இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புத்தர் பெற்ற ஞானம் எத்தகையது?


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
புத்தர் பெற்ற ஞானம் எத்தகையது?
Permalink  
 


கௌதமர், நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில் பிறந்தார். மாயா இவரது தாயார்.கௌதமர் பிறந்த ஏழாவது நாளே அவரது அன்னை இறந்தார். எனவே இவரை இவரது தாயின் தங்கை வளர்த்தார்.

சித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன். சித்தார்த்தருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித் தந்தார். வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார் சித்தார்த்தர்.

அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையில் அதிருப்தியடைந்தார். ஒருமுறை உதவியாளரொருவருடன் வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது. ஒரு ஊனமுற்ற மனிதன், ஒரு நோயாளி, அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம், நாலாவதாக ஒரு முனிவன். இக் காட்சிகளினூடாக மனிதவாழ்க்கையின் துன்பங்களை உணர்ந்துகொண்ட சித்தார்த்தர், ஒரு துறவியாகத் தீர்மானித்தார்.

துறவறம் பூண்ட சித்தார்த்தர், யோக நெறியில் கடுந்தவம் புரிந்தார். தன் தவங்களின் மூலம் உயர்ந்த யோக நிலைகளை அடைந்தாலும், உலக வாழ்க்கையின் துன்பங்களின் ஆதாரத்தை அறிய முடியாததால் அதிருப்தி அடைந்தார். எனினும் தவ வாழ்க்கையை தொடர்ந்து கடைபிடித்தார்.

தனது 35ஆம் வயதில்,  கயை எனும் இடத்தில் சுமேதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு ஒரு போதி மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் தவம் புரிவது என தீர்மானித்தார். ஒரு வாரம் கடுந்தவம் புரிந்தபின் பெருஞ்ஞான நிலையை அடைந்து புத்தரானார். இவர் தன்னை தத்தாகதர் என்று அதாவது 'எது உண்மையில் அதுவாக உள்ளதோ அந்த நிலை எய்திவர்') என்று அறிவித்துக் கொண்டார். .

வாரணாசி அருகே உள்ள சாரநாத் எனும் இடத்தில் முதன் முறையாக ஐவரை சீடர்களாக ஏற்றுக்கொண்டு அவர்கட்கு புத்தி புகட்டினார். அவரது வாழ்க்கையின் அடுத்த 45 ஆண்டுகளில் பலர் அவரைப் பின்பற்றி அவரது சீடர்கள் ஆயினர். தனது 80ஆம் வயதில் புத்தர் குசினாரா என்ற இடத்தில் காலமானார்.


புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ கூறிக்கொண்டதில்லை. ஆனால் அவரது கொள்கையை காற்றில் பறக்கவிட்டு அநேகர் அவரையும் தெய்வமாக மாற்றி வழிபடுவதை காண முடிகிறது.
 
தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார்.
அதாவது மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் தவமிருந்து கேட்டு உண்மையை அறிய விரும்பினால் அவர்கள் ஏதோ ஒரு சக்தியின் மூலம் உண்மையை அறிய முடியும் என்பது புலனாகிறது
 
ஆசையே துன்பத்தின் அடிப்படை என அவர் கூறினார்.
 
இது ஒரு மறுக்க முடியாத உண்மை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இன்று உலக மக்கள் ஆடிக்கொண்டு இருப்பது  இந்த ஆசை என்னும் அலையின் மேலே ஆண்டவராகிய இயேசுபோல் ஆசையின் அடிப்படையில் வரும் சோதனைகளை மேற்கொண்டால் அவரைப்போலவே வல்லமையையும் பெறமுடியும் என்று நான் நம்புகிறேன் 
 
இவ்வாறு   அமர்ந்து விசாரித்து  ஞானம் அடைந்து பல உண்மைகளை சொன்ன
புத்தர் பெற்றது எவ்வித ஞானம்?
இறைவனே அவருக்கு உண்மைகளை தெரிவித்தாரா?
 


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

புத்தர்  பெற்ற  ஞானம் ஏக  இறைவனிடம்  இருந்துதான்  வந்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். காரணம் அவரது பரிசுத்த வாழ்க்கை மற்றும் அவரது போதனைகள் தேவன் எதிர்பார்க்கும் பரிசுத்த நிலைக்கு ஒத்ததாகவே இருந்தது. நோய், மரணம், முதுமை போன்ற உலகில் இயற்கையாக நடக்கும் பல்வேறு உலக துன்பங்களால் பாதிக்கப்பட்ட புத்தரின் மனதில்  தேடுதல் என்பது உலகில் துன்பம் ஏன் வருகிறது? அதை எவ்வாறு வெல்வது?  மற்றும் அதை நிரந்தரமாக போக்குவதற்கு என்ன வழி? என்பதின் அடிப்படையிலேயே இருந்தது.
 
அவரவர் எதன் அடிப்படையில் தங்கள் தேடுதலை தோடங்குகிரார்களோ அதற்க்கான பதிலை மட்டுமே இறைவனிடமிருந்து பெறமுடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.  

எனவே இங்கு
இறைவன் புத்தருக்கு துன்பத்துக்கு காரணம் ஆசைதான் என்றும்
ஆசையை துறந்தால் துன்ப மிற்றி வாழ முடியும் என்றும், பரிசுத்தமாக நடப்பதன் மூலம் இறைவனை அடையமுடியும் என்ற ஞானத்தை புத்தருக்கு வழங்கினார்.  அந்நாட்களில்  கிறிஸ்த்து பாவத்துக்காக மரித்திராத காரணத்தால் அதற்குமேல் தேவன் ஒன்றும் அவருக்கு தெரிவிக்கவில்லை. இறுதியில் புத்தர் பூமியில் துன்பத்திற்கான/ நிகழ்வுகளுக்கான  அடிப்படை காரணம் முழுவதும் என்னவென்று  சரியாக அறியாமலே மரித்தார் என்று  அவர் வரலாறு கூறுகிறது.   

புத்தர் மேலுலகம் சென்றார்  என்பது வேதாகமத்தின் அடிப்படையில் சாத்தியமா?
 
கிறிஸ்த்துவின் பிறப்புக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் அதாவது இஸ்ரவேலில்  மக்கபெயர்களின் ஆட்சிகாலத்தில்  பல ஆன்மீக அறிஞர்கள் உலகில் தோன்றி மக்களை அன்பு, அகிம்சை, உண்மை,  நேர்மை, இரக்கம் போன்ற நல் வழிகளில் நடக்கும்படி போதனை செய்தனர். அதில் முக்கியமானவர்கள் புத்தர், மகாவீரன், சீன கன்பூசியஸ், எரேமியா  போன்றவர்கள் ஆவார்கள்.   
 
இதற்க்கு   முக்கிய காரணம் உண்டு.  ஆண்டவராகிய இயேசு மனிதனின் பாவங்களுக்காக மரிக்கும்வரை ஒருவர் என்னதான் பரிசுத்தவானாக இருந்தாலும் அவரது பிறவிபாவம்  போகாதநிலையில் அவர் இந்த உலகைவிட்டு கடந்து மேலுலகம் செல்ல முடியாமல் பாதாளத்தில் தூக்க நிலையில் இருக்கும் நிலை இருந்தது.  ஆண்டவராகிய இயேசு மரித்து உயிர்த்த்தவுடன் தூய்மையாக வாழ்ந்து மரித்த  பரிசுத்தவான்கள் எல்லோரும்  (அவர்கள் எந்த மார்க்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி) அவர்களுக்கு மேலுலகம் செல்லும் வாய்ப்பு இருந்ததிருக்கிறது அதானாலேயே தேவன் அந்த காலகட்டங்களில் அனேக ஆன்மீகவாதிகளை எழுப்பி மக்களை நேர்வழியில் நடக்கும்படி போதித்தார்  என்பது எனது கருத்து.
 
மேலும் இயேசு மரித்து உயிர்த்தவுடன் அனேக பரிசுத்தவான்கள் எழுந்தனர் என்பதை வேதம் நமக்கு தெரிவிக்கிறது.
 
மத்தேயு 27:52 கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
53. அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள்.

இந்த வசனத்தின் அடிப்படையில் கிறிஸ்த்துவின் மரணத்துக்கு முன் வாழ்ந்த பரிசுத்தவான்கள்
கிறிஸ்த்துவின் பலிக்கு பிறகு தங்கள் ஜன்மபாவம் போக்கப்பட்டு பாதாளத்திலிருந்து பரதீசு சென்றுவிட்டனர். அதில் புத்தர் போன்றோரும் அடங்குவார்கள் என்றே நான் கருதுகிறேன்.  எனவே புத்தர் பெற்ற ஞானம் தேவனிடம் இருந்து வந்ததுதான் என்பது எனது கருத்து
 
ஆகினும் கிறிஸ்த்துவின் மரணம் மற்றும் உயிர்த்த்ழுதளுக்கு பின்னர் புத்தரின் போதனையைவிட ஆண்டவராகிய இயேசுவை ஏற்று மனம்திரும்புதல் ஒன்றே மிகமிக முக்கியம்.     
 
 


-- Edited by SUNDAR on Tuesday 8th of June 2010 04:22:00 PM

-- Edited by SUNDAR on Tuesday 8th of June 2010 04:22:26 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

சுந்தர்:
// இந்த வசனத்தின் அடிப்படையில் கிறிஸ்த்துவின் மரணத்துக்கு முன் வாழ்ந்த பரிசுத்தவான்கள் கிறிஸ்த்துவின் பலிக்கு பிறகு தங்கள் ஜன்மபாவம் போக்கப்பட்டு பாதாளத்திலிருந்து பரதீசு சென்றுவிட்டனர். அதில் புத்தர் போன்றோரும் அடங்குவார்கள் என்றே நான் கருதுகிறேன்.  எனவே புத்தர் பெற்ற ஞானம் தேவனிடம் இருந்து வந்ததுதான் என்பது எனது கருத்து  //

எச்சரிக்கை:

(வேதத்திலில்லாத)வெளிப்படுத்தின விசேஷம்.24:12- ம் வசனத்தின்படி இந்த கருத்து வெளிப்பட்டிருக்கிறது..!


__________________

"Praying for your Success"


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

chillsam wrote:
 
எச்சரிக்கை:

(வேதத்திலில்லாத)வெளிப்படுத்தின விசேஷம்.24:12- ம் வசனத்தின்படி இந்த கருத்து வெளிப்பட்டிருக்கிறது..!


சகோதரர்  அவர்களே  உங்களுக்கு என்ன பதில் எழுத என்பது எனக்கு புரியவில்லை. நானும் பல முறை சொல்லிவிட்டேன் எனது பதிவிற்கு  எந்த பதிவுக்கு மறுப்பு தெரிவித்தாலும் அதற்க்கு ஏதாவது வசனஆதாரமோ அல்லது தகுந்த காரணமோவாவது சுட்டிகாட்டி மறுப்பை எழுதுங்கள் என்று.  ஆனால் மீண்டும் உங்கள் நிலையில் சற்றும் மாறவில்லை.  
 
எனக்கு எச்சரிக்கை விடுவதற்கு நீங்கள்  என்ன  நான் எழுதியதை திருத்தி மார்க் போடும் அனைத்து அறிந்த  வாத்தியாரா? என்னை எச்சரித்து வழிநடத்தும் தேவன் என்னுள் இருக்கிறார், தவறான பதிவுஎன்றால் அவர் என்னை நிச்சயம் எச்சரிப்பார்.   விளக்கத்தோடு மறுப்பு எழுதுங்கள் நானும் அதற்க்கு விளக்கம் தருகிறேன் மற்றபடி நமக்குள் வீண்விவாதம் வேண்டாம் சகோதரரே.       
 
எனது பதிவிருக்கு ஆதாரமாக அந்நாட்களில் நடந்த பல முன் சம்பவங்களை சுட்டி  ஆண்டவராகியே இயேசு உயிர்த்தேழுந்த போது  "நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது." என்று எழுதப்பட்டுள்ள வசனத்தை மேற்கோளிட்டு, அதில் புத்தரும் ஒருவராக இருக்கலாம் என்ற கருத்தில் எனது கருத்தை கூறியுள்ளேன். புத்தர் பரிசுத்தவான இல்லையா என்பது தேவனுக்கு மட்டும்தான் தெரியும். அவர் அந்நேரம் எழுந்திருந்தாரா இல்லையா என்பது உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது இந்நிலையில் என்னுடய பதிவில் என்ன தவறு என்று கருதுகிறீர்கள். எழுதப்பட்டுள்ள கருத்துக்கு  எந்த மறுப்பு விளக்கமும் கொடுக்காமல், வேதத்தில் இல்லாத விஷயம் என்பதுபோல் ஒரே வரியில் பதில் எழுதுகிறீர்கள். 
 
ஏன் "சில்சாம்" என்றொரு பெயரும்தான் வேதத்தில் எந்த புத்தகத்திலும் இல்லை. வேதத்தில் இல்லாத உங்களையும் உங்கள் கருத்தையும் நான் ஏன ஏற்க்க வேண்டும் என்று கருதுவது சரியா?    

ஓடிக்கொண்டு இருக்கும் ஒரு இரயிலின் முன் பெரிய பாராங்கல்லை தூக்கி போடுவதுபோல் போட்டு என்னை மனமடிவாக்கி அதே இடத்தில் நிற்க வைத்து விடுகிரீர்கள்.  இதெல்லாம் ஏதோ திட்டமிட்டு நடப்பதுபோல் எனக்கு தெரிகிறது   
 
வேதத்தில் உள்ள வசனங்களை மட்டுமே எழுதினால் யாருமே எந்த பதிவும் இடமுடியாது யாரும் எதையும் அறியவும் முடியாது.  எல்லோருடைய பதிவிலிருந்து வேதத்தில் இல்லாத  அனேக கருத்துக்கள் எடுக்க முடியும். ஒவ்வொருவரும் தங்கள் அனுமானம் அலல்து  அறிவுநிலைக்கு ஏற்ப வசனங்களை வியாக்கீனம் செய்துதான் போதிக்கின்றனர் பதிவிடுகின்றனர்.  
 
உண்மையில் நான் ஓன்று கேட்கிறேன், உங்கள் கருத்துதான் என்ன? தேவன் செய்தவைகளும் செய்யபோகிறவைகளும் இந்த வேதாகமம் என்னும் ஒரே புத்தகத்தில் அடங்கிவிட்டது என்று கருதுகிறீர்களா? அதற்க்கு வெளியில் வேறு எங்குமே தேவன் செயல்படவில்லை என்னும் எண்ணமா?  அதாவது அண்டங்களை படைத்த அநாதி தேவனின் அனைத்து  செய்கைகளும் இந்த ஒரே புத்தகத்துக்குள் அடக்கமா?
 
ஆண்டவராகிய இயேசு செய்த அனேக அற்ப்புதங்களை எழுதினால் புத்தகம் உலகம் கொள்ளாது என்று வசனம் சொல்கிறது அவ்வாறிருக்க அநாதி தேவனின் செயல்களை ஒருவரால் வரையறுக்க முடியுமா?   இரட்சிப்பை சுதந்தரிக்க நேர்வழி காட்டும் ஒரே புத்தகம்தான் வேதாகமம். என்பதுதான் உண்மை. மற்றபடி அதற்க்கு வெளிய ஆயிரம் கிரியைகளை ஆண்டவர் செய்திருக்கிறார் செய்கிறார்  என்பதை பரந்த மனதோடு ஏற்றுக்கொள்ளுங்கள்.   
 
இயேசுவையும் வேத புத்தகத்தையும் அறிந்துகொண்ட உங்களை போன்றவர்கள் மட்டும்தான் பரிசுத்தர் என்றும்  அதை அறியாத புத்தரானாலும் சரி வள்ளலாரானும் சரி எல்லோருமே சொன்னது செய்தது எல்லாமே தவறு என்று கருதுகிறீர்களா?  நான் அதுபோல்  கருதவில்லை சகோதரரே. அன்றிலிருந்து இன்று வரை தேவன் மனிதனிடம் எதிர்ப்பார்ப்பது உண்மை உத்தமம் மற்றும் பரிசுத்தமே! அவ்வாறு புத்தரை போன்ற வள்ளலாரைபோன்ற மிகுந்த பரிசுத்தராக இருந்தவர் இருப்பவர் எந்த மதத்தில் இருந்தாலும் தேவன் அவர்களிடம் அதிகமதிகம் தன அடியார்களை அனுப்பி  தன்பக்கம் இழுக்க தாமதிப்பதில்லை,    

எனவே ஒரு மனிதனுக்கு முக்கிய தேவை என்பது உத்தமும்
பரிசுத்தம்தான். அவ்விதத்தில் புத்தர் பரிசுத்தமாக ஜீவித்தார் என்பதை அவரது வாழ்க்கைநிலையில் அறியமுடிகிறது. எனவே அவரை தேவன் நிச்சயம் கைவிட்டிருக்க மாட்டார் என்றே நான் கருதுகிறேன். 

 

-- Edited by SUNDAR on Wednesday 9th of June 2010 06:11:26 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

சுந்தர் அவர்களே ஆண்டவர் உங்களுக்கு பவுலின் அபிஷேகத்தை கொடுத்து இருக்கின்றார் என்று எண்ணுகின்றேன்
உங்கள் வார்த்தைகளும் உங்கள் வாஞ்சையும் அப்படியே இருக்கின்றது

////////.......
ஏன் "சில்சாம்" என்றொரு பெயரும்தான் வேதத்தில் எந்த புத்தகத்திலும் இல்லை. வேதத்தில் இல்லாத உங்களையும் உங்கள் கருத்தையும் நான் ஏன ஏற்க்க வேண்டும் என்று கருதுவது சரியா?

ஓடிக்கொண்டு இருக்கும் ஒரு இரயிலின் முன் பெரிய பாராங்கல்லை தூக்கி போடுவதுபோல் போட்டு என்னை மனமடிவாக்கி அதே இடத்தில் நிற்க வைத்து விடுகிரீர்கள். இதெல்லாம் ஏதோ திட்டமிட்டு நடப்பதுபோல் எனக்கு தெரிகிறது /////......


இந்த வார்த்தைகளை நீங்கள் நிச்சயம் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்
ஆனால் இவ்வளவு தாமதமாகும் என்று எதிர்பார்க்க வில்லை..

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

//அண்டங்களை படைத்த அநாதி தேவனின் அனைத்து  செய்கைகளும் இந்த ஒரே புத்தகத்துக்குள் அடக்கமா? //

ம்..!


__________________

"Praying for your Success"


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

அதாவது  வேதாகமத்துக்கு  வெளியே நடந்தது/நடப்பதெல்லாம் தேவனின் கிரியை இல்லை என்கிறீர்கள்!  இது எங்கும் நிறைந்த பரம்பொருளின் சர்வவல்ல தன்மையை மட்டுபடுத்துவதாக உங்களுக்கு தெரியவில்லையா? நீங்கள் தேவனை பற்றி அறிந்தது அவ்வளவுதான்! உங்களுடைய கருத்தில் நான் தலையிட விரும்ப வில்லை.   
 
மேலும் உங்கள் நம்பிக்கை என்பது
 
யோவான் 21:25 இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன்.
 
என்ற இந்த  வசனத்துக்கு எதிரானது. ஏனெனில் அனேக காரியங்கள் எழுதப்பட வில்லை என்பதை இவ்வசனம் ஒத்துக்கொள்கிறது. எனவே அது நீங்கள் தேவனை அறிந்தவரை  உங்கள் மட்டிலும் உங்கள் தனிப்பட்ட கொள்கையாக அது இருக்கட்டும். பிறரின் அறிதல்களை மட்டுப்படுத்தும் ஒரு தடையாக அதை பயன்படுத்த வேண்டாம். அதாவது அதை பிறர் மீது திணிக்க வேண்டாம்
 
தேவன் வேத புத்தகத்தில் எங்கும் எனது கிரியை எல்லாம் இந்த புத்தகத்தினுள் அடக்கம்  என்று எழுதவில்லை மாறாக "நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்" என்றே கூறியிருக்கிறார். அதாவது இந்த உலகில் எந்த ஜாதியரானாலும் சரி, எந்த நாடானாலும் சரி அங்கு நடக்கும் எல்லா சிறிய மற்றும் பெரிய கிரியைகளுமே கர்த்தராலே செய்யபடுகிறது. சுவரில் எழுதப்படும் ஒரு எழுத்துகூட நமக்கு தேவனின் செய்தியைத்தான் சொல்கிறது அதை அறிய தெரியாதவர்களுக்கோ அது அன்னியமாகததான் தெரியும்.  அவரது மகத்துவத்தை சொல்லி புரியவைக்க முடியாது.
   
சங்கீதம் 145:3  ; அவருடைய மகத்துவம் ஆராய்ந்துமுடியாது.

அதை எல்லோராலும் அறியவும் முடியாது! அவரவர் தகுதிக்கு எட்டிய தூரம் வரையே அவரவரால் அறியமுடியும்

 


-- Edited by SUNDAR on Thursday 10th of June 2010 11:15:57 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

இந்த திரியின் விவாதம் திசைதிரும்பி போவதாலும், என்றோ நடந்து முடிந்துபோன புத்தரின் காரியங்களை விவாதிப்பதில் யாருக்கும்  எந்த பயனும் இல்லை  என்பதாலும்  இந்ததிரி இத்துடன் மூடப்படுகிறது.   
 
ஏக இறைவனின் வார்த்தைகள் எல்லா வேதங்களிலும் இருக்கலாம் என்றே நான் கருதுகிறேன். மேலும் இத்தளம் எல்லா மத கருத்துக்களையும் ஆராய்வதற்காகவே துவங்கப்பட்டது என்றும் வலியுறுத்த விரும்புகிறேன்.
 



__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

BRO. CHILLSAM WROTE
/////நண்பர், விவாதம் திசை திரும்பியதாக எதை வைத்துச் சொல்லுகிறாரோ தெரியவைல்லை; புத்தரைக் குறித்து முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்குட்பட்ட நிலையிலேயே வாதம் செல்கிறது; இன்னும் சொல்லப்போனால் விவாதம் துவங்கவேயில்லை;////
 
கோதரரே  புத்தரை   பற்றி சொல்லப்பட்ட்ட கருத்துக்கு தகுந்த  எந்த ஒரு  விளக்கமும் தராமல். போகிற போக்கில் குப்பையை  தூக்கி  போடுவது போல் தேவையற்ற  எதிர்ப்புகளை பதிவிட்டு இறுதியில் அந்த விவாதத்தை வேதாகமத்தைபற்றிய வேறு விவாதத்துக்கு திசை திரும்பியதாலேயே திரியை மூடவேண்டிய நிலை ஏற்ப்பட்டது .
 
சம்பந்தப்பட்ட பதிவிற்கு உங்கள் எதிர்ப்புக்கான  காரணத்தை ஓரிரு வார்த்தையேனும்  விளக்குங்கள். விளக்குமளவு நேரம் கிடைக்கவில்லை என்றால் நேரம் கிடைக்கும்போது பதிவிடலாம். திரி அங்கேயே தான் இருக்கும்   மற்றபடி இதுபோல் அரைகுறை கருத்துக்களை பதிவிடுவதால் தலைப்புக்கு சம்பந்தமில்லாத  நிலைக்கு போகிறது எனவே திரியை மூடவேண்டிய  நிலை  உருவாகிறது. 

ிரி மீண்டும் திறக்கபடுகிறது....


-- Edited by இறைநேசன் on Friday 11th of June 2010 10:51:07 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

chilsam wrote:
/////ஏற்கனவே "இயேசு சிலுவையிலறையப்படவேண்டுமே" என்று
திட்டமிட்டே ஓய்வுநாள் பிரமாணத்தை மீறினார் என்று அவசரப்பட்டு அறிக்கை விட்டு பின்வாங்கினார்; சகோதரரே உங்களோடு பேசுவது ஆவியானவரானால் வெளிப்படையான விவாதத்தினைத் தவிர்த்துவிட்டு ஏன் பின்வாங்க வேண்டும்..?////
 
நான் எங்கும் பின்வாங்கவில்லை சகோதரரே! உங்கள் போன்ற ஆண்டவராகிய இயேசுவுக்கும் பிதாவாகிய தேவனுக்கும் உள்ள வேறுபாடு தெரியாதவர்களுக்கு அதற்க்கான விளக்கங்களை  எடுத்து சொன்னாலும் புரியாது  என்று கருதி தேவையற்ற விவாதத்தை தவிர்ப்பதற்காகவே அவ்விவாதத்தை நிறுத்த வேண்டிய
சூழ்நிலை ஏற்ப்பட்டது. திரும்ப திரும்ப பின்வாங்கினேன் என்று எழுதி எனது  எழுத்துக்களில் உள்ள உண்மை தன்மையை மடுபடுத்த நினைக்க வேண்டாம். அவ்வாறு பின்வாங்கினால் நான் அதை நிச்சயம் ஒத்துகொள்ள தயங்கமாட்டேன். அந்த கருத்தை பொறுத்தவரை நான்  எழுதியதில் தவறு எதுவும் இல்லை. வேதத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கும் வார்த்தையையே  அது அவர் பார்வையில் சொன்னது இது இவர் பார்வையில் சொன்னது என்று மாற்றினால்  அங்கு விவாதிப்பது வீண் அல்லவா ? 
  
chilsam wrote
////எழுதப்படும் - பேசப்படும் எல்லா வார்த்தைகளுமே ஆவியானவர் மூலமே வருவதாக எண்ணுவது மிகவும் ஆபத்தானதாகும்;தாவீது போன்ற பரிசுத்தவான்களே சாத்தானால் தூண்டப்பட்டு தேவனை கோபப்படுத்தியதுண்டல்லவா..?////
 
அது பழைய ஏற்பாட்டு காலம் சகோதரரே அங்கு ஆண்டவரின் நடத்துதல் வாக்கு பண்ணப்படவில்லை. அப்படியிருந்தும் கூட சில நாட்களில் நாத்தான் தீர்க்கதரிசி மூலம் தேவன் அவரின்பாவத்தை தாவீதுக்கு சுட்டிக்காட்டினார். இன்று அப்படியல்ல!
இன்று நம்முள் இருக்கும் ஆவியானவர் சில மணி நேரங்களிலேயே தவறை சுட்டிகாட்டிவிடுவார். தவறான கருத்தை எழுதிவிட்டு அல்லது யாரையும் புண்படுத்தும் பதிவிட்டு விட்டு (உங்களைபோல)  நிம்மதியாக தூங்க முடியாது. ஆனால் பிறருக்கு   பிடிக்காத கருத்து என்பதற்காக நான்   எதையும் மாற்ற  அவசியம் இல்லை.  

chilsam wrote:
////நீர் கிறித்தவ விசுவாசத்துக்கு முற்றிலும் விரோதமானதொரு சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்துவிட்டு /// 
  
இந்த கிறிஸ்த்தவ விசுவாசம் என்பது எங்கிருந்து வந்தது என்பதுதான் எனக்கு இன்றுவரை புரியவே இல்லை  சகோதரரே!  வேதத்தில் பத்து வசனத்தை ஆதாரம்
காட்டி  சொனாலும் ஒரு கருத்தை நம்பாமல்,   நான் வைத்திருக்கும் கிறிஸ்த்தவ விசுவாசம் தான் பெரியது என்றும் சொல்லும்  ஒருவரின் கிரியையற்ற வீண் விசுவாசத்தால் என்னபயன்? இப்படிப்பட்மனிதனால் போதிக்கப்படும் உபதேசங்களை நான் ஏற்க்க தயாராக இல்லை.  வேதத்தை அறிந்தும் அதை கைகொள்ளாமல் புரட்டுகிரவர்களே வேத புரட்டர்கள்  
 
இயேசுவைப்போல பவுலைப்போல அல்லது அட்லீச்ட்  நான் அமைத்திருக்கும் ஒரு பரதேசி  வாழ்க்கை நிலைபோல வாழ்ந்துவிட்டு பிறகு உங்கள் உபதேசத்தை கூறுங்கள் நான் நிச்சயம் அதற்க்கு மாற்று கருத்து சொல்லாமல் ஏற்றுக் கொள்வேன். மற்றபடி வார்த்தைகளுக்கு  கீழ்படிதலற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டு  மறுப்பு என்ற பெயரில் உங்கள் கிறிஸ்த்தவ தீவிரவாதத்தை  காட்டி பிறரை எச்சரிக்காதீர்கள்.
 
chilsam wrote:
////நாங்களெல்லாம் குற்றஞ்சாட்டும்
சாத்தானின் தூதர்கள் என்று வசைபாடுவது நியாயமா..? ////
 
நான் நிச்சயமாக மிகுந்த வருத்ததோடே  அந்த பதிவை பதிவிட்டேன். அதற்க்கு காரணம் உங்கள் பதிவு  மட்டுமல்ல வேறு சில காரணங்களும் உண்டு.  நீங்கள் தகுந்த கருத்தோடு   குற்றம் சொல்லியிருந்தால் நிச்சயம் இந்த பதிவை தவிர்த்திருப்பேன் மேலும் இயேசுவை கடிந்துகொண்ட பெதுருவைபோல மனிதர்கள்
எல்லோருமே சில நேரங்களில் சாத்தனுக்கு ஆதரவாக செயல்படுகிறோம் என்பதை
யாரும் மறுக்க முடியாது!  
 
chilsam wrote:
 ///"இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன்."(யோவான் 21:25 ) -எனும் ஒரு வசனத்தை வைத்துக்கொண்டு வேதத்திற்குப் புறம்பான அனைத்தையும் வேதத்துக்குள் கொண்டு வரலாமா?///
 
நாள் எழுதியதில் வேதத்துக்கு புறம்பான எந்த கருத்தும்  இல்லை சகோதரே! அது ஒரு பொதுவான கருத்து. பரிசுத்த வாழ்க்கையை முக்கியப்படுத்தி எழுதினேன். அதற்க்கு ஒரு வசன ஆதாரமும் தந்திருக்கிறேன்.
 
chilsam wrote:
//இப்படியே போனால் அரிச்சந்திரனும் தருமனும் கர்ணனும் இராமனும் கூட பரிசுத்தவான்களாகவும் நீதிமான்களாகவும் தீர்க்கப்படமுடியுமே..!///
 
என்  இருக்க கூடாது? அவர்களின் போதனை எதுவும் எனக்கு கிடைக்கவில்லை. அவர்களைப்பற்றி  தேவனுக்குதான் தெரியும் ஆண்டவராகிய இயேசுவின் மரணத்துக்கு முன்பு அவர்கள் மனசாட்சிப்படி பரிசுத்தவானாக இருந்திருந்தால பரிசுத்தவான் என்றுதான் தீர்க்கவேண்டும்   

chilsam wrote:
///ஆவிக்குரிய காரியங்களை ஆவிக்குரியவற்றோடு சம்பந்தப்படுத்தி போதிப்பதுதானே ஆவிக்குரியோரின் பணி..?///
 
உங்கள் பணியை நீங்கள் செய்யுங்கள் எனது பணியை நான் செய்கிறேன். அதை
ஆவிக்குரியவர்கள் மட்டும்தான் அறியமுடியும். ஆனால் நான் அனைத்து தரப்பினரையும் கருத்தில்கொண்டு சிலவற்றை எழுதுகிறேன். "இங்கு எல்லா மத கருத்துக்களும் விவாதிக்கப்படும் என்றுதான் அறிவிப்புள்ளது" எனவே எனது கருத்தில் சில வளைவு சுளிவுகள் இருக்கத்தான் செய்யும். உங்களுக்கு தேவயிலாததில் தலையிடவேண்டாம்  இனிவரும்நாட்களில் ஆவிக்குரியவர்களுக்கு மட்டுமே எழுதினால் போதாது என்றுஎண்ணி பொதுவான தளங்களில் பதிவிடும் கருத்துக்களையும் எழுதலாம் என்ற நோக்கில் பொதுவாக எழுதினேன். எதிரியின் கூடேவே நடந்துபோய் எனது கருத்தை சொல்வதுதான் எனக்கு பிடித்த வழிமுறை.  உங்கள் வழிமுறைக்கு நான் வரவேண்டிய அவசியம் இல்லை.  
    
chilsam wrote:
///புத்தரின் போதனைகளை உற்று நோக்கினால் அது இறுதியில் சுயநீதி மார்க்க போதனையாகவே முடிகிறது; தனக்கு மேல் ஒரு சக்தி இருப்பதையோ நியாயத்தீர்ப்பையோ மறுபிறப்பின் அல்லது மறுமையின் நம்பிக்கையையோ வலியுறுத்துவது போலத்
தெரியவில்லை;  ;///
 
புத்தர் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கொள்கைக்கே வரவில்லை. மன சாட்சி அடிப்படையில் வாழ்ந்த அவர்கள் உண்மையாய் நேர்மையாய் மிக பரிசுத்தமாய் பிறருக்கும் பிற உயிர்களுக்கும் எந்த தீங்கும் செய்யாமல் வாழ்பவர்கள் அதைப்பற்றி கவலைப்டவேண்டியது தேவையும்  இல்லை. 
 
"இறுதி நியாயதீர்ப்பு" என்று சொல்கிறீர்கள், அது எதன் அடிப்படையில் நடக்கும் என்று வேதம் சொல்கிறது?
 
வெளி 20:13  யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
வெளி 20:12  மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

அவனவன் கிரியையின் அடிப்படையிலேயே நியாயதீர்ப்பு என்று வேதம் சொல்கையில், இயேசு பாவங்களுக்காக மரித்திராத அந்த காலகட்டங்களில் புத்தர் காட்டிய  பரிசுத்தமான இரக்கமுள்ள உயிர்களிடத்தில் அன்புகாட்டும் வாழ்க்கை நிச்சயம் இரக்கமுள்ள தீர்ப்பையே தரும். பிறருக்கு துன்பம் கொடுக்காமல் பரிசுத்தமாக வாழ்பவனுக்கு நிச்சயம் அதற்கேற்ற நியாயதீர்ப்பு உண்டு. எனவே அவன் நியாயதீர்ப்பை நினைத்து கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை எனவே அவர் அதைபற்றி போதிக்கவில்லை அவ்வளவு தான்.
 
உங்கள் நேர்கோட்டை வரைந்துகொண்டு அதற்க்கு கிறிஸ்த்தவ விசுவாசம் என்று பெயரிட்டு அதற்க்கு மேலேபோனால் "எச்சரிப்பு"  கீழே போனால் "உதைவிழும்" என்று
எழுதுவதும்  "வேதப்புரட்டு"  "பயித்தியம் பிடிக்கும்"  "அரைவேக்காடு" போன்ற தெருவில் உள்ள கயவர்கள்  பேசுவதுபோல்  எழுதிவிட்டு பிறகு பின்வாங்கி அதற்க்கு சமாதனம் கூறுபவர் நீங்கள்தான்.  நான் அல்ல!   நீங்கள் என்ன பெரிய சத்தியத்தை அறிவித்துவிடபோகிறீர்கள்.
 
ஆமாம் ஓன்று கேட்கிறேன் புத்தர் பரிசுத்தமாக வாழ்ந்தார் எனவே தேவன் அவரை மேலுலகத்தில் அனுமதித்திருக்கலாம் என்று பரிசுத்த வாழக்கைக்கு முன்னுரிமை கொடுத்து  நான்  எழுதியதில் என்ன தப்பு என்று கருதுகிறீர்கள்? அதற்க்கு ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம்?
 
லேவியராகமம் 19:2 நீ  : உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.
 
என்றுதானே கர்த்தர் பல இடங்களில் திரும்ப திரும்ப சொல்கிறார்!  உங்கள் போன்றவர்களின்  எண்ணம்  எல்லாமே நான் அறிவேன் சகோதரரே! உண்மைக்கும் நேர்மைக்கும் இரக்கத்துக்கும் என்றுமே எதிர்த்து நிற்கும்  ஒரு  கூட்டமுண்டு,
"பரிசுத்தம், உண்மை, உத்தமம் என்று தேவன் திரும்ப திரும்ப கூறும் வார்த்தைகள்படி  நடந்து யாரும் சாத்தானை ஜெயித்துவிட கூடாது என்ற நோக்கில்
சிறுபிள்ளைக்கு மிட்டாயை காட்டி தன்பக்கம் இழுப்பதுபோல பரிசுத்தராகிய இயேசுவை முன்னால்  காட்டி எல்லோரையும் தன் பக்கம் இழுத்து (அனால் அவர் சொன்ன வாழ்க்கை முறையை பின்பற்றாமல்) யாரும் சாத்தானை மேற்க்கொண்டு விடாமல் தடுத்து இன்றுவரை சாத்தானின்
ராஜ்யம் தொடர்ந்து நடைபெற வழி செய்து வருகிறீர்கள். வெகு விரைவில் எல்லாவற்றிக்கும் முடிவுவரும் அப்பொழுது உங்கள் போன்றவர்போன்றவர்களுக்கு உண்மை என்பது தெரியவரும். அதுவரை நீங்கள் என்னை எப்படி வேண்டுமானலும்  வசைபாடுங்கள் எனக்கு கவலையில்லை.     


-- Edited by SUNDAR on Saturday 12th of June 2010 12:12:37 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 626
Date:
Permalink  
 

தெரிந்தவர்கள் புத்தரின் போதனையை பதிவிட முடியுமா?

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

கௌதம புத்தரின் போதனைகள் அனைத்தும் மனிதர்களை வாழ்வின் துன்பம் மற்றும் தவிப்பிலிருந்து விடுவிக்ககும் ஒரே நோக்கத்தைத் தழுவியது. ஆகவே, அவர் புத்தமதத்தை நிறுவினார். புத்தமதம், ‘ஆசையும், துன்பமுமே இந்த உலகத்தில் உள்ள எல்லா துன்பங்களுக்கும் முக்கிய காரணம்’ என்ற கருத்தை மனிதனுக்கு உரைக்கிறது. மேலும் அவர் எண்வகை வழிகளான ‘நல்ல நம்பிக்கை’, ‘நல்லெண்ணம்’, ‘நல்வாய்மை’, ‘நற்செய்கை’, ‘நல்வாழ்க்கை’, ‘நன்முயற்சி’, ‘நற்சாட்சி’, ‘நல்ல தியானம்’ போன்றவற்றை அனைவருக்கும் போதித்தார். இந்தப் பாதையில் சென்றால், ஒரு நிர்வாணத்தின் இறுதி நோக்கத்தை அடைய முடியும் என்றும் அவர் போதித்தார். அவரது போதனைகள் அனைத்தும் இந்து மதத்தின் சாதி முறைக்கு எதிராகவும், ஏழைகள், பணக்காரர்கள் என்ற பிரிவினை இல்லாமல் இருந்ததால், வெகுவாகப் பல்வேறு தரப்பட்ட மக்களை ஈர்த்தது. மவுரியப் பேரரசரான அசோகர், புத்த மதத்திற்கு ஆதரவளித்தார். சார்நாத் மற்றும் போத்கயா புத்தமதத்தின் மிக முக்கியமான மையங்களாகக் கருதப்படுகிறது



-- Edited by SUNDAR on Tuesday 12th of June 2018 08:11:59 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 626
Date:
Permalink  
 

ok

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard