யோவான் 15:7 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.
.
மற்றபடி நாம் நம்மை கிறிஸ்த்தவன் என்று காண்பிக்க வேதத்தை கையில் வைத்துகொண்டு அலைவதால் நிச்சயம் பலன் ஏதும் இருக்காது என்பதே என்னுடைய கருத்தும் கூட. 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard