இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆவியில் நடத்தப்படுதலின் மூன்று நிலைகள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
ஆவியில் நடத்தப்படுதலின் மூன்று நிலைகள்!
Permalink  
 


புதிய ஏற்பாட்டு காலத்தை பொறுத்தவரை "ஆவியில்  நடத்தப்படுதல்"  என்பது மிகவும்  அவசியமான ஓன்று.  ஏனெனில் புதியஉடன்படிக்கை  கீழிருக்கும் நாம் நியாயபிரமாணத்தை கைகொள்ள கவலைப்படுவது இல்லை. ஆனால்  ஆவியில் நடத்தபடுகிரவர்கள் மட்டுமே நியாயபிரமாணத்துக்கு கீழ்பட்டவர்அல்ல என்று வசனம் சொல்கிறது
 
கலாத்தியர் 5:18 ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.
 
எனவே ஆவியில் நடத்தபடாத எவரும் நியாயபிரமாணத்துக்கு கீழ்பட்டவவரே!  மேலும்
 
ரோமர் 8:1  கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை
 
ஆவியில் நடப்பவர்களுக்குதான்  ஆக்கினை தீர்ப்பு இல்லை என்று வசனம் சொல்கிறது. எனவே இந்த ஆவியில் நடத்தபடுதல் என்றால் என்ன  என்பது  பற்றி நான் அறிந்தவைகளை இங்கு பதிவிட விரும்புகிறேன்.
 
முதலில் நாம் பரிசுத்தத் ஆவியின் வரத்தை பெற்றிருக்கிறோமா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதற்க்கான வழிமுறைகளை கீழ்க்கண்ட தொடுப்புகளில்
தெரிவித்துள்ளேன்.
 
 
வெறும் அந்நியபாஷை பேசுவதை வைத்தோ,  அல்லது ஆராதனை நேரத்தில் ஆடுவதை வைத்தோ ஆவியானவர் வந்திருக்கிறார் என்று உறுதிபடுத்த முடியாது.
இதுபோன்ற காரியங்களை பிசாசும் சாதாரணமாக செய்துவிட முடியும். ஆவியின் கனிகளை  வெளிப்படுத்தாத  ஆவியானவர் உண்மையான தேவஆவியானவர் அல்ல   பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகளை நமது உள்ளத்தில் கேட்கமுடியும் அவரின் வழி நடத்துதலை நம்மால்  அறியமுடியும். அவர் துக்கப்படுவதை நாம் உணரமுடியும். ஆதி  அப்போஸ்த்தலர்களை எப்படி போதித்து /தடுத்து 
உணர்த்தி/ கண்டித்து நடத்தினான்ரோ அதுபோல் இன்றும் அவரால் நடத்த முடியும்.    
 
மேலும் அவர் நடத்துதலை அறிய கீழ்கண்ட தொடுப்ப்பை சொடுக்கவும்.  
 
    
"ஆவியில் நடத்தப்படுதல்" என்பதை நான் அறிந்தவரையில்  மூன்று வகையாக பிரிக்கலாம்.
 
1. முழுவதும் தேவ ஆவியால் ஆட்கொண்டு நடத்தபடுதல் 
2. ஆவியானவரின்  கட்டளைபெற்று  அதன்படி நாம் நடத்தல்
3. ஆவியானவரின் நடத்துதல் மற்றும் சுயமாக நடத்தல் இரண்டும் கலந்த நிலை.
 
1. முழுவதும் ஆவியானவரால் ஆட்கொண்டு நடத்தப்படுதல்.
 
நமது அறிவு, ஆற்றல், விருப்பம், வெறுப்பு எல்லாவற்றையும் ஒரு ஓரத்தில் விட்டு விட்டு ஆண்டவரின் கரத்தில் நம்மை முழுவதுமாக ஒப்புகொடுத்து அவர் என்ன சொன்னாலும் கேட்டு,  ஏன்?  என்று கேள்வி கேட்காமல் எதையும் செய்ய தயாராக இருந்தால் மட்டுமே  இந்நிலை நமக்கு  கிடைக்கும். இந்த நிலையை தருவது முழுக்க முழுக்க தேவனின் கரத்தில் இருக்கிறது நாமாக என்ன முயன்றாலும் பெறமுடியாது. தகுதி வாய்ந்தவருக்கு தேவன் கொடுக்கும் ஈவுதான் இந்நிலை. அதாவது நமது அறிவுசார்ந்த நிலையை தள்ளி ஆண்டவரின் கரத்தில் நம்மை முழுவதும் விட்டுவிடுவது.  
 
இந்நிலையில் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆண்டவரே நம்மேல் வந்து தங்கி நம்மை ஆட்கொண்டு நடத்துவார். அவர் நடத்துதலை மீறி நம்மால் ஓன்று செய்ய முடியாது.  நாம் கஷ்டப்பட்டாலும் நஷ்டப்பட்டாலும் அவர் சொல்வதை செய்தே ஆகவேண்டிய ஒரு நிலையில் ஆண்டவரின் கரம் நம்மேல் பலமாக இருக்கும்.
 
எசேக்கியேல் 3:14  நான் என் ஆவியின் உக்கிரத்தினாலே மனங்கசந்துபோனேன்; ஆனாலும் கர்த்தருடைய கரம் என்மேல் பலமாக இருந்தது.

நாம் நினைத்ததை செய்யமுடியாது அவர் நினைத்ததே நிறைவேறும்.
 
அப்போஸ்தலர் 16:7 மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்.
 
இந்நிலையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும்  தேவனே பொறுப்பு. இந்நிலை பொதுவாக பழையஏற்பாட்டு தீர்க்கத்ரிசிகளாகிய எரேமியா, எசேக்கியேல், ஏசாயா போன்றவர்களின் நிலைக்கு ஒத்தது. புதியஏற்பாட்டுக் காலத்தில் பவுல் மற்றும் பிலிப்பு ஸ்தேவான் போன்றவர்களையும் இதற்க்கு ஒப்பிடலாம். 
 
ஏசாயாவுக்கு வஸ்த்திரம் இல்லாமல் நடக்க  சொன்னதுபோல் சில இடங்களில் ஓடுவோம் சில இடங்களில் நடப்போம் சில இடங்களில் படுப்போம் அவர் தூங்கு என்று சொன்னால் தானாக தூங்குவோம். சில இடங்களில் செருப்பை கழற்றி கையில் தூக்கி செல்வோம். (பிறர் பார்த்தால் நம்மை நிச்சயம் பயித்தியம் என்று நினைப்பார்கள் ஆனால் நமக்கு அதைப்பற்றி சிறிதும் கவலை இருக்காது)  
 
இங்கு ஆண்டவர் அவரது திட்டத்தை நிறைவேற்ற  நம்மை எங்கு கொண்டு செல்ல வேண்டுமோ அங்கு அவரே  கொண்டுசெல்லுவார். அவரது  என்ன திட்டம் நிறைவேறியது என்பதுகூட நமக்கு சரியாக தெரியாது. சில நேரங்களில் அது நமக்கு சொல்லப்படும் சில நேரங்களில் ஒன்றும் சொல்லப்படமாட்டாது.  நமது கீழ்படிதல் மூலம் தேவனின் ஏதோ ஒரு ஆவிக்குரிய திட்டம் அங்கு நிறைவேறும் அவ்வளவுதான்.
 
இதுவே முழுவதும் ஆவியில்  ஆட்கொண்டு நடத்தப்படுதல். இந்நிலையில் நாம் தேவனின்  கட்டளையை  கைகொண்டு  நடக்க  கவலைப்பட வேண்டிய  அவசியம் இல்லை. அவ்வாறு அராய்ந்து கொண்டிருக்கும் ஒரு  மனபக்குவத்திலும் நாம் இருப்பதில்லை! இது முற்றிலும் தேவ ஆலோசனையின்படி நடத்தப்படுதல்.


சங்கீதம் 73:24
உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

புதிய ஏற்பாட்டு காலத்தில் ஆவியில் நடத்தப்படுதல் என்பது மிக மிக அவசியம் என்று பார்த்தோம். இவ்வாறு ஆவியில் நடத்தப்படுகிறவர்களுக்கு மட்டுமே ஆக்கினை தீர்ப்பு இல்லை என்பதையும்  வசனத்த்தின் அடிப்படையில் பார்த்தோம். மேலும் ஆவியில் நடத்தப்படுதலில் முதல் நிலையில் முற்றிலும் தேவனால் ஆட்கொள்ளப்பட்டு ஒரு எரேமியாபோல ஒரு ஏசாயா/ எசேக்கியேல்போல தேனின் கரத்தில் நம்மை ஒப்புகொடுத்து அவரால் நடத்தப்படுதல் என்றும் ஆவ்வாறு நடத்தப்படும்போது நாம் தேவனின் கற்பனையை யோசித்து கைகொள்வதற்கு கவலைப்பட தேவையில்லை என்றும் பார்த்தோம். இப்பொழுது ஆவியில் நடத்தப்படுதலின் இரண்டாம் நிலையை பற்றி பார்க்கலாம்.
 
(இதை நான் எழுதுவதற்கு முக்கிய  காரணம் என்னவென்றால்  பவுல்  அவர்கள் திருமணம் கூட செய்யாமல் மிக பரிசுத்தமாக வாழ்ந்து தேவனுக்காக எதையும் இழக்க துணிந்து ஆவியானவரால் அநேகதரம் முழுமையாக ஆட்கொண்டு நடத்தப்பட்டவர். எனவே அவர் அவருடய பரிசுத்த நிலைக்கு தகுந்தாற்ப்போல் ஆவியானவரின்  வார்த்தைகளை எழுதியிருக்கிறார். இன்று அநேகர் அவருடைய பரிசுத்தத நிலையில் ஒரு துளி கூட இல்லாமல், ஆவியால் நடத்தபடுதல் என்றால் என்னவென்று தெரியாமலேயே, ஆவியால் நடத்தப்படுகிறோம் என்று சொல்லிக் கொண்டு துணிந்து பாவம் செய்து வாழ்கின்றனர். இந்நிலையில் ஆவியால் நடத்தப்படுதல் என்றால் என்னவென்பதை அறிதல் அவசியம் ஆகிறது)
 
ஆவியில்  நடத்தப்படுதல்   நிலை - II

இந்நிலையில் தேவன் நம்மை  முற்றிலும்  ஆட்கொண்டு நடத்துவது இல்லை. மாறாக அவர் நம்முள் இருந்து நமக்கு கட்டளையிடுவார்  அதன்படி நடப்பதும் நடக்காததும் நமது விருப்பத்தின் அடிப்படையில் இருக்கும் :
 
உதாரணமாக ஒரு 

1.ஒரு குறிப்பிட்ட நபருக்கு ஆண்டவரைப்பற்றி சொல்வது பற்றியோ 
2.ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு  காணிக்கை கொடுக்க சொல்வதோ
3.நமது  உணவை உடையை பிறருக்கு  கொடுகசொல்வதோ 
4.ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு நம்மை போகவேண்டாம் என்று தடை செய்வதோ 5.ஒரு குறிப்பிட்ட காரியத்தில் உத்தமத்தை கடைபிடிக்க சொல்வதொவாக கூட இருக்கலாம்

இதுபோல் வேறு  அனேக காரியங்களில் தேவனின் வழிகாட்டி நடத்தும் செய்கையை நாம் அறியமுடியும். இவ்வாறு ஒருவர் ஆவியானவரால் கட்டளையிட்டு நடத்தப்படும் நேரத்தில் அவர் கற்பனையை கைகொள்வது பற்றி கவலை ப்பட தேவையில்லை. ஆவியானவர் சொல்லும் காரியத்தை மட்டும் சரியாக செய்தால் போதும். ஆனால் ஆவியானவரின் வார்த்தைக்கு கீழ்படியா விட்டால் அவருக்கு தண்டனை நிச்சயம் உண்டு.

அப்போஸ்தலர் 11:12
நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடேகூடப் போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார்.

இங்கு ஆவியானவர் பேதுருக்கு கட்டளையிடுகிறார் அதை செய்வதோ அல்லது செய்யாததோ அவரின் சொந்த விருப்பம். பலர் இதுபோல் சூழ்நிலையில் ஆவியானவரின் குரலை அமுக்கிவிட்டு தங்கள் சுயசித்தத்தின்படி நடப்பார்கள் அதற்க்கு தகுந்த காரணமும்   சொல்லிகொள்வார்கள்.  இவ்வாறு ஆவியானவரின் குரலை அசட்டை பண்ணும் நீங்கள் நியாயபிரமாணத்தின்படி  நடந்தாகவேண்டும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.     

அப்போஸ்தலர் 8:29 ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்;

இங்கு மந்திரிக்கு சுவிசேஷம் சொல்ல  பிலிப்புவுக்கு ஆவியானவரின் கட்டளை கிடைக்கிறது அதை நிறைவேற்றுவதும் நிறைவேற்றாமல் எதாவது சாக்கு சொல்லி சொல்லி தப்பித்து சொல்வதும் பிலிப்புவின் கையில் இருக்கிறது. ஆனால் அவரோ ஓடிப்போய் அவருக்கு சுவிசேஷம் சொல்ல முற்பட்டார்.
 
சுருக்கமாக சொன்னால்  ஆவியானவர் நம்முள் இருந்து நடத்தி தேவையான நேரங்களில்  கட்டளையிட, நாம் நமது சுய சித்தத்தால் அதன்படி நடப்பதுவே இந்த இரண்டாம் நிலை. இந்நிலையிலும்  நாம் நியாயபிரமாணத்துக்கு கீழ்பட்டவர் அல்ல ஆனால் ஆவியானவரின் வார்த்தையை மீறும்போது நிச்சயம் தண்டனை அனுபவிக்க நேரிடும்.
     


-- Edited by SUNDAR on Monday 21st of June 2010 09:36:08 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

ஆவியில்  நடத்தப்படுதல்  மூன்றாம்  நிலை!
 
இந்த மூன்றாம் நிலையை பற்றி அறிந்துகொள்ளும் முன் நாம் ஆவியானவர் பற்றிய சில உண்மைகளையும் அறிந்துகொள்ள வேண்டும். அதாவது ஒருமுறை பாவ மன்னிப்பையும் ஆவியானவரின் அபிஷேகத்தையும்  நாம் பெற்றுவிட்டால் அதன் பின் நமக்கு அருளப்பட்ட ஆவியானவர் எப்பொழுதும் நம்முள்தான் குடிகொண்டிருப்பார். ஆனால் அவரது செய்கையை அல்லது அவரது நடத்துதலை நாம் நமது செய்கைகளால் மட்டுப்படுத்தவோ அல்லது அறவே நிறுத்தவோ முடியும். ஜெபம் இல்லாமையோ அல்லது வேதவாசிப்பு மற்றும் ஆண்டவரை ப்ற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் உலக காரியங்களில் முழுவதுமாக நமது மனதை திருப்பும்போது நம்முள் இருக்கும் ஆவியானவர் முற்றிலும் மௌனமாகி விடுவார். அதாவது ஆவியானவருக்கு உகந்த செய்கைகள் மட்டுமே அவரை நம்முள் கிரியை செய்ய அனுமதிக்கும், பிசாசுக்கு உகந்த செய்கைகளை செய்தால் (அதாவது சினிமாப்படம் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால்)  அந்நேரம் ஆவியானவரின் கிரியைகள்  அறியமுடியாது.
 
இப்பொழுது மூன்றாம் நிலையை பற்றி பார்க்கலாம்
 
மேற்குறிய விளக்கத்தின் அடிப்படையில்  ஆவியானவர் நமக்குள் வாசம் செய்யும் போதுகூட நாம் ஆவிக்குரிய காரியங்களில் சிறிதும் கவனம் செலுத்தாமல் உலக காரியங்களில் முழுவதும் நமது கவனத்தை  செலுத்தும்போது ஆவியானவர் நமக்குள் இருந்தாலும் அவர் நடத்துதல் நமக்கு புரிவதில்லை, அல்லது அதை அறியும் அளவுக்கு நாம் விழிப்பாக இருப்பதில்லை.  ஜெபக்குறைவு, வேதவாசிப்பில் விருப்பமின்மை வேத  தியானத்தில் நேரம் செலவிடாமை, பிறரிடம் ஆண்டவரை பற்றி பேசுவதில் விருப்பமின்மை போன்ற ஆவிக்குரிய ஆகாரத்தில் குறைவு ஏற்ப்ப்படும்போது நமக்குள் இருக்கும் ஆவியானவர் நம்மை நடத்தினாலும் அதை அறிந்துகொள்ளும் அளவுக்கு நமது இருதயத்துக்கு சொரணை இருக்காது.
 
இவ்வாறு  தேவனுக்கடுத்த காரியங்களை விட்டு உலக  காரியங்களில் முழுவதும் மூழ்கி இருப்பவர்கள் அல்லது ஒருவர்  மூழ்கி இருக்கும்போது அவர்கள்  தங்கள் உலக  நடக்கயில்போது நிச்சயம் தேவனின் வார்த்தைகளை கைகொண்டு நடக்க வேண்டும். இல்லையேல் நியாயபிரமாணத்தின் அடிப்படையில் அவர்களுக்கு தண்டனை உண்டு ஆனால் அதற்காக அவர்கள் கிருபையில் இருந்து விழுந்துவிட மாட்டார்கள்.
 
இந்த மூன்று முறையான நடத்துதல்களும் யாருக்குமே நிலையானது அல்ல ஒரே விசுவாசிக்கு மூன்று விதமான அனுபவமும் இருக்கலாம் அல்லது ஒரே ஒரு அனுபவம் மட்டும் இருக்கலாம் அல்லது இரண்டுவித அனுபவம் இருக்கலாம் அது அவரவர் ஆவிக்குரிய நிலை மற்றும் தேவன் மேலுள்ள தாகத்தின் அடிபடையில் மாறுபடும்.
 
உதாரணமாக:
 
ஒருநாள் எங்கள் வீட்டுக்கு வந்த தேவனுக்கு ஊழியம் செய்யும் ஆவிக்குரிய சகோதரியிடம்  என் மனைவி "அரசாங்கத்தில் பெண் பிள்ளைகளுக்கென்று ஒரு புது திட்டம் கொண்டுவந்துள்ளனர் அதில் பதிவு செய்து ரூபாய் 300௦௦/- மட்டும் செலுத்தினால்  பிள்ளையில் எதிர்கால வாழ்வுக்கு பல நன்மைகளை அரசாங்கமே செய்கிறது எனவே நான் எனது பிள்ளை பெயரை பதிவு செய்திருக்கிறேன்  நீங்கள் விரும்பினால்  உங்கள் பெண்பிள்ளை பெயரையும் பதிவு செய்யுங்கள்" என்று கூறினார்கள் .
 
உடனே அந்த சகோதரி மிகுந்த கோபமாகி "உங்களுக்கு பரம பிதாவை தெரியுமா? அவரது வல்லமைபற்றி சரியாக அறிந்துள்ளீர்களா? இன்றுவரை  எல்லோருக்கும்  பிளைப்பூட்டும் அப்படியொரு பிதாவை தொழுதுகொண்டு, நாளைக்கு என்று என்னத்தை அரசாங்கத்திடம்  எதிபார்த்து எழுதிவைக்கிறீர்கள்? என்று கத்திவிட்டு ஆண்டவரைப்பற்றி எடுத்து சொல்லிவிட்டு போய்விட்டார்கள்.  இரண்டு நாட்கள் கழித்து அவர்களே திரும்ப வந்து "நீங்கள் சொன்ன அந்த அரசாங்க திட்டத்தில் நானும் இணைய வேண்டும் என்னை உடனே அங்கு அழைத்து செல்லுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்கள்.
 
இரண்டு முறை பேசியதும் ஒரே சகோதரிதான்!  இதில் எங்கு தவறு இருக்கிறது என்றால் அந்த சகோதரியின் ஜெபத்தில்தான் குறை இருக்கிறது. ஆவியானவர் மேலோ அல்லது அவர்கள் காட்டிய பிதாவாகிய தேவனை பற்றிய கருத்துக்கள் மேலோ அல்ல. அவர்கள் நன்றாக ஜெபித்து ஆவியில் நடத்தப்பட்டபோது அந்த திட்டத்தை அற்பமாக பார்த்த அதே சகோதரி, ஜெபம் இல்லாமல் உலக நிலையில் இருக்கும்போது அந்த திட்டத்தை மேன்மையாக பார்க்கிறார்கள்.
 
இதை  தவறு என்று தீர்க்க  முடியவில்லை என்றாலும். இப்பொழுது அவர்கள் தனது சுய திட்டத்தின் அடிப்படையில்  உலக நிலைக்குள்ளான ஒரு காரியத்துக்குள் போகிறார்கள். இந்நிலையில் தேவனின் வார்த்தைகளை நாம் பிரயாசத்துடன் நிறைவேற்ற வேண்டும்.
 
இந்த ஒரே காரியத்தின் அடிப்படையில் ஆவியானவரின் மூன்று விதமான வழி நடத்துதளையும் நாம் பார்க்கலாம்
 
1. முற்றிலும் ஆவியானவரால் ஆட்கொண்டு நடத்தப்படும்போது இப்படியொரு திட்டத்தில் அவர் சேருவதற்கு அனுமதிக்க மாட்டார் ஆகினும் சில நேரங்களில் அவர் திட்டம் நமக்கு புரியாது நம்மை அதில் சேருவதற்கு அழைத்து செல்லலாம் 
(உதாரணமாக எரேமியாவின் தரிசனத்தின் அடிப்படையில் இஸ்ரவேல் தேவன் நேபுகாத்நேச்சர் கையில் ஒப்பு கொடுக்கப்படும் போது ஆவியால் ந டத்தப்பட்ட எரேமியாவை  ஆண்டவர் அவருடைய சிறிய தகப்பனிடம் இருந்து நிலம் வாங்கும்படி கட்டளை இட்டார்)  அதபோல் ஆண்டவர் ஏதாவது ஒரு காரணத்தின்  அடிப்படையில் நம்மையும் இந்த திட்டத்தில் சேரும்படி நடத்தலாம். இங்கு அவரே அழைத்து செற்று அனைத்தையும் அவரே நிறைவேற்றுவார் நாம் அதில் எந்த தலையிடுதலும் செய்ய வேண்டியது இல்லை. நடக்க வேண்டியது தானாக நடக்கும்
 
2. இரண்டாம் நிலையில் ஆவியானவர் நம்மிடம் "இந்த திட்டம் உனக்கு தேவயில்லை நமது பரம பிதா இருக்கிறார், அவர் அனைத்துயும் பார்த்துகொள்வார் தேவையற்ற இந்த திட்டத்தில் சேரவேண்டாம்" என்று நமக்கு ஆலோசனை சொல்லுவார். அதை கேட்பதும் கேட்காததும்  நமது  சாய்ஸ். ஆனால் அதையும் மீறி நாம் அத்திட்டத்தில் சேர போவோமாகில் அங்கு நாம் உண்மையாக நடந்துகொள்ள வேண்டும்.    
 
3. மூன்றாவது நிலையில் ஆவியானவரின் நடத்துதலாகிய "இந்த திட்டம் உனக்கு வேண்டாம்" என்ற வார்த்தையே நமது இருதயம் உணராது எனவே நாம் இந்த திட்டத்தில் சேருவதற்கு நாமாக முயற்சி செய்து போகிறோம் இந்த நேரத்தில் நாம் நமக்கு அங்கு பலவிதமான கண்ணிகள் இருக்கும் உதாரணமாக அவர்கள் நிரப்பும் படிவத்தில் ஆண்டு வருமானம் வீட்டு வாடகை போன்றவை கேட்டிருந்தால் அதற்க்கு சரியான உண்மை  பதிலை எழுதவேண்டும் இல்லையேல் தண்டனை அடைய  நேரிடும்.     
 
ஆவியானவரால் நடத்தப்படுகிறவர்களுக்கு மட்டுமே நியாயபிரமாணத்தை மீறி நடக்க தகுதியிருக்கிறது என்பதை நான் மீண்டும்  நினைவுபடுத்த விரும்புகிறேன். மற்றவர்கள் மற்ற நேரங்களில்  நியாயபிரமாணத்துக்கு கீழ்பட்டவர்களே. ஒருவர் உயிரோடு இருக்கும் வரை நியாய பிரமாணம் அவர்களை ஆழுகை  செய்கிறது   
 
ரோமர் 7:1  ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறதென்று அறியாமலிருக்கிறீர்களா?

ஆவியில் நடத்தப்படுகிறவர்களுக்கு மட்டுமே இதிலிருந்து விதிவிலக்கு அருளப்பட்டுள்ளது
 
கலாத்தியர் 5:18 ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

"ஆவியில் நடத்தப்படுதல்"  என்றால் என்னவென்பதை  என்பதை பலர் தவறாக புரிதுள்ளதால் இந்த திரி மீண்டும் பார்வைக்கு வைக்கபடுகிறது. 
 
ஆதாம் ஏவாளிடம் தேவன் உறவாடும் நிலையில் இருந்தும்  பாவம் செய்தபோதுகூட அங்கு கண்டித்து எச்சரிக்க தேவன் அங்கு  வரவில்லை.  
 
காரணம் தேவன்  முன்னமே அந்த கனியை குறித்து அவனை எச்சரித்து விட்டார். 
 
அதுபோல் தாவீது தேவனின் அபிஷேகத்தை பெற்றிருந்தும் அவன் பத்சேபாள் விஷயத்தில்  செய்து கொலை செய்யும்வரை  எந்த சமாதான இழப்பும் அடைந்ததாக வேதம் சொல்லவில்லை. 
 
காரணம் "பிறன் மனைவியை இச்சிக்க கூடாது" என்ற கட்டளை தாவீ துக்கு முன்னமே தெரியும்.  
 
 
இன்றும்கூட எதை செய்ய வேண்டும் எதை  செய்ய கூடாது என்று தேவன் தெளிவாக எழுதி கொடுத்து பலருடைய நடபடிகளை  நமக்கு திருஷ்டந்திரமாகவும் எச்சரிக்கையாகவும் வைத்திருக்கிறார் அதை மீறினால் நிச்சயம் அதற்கேற்ற  தண்டனை உண்டு.  
 
பரிசுத்த ஆவியானவர் நம்மை சகல சத்தியங்களுக்குள்ளும் வழி நடத்துவார் என்பது உண்மைதான். ஆனால் நாம் வேத வசனங்களை அறியாத பட்சத்திலோ அல்லது ஒரு காரியம் குறித்து அது சரியா தவறா என்பதை நாம் அறியாத நிலையிலோதான் அவர் நமக்கு உணர்த்துதலை தருவார்.  
 
ஆனால் நாம் ஆவியானவருக்கே எந்த இடமும் கொடுக்காமல், நாம் துணிந்து வேத வசனத்துக்கு எதிரான  சில காரியங்களை செய்வதில் பிடிவாதமாக இருக்கும்போது ஆவியானவர் நம்மோடு போராடமாட்டார். 
 
ஆதியாகமம் 6:3 அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை;
 
அப்படிபட்ட நேரங்களில் நம் போக்குக்கு நம்மை  விட்டுவிட்டு அந்த காரியம் முடிந்த பின்னரே அதற்க்கான தண்டனை என்னவென்பது தெரிவிக்கப்படும்.
  
எனவே நாம் ஆவியில் நடத்தப்படும் நிலையில் இருந்தாலும் செய்யும் காரியங்களை கவனத்துடனும் ஜெபத்துடனும் செய்யவேண்டியது மிக மிக அவசியம். 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

ஆவியில் நடத்தப்படுகிறோம் என்று சொல்லிக்கொண்டு அநேகர்தேவனுடைய வார்த்தைகளை மீறி துணிந்து பாவம் செய்ய துணிவதால் அவர்கள் உணர்வடையும் பொருட்டு திரியின் முக்கியத்துவம் கருதி மீண்டும் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
Permalink  
 

அற்புதமான கட்டுரை அபாரமான விளக்கங்கள். நான் கடைப்பிடிக்க வேண்டிய நிறைய விஷயங்களை ஆவியானர் உணர்த்தினார். நன்றி.



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



வெற்றியாளர்

Status: Offline
Posts: 627
Date:
Permalink  
 

கர்த்தருக்கு மகிமை

பயனுள்ள கட்டுரை

ஆவியை உயிரடைய செய்யும் அட்புதமான விளக்கங்கள்.

அநேக காரியங்களை ஆண்டவர் என்னோடு பேசினார்.

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 627
Date:
Permalink  
 

ஆவியில் நடத்தப்படுகிறவர்களுக்கு மட்டுமே இதிலிருந்து விதிவிலக்கு அருளப்பட்டுள்ளது

கலாத்தியர் 5:18 ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.

ஆவியில் நடத்தப்படுபவர்கள் நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ள தேவை இல்லையா ?

சற்று விளக்கவும்

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

Debora wrote:

ஆவியில் நடத்தப்படுகிறவர்களுக்கு மட்டுமே இதிலிருந்து விதிவிலக்கு அருளப்பட்டுள்ளது

கலாத்தியர் 5:18 ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.

ஆவியில் நடத்தப்படுபவர்கள் நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ள தேவை இல்லையா ?

சற்று விளக்கவும்


 ///ஆவியில் நடத்தப்படுபவர்கள் நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ள தேவை இல்லையா ? /// 

 
நிச்சயமாக தேவையில்லை அதை வசனமே சொல்கிறதே!
 
கலாத்தியர் 5:18 ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல. 
 
இதற்கான விளக்கத்தை ஒரு உதாரணம் மூலம் சுலபமாக விளக்குகிறேன்.
 
நான் என் மகனிடம் ஒருநாள் சென்னையில் உள்ள  மைலாப்பூர் என்னும் இடத்துக்கு போகும்படி சொல்கிறேன். எங்கள் வீட்டில் இருந்து அவ்விடம் சுமார் 22 கிமி தூரம் இருப்பதாலும் அவன் புதிதாக அந்த இடந்த்துக்கு போவதாலும் அதன் வழியை அவன் அறியாததால் அவனுக்கு எப்படி போகவேண்டும் என்பதை விளக்கி சொல்லியதோடு, கையில் தெளிவான  விளக்கமுள்ள டையாகிரம் ஒன்றையும் கொடுக்கிறேன் அதில் இந்த இடத்தில் இறங்கவேண்டும் இந்த பஸ் பிடிக்க வேண்டும் என்ற முழு விளக்கமும் இருக்கிறது.
 
இந்த விளக்கம்தான் / டையாகிராம்தான்  தேவன் எழுதி கொடுத்துள்ள நியாயப்பிரமாணம். அதாவது தேவனின் ஆவி நம்மக்குள் இருந்து நம்மை நடக்காத நேரத்தில் நாம் எப்படி நடக்க வேண்டும் எதை செய்ய வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்ற விளக்கங்கள் அதில் தெளிவாக எழுதி கொடுக்கப்பட்டுள்ளது.
 
ஒருநாள் அந்த இடத்துக்கு நானே என் பையனை அழைத்த்து செல்கிறேன் என்று வைத்துகொள்வோம். அப்பொழுது அந்த விளக்கம் மற்றும் டையாக்கிரம் என் பையனுக்கு தேவையா?  அவன் அதை பார்க்க வேண்டிய அவசியமே இல்லை என் பின்னால் அடம் பிடிக்காமல் வந்தால் போதும் 
நான் சரியாக அவனை கொண்டு சேர வேண்டிய இடத்தில் சேர்ந்த்துவிடுவேன் அல்லவா?
 
அதுதான் ஆவியானவரின் நடத்துதல். அவர் நிச்சயம் நம்மை சரியாக பாதையி சரியான இலக்கில் நடத்துவார் எனவே அவர் நடத்துதலின்போது நாம் நியாயப்பிரமாணத்தை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
 
ஆனால் 
இந்த் உலகத்தில் பரிசுத்த ஆவியானவர் போல அநேக டூப்ளிகேட் ஆவியும் கிரியை செய்வதனால் நம்மை நடத்துவது தேவ ஆவிதானா என்ற நிச்சயத்தை நாம் கண்டிப்பாக பெற வேண்டும்.
 
I யோவான் 4:1 பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.  
 
சத்திய ஆவியானவர் நம்மை சத்தியம் என்னும் வசனத்தின் அடிப்படையிலேயே நடத்துவாரேயன்றி அதற்கு வெளியில் நடத்த மாடடார். 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 627
Date:
Permalink  
 

Superb example anna.. Understood.. Thanks .. God bless you..

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard