சில மாறுபாடான கோட்பாடுகளை கொண்டுள்ள கிறிஸ்த்தவ சகோதரர்கள் அவர்களது கருத்துக்கு உடன்படாத கருத்துக்களை நாம் வசனத்தின் அடிப்படையில் கொடுக்கும்போது அதற்க்கு சரியான பதில் இல்லை என்றால் அது மொழி பெயர்ப்பில் பிழை என்று கூறுவது வழக்கமாகிவிட்டது.
உதாரணமாக ஆண்டவராகிய இயேசு சிலுவையில் தொங்கிய கள்ளனை பார்த்து
லூக்கா 23:43இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
என்று வசனங்கள் தெளிவாக சொல்லியிருக்க, அந்த வார்த்தை தங்கள் கருத்துக்கு ஒத்துவராததால் அதை மாற்றி "நான் இன்றைக்கு சொல்கிறேன், நீ என்னோடு கூட பரதீசில் இருப்பாய்" என்று இயேசு சொன்னதாக மாற்றி சொல்கின்றனர் அதற்க்கு காரணம் மொழிபெயர்ப்பு பிழை என்று கூறுகின்றனர்.
இதுபோல் இன்னும் அனேக வசனங்களை கூறமுடியும்.
இந்த மொழிபெயர்ப்பு பிழைகளை நாம் ஏற்க்க வேண்டுமா?
என்னை பொறுத்தவரை வேதபுத்தகத்தில் எந்த மொழி பெயர்ப்பு பிழையும் இருப்பது போல் தெரியவில்லை. ஏனெனில் அந்த அடிப்படை மொழியை எழுதிகொடுத்தவரே நம்மோடு இருந்து நடத்துகிறார் நான் இன்னொரு மொழிபெயர்ப்பை ஏன் ஆராய வேண்டும்?
"நம் தேவன் ஜீவனுள்ளவர்" என்று உறுதியாக நம்ப முடியாதவர்களும், தங்கள் பார்வைக்கு ஞானிகளாக இருபவர்களும் தேவனுடன் நேரடி தொடர்பில் இல்லாதவர்களும் மட்டுமே இவ்வாறு மொழிபெயர்ப்பை குறைகூறி தாங்களின் தவறான புரிதல்களை உண்மை என்று நிலைநாட்ட விரும்புவதாக நான் கருதுகிறேன்.
என் கண்காண, வெறும் நான்காவது மட்டும் படித்த ஒரு சகோதரி வேதபுத்தகத்தில் உள்ள அனேக வசனங்களை காட்சிகளாகவே கண்டிருக்கிறார். நான் வேதத்தை படித்து அறிந்துகொண்ட காரியங்களை அவர்கள் காட்சியாகவே வர்ணித்து சொன்னார்கள். எழுத்து ஒருவருக்கு புரியவில்லையா தேவன் காட்சிகளாகவே காட்ட வல்லவர்.
இன்று இலக்கியங்களை படிக்க தெரியாதவர்கள் சினிமாவை பார்த்து பல கதைகளை அறிந்துகோள்வதில்லையா. உலக நிலைகளில் உள்ளவர்களே தங்கள் கருத்துக்களை இவ்வாறு வேறுபட்ட வடிவங்களில் விளக்கி சொல்ல அறிந்திருக்குமபோது சர்வவல்ல நம் தேவன், ஒரு படிக்காத பாமரனுக்கு தன் செய்தியை விளக்கி சொல்ல முடியாதவரா?
வேதத்தை ஆராய வேண்டியது அவசியம்தான் ஆனால் நமது அற்ப ஞானத்தால் தேவஞானத்தை அறிந்துவிடலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் ஆராய கூடாது அவ்வாறு ஆராய்வோமானால் நாம் ஒன்றையும் அறிந்துவிட முடியாது. ஏனெனில்
I கொரிந்தியர் 1:27ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்;
ஆண்டவர் மிக தெளிவாக சொல்கிறார். தேவன் தன்னுடைய திட்டங்களையும் நடத்துதல்களையும் ஞானிகளுக்கு தெரிவிக்க தயாராக இல்லை! கடந்த 18 வருடங்களாக நான் ஆண்டவரைப்பற்றி அறிந்துகொண்ட உண்மைகளில் முக்கியமானது, ஆண்டவரை ஆராய்ச்சியாலோ ஞானத்தாலோ அறியமுடியாது என்பதுதான் அவரை அனுபவத்தால் மட்டுமே அறியமுடியும்! அவர் ஒன்றுமறியாத குழந்தைபோன்று இருப்பவர்களுக்கே உண்மையா தெரிவிக்க தயாராக இருக்கிறார்
மத்தேயு 11:25அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
எனவே அன்பானவர்களே! வேத புத்தகத்தில் மொழிபெயர்ப்பு பிழைகள் இருக்கலாம், நான் இல்லை என்று சொல்லவில்லை அனால் புதிய ஏற்பாட்டு காலத்தை பொருத்தவர ஆண்டவரின் ஆழங்களை அறிந்த ஆவியானவரே நமது ஆசானாக இருக்கும் பட்சத்தில் நாம் அதற்க்கு சற்றும் கவலைப்பட தேவையில்லை. மற்றபடி அடிப்படை கருத்துக்களில் தவறான நிலைகளில் இருப்பவர்களே தங்கள் தவறான கருத்துக்களை நிலைநாட்ட அடிக்கடி அனேக மொழிகளை ஆராயவேண்டிய நிலை ஏற்ப்படும் என்றே நான் கருதுகிறேன்.
-- Edited by SUNDAR on Tuesday 1st of June 2010 11:04:01 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
sundar says: //என்னை பொறுத்தவரை வேதபுத்தகத்தில் எந்த மொழி பெயர்ப்பு பிழையும் இருப்பது போல் தெரியவில்லை.//
the same sundar says: //எனவே அன்பானவர்களே! வேத புத்தகத்தில் மொழிபெயர்ப்பு பிழைகள் இருக்கலாம், நான் இல்லை என்று சொல்லவில்லை.//
sundar says: //கடந்த 18 வருடங்களாக நான் ஆண்டவரைப்பற்றி அறிந்துகொண்ட உண்மைகளில் முக்கியமானது, ஆண்டவரை ஆராய்ச்சியாலோ ஞானத்தாலோ அறியமுடியாது என்பதுதான். அவரை அனுபவத்தால் மட்டுமே அறியமுடியும்!//
but the Scripture says: யோவான் 5:39 வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
1 கொரி. 2:15 ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
அப்போஸ்தலர் 17:11 அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.
யோவான் 6:63 ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.
யோவான் 12:48 என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.
// என்னை பொறுத்தவரை வேதபுத்தகத்தில் எந்த மொழி பெயர்ப்பு பிழையும் இருப்பது போல் தெரியவில்லை.
வேத புத்தகத்தில் மொழிபெயர்ப்பு பிழைகள் இருக்கலாம், நான் இல்லை என்று சொல்லவில்லை // ......................................?????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!
sundar says: //என்னை பொறுத்தவரை வேதபுத்தகத்தில் எந்த மொழி பெயர்ப்பு பிழையும் இருப்பது போல் தெரியவில்லை.// the same sundar says: //எனவே அன்பானவர்களே! வேத புத்தகத்தில் மொழிபெயர்ப்பு பிழைகள் இருக்கலாம், நான் இல்லை என்று சொல்லவில்லை.//
"என்னை பொறுத்தவரை அதாவது நான் அறிந்தவரை மொழி பெயர்ப்பில் பிழை இல்லை. ஆனால் பல அறிஞர்கள் சொல்வதுபோல் எதாவது பிழை இருக்கலாம் அதையும் நான் மறுக்கவில்லை" என்ற பொருளிலேயே கூறியிருக்கிறேன் வார்த்தை பிரயோகத்தில் முரண்பாடு போல் தெரிகிறது மன்னிக்கவும்
anbu wrote
///but the Scripture says: யோவான் 5:39 வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.///
நான் வேதத்தை ஆராய்ந்து பார்ப்பதை தவறு என்று சொல்லவில்லை சகோதரரே. பல்வேறு மொழி பெயர்ப்புகள் இல்லாத அந்த நேரத்தில் ஆண்டவராகிய இயேசுவும் பவுலும் குறிப்பிட்டுள்ள "ஆராய்ந்து பார்த்தல்" என்பது மொழி பெயர்ப்புகளை ஆராய்வது பற்றி இருக்க நிச்சயம் வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்
நான் சொல்வதன் கருத்தை ஒரு சிறு உதாரணத்தின் மூலம் விளக்கிவிடுகிறேன்.
ஒருவர் சிங்கப்பூரில் எப்படி செட்டில் ஆவது என்பது குறித்து ஒரு புத்தகம் எழுதுகிறார். அது அனேக மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது. நானும் பல மொழிபெயர்ப்புகளை வாங்கி சரியாக அறிந்து சிங்கபூர் போக முயற்ச்சிக்கிறேன். இந்நிலையில் ஒருநாள் அந்த புத்தகம் எழுதியவரே வந்து, என்னுடன் வா நான் சரியாக உன்னை வழிநடத்தி சிங்கப்பூரில் கொண்டு நல்லஇடத்தில் தங்க வைத்து விட்டுவிடுகிறேன் என்று சொல்லும்போது, நான் "இல்லை இல்லை நீங்கள் எழுதிய புத்தகத்தின் பல்வேறு மொழிபெயர்ப்புகளை ஆராய்ந்து அதில் பிழை இருக்கிறதா? என்று பார்த்துதான் என்னால் எதுவும் சொல்ல முடியும்" என்று சொன்னால் எப்படி இருக்குமோ அதுபோன்ற நிலைதான் இதுவும்.
வேதத்தை எழுதிகொடுத்த ஆவியானவரே நம்மை நித்திய ஜீவனுக்கு நேராக சகல சத்தியங்களுக்குள்ளும் வழி நடத்த நம்முள் வந்து தங்கிவிட்டார் இனியும் நாம் மொழி பெயர்ப்புகளை ஆராய்வது தேவைதானா? நமது ஆண்டவராகிய "ஆலோசனை கர்த்தர்" அல்லவா அவரிடமே சந்தேகங்களை விசாரிக்கலாமே என்ற பொருளிலேயே எழுதியிருக்கிறேன்.
யோவான் 14:26என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, யோவான் 16:13சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்
என்பதற்கு இணையாக சங்கீதம் 32:8நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
நானே உன்னை நடத்துகிறேன் என்று இவ்வளவு தெளிவாக சொல்லும் ஆண்டவரின் வார்த்தைகளை அடிப்படையாக கொண்டே இப்பதிவை உருவாக்கினேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அபிஷேகம் நிறைந்த(?) உங்களுக்கும், நீங்கள் சொல்கிற(!) அபிஷேகம் இல்லாத எனக்கும் முன்பொருமுறை கருத்து மோதல் நேரிட்டபோது பின்வருமாறு எழுதியிருந்தீர்கள்.
sundar wrote in பிறரை குற்றவாளியாக தீர்க்காதிருங்கள்: //நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு நான் எழுதும் எல்லா காரியங்களுக்கும் என்னால் வசன ஆதாரம் கொடுக்க முடியாத காரணத்தால், மேற்கொண்டு மனமுறிவு வராமல் இருக்க நாம் தனித்தனியே எழுதுவதுதான் சிறந்தது!//
//உங்கள் கருத்தை நீங்கள் எழுதுங்கள், எனது கருத்தை நான் எழுதுகிறேன்; யார் மனதில் ஆண்டவர் எதை ஏவுகிறாரோ அவரவர் உண்மையை அறிந்துவிட்டு போகட்டும்.//
இவ்விதமாக நீங்கள் எழுதியதால் உங்கள் தளத்தின் விவாதங்களில் நான் பங்களிக்காமல் இருந்தேன். இந்நிலையில், தள சகோதரர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் என்ற திரியில் பின்வருமாறு வேண்டியிருந்தீர்கள்.
//எனது கருத்துக்கள் சில சகோதரர்களுக்கு அவர்கள் கேட்டு அறிந்துகொண்ட போதனைகளின் அடிப்படையில் தவறாகவும் முரணபாடாகவும் தெரியலாம். அதற்காக தாங்கள் இத்தளத்தில் பதிவிடுவதை எக்காரணம் கொண்டும் நிறுத்தவேண்டாம் என்பதை அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
தங்களுக்கு எதாவது கருத்து தவறாகப்படுமாயின் விளக்கம் தேவைப்படும் இடத்தில் விளக்கம் கேட்கலாம், கொடுக்கப்படும் விளக்கம் திருப்தியாக இருக்காத பட்சத்தில் தங்கள் விளக்கங்களை அல்லது எதிர் கருத்துக்களை எந்த தயக்கமும் இன்றி பதிவிடலாம். அது எனது தவறை அறிந்துகொள்ள எனக்கு பயனுள்ளதாக இருக்கும்.//
நீங்கள் பொதுப்படையில் விடுத்த இந்த வேண்டுகோள் எனக்கும் உரித்தானதுதான் என்ற நம்பிக்கையில், சில நாட்களுக்கு முன் நான் சில பதிவுகளைத் தந்தேன். அதுவும் எனது வார்த்தைகளை அதிகமாக எழுதாமல், வேதவசனங்களை மட்டும் மேற்கோள் காட்டியிருந்தேன். அந்த வசனங்களுக்கு நீங்கள் விளக்கம் தந்து விவாதத்தைத் தொடங்கினீர்கள். எனவே நானும் விவாதத்தில் ஈடுபடவேண்டியதானது.
உங்கள் நினைவூட்டுதலுக்காகவும் தள சகோதரர்களின் மேற்பார்வைக்காகவும் இத்தகவல்களைத் தந்துள்ளேன்.
sundar wrote: //ஒருவர் சிங்கப்பூரில் எப்படி செட்டில் ஆவது என்பது குறித்து ஒரு புத்தகம் எழுதுகிறார். அது அனேக மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது. நானும் பல மொழிபெயர்ப்புகளை வாங்கி சரியாக அறிந்து சிங்கப்பூர் போக முயற்சிக்கிறேன். இந்நிலையில் ஒருநாள் அந்த புத்தகம் எழுதியவரே வந்து, என்னுடன் வா நான் சரியாக உன்னை வழிநடத்தி சிங்கப்பூரில் கொண்டு நல்லஇடத்தில் தங்க வைத்து விட்டுவிடுகிறேன் என்று சொல்லும்போது, நான் "இல்லை இல்லை நீங்கள் எழுதிய புத்தகத்தின் பல்வேறு மொழிபெயர்ப்புகளை ஆராய்ந்து அதில் பிழை இருக்கிறதா? என்று பார்த்துதான் என்னால் எதுவும் சொல்ல முடியும்" என்று சொன்னால் எப்படி இருக்குமோ அதுபோன்ற நிலைதான் இதுவும்.//
நல்ல உதாரணம்தான் சகோதரரே!
மெய்யாகவே புத்தகம் எழுதியவர் என்னிடம் வந்து சொல்கையில், நான் அவரது புத்தகத்தை ஒதுக்கிவிட்டு, அவரது சொல்லின்படி நடப்பது போதுமானதே.
இதில் நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம்: என்னிடம் சொல்பவர்தான் மெய்யாகவே புத்தகம் எழுதியவராக இருக்கவேண்டும். “நான்தான் புத்தகம் எழுதியவன்” என்று சொல்கிற பலரில் ஒருவராக அவர் இருந்தால் என்னாகும் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆம், ஒருவேளை நான் சிங்கப்பூருக்குப் பதிலாக, அரேபிய பாலைவனத்திற்குச் செல்ல நேரிட்டுவிடும்.
அடுத்து: புத்தகம் எழுதியவர் என்னிடம் நேரடியாக சொல்வதை நான் மட்டுமே ஏற்றுக்கொண்டு அதன்படி நடப்பதில் பிரச்சனை எதுவுமில்லை. ஆனால்: “புத்தகம் எழுதியவர் என்னிடம் இப்படிச் சொல்லியுள்ளார், எனவே எல்லோரும் இவ்விதமாக நடங்கள்” என நான் பிறருக்கு எப்படிச் சொல்ல முடியும்? அதை உண்மை என நம்பி மற்றவர்கள் எப்படி ஏற்கமுடியும்?
மேலும், “புத்தகம் எழுதியவர் என்னிடம் நேரடியாக பேசியுள்ளார்” எனச் சொல்லிக்கொண்டு அனேகர் எழும்பி, ஆளாளுக்கு ஒன்றொன்றை சொன்னால், அவற்றில் எதை ஏற்க முடியும்?
எனவே சிங்கப்பூர் செல்வது பற்றி ஒருவர் எழுதின புத்தகம் மட்டுமே என்றென்றும் எல்லாராலும் ஏற்கத்தக்கதாகும். அவர் எழுதின அப்புத்தகம் மொழிபெயர்க்கப்படுகையில், அதில் பிழைகள் நேரிடுவது இயல்பானது. எனவே பல மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுப்பார்த்து, ஆராய்ந்துபார்த்து, புத்தகம் எழுதியவர் சொன்ன கருத்துக்களை முடிந்தவரை பிழையின்றி அறிய முயல்வதில் தவறில்லை என்பதோடு, அதுவே நல்லதுமாகும்.
உங்களிடம் தேவன் பேசியுள்ளார் எனில் அதை உங்கள் மட்டோடு வைத்துக்கொள்ளுங்கள்; உங்களிடம் தேவன் பேசினபடி நீங்கள் தாராளமாக நடங்கள். ஆனால், “வேதாகமத்தை எழுதின தேவன் என்னிடம் நேரடியாகப் பேசி, இன்னின்னதைச் சொல்லியுள்ளார்” என்று நீங்கள் சொன்னால் அதை எப்படி மற்றவர்கள் நம்பமுடியும், நம்பி ஏற்கமுடியும்?
உங்களைப் போலவே பலரும், “என்னிடம் தேவன் நேரடியாகப் பேசி இன்னின்னதைச் சொல்லியுள்ளார்” என்று சொன்னால், அவற்றை எப்படி நம்பி ஏற்கமுடியும்?
அதுவும், தேவன் சொன்னதாக ஒவ்வொருவரும் சொல்வது ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருந்தால், அவற்றை எப்படி ஏற்கமுடியும்?
உங்களுக்குத் தேவன் வெளிப்படுத்தினது மெய்தானா இல்லையா என்ற கேள்விக்கு நான் வரவில்லை. உங்களுக்குத் தேவன் வெளிப்படுத்தினபடி நீங்கள் தாராளமாக நடங்கள். ஆனால் அதற்காக, வேதாகம மொழிபெயர்ப்புகளை ஆராய்ந்து, வேதாகமத்தின் சரியான கருத்தை அறிய முயல்பவர்களை மட்டந்தட்டாதீர்கள்.
-- Edited by anbu57 on Wednesday 2nd of June 2010 07:12:57 AM
தானி 12:4. தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்."
மாம்சக்த்தின்படி நடக்கும் யூதர்களுக்கு அன்று இந்த புத்தகம் அதில் உள்ள தீர்க்கதரிசனங்களும் புரிந்துக்கொள்ள முடியாதவையாக தான் இருந்திருக்கும். இன்றும் அப்படியே. ஆனால் கிறிஸ்துவிற்குள் அவரின் ஆவியால் வழிநடத்தப்படுகிறவன் சகோ அன்பு சுட்டி காட்டிய வசனங்களின் படியும் மேலே தானியேல் புத்தகத்தின் படியும் தேடி ஆராய்ந்தே கண்டுபிடிப்பார்கள். அறிவு பெருகிப்போம் என்றால் தனிப்பட்ட மனிதனின் உலக அறிவை குறிப்பிடவில்லை, மாறாக, தெரிந்துக்கொள்ளுவதற்கான, ஆராய்வதற்கான வசதிகள் பெருகி போகும் என்றே அர்த்தம். ஒரு 100 வருடங்கள், ஏன் ஒரு 50 வருடங்கள் முன்பு கூட இது போல் தளங்களினால் பகிர்ந்துக்கொள்ளுதல் இல்லாமல் இருந்ததே, இது அறிவின் பெருக்கத்தின் எடுத்துக்காட்டே.
மேலும் ஒருவன் தேவ ஆவியை பெற்றிருக்கிறான் என்று எப்படி அறிவது?
I யோவான் 4:1. பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
நீங்கள் பெற்றிருப்பதே தேவனின் ஆவி தானா என்பதையே சொதித்து அறிய சொல்லுகிறது வேதம். இன்று அநேகர் என்னிடம் தேவன் பேசினார் என்று பல கருத்துக்களையும் கோட்பாடுகளையும், தங்களின் மனதின் ஆழத்திலிருந்து உருவாகும் யோசனைகளுக்கு தேவனின் பெயரை சொல்லி வருகிறார்கள். ஆகவே வசனங்களை ஆராய்ந்து நிதானிப்பதே சிறந்தது. ஏனென்றால் எந்த ஒரு மனுஷனும் பொய்யனே என்கிறது வேதம். மேலும் பலரிடம் பலவிதாமாக பேசுவதற்கு தேவன் ஒன்று குழப்பத்தின் தேவனும் அல்ல.
வேதத்தை வாசித்து பார்த்தோமென்றால், தொடக்க முதல் இறுதி வரை ஒரே சீரான கருத்தையே எல்லா புத்தகங்களும் வசனங்களாகவும், தீர்க்கதரிசனங்களாகவும் சொல்லி வருகிறது. ஆனால் இன்று நவீன கால போதகர்கள், எங்களிடம் தேவன் பேசினார் என்று முறன்பாடுகளையே காண்கிறோம்.
Anbu wrote: ///நீங்கள் பொதுப்படையில் விடுத்த இந்த வேண்டுகோள் எனக்கும் உரித்தானதுதான் என்ற நம்பிக்கையில், சில நாட்களுக்கு முன் நான் சில பதிவுகளைத் தந்தேன். அதுவும் எனது வார்த்தைகளை அதிகமாக எழுதாமல், வேதவசனங்களை மட்டும் மேற்கோள் காட்டியிருந்தேன். அந்த வசனங்களுக்கு நீங்கள் விளக்கம் தந்து விவாதத்தைத் தொடங்கினீர்கள். எனவே நானும் விவாதத்தில் ஈடுபடவேண்டியதானது.
உங்கள் நினைவூட்டுதலுக்காகவும் தள சகோதரர்களின் மேற்பார்வைக்காகவும் இத்தகவல்களைத் தந்துள்ளேன்.///
சகோதரரே உங்களுடைய நிலை பற்றி எனக்கு ஆவியானவர் ஏற்கெனவே முழுமையாகவே அறிவித்துவிட்டார் "THE MAN OF PRINCIPLE" என்று உங்களை குறிப்பிடுவதில் தவறில்லை என்று கருதுகிறேன். உங்கள் பொறுப்புணர்ச்சிக்கு நனறி! ஆனால் CSI சகோதரர்கள்போல் நீங்கள் ஆவியானவரை அனுபவத்தில் அறியாததும் அவரை அறிந்துகொள்ள முயற்சிக்காததும்தான் உங்களால் சரியான உண்மையை அறியமுடியாத ஒரு நிலையை ஏற்ப்படுத்துகிறது. ஆனால் நான் சொல்வதை ஏற்க்கும் மனபக்குவம் உங்களுக்கு இல்லை. அபிஷேகத்தின் மேன்மை தெரியாமல் அதை புறமதத்தார் பார்ப்பதுபோல நோக்குகிறீர்கள்
நான் நீங்கள் மற்றும் வேதமாணவன் ஆகின நாம் மூவரும் பலமுறை விவாதித்தும் எந்த முடிவும் எட்டப்படாத கருத்துக்கள் பல உண்டு! யாராது சிரிதாகினும் மாறியிருக்கிறோமா? இல்லையே! எனவே இனியும் நாம் விவாதிப்பதில் எந்த பயனும் ஏற்ப்படபோவது இல்லை சகோதரரே! காரணம் நாம் அவரவர் கருத்தை நிலைநாட்டத்தான் முயல்கிரோமே தவிர பிறர் சொல்வதில் உள்ள உண்மைகளை அறிந்து ஏற்க்க முற்ப்படுவதில்லை இந்நிலை தெளிவாய் இருக்கும் பலருக்கு தேவையற்ற குழப்பத்தைத்தான் கொண்டுவரும்! நீங்களும் சகோதரர் பெரேயன்ஸ் அவர்களும் தங்கள் தங்கள் கருத்தைவிட்டு எப்படி மாறமாட்டீர்களோ அதுபோல் ஆண்டவரை முகமுகமாக அறிந்ததுபோல் அறிந்த என்னையும் உங்களால் மாற்ற முடியாது. (அவ்வாறு நான் மாறினேன் என்றால் நான் ஆண்டவருக்கு என்ன பதில் சொல்லுவேன்?) பிறகு நமக்குள் விவாதம் என்பது வீண் தானே?
ANBU WROTE: ///எனவே சிங்கப்பூர் செல்வது பற்றி ஒருவர் எழுதின புத்தகம் மட்டுமே என்றென்றும் எல்லாராலும் ஏற்கத்தக்கதாகும். அவர் எழுதின அப்புத்தகம் மொழிபெயர்க்கப்படுகையில், அதில் பிழைகள் நேரிடுவது இயல்பானது. எனவே பல மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுப்பார்த்து, ஆராய்ந்துபார்த்து, புத்தகம் எழுதியவர் சொன்ன கருத்துக்களை முடிந்தவரை பிழையின்றி அறிய முயல்வதில் தவறில்லை என்பதோடு, அதுவே நல்லதுமாகும்.////
அறிவு சார்த்த நிலையில் பார்த்தால் அது நல்லதுதான் ஆனால் ஆவிக்குரிய நிலையில் பார்த்தால் அது நல்லதல்ல. ஏனெனில் எழுதிகொடுதவர் நமது தகப்பன் அதாவது நமது அப்பா! அவரே நம்ம்னுள் வந்து நடத்துவேன் என்று சொல்லி விட்டார், இந்நிலையில் அவரது குரலை அறிய தெரியாதவர்கள்/முடியாதவர்கள் ஆராய்ந்து என்னத்தை அறிந்துவிட போகிறார்கள்!
ANBU WROTE: /////உங்களிடம் தேவன் பேசியுள்ளார் எனில் அதை உங்கள் மட்டோடு வைத்துக்கொள்ளுங்கள்; உங்களிடம் தேவன் பேசினபடி நீங்கள் தாராளமாக நடங்கள். ஆனால், “வேதாகமத்தை எழுதின தேவன் என்னிடம் நேரடியாகப் பேசி, இன்னின்னதைச் சொல்லியுள்ளார்” என்று நீங்கள் சொன்னால் அதை எப்படி மற்றவர்கள் நம்பமுடியும், நம்பி ஏற்கமுடியும்?////
சகோதரே, வேதபுத்தகத்தில் எழுதிய தீர்க்கதரிசிகள் எல்லோரும் அவரவர் தங்களுக்கு நடந்தவைகளை தாங்கள் அறிந்தவைகளை தங்களோடு முடித்து விட்டு போயிருந்தால் இன்றுஇந்த வேதம் என்னும் பொக்கிஷம் நமக்கு கிடைத்திருக்குமா அவரவருக்கு தேவன் தெரியப்படுத்தியவைகளை அவரவர் எழுதி வைத்துவிட்டு போகட்டும். அதை விரும்பி ஏற்ப்பவர்கள் ஏற்க்கட்டும் ஏற்காதவர்கள் விட்டுவிட்டு போகட்டும். இன்று உலகத்தில் வேத புத்தகத்தையே நம்பாத புறஜாதியார் எவ்வளவோபேர் இல்லையா? நான் யாரையும் கம்பல் பண்ண வில்லையே! பண்ணவும் முடியாதே. வலைத்தளத்துக்கு வரும் சகோதரர்கள் நம்மைவிட நிச்சயமாக அதிக புத்திசாலிகள் என்றுதான் நான் நம்புகிறேன். மேலும் என்னை நம்புங்கள் என்பதோ எனக்கு காசு அனுப்புங்கள் என்பதோ என்னை பின்பற்றுங்கள் என்பதோ எனது வேண்டுகோள் அல்ல! நாசியில் சுவாசமுள்ள மனிதர்களை நம்பாதீர்கள் மேலும் வெறும் எழுத்தை மட்டும் நம்பாதீர்கள் நமது ஆண்டவர் ஜீவனுள்ளவர் அவரை முகமுகமாக அறியுங்கள் அவருடன் நேரடி தொடர்பை ஏற்ப்படுத்தி அவர் சொல்வதை கேளுங்கள், புதிய ஏற்பாட்டு காலத்தில் அந்த தகுதி எல்லோருக்கும் இருக்கிறது என்பதுதான்.
மற்ற கிறிஸ்த்தவ சகோதரர்கள் எதிர்ப்பதுபோல் உங்கள் கருத்தில் எனக்கு எந்த எதிர்ப்பும் கிடையாது சகோதரே. "நன்மை செய்ய வேண்டும் வேத வார்த்தைகளை கைக்கொள்ளவேண்டும் பூரண சற்குணராக இருக்கவேண்டும் என்று சொல்கிறீர்கள்" நான் அதை நிச்சயம் ஏற்கிறேன். என்னுடைய எல்லா பதிவுகளிலும் வேத வார்த்தைகளை கைகொண்டுவாழவேண்டும் என்பதை வலியுறுத்தியே எழுதுகிறேன். நமக்குள் இருக்கும் மாற்று கருத்துக்கள் மரித்தபின் இறங்கும் பாதாளம் என்ற வேதனையுள்ள படுகுழி இருக்கிறதா என்பது பற்றியதும், மனிதனுக்கு துன்பங்கள் வர காரணம் பற்றியதுதும் தான். இது ஒரு பெரிய வேறுபாடு அல்ல. ஆண்டவராகிய இயேசு சொன்ன உவமையில் வருவதுபோல் "மரித்தவுடன் மனிதன் இறங்கும் பாதாளம் என்னும் வேதனையுள்ள இடம் உண்டு" என்றும் "மனித வாழ்க்கையில் துன்பம் வர ஒரே காரணம் தேவனின் வார்த்தைகளை மீறுவதுதான்" என்றும் நான் எழுதுவதை நீங்கள் நம்பினால் நபுங்கள் இல்லை என்றால் விட்டுவிடுங்கள்.
பாதளம் என்ற ஓன்று இல்லை என்றால் நல்லதுதான் ஆனால் ஒருவேளை இயேசு தனது உவமையில் சொன்னதுபோல் மரித்தபின்
போகும் பாதாளம் என்னும் வேதனையுள்ள இடம் இருந்துவிட்டால், நான் சொல்வதை நம்புகிறவர்களாவது தப்பித்து கொள்ளட்டுமே. சின்ன பிள்ளையை பூச்சாண்டி காண்பித்து நல்வழியில் நடக்க சொன்னதுபோல் எனது கருத்து இருந்துவிட்டு போகட்டுமே. இயேசுவும் பல இடங்களில் அதைதானே சொல்லியிருக்கிறார். தீமை செய்பவர்களை அவியாத அக்கினியிலே தூக்கிபோடுவார்கள் என்று சொல்லியிருக்க்றாரே நீ வேகாத அக்கினியில் போவதை பார்க்கிலும் ஒரு கண்ணை கூட பிடுங்கி போடலாம் என்று கூறியிருக்கிறாரே!
எனது கருத்தின் இறுதி நோக்கம் என்ன தேவனுடைய வாரத்தைகளின்படி வாழ வேண்டும் இல்லையேல் துன்பம் வரும் என்பதுதானே? அது தவறா?
மேலும் எனது வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை தவிர நான் கட்டுரை வடிவில் எழுதும் எல்லா பதிவுகளுக்கும் பல வசன ஆதாரங்களை தந்துதான் எழுதுகிறேன். நம்புகிறவர்கள் (குறிப்பாக பிறமத சகோதரர்கள்) வசன ஆதாரமே எதுவுமே இல்லை என்றாலும் நம்புவார்கள். ஏற்க்க மனதிலாதவர்கள் எத்தனை ஆதாரம் கொடுத்தாலும் ஏற்க்கமாட்டார்கள்.
ANBU WROTE ////உங்களைப் போலவே பலரும், “என்னிடம் தேவன் நேரடியாகப் பேசி இன்னின்னதைச் சொல்லியுள்ளார்” என்று சொன்னால், அவற்றை எப்படி நம்பி ஏற்கமுடியும்?////
தேவன் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் நடத்துவார். என்னை ஒரு விதத்தில் நடத்தியிருப்பதால் மற்றவர்களையும் தேவன் நிச்சயம் நடத்தியிருக்க முடியும், என்றகருத்தில் எல்லோர் சொல்வதையும் நான் நம்புகிறேன். அனால் தங்கள் அவ்வாறு ஒரு அனுபவத்துக்குள் கடந்து செல்லாத காரணத்தால் எல்லாமே உங்களுக்கு மாறுபாடாக தெரிகிறது அவ்வளவுதான்.
ANBU WROTE: // அதற்காக, வேதாகம மொழிபெயர்ப்புகளை ஆராய்ந்து, வேதாகமத்தின் சரியான கருத்தை அறிய முயல்பவர்களை மட்டந்தட்டாதீர்கள்.///
சகோதரரே நான் யாரையும் இங்கு மட்டம் தட்டி ஒரு வார்த்தைகூட எழுதவில்லை மொழிபெயர்ப்புகளை ஆராய்கிறவர்களை அறிஞர்கள் ஞானிகள் என்றுதான் குறிபிட்டிருக்கிறேன். நாம் அவர்கள் சுட்டும் மொழிபெயர்ப்பு பிழைகளை ஏற்க்க வேண்டுமா? அது தேவையற்றது என்ற கருத்திலேயே எனது பதிவு இருக்கிறது. இல்லை நான் ஆராய்ந்துதான் உண்மையை அறிவேன் என்று அடம் பிடித்தால் ஆராய்ந்துவிட்டு போங்கள். ஆனால் நீங்கள் அறியும் உண்மை எதுவும் ஆண்டவரிடம் தொடர்புகொண்டு அறியும் உண்மைக்கு ஈடாகாது.
எழுத்து பெரியதா? அதை எழுதி கொடுத்தவர் பெரியவரா ?
எழுதி கொடுத்தவரே பெரியவர்!
அவர் கொடுத்ததை அவர் எப்படி வேண்டுமானாலும் மாற்ற அவருக்கு வல்லமை மற்றும் அதிகாரம் எல்லாம் அவர் கையில் உள்ளது
I சாமுவேல் 2:30ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அவர் நிச்சயமாக சொன்னதையே ஒரேநொடியில் மாற்ற அவரால் முடியும்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)