வேத புத்தகத்தில் ஏறக்குறைய 90௦% வெளிப்பாடுகள் மற்றும் தரிசனங்களை அடிப்படையாக கொண்ட செய்திகளே நிறைந்துள்ளன. தேவன் தான் தெரிந்து கொண்டவர்களுக்கு தனது திட்டம் மற்றும் தன் இருதயத்தின் எண்ணங்களை தெரிவிப்பது என்பது ஆதியாகமத்தில் இருந்தே பல ஆகமங்களில் விளக்கப்பட்டுள்ளது.
எண்ணாகமம் 12:6உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்.
என்று வாக்குபண்ணியுள்ள கர்த்தருடைய கை என்றும் குருகிபோகவில்லை எண்ணில்லா அதிசங்களை செய்யும் அவர் இன்றும் ஜீவனுள்ளவராக இருந்து அனேக வெளிப்பாடுகள் மற்றும் அதிசயங்களை நிறைவேற்றி வருகிறார். இவ்வளவுதான் எனது கிரியை என்று அவர் எங்கும் சொல்லவில்லை.
வேதத்தில் சொல்லப்படாத புதிய காரியங்களை அநேகர் ஏற்ப்பதில்லை என்றாலும் ஒரு வேத வசனத்துக்கு நாம் கொண்டிருக்கும் கருத்துக்கும் தேவன் வெளிப்படுத்தும் கருத்துக்கும் இடையே அனேக வேறுபாடுகள் இருக்கிறது. மனிதர்கள் ஒரு வசனத்துக்கு இப்படித்தான் பொருள் என்று தீர்மானித்து அதை உபதேசமாக மாற்றியுள்ள நிலையில் அதே வசனத்தை வைத்து தேவன் வேறு விதமாக விளக்கத்தையும் வெளிப்பாடுகளையும் தரும்போது அதை பலரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. மனுஷர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக தேவன் தான் திட்டத்தி மற்றப்போவதும் இல்லை, அல்லது மனிதன் தீர்மானித்த கருத்துக்கு தேவன் இணங்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.
மேலும்
அப்போஸ்தலர் 2:17கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்
என்ற முன்னறிவிப்பு இருப்பதால், இந்நாட்களில் தேவ பிள்ளைகளுக்கு அனேக சொப்பனங்களும் வெளிப்பாடுகளும் கிடப்பதை அறியமுடிகிறது எனவே அன்பானவர்களே "தரிசனங்களும் வெளிப்பாடுகளும்" என்றொரு பகுதியை துவங்கினால் அதில் வசன ஆதாரம் உள்ள மற்றும் வசன ஆதாரம் அற்ற வெளிப்பாடுகள் எதுவாக இருந்தாலும் அதில் பதிவிட வசதியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஆண்டவர் வெளிப்படுத்திய சொப்பனங்கள் தரிசனங்களை பதிவிடவெளிப்பாடுகளும் தரிசனங்களும்என்றபுதிய தனிபகுதி தொடங்கப்பட்டுள்ளது. வேத வசனங்களுக்கு நேரடியாகதொடர்புள்ள மற்றும் மறைமுகமாக தொடர்புடைய ஆண்டவரை பற்றியஎவ்விதமான தரிசனங்களையும் வெளிப்பாடுகளையும் இங்கு பதிவிடலாம்.
ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் அவரவர் தனிப்பட்ட விருப்பம்.
-- Edited by இறைநேசன் on Monday 7th of June 2010 09:47:07 PM