இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஓர் முக்கிய பயனுள்ள அறிவிப்பு!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
ஓர் முக்கிய பயனுள்ள அறிவிப்பு!
Permalink  
 


அன்பு தேவபிள்ளைகளே!   நான் ஏற்கெனவே அறிவிப்பதுபோல்,
 
தானியேல் 4:2 உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு நன்மையாய்க் கண்டது

என்ற வார்த்தைக்கு ஏற்ப,  இந்த தளத்தில் நான் எழுதும் எல்லா காரியங்களும் எனது அனுபவ அடிப்படையில் எழுதப்படுகிறது. சுமார் 18 வருடங்களுக்குமுன் ஆண்டவரால் அபிஷேகிக்கபட்டேன் அவரால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டேன் நடத்தப்பட்டேன். தேவனின் திரித்துவ நிலைகளாகிய  மூன்று  ஆவிகளின் நடத்துதலையும் தனித்தனியாகவும் கூட்டாகவும் அனுபவித்தேன்   
 
ஏசாயா 48:17 இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே
 
என்று வாக்கு கொடுத்த  தேவன்
 
புலம்பல் 3:2 என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார்  
 
அனேக துன்பங்களை கடந்து வந்தேன். பாதாளத்துக்குள் இறங்கி ஏறிவந்தேன், ஆவிகள் உலகினுள் சென்று வெளியே வந்திருக்கிறேன், பயித்தியம் என்று முத்திரை குத்தப்பட்டு காலில் விலங்கிடப்பட்டு வீழ்ந்து கிடந்திருக்கிறேன், பல நாட்கள் தெருவிலே தூங்கியிருக்கிறேன், ஆண்டவரின் வார்த்தையை மீறி தேவையற்ற வீணர்களிடம் அடி வாங்கியிருக்கிறேன்.  இன்றும் அதே தேவன் என்னை  நடத்துகிறார் ஆனால் கொஞ்சம் நல்லநிலையில் வைத்திருக்கிறார்.     
 
அவர் நடத்துதலின்போது என்  வாழ்வில்  நான்  சந்தித்த அதிசய நிகழ்வுகள், மற்றும் ஆளமான துன்பங்கள் வேதனைகள் அதன் மூலம் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் போன்றவற்றை  ஒரு சில உண்மை நிகழ்வுகளை தவிர மற்றவற்றை ஆண்டவரின் வார்த்தைகளின் அடிப்படையிலேயே இங்கு பதிவிடுகிறேன்     
 
இதை பிறருக்கு  ஒரு உபதேசமாகவோ  அல்லது  யாருக்கும் பாடமாகமோ  எழுத வில்லை. யாருடைய இருதயத்தை ஆண்டவர் திறந்து இதை புரிய வைக்கிறாரோ அவர்கள் மட்டும் புரிந்துகொண்டால் போதும்!  எனது அனுபவம் சிலருக்கு இருக்கலாம் பலருக்கு இல்லாமல் இருக்கலாம் சிலருக்கு கிடைக்கலாம் சிலருக்கு கிடைக்காமல் போகலாம்.  சிலர் ஏற்கலாம் சிலர் மறுக்கலாம் எனக்கு அதைப்பற்றி சிறிதும் கவலை இல்லை. ஏனெனில் தேவன் எல்லோரையும் ஒரு போல் வழி நடத்துவது இல்லை. 
 
ஒரு ஏசாயாவை நடத்தியத்போல் எரேமியாவை நடத்தவில்லை எரேமியாவை நடத்தியதுபோல் எலிசாவை நடத்தைவ்ல்லை எலிசாவை நடத்தியதுபோல் தாவீதை நடத்தவில்லை, தாவீதை நடத்தியதுபோல் பவுலையோ,  பேதுருவையோ நடத்தவில்லை.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோக்கத்தோடு தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு நடத்தப்படுகின்றனர்.  அவரை அப்படி ஏன்  நடத்தினார், என்னை இப்படி ஏன் நடத்தினார் என்று தேவனிடம் நாம் கேள்விகேட்க முடியாது! அவரவர் தகுதிக்கு ஏற்றாற்போல் தேவன் நடத்துகிறார். எனவே இங்கு யாரையும் குறை கூறவோ குற்றம் சுமத்தவோ நமக்கு உரிமை இல்லை!    
 
அவரவர் தாங்கள் நடத்தப்பட்டதை எழுதிவைத்து சென்றதால் இன்று  நமக்கு அது வேதாகமம் என்னும் ஒரு புத்தகம்  பொக்கிசமாக கிடைத்துள்ளது. அதுபோல் என்னை தேவன் நடத்தியவிதம் பற்றியும் நான் எழுதி வைத்துவிடுகிறேன். போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும், மகிமைஅனைத்தும் தேவனுக்கே சேரட்டும்!   
 
தவறுகளை சுட்டி காடுவதையும் சந்தேகங்களை கேள்விகள் மூலம் நிவர்த்தி செய்வதையும் நான் நிச்சயம் வரவேற்கிறேன் ஆனால் வீட்டின் அஸ்திபாரத்தில் பிரச்னை  இருக்கும்போது  மேல்புறத்தை பூசினால்  எந்த  பிரயோஜனம் இல்லையோ அதுபோல் அடிப்படை கருத்தில்  உள்ள மாறுபாடுகளை களையாமல் விவாதித்துக் கொண்டே இருப்பதில் எந்த பயனும் ஏற்ப்படாது. 
 
எனவே முதலில் ஆண்டவரால் ஒருவரை  அபிஷேகித்து போதித்து கரம்பிடித்து, கண்டித்து  நடத்த முடியும்  என்ற உண்மையை அறிய வேண்டும்  
 
சங்கீதம் 27:11 கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதித்து, என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும்.

என்ற சங்கீதக்காரனின் வேண்டுதலுக்கு ஏற்ப
 
சங்கீதம் 32:8 நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

என்ற ஆண்டவரின் வார்த்தையை ஏற்க்கவேண்டும். அதை ஏற்க்கவில்லை என்றால் என் வார்த்தைகளையும் ஏற்ப்பது கடினம் மற்றபடி தேவனின் அபிஷேகம்பற்றி அறிந்தவர்கள் நிச்சயம் என் வார்த்தைகளின் உண்மைபற்றி அறிவார்கள்!   
 
நன்றி!


-- Edited by SUNDAR on Thursday 3rd of June 2010 07:17:45 PM

-- Edited by SUNDAR on Thursday 10th of June 2010 05:52:53 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: ஓர் முக்கிய அறிவிப்பு!
Permalink  
 


நான் அறிந்துகொண்ட ஒரு உண்மை  என்னவென்றால் எல்லோராலும் எல்லா வற்றையும் எல்லா நேரங்களிலும் எழுதிவிட முடியாது. அததற்க்கென்று ஒரு அழைப்பு தேவகிருபை, சூழ்நிலை மற்றும் அபிஷேகம் வேண்டும்!  நமது சுய பெலத்தால் சாதித்து விடலாம் என்றுஎண்ணி எதுவும் எழுதிவிட முடியாது சாதித்துவிட முடியாது. நான் எப்படியாகினும் எழுதநினைத்து முழு உருவம் கொடுத்த கட்டுரைகள் கூட எத்தனையோ எழுதமுடியாமல் போயிருக்கிறது. எத்தனையோ புதுபுது கருத்துக்கள் மனதிலேயே மறைந்துபோயிருக்கிறது. அதுபோல் முழுபதிவை முடித்து சிறு தட்டும்பிழையால் பதிவுகள் மாறி போயிருக்கிறது தேவ செயலின்றி எதுவும்  இங்கு நடக்காது.    
 
ஞானமற்ற வார்த்தைகளால் யாருக்கும்  பயனேதும் இல்லை என்பது உண்மையே ஆனால் ஒரு சிலர் தேவையற்றது என்று கருதும் சில வார்த்தைகள் வேறு சிலருக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்க வாய்ப்பிருக்கிறது எனவேதான் ஆண்டவர் சில மாறுபட்ட கருத்துக்களை எழுதும்படி என்னை ஏவுகிறார்  என்றே நான் கருதுகிறேன். நமது இந்திய தேசத்தை பொறுத்தவரை அதிகம் மாற்றுமத சகோதரர்களையே நாம்  அதிகம் சந்திக்கிறோம். அவர்களுக்கு ஒரு செய்தியை சொல்லும்போது வெறும் வேதாகமத்தை மட்டும்  மேற்கோள் காட்டி சொல்ல முடியாது உங்கள் வேதாகமத்தை நம்ப நான் தயாராக இல்லை என்று ஒரே வார்த்தையில் கூறிவிடுவர்.   எனவே பொதுவான கருத்துக்களையும் வேதத்துடன் சம்பந்தப்படுத்தி சொல்லி வேதத்தின் மகத்துவத்தையும் அது காட்டும் இரட்சிப்புக்கான நேர்வழியையும் புரியவைப்பதே சரியான நிலை என்ற நான் கருதுகிறேன்! அதற்காகவே பல அறிய கருத்துக்களை எழுத முயல்கிறேன் அதற்காக பிரயாசம் எடுக்கிறேன்.   
     
ஆனால் ஒரே  ஒரு காரியத்தை எல்லோராலும் சுலபமாக செய்யமுடியும்!  அது என்ன தெரியுமா?
 
குறை கூறுவதும்,  பழிப்பதும், குற்றம் கண்டுபிடிப்பதும்!
 
இதை செய்வது எல்லோருக்கும் மிக மிக  சுலபம்! 
 
ஆனால் இதுபோன்ற காரியத்தை யாரு செய்வார்கள் என்று வேதம் சொல்கிறது என்பதை நாம் சற்று யோசிப்போமானால் நாம் நிச்சயம் பிறரை குறைகூற துணிய மாட்டோம்!
 
 வெளி 12:10 ; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் .

என்று சாத்தானை குறித்து வேதம் சொல்கிறது!  சாத்தானது வேலையே அதுதான். இரவும் பகலும் சகோதர்கள்மேல் குறை கூறுவதும் குற்றம் சுமத்துவதும்தான் இவனது பிரதானவேலை. அந்த ஆவியை பெற்றிருந்த பரிசேயரும் வேதபாரகரும் இயேசுவின் மேல் என்ன குற்றம் சுமத்தலாம் என்ற யோசனையிலேயே சுற்றி வந்தனர்.  அவர்களுடய வேதத்தின் அடிப்படையிலேயே பல குறைகளை கண்டு பிடித்தனர்.  பல கேள்விகள் கேட்டனர்  
 
யோவான் 8:6 அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள்
 
அவர் செய்த எத்தனையோ நல்ல கிரியைகளால் அவர்கள் சற்றும் ஈர்க்கப்படவில்லை மாறாக அவர்கள் தவறு என்று கருதிய ஒருசில கிரியை நிமித்தம் அவரை கொல்ல வகைதேடினர்.இதுதான் பிசாசின் கிரியை.
   
ஆனால்  எனக்கு  யாரையும்   குற்றம் சுமத்தும்  எண்ணம்  இல்லை சகோதர்களே!  
 
பத்து கருத்துக்கள் எழுதப்படும்போது ஒன்றிரண்டு  சிலருக்கு பிடிக்காததாக இருக்கலாம். தேவயற்றதுபோல தோன்றலாம். எல்லோருக்கும்  எல்லா கருத்துமே பிடிப்பதில்லை. உங்களுக்கு தேவையில்லை பிடிக்கவில்லை என்றால் அது எல்லோருக்கும் பிடிக்கவில்லை, யாருக்கும் பயனில்லை என்று கருத வேண்டாம். அதனால் யாருக்கோ பலன் இருக்கிறது என்று ஆண்டவர் ஏவுவதாலேயே அந்த கருத்துக்கள் எழுதப்படுகின்றன என்பதை கருத்தில் கொள்க!
 
எனவே என்னுடைய  எல்லா கருத்துக்கும்  நான் ஆண்டவர்  ஒருவுக்கே கணக்கு
ஒப்புவிக்க
கடமைப்பட்டுள்ளேன்.   
 
மேலும் நான் எழுதும் கருத்துக்கள் எல்லாமே முடிந்த அளவுக்கு பிறருக்கு உண்மை உத்தம பரிசுத்த வழியை காட்டுமேயன்றி  யாரையும் எவ்வித தீயவழியில் நிச்சயம் திருப்பபோவது இல்லை! 

எனவே எனது கருத்துகளால் குறித்து  யாரும் கலங்க வேண்டிய அவசியம் இல்லை!
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
RE: ஓர் முக்கிய பயனுள்ள அறிவிப்பு!
Permalink  
 


// இந்த திரியின் விவாதம் திசைதிரும்பி போவதாலும், என்றோ நடந்து முடிந்துபோன புத்தரின் காரியங்களை விவாதிப்பதில் யாருக்கும்  எந்த பயனும் இல்லை  என்பதாலும்  இந்ததிரி இத்துடன் மூடப்படுகிறது. //

http://www.lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=3&topicID=36293850

நண்பர், விவாதம் திசை திரும்பியதாக எதை வைத்துச் சொல்லுகிறாரோ தெரியவைல்லை; புத்தரைக் குறித்து முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்குட்பட்ட நிலையிலேயே வாதம் செல்கிறது; இன்னும் சொல்லப்போனால் விவாதம் துவங்கவேயில்லை;

ஏற்கனவே "இயேசு சிலுவையிலறையப்படவேண்டுமே" என்று திட்டமிட்டே ஓய்வுநாள் பிரமாணத்தை மீறினார் என்று அவசரப்பட்டு அறிக்கை விட்டு பின்வாங்கினார்; சகோதரரே உங்களோடு பேசுவது ஆவியானவரானால் வெளிப்படையான விவாதத்தினைத் தவிர்த்துவிட்டு ஏன் பின்வாங்க வேண்டும்..?

எழுதப்படும் - பேசப்படும் எல்லா வார்த்தைகளுமே ஆவியானவர் மூலமே வருவதாக எண்ணுவது மிகவும் ஆபத்தானதாகும்;தாவீது போன்ற பரிசுத்தவான்களே சாத்தானால் தூண்டப்பட்டு தேவனை கோபப்படுத்தியதுண்டல்லவா..?

நீர் கிறித்தவ விசுவாசத்துக்கு முற்றிலும் விரோதமானதொரு சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்துவிட்டு நாங்களெல்லாம் குற்றஞ்சாட்டும் சாத்தானின் தூதர்கள் என்று வசைபாடுவது நியாயமா..?

சர்ச்சைக்குரியதானதொரு கருத்தினை முன்வைத்த நண்பர் தனது எதிர்தரப்பை ஆதாயப்படுத்திக் கொள்ளும் வண்ணமாக எதையும் செய்யாமல் வெறுமனே சீறுவதால் யாருக்கு என்ன லாபம்?

"இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன்."(யோவான் 21:25 ) -எனும் ஒரு வசனத்தை வைத்துக்கொண்டு வேதத்திற்குப் புறம்பான அனைத்தையும் வேதத்துக்குள் கொண்டு வரலாமா?

இப்படியே போனால் அரிச்சந்திரனும் தருமனும் கர்ணனும் இராமனும் கூட பரிசுத்தவான்களாகவும் நீதிமான்களாகவும் தீர்க்கப்படமுடியுமே..!

ஆவிக்குரிய காரியங்களை ஆவிக்குரியவற்றோடு சம்பந்தப்படுத்தி போதிப்பதுதானே ஆவிக்குரியோரின் பணி..?

புத்தரின் போதனைகளை உற்று நோக்கினால் அது இறுதியில் சுயநீதி மார்க்க போதனையாகவே முடிகிறது; தனக்கு மேல் ஒரு சக்தி இருப்பதையோ நியாயத்தீர்ப்பையோ மறுபிறப்பின் அல்லது மறுமையின் நம்பிக்கையையோ வலியுறுத்துவது போலத் தெரியவில்லை;

ஆனால் யோபு முதலாக தாவீது வரையிலான பழைய ஏற்பாட்டு
(ஒரிஜினல்..!) பரிசுத்தவான்களோ  ஆண்டவருடைய மகத்துவத்தையும் மீட்பின் திட்டத்தையும் நியாயத்தீர்ப்பையும் முன்னறிவித்தனர்;

மற்றபடி வேதத்துக்கு புறம்பான காரியங்களை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தால் அது தானியேல் சொப்பனத்தில் கண்ட இரும்பும் களிமண்ணுமான சிலையின் ஒவ்வாத தன்மையைப் போலவே அமைந்திருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து;

(இன்னும் வரும்)



__________________

"Praying for your Success"


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

CHILSAM WROTE:

////புத்தரின் போதனைகளை உற்று நோக்கினால் அது இறுதியில் சுயநீதி மார்க்க போதனையாகவே முடிகிறது; தனக்கு மேல் ஒரு சக்தி இருப்பதையோ நியாயத்தீர்ப்பையோ மறுபிறப்பின் அல்லது மறுமையின் நம்பிக்கையையோ வலியுறுத்துவது போலத் தெரியவில்லை;///


சகோதரரின் மேலேயுள்ள  கருத்துகளுக்கு பதில் கீழ்க்கண்ட தொடுப்பில் உள்ளது.
 
  
சகோதரரே! ஒருசில வார்த்தைகள் கடினமாக எழுதி விட்டேன் தயவுசெய்து என்னை மன்னியுங்கள்.
 
நான் நிச்சயம் சொல்கிறேன் சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுதக்கூடாது என்று தான் நினைக்கிறேன் ஆனால் என்னுள் இருக்கும் ஆவி என்னை நெருக்கி ஏவுவதால் சில கருத்துக்களை என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. இது போல் கருத்துக்களை எழுதி ஏற்கெனவே நான் தமிழ் கிறிஸ்த்தவ தளத்தில் பல்வேறு கெட்ட பெயர்களை வாங்கி கட்டியவன். இனி அதுபோல் கருத்துக்களை அங்கு பதிவிடக்கூடாது நல்ல கருத்துக்களை மட்டுமே அங்கு பதிவிட வேண்டும் என்று எண்ணி, பிளாக்கரில் எழுதி பின்னர் இந்த பொதுவான தளத்தில் பதிந்து வருகிறேன். எல்லாமத கருத்தையும் ஆராயும் நோக்கிலேயே இத்தளம் செயல் படுகிறது என்ற நிர்வாகியின்  அறிவிப்பு உங்களுக்கு தெரியும். எனவே இங்கு எந்த கருத்துக்களை வேண்டுமானாலும் பதியலாம். ஆனால் அது தீமை பயக்கும் கருத்தாக மக்களை நிர்விசாரமாக வாழதூண்டும் கருத்துக்களாக  இருந்தால் மட்டுமே அதை நீக்கவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறோம்.        
 
என்னைப்பற்றி தயவுசெய்து ஆண்டவரிடம் விசாரித்து பாருங்கள். ஒருவேளை நான் தங்களுக்கு நான் தவறான வழியில் இருப்பதாக ஆண்டவர் உங்களுக்கு உணர்த்தினால் அதை எனக்கு நிச்சயம் தெரிவியுங்கள் என் தவறை நான் திருத்தி கொள்ள முயல்கிறேன்.  மற்றபடி நன்றாக ஜெபித்து நான் எழுதும் கருத்தின் உண்மையை அறியாமல் எதோ ஒரு உபதேசத்தின் அடிப்படையில் என்னை "வேதபுரட்டு தளம்" என்றெல்லாம் எழுதுவது எனக்கு மன வேதனையை தருகிறது. ஆண்டவரைப்பற்றி ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதவேண்டும், ஏன் உங்கள் போன்றவரிடம் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணமே மேலிடுகிறது. மேலும் ஆண்டவரைப்ற்றி எழுதுவதால் எனக்கு பல நெருக்கடிகள் நேரிடுகிறது எனவே  எல்லாவற்றையும் விட்டுவிடலாமா என்றும் எண்ணி ஆண்டவரிடம்  பல நேரங்களில் துக்கத்துடன் வேண்டியிருக்கிறேன்.
 
ஆகினும் எதோ ஒரு சக்தி என்னை விடாமல் ஏவுவதை மட்டும் அறிகிறேன்.  உலகில் உள்ள எல்லாவற்றையும்விட  ஆண்டவரைப்பற்றி எழுதும் ஒரு வார்த்தை கூட எனக்கு அதிக இன்பத்தையும் மன சமாதானத்தையும் தருவதால் தளத்தில் எழுதுவதை  முடிக்கும் கருத்தை தூரதூக்கி போட்டுவிட்டு தொடர்ந்து எழுதுகிறேன். நான் நிச்சயமாக யார் எழுதுவைதிலும் குறைகண்டுபிடிப்பது இல்லை ஏனெனில் எல்லோருடைய எழுத்திலும் அனேக உண்மைகளை அறிய முடிகிறது.  கருத்தில் குறை இருக்கிறது என்று யாரை கருதினேனோ அவர்களிடம்  ஏற்கெனவே முடிந்த அளவு நேரடியாகவே விவாதித்துவிட்டேன். மற்றபடி நான் எழுதும் கருத்துக்கள் எல்லாமே போதுவானவைகளே.

நான் பல சர்ச்சைக்கு ஏதுவான கருத்துக்களை பதிகிறேன் என்று என்னை பல கிறிஸ்த்தவ சகோதரர்கள் "வேதபுரட்டன்" என்ற பட்டத்துடன் அழைத்துள்ளனர், இன்றும் அவ்வாறு கருதுகின்றனர். அவர்களுக்கு என்னைப் பற்றி நான் சுயவிளக்கம் தரவேண்டிய தேவையில்லை ஆகினும்  எனது நிலை என்ன வென்பதை நான் முடிந்தஅளவு ஒரு உதாரணத்தின் மூலம்  விளக்க முயல்கிறேன். புரியாதவர்களும் புரிந்தும் அதை ஏற்க்க விரும்பாதவர்களும் வேதப்புரட்டன் என்று என்னை கருதினால் விலகியே இருக்கலாம். என்னுடய பதிவில்  தேவனின் மகிமையை குறைத்து சொல்லும் பதிவோ அல்லது ஜனங்களை நேர்மையான வழியை விட்டு திருப்பும் பதிவோ இருக்குமானால் எனக்கு தெரிவிக்கலாம் மற்றபடி "கிறிஸ்த்தவ விசுவாசம்" என்றொரு விசுவாசத்தின் அடிப்படையில் என்னை தயவு செய்து குறை  சொல்லவேண்டாம் ஏனெனில் எனக்கும் அந்த விசுவாசம் பற்றி நன்றாகவே தெரியும்! நான் அறிந்தவரை அந்த விசுவாசமானது பரிசுத்தம் மற்றும் உத்தமமின்மையால் சுமார் எட்டுமணி நேர பிரயாண தூரத்தில் பின்னால் நிற்கிறது

ஒருவேளை இன்றுஎழுதும் கருத்தை ஆவியானவரின் தூண்டுதலின் அடிப்படையில் நாளை நான்   மாற்றலாம். ஆண்டவரே அனேக கருத்துக்களை சொல்லி பின்னர் அதை சில காரணங்களை முன்னிட்டு மாற்றியிருக்கிறார். அது போல் கருத்தில் மாற்றம் இருந்தால் நிச்சயம் எனக்கு தெரிவிப்பார் ஏனெனில் அவர் அன்றாடம் என்னுடன் தொடர்பில் இருக்கிறார். நான் எப்பொழுது நினைத்தாலும் ஒரு நிமிடத்தில் ஆவியில் நிறைந்துவிட முடியும். அதுபோல் அவரும் ஒரே நிமிடத்தில் உண்மையை எனக்கு உணர்த்திவிட முடியும்.  எனவே  எந்த திருத்தமானாலும் சரி அதை தேவன் எனக்கு உணர்த்தவேண்டும் என்றே எதிர்பார்க்கிறேன். அதுவரை நான் எழுதிய எந்த காரியங்களும் தவறு என்று மாற்ற  விரும்பவில்லை. 
 
நன்றி!
 
 

-- Edited by SUNDAR on Tuesday 15th of June 2010 04:14:24 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard