பரிசுத்த வேதாகமத்தில் ஆதியாகமம் முதல் மற்றும் இரண்டாம் அதிகாரங்களில் உலகம் மற்றும் மனுஷர்களின் படைப்பு பற்றிய செய்திகள் வருகிறது. ஆனால் இவ்விரண்டு அதிகாரங்களிலும் மனுஷன் மற்றும் உலகம் படைக்கப்பட்ட வசனங்களை ஆராய்ந்து பார்த்தால், இரண்டுக்கும் இடையே பல வேறுபாடுகள் இருப்பதை அறியமுடியும்:
1. முதல் அதிகாரம் :இங்கு சிருஷ்டித்தவர் தேவன் (எலோஹீம்)
இரண்டாம் அதிகாரம்: இங்கு உருவாக்கியவர் தேவனாகிய கர்த்தர் (யாவேதேவன்மனிதனை மண்ணினால் உருவாக்கினார்
7. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலேஉருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
2. முதல் அதிகாரம் : சிருஷ்டிக்கும்போதே ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார்
27. ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். இரண்டாம் அதிகாரம்: கர்த்தர் ஆதாமை உருவாக்கி அவன் தனியாய் இருப்பது நல்லதல்ல என்று கருதி அவன் விலா எலும்பை எடுத்து ஏவாளை உருவாக்கினார்
18. பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்
22. தேவனாகிய கர்த்தர்தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.
3. முதல் அதிகாரம்: மனுஷர்களை ஆசீர்வதித்து பல்கி பெருகி பூமியை நிரப்ப கட்டளையிட்டார்
28. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
இரண்டாம் அதிகாரம்:நன்மை தீமை அறியும் கனியே விலக்கிவிட்டார்! ( பிறகு எப்படி பலுகி பெருக முடியும்? எனவே இங்கு ஆசீர்வதிக்கவில்லை மாறாக எச்சரிக்கை மட்டுமே கிடைத்தது)
16.தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். 17. ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
4. முதல் அதிகாரம் :தேவன் வார்த்தையால் சொன்ன உடன் புல் பூண்டு முளைத்துவிட்டது
12. பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது
இரண்டாம் அதிகாரம் இங்கு படைத்தபோது மழைஇல்லாத காரணத்தால் புல்பூண்டு முளைத்திருக்க வில்லை
5.நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை;
5. முதல் அதிகாரம்: மிருக ஜீவன்களை வார்த்தையால் உண்டாக்கினார்
24. பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
இரண்டாம் அதிகாரம்:கர்த்தர் மண்ணினால் செய்து தனது கிரியையினால் உண்டாக்கினார்:
வேதபுத்தகத்தில் வரும் ஒவ்வொரு வார்த்தையும் காரணமின்றி குறிப்பிடப்பட வில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் படைத்தல் பற்றிய இந்த செய்திகள் இரண்டு வெவ்வேறு நிலைகளையே குறிப்பிடுகின்றன .
மேலும் தேவன் ஒரு தரம் மனிதனை சிருஷ்டித்து அவர்களை நோக்கி"பலுகி பெருகி பூமியை நிரப்புங்கள்" என்று சொல்லி தனது எல்லா கிரியையும் முடித்து ஏழாம் நாளிலே ஒய்ந்து இருந்தார் என்று வேதம் சொல்லி முடித்த பிறகு இரண்டாம் அதிகாரத்தில் தேவனாகிய கர்த்தர் வந்து மண்ணினால் மனிதனை உருவாக்கினார் என்று புதியதாக படைப்பு ஆரம்பிக்கிறது
-- Edited by SUNDAR on Thursday 12th of March 2020 04:05:41 PM
-- Edited by SUNDAR on Thursday 12th of March 2020 04:08:35 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தம்வார்த்தையினால்சிருஷ்டித்த சகலத்தையும் பார்த்து அதாவது
மிருங்கங்கள் பறவைகள் புல் பூண்டுகள் வானம்பூமிமற்றும்ஆணும் பெண்ணுமான மனிதர்கள் இப்படி எல்லாவற்றையும் தம் வார்த்தையினால் சிருஷ்டித்த பிறகுதேவன் தம்முடைய சிருஷ்டிப்பை பார்த்து நன்றாய் இருந்தது என்று சொல்கின்றார்
ஆதியாகமம் :1 அதிகாரம்
31.அப்பொழுது தேவன்தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அதுமிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.
7.தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார்
ஆதாமை மண்ணினால் உருவாக்கினார் சரி ஆதாமை படைத்த பின்பு ஏன் கர்த்தர் இப்படி ஒரு வார்த்தையை சொல்ல வேண்டும்
18பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்
முதல் அதிகாரத்தில் ஆணும் பெண்ணுமாக படைத்தது நன்றாய் இருந்தது என்று சொன்ன தேவன்
இரண்டாம் அதிகாரத்தில் ஏவாளை உருவாக்கும் முன்பே கர்த்தர் மனுஷன் தனிமையாய் இருப்பது நல்லது அல்ல என்று சொல்கின்றார்
இதில் இருந்து தெரியவருகின்றது என்னவென்றால் முதல் அதிகாரத்தில் படைக்கபட்ட ஆணும் பென்னுமானவர்கள் வேறு
இரண்டாம் அதிகாரத்தில் கர்த்தரின் கிரியைகளால் உண்டாக்க பட்ட ஆதாம் என்பவன் வேறு
ஏதோ ஒரு திட்டம் ஆதாம் சிருஷ்ட்டிப்பில் இருந்து இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்
இன்னும் புரியவில்லை என்றால் ஆதியாகமம் முதல் அதிகாரத்தயும் இரண்டாம் அதிகாரத்தையும் 1 மணிநேரம் பொறுமையாக வாசித்துபாருங்கள் மனுஷர்கள் சிருஷ்டிப்பில் இருவேறு நிலைகள்தெரியவரும்.....
-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 8th of September 2011 07:31:46 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
இறைவன் தளத்தின் சுந்தர் வி(வ)காரமான கொள்கையையுடையவர் என்பதை ஆரம்பம் முதலாக சொல்லிவருகிறோம்;அவருடைய கருத்துக்களால் கவரப்பட்ட இரு சிறுவர்களை துணைக்கு வைத்துக்கொண்டு எதையெதையோ எழுதி வருகிறார்;அத்தனையும் தமாஷ் இரகம்;நாம் அவரையும் எதிர்த்து எழுதி பெரிய ஆளாக்க விரும்பாமல் வெறுமனே வேடிக்கை பார்த்துவருகிறோம்;ஆனாலும் கிறித்தவத்தின் ஆதார சத்தியங்களிலேயே குழப்பத்தை ஏற்படுத்தும் வண்ணமாக எந்தவொரு அதிகாரப்பூர்வமான அமைப்பின் பின்னணியோ உத்தரவாதமோ தர இயலாத சிலர் இதுவே வேதம் போதிப்பது என்று பரிசுத்த வேதாகமத்துக்கு விரோதமான கொள்கை விளக்கங்களை அறிவிப்பார்களானால் நம்மால் ச்சும்மா பார்த்துக்கொண்டிருக்கமுடியாது;ஒரு துளி விஷத்தினால் ஒரு குடம் பாலும் விஷமாகிப் போகுமே,என்பதால் இதோ தமிழ் கிறித்தவ வட்டாரத்தின் முன்பாக இதனைக் கொணருகிறேன்;இது இறைவன் தளத்தின் சுந்தருக்கு எதிரானது மட்டுமல்ல,இதுபோன்ற பல்வேறு கொள்கைக் குழப்பங்கள் ஆங்காங்கு இருக்கிறது,ஆனால் அவற்றைக் கண்டறியும் பொறுமை நமக்கு இல்லை என்பதே உண்மையாகும்;இதுபோன்ற துருபதேசங்கள் பல்வேறு வெளிநாட்டு பிரசங்கிகளிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டு ஆவியானவர் பெயரால் கடைவிரிக்கப்படுகிறது;கொள்வோர் கொள்ளட்டும்,செல்வோர் செல்லட்டும் என்பதே கள்ளப் போதகர்களின் துணிகரமான நிலையாகும்.
தமிழக அரசில் எம்ஜிஆர் ஆட்சி காலத்திலிருந்து ஒரு வழக்கம் உண்டு,சட்டசபையில் எடுக்கப்பட வேண்டிய சில முக்கிய முடிவுகளுக்கு ஏற்ற சூழலை உருவாக்க சிலரை ஆயத்தப்படுத்தி அவர்கள் மூலம் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை அல்லது கேள்வியை எழுப்பச்செய்வார்கள்;பிறகு அதன் அடிப்படையிலேயே ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானம் புதியதாக இயற்றப்பட்டது போன்ற தோற்றத்துடன் நிறைவேறும்;அதுபோலவே சுந்தர் சிந்தையைத் தூண்டுவது போன்ற பாவனையுடன் ஒரு சர்ச்சையை வேதத்திலிருந்து எழுப்பி வைக்கிறார்;பின்னர் அதன் அடியொற்றி அவரால் மாசுபடுத்தப்பட்ட இளம் விசுவாசி ஒருவர் எல்லாம் தெரிந்தவர் போல சத்தியத்துக்கு விரோதமாக எதையோ எழுதி வைக்கிறார்;இவர்கள் இருவருமே சென்னையில் ஏஜி போன்ற முன்னணி ஆவிக்குரிய சபையில் பங்கேற்போர்;ஆனால் பக்திவிருத்திக்காக இப்படியாக ஆராய்ச்சி செய்கிறார்களாம்.
மேற்கண்ட விவாதத்திலுள்ளவற்றில் விவகாரமான போதனை இன்னதென்று பகுத்தறிந்தவர்கள் இங்கே பகிர்ந்துகொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
இன்னும் புரியவில்லை என்றால் ஆதியாகமம் முதல் அதிகாரத்தயும் இரண்டாம் அதிகாரத்தையும் 1 மணிநேரம் பொறுமையாக வாசித்துபாருங்கள் மனுஷர்கள் சிருஷ்டிப்பில் இருவேறு நிலைகள்தெரியவரும்.....
இறைவன் தளத்தின் சுந்தர் வி(வ)காரமான கொள்கையையுடையவர் என்பதை ஆரம்பம் முதலாக சொல்லிவருகிறோம்;அவருடைய கருத்துக்களால் கவரப்பட்ட இரு சிறுவர்களை துணைக்கு வைத்துக்கொண்டு எதையெதையோ எழுதி வருகிறார்;அத்தனையும் தமாஷ் இரகம்; .
chillsam அவர்களே நாங்கள் சொல்வது தவறு என்று சொல்கீறீர்கள் சரி! நீங்களாவது தேவனுடைய சிருஷ்டிப்பில் உள்ள வேறுபாடுகளை விளக்கி
சகோ:சுந்தர், எட்வின் இது தவறு இந்த வசனத்திற்கு விளக்கம் இப்படி அல்ல அந்த வசனத்தின் கருத்து இப்படி சொல்கிறது என்று ஏதாவது ஒன்று சொல்லி இருக்கலாம்
ஏதும் சொல்லாமல் தவறு என்றால் நாங்கள் எப்படி ஏற்றுகொள்வோம் நீங்களே சொல்லுங்கள் இதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா
தாங்கள் சொல்வதுபோல் ஒரு கருத்தைதான் நானும் அதைதான் எதிர்பாக்கிறேன் சகோதரரே. அப்படியொரு சரியான எதிர் கருத்து இருந்தால் அதை அப்படியே இங்கு காப்பி பேஸ்ட் செய்து நமது தவறை ஒத்துக்கொள்ளலாம்.
ஆண்டவராகிய இயேசுவோடு பிரத்தியட்சமாக சஞ்சரித்த பேதுருவே பவுல் சில ரகசியங்களை எழுதியபோது "அறிவதற்கு அரிதாக இருக்கிறது" என்ற ஒரே வார்த்தையோடு முடித்துகொண்டார். ஆனால் இவருக்கோ அவர் அறிந்துள்ளதை தவிர தேவனை பற்றிய செய்திகள் எல்லாமே தமாஷ்தான்! மேலும் பெரியவராகிய அவர், நம்போன்ற அற்ப பொடியர்களுக்கு பதில் சொல்லமாட்டார்.
கிறிஸ்த்தவத்தின் ஏகபோக சொந்தகாரரும் கிறிஸ்த்தவத்தையும் கிறிஸ்த்துவையும் தன்னுடய ஆவிக்குரிய அபிஷேக அர்ச்சனை வார்த்தைகளால் இன்றுவரை கட்டி காத்துகொண்டு இருப்பவர் அவர்தான் என்பது உங்களுக்கு தெரியாதா? "நாம் விகார கொள்கையுடையவர்கள் எனவேதான் விபரமாக விளக்குகிறோம். ஆனால் அவரது கொள்கையோ ரொம்ப விபரமானது, அதாவது எல்லோரிடமும் சிண்டு முடிவதும், பரியாசம் பண்ணுவதும், அடுத்தவரை முடிந்த அளவு மனமடிவாக்கு வதுதான் என்பது அவரது தளத்தில் பதிவிடும் அனைவருக்கும் தெரியும்.
தேவனின் சிருஷ்டிப்பு குறித்த இந்த காரியத்தின் குறித்த உண்மையை அறிய நாம் வேறு எதையும் நோக்குவதைவிட படைப்பின் வரிசை முறையை "ORDER OF CREATION"ஐ பார்த்தால் மட்டுமே போதும்!
ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் தேவ ஆவியானவர், முதலில் ஒளியை படைத்து தொடர்ந்து ஆகாய விரிவு, வெட்டாந்தரை, ஓருயிர் உயிரிகளாகிய புல் பூண்டு மரம் செடிகள் படைத்து, வான சேனைகள், நீர்வாழ் ஜீவஜந்துக்கள் ஐந்தறிவு உயிரி காட்டு மிருகம், நாட்டு மிருகம் என்று அனைத்தையும் படைத்து இறுதியில் ஆறறிவு மனுஷனை படைக்கிறார். இந்த வரிசையானது பரிணாம கொள்கை உடையவர்களின் கொள்கைக்கு ஒத்ததுபோல் இருக்கிறது.
சுருங்க சொல்லின், ஒரு மனுஷன் உயிர்வாழ தேவையான அனைத்தையும் முதலிலேயே படைத்துவிட்டு பின்னர் இறுதியாக மனுஷனை படைக்கிறார். மனுஷன் சிருஷ்டிக்கபட்டு தேவனின் முன்னால் நிற்கும்போது இந்த உலகமே முழுமையாக இருந்தது.
ஆனால் இரண்டாம் அதிகாரத்தில் தேவனாகிய கர்த்தரோமுதல் முதலில் மண்ணினால் மனுஷனை உருவாக்குகிறார், பின்னர் ஏதேன தோட்டத்தை உருவாகுகிறார். பிறகு அவன் தனியாக இருப்பது நல்லது அல்ல என்று துணையை ஏற்ப்படுத்துகிறார் (அதுவரை ஆதாம் தனியாளாகதான் இருந்திருக்கிறான் என்பதை அறிய முடிகிறது) அதன் பின்னர் அவனுக்கு துணையாக உயிரினங்களை மண்ணினால் படைத்து ஆதாமிடம் கொண்டுவந்து பெயரிட வைக்கிறார்.
ஆதி 1:19தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று.
இந்த உயிரினங்கள் எதுவும் ஆதாமுக்கு ஏற்ற துணையாக இல்லாததால், இறுதியில் மனுஷியை படைக்கிறார். எனவே இரண்டு அதிகாரத்திலும் உள்ள படைப்பின் வரிசை கிரமமுறையே முற்றிலும் வேறுபடுவதை நாம் அறியலாம்.
தேவன் தெரிவித்ததை இதைவிட தெளிவாக வேறு எவ்வாறு விளக்க என்பது தெரியவில்லை.
குப்பையை கிளறினால்கூட வெறும் துர்வாசம்தான் வரும், ஆனால் அவரிடம் வாய்கொடுத்தல் அதைவிட சகிக்க முடியாத சாபங்களும் வார்த்தைகளும் வரும் அது அனைவருக்குமே கேடுதான். எனவே சகோதரரே தேவனே நியாயாதிபதி அவரே நடுநின்று நியாயம் தீர்க்கட்டும் விட்டுவிடுவோமே!
-- Edited by SUNDAR on Friday 9th of September 2011 07:31:45 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சகோ. எட்வின் அவர்களே அனேக கிறிஸ்த்தவர்களுக்கு எதையும் ஆழமாக தெரிந்து கொள்ள ஆசையில்லை. உண்மையை உணர்ந்துகொள்ளுமிருதயம் இல்லை. அவர்களுக்கு தெரிந்ததே முழுமை என்று நம்பி திருப்தியடைந்து விடுகின்றனர். அவர்களிடம் அனேக கேள்விக்கு பதிலில்லை என்றாலும் அடுத்தவருக்கு போதனை செய்யவும் தான் பெரியவன் என்று காட்டிக் கொள்ளவும் முதலிடம் பிடிக்கவும் தயாராக இருக்கின்றனர அவர்களை அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது . இயேசுவும் எல்லோரிடமும் எல்லா உண்மைகளையும் கூறவில்லையே!
உலகத்தோடு ஒத்த வேஷம் போடும் கிறிஸ்தவர்களே எங்கும் நிறைந்துள்ளனர். இவர்கள் உண்மைகளை அறிதனாலும் எந்த பயனும் யாருக்கும் ஏற்ப்படபோவத இல்லை. கர்த்தருக்கு பயந்து அவரது வார்த்தைகளுக்கு கீழ்படிந்தால் மட்டுமே சில உண்மைகளை அறியும் அளவுக்கு இருதயம் உணர்வு பெரும் அவரும் அந்த உண்மைகளை போதிப்பார்.
சங்கீதம் 25:12கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.
மற்றவர்களுக்கு இதை படிப்பதால் எந்த பயனும் ஏற்ப்படபோவ்து இல்லை. தேவனை பற்றியும் இந்த உலகத்தின் நடபடிகள் பற்றியும் சகல உண்மையையும் ரகசியங்களையும் அறிந்தால் இவர்கள் "நான் இன்னும் என்ன செய்ய வேண்டும் தேவனே" என்று கேட்டு கண்ணீரோடு மற்றாடுவார்களேயன்றி அடுத்தவர்களை குறைகூறிக்கொண்டு நேரத்தை வீணடிக்க மாட்டார்கள் என்பது மாத்திரம் நிச்சயம்.
சகோதரர்களுக்கு இடையே சண்டையை மூட்டுவதில் சாத்தான் கில்லாடி. இரண்டு சகோதரர்கள் சண்டை போட்டு ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டு பேசிக்கொண்டு நேரத்தை எல்லாம் வீணடிப்பதால் தேவனைப்பற்றிய ஆக்கபூர்வமான காரியங்களை செய்யமுடியாத அளவுக்கு தடங்கல்களை ஏற்ப்படுத்துகிறான். அத்தோடு வெறுப்பு முற்றிபோய் ஒருவருக்கொருவர் சாபம் இடுகின்றனர், அந்த இரண்டுபேரில் யாருக்கு அந்த சாபம் பலித்தாலும் சாத்தனுக்கு கொண்டாட்டமே. இதெல்லாம் ஆவிக்குரியவர்கள் என்று சொல்லப்படும் பலருக்கு புரிவதில்லை.
எனவே சாத்தான் எந்த முறையில் நம்மை எதிர்த்து நின்று முகாந்திரமில்லாமல் நம்மை பகைத்து உண்மையை உலகத்து அறிவித்துவிடாமல் தடுத்தாலும் நாம் முடிந்தவரை எழுதவேண்டியதை எழுதிவைத்து விடுவோம். மற்றதை ஆண்டவர்
லூக்கா 13:24அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
என்று வசனம் சொல்லவில்லயா? எனவே அநேகர் இடறத்தான் செய்வார்கள் அதை நம்மால் தடுக்கமுடியாது. நமக்கு இங்குள்ள மாம்சத்தோடும் இரத்தத்தோடும் போராட்டம் இல்லை எனவே நாமும் அவர்களை பார்த்து இடறாமல் யாரையும் பொருட்படுத்தாமல் நம்முடய பணியை முடிந்தவரை தொடர்வோம்.
-- Edited by SUNDAR on Monday 12th of September 2011 04:18:38 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இந்த திரியில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் வேதாகமத்தில் குழப்பம் இருக்கிறது என்பதை தெரிவிக்கும் நோக்கிலோ அல்லது யாருக்கும் இடரலை ஏற்ப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலோ எழுதப்பட்டது அல்ல.
வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள் எழுத்துக்கு எழுத்து, உறுபபுக்கு உறுப்பு உண்மையானதும் மாறாததும் அனேக உண்மைகளை உள்ளடக்கியதும் ஆகும்.
இந்நிலையில், அநேகர் தவறாக நம்பிக்கொண்டிருக்கும் ஒரு முக்கிய கருத்தை குறித்த விளக்கத்தை தரவே இந்த இரண்டு விதமான படைத்தலுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விளக்கியிருக்கிறேன். இதை படிக்கும் எவரும் நிச்சயம் இரண்டு படைப்புக்கும் இடையில் வேறுபாடுகள் இருக்கிறது என்பதை தெளிவாக அறிய முடியும்.
என்னுடய இந்த வேறுபட்ட விளக்கத்துக்கு, பொதுவான கிறிஸ்த்தவ சகோதரர்கள் இரண்டு விதமான விளக்கங்களை கூறுவதை எல்லோரும் கேட்கமுடியும்.
1. முதலில் தேவன் திட்டமிட்டார் பின்னர் 2ம் அதிகாரத்தில் அதை நிறைவேற்றினார்
முதல் அதிகாரத்தில் தேவ ஆவியானவர் "திட்டமிட்டார்" என்றோ அல்லது 'உருவாக்க எண்ணினார்" என்றோ அல்லது உருவாக்க தீர்மானித்தார் என்றோ அல்லது அதற்க்கு ஒத்த வார்த்தைகளோ நிச்சயம் இல்லை.
வசனம் மிக தெளிவாக சொல்கிறது
ஆதி 1: 3.தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார்,வெளிச்சம் உண்டாயிற்று.
11. தேவன்: ..........முளைப்பிக்கக்கடவதுஎன்றார்; அது அப்படியே ஆயிற்று.
12. பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது;
உண்டாயிற்று, முளைப்பித்தது, அப்படியேஆயிற்று போன்ற வார்த்தைகள்
தேவனின் வார்த்தையின் வல்லமையால் எல்லாம் உடனுக்குடன் நடந்தததேயே குறிக்கிரதேயன்றி எந்த ஒரு திட்டமிடுதலையும் குறிக்கவில்லை என்பதை தெளிவாக அறிய முடியும்.
எனவே "தேவன் திட்டமிட்டார்' என்ற இந்த கருத்து வசனத்துக்கு ஏற்புடையது அல்ல
2. வேதத்தில் எழுதப்பட்ட சம்பவங்கள் ஒரு வீடியோ படம்போல் இல்லாமல் ஒரே நேரத்தில் நடந்த சம்பவங்கள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக எழுதப்பட்டிருகாலாம் என்பது.
இந்த கருத்தின் அடிப்படையில் இரண்டு அதிகாரங்களில் உள்ள சம்பவங்களும் ஒரே நேரத்தில் நடந்ததாகவும் முதலில் குறிப்புபோல் கொடுக்கபட்டு பின்னர் விளக்கம் கொடுக்கபட்டது போலவும் கருத வாய்ப்புண்டு.
ஆனால் இரண்டாம் அதிகாரத்தில் சொல்லபட்டுள்ள தலைகீழான "படைப்பின் வரிசை முறை" (ORDER OF CREATION") ஒன்றே இந்த கருத்தை தவறு என்று
நிரூபிக்கும்.
அதாவது முதல் அதிகாரத்தில் சொல்வதுபோல் "ஒரு குருவியை படைத்துவிட்டு பின்னர் ஆதாமை படைப்பதற்கும்" "ஆதாமை படைத்தபின்னர் ஒரு குருவியை உண்டாக்கி அதற்க்கு பெயரிடும்படி ஆதமிடம் கூறுவதற்கும்" இடையே மிகுந்த வேறுபாடு உண்டு. அதை கதையாக சொன்னாலும் வீடியோவாக படம் எடுத்தாலும் வரிசை முறை நிச்சயம் மாற வாய்ப்பில்லை.
உங்கள் கருத்தில் உறுதியாக இருந்து அதுதான் உண்மை என்று நீங்கள் நம்பினால் அதை தான் தவறு என்று நிரூபிக்க விரும்பவில்லை. நீங்கள விசுவாசித்தபடியே வைத்துகொள்ளுங்கள்.
நான் எழுதியுள்ள கருத்தையும் விளக்கத்தையும் உண்மை என்று நபுகிறவர்கள் மட்டும் கர்த்தருக்கு சித்தமானால் இந்த தலைப்பில் தொடர்ந்து வரப்போகும் தேவனின் திட்டம் பற்றிய விளக்கமான செய்திகளை வாசித்தால் போதுமானது.
மீண்டும் சொல்கிறேன், நான் எழுதும் இந்த கருத்து வேதாமத்தின் உண்மையை நிரூபிப்பைதர்க்காவே அன்றி மற்றபடி அல்ல! வேத வசனங்கள் சொல்லும் உண்மைகளை நமது மாம்ச அறிவால் புரிதலில் வேண்டுமானால் சில குழப்பங்கள் இருக்கலாமே தவிரே வேதாகமத்தில் உள்ள வார்த்தைகளில் எந்தஒரு குழப்பமும் நிச்சயம் இல்லை என்பதை அறியவேண்டும்!
-- Edited by SUNDAR on Thursday 15th of September 2011 03:04:15 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
. முதலில் தேவன் திட்டமிட்டார் பின்னர் 2ம் அதிகாரத்தில் அதை நிறைவேற்றினார்
முதல் அதிகாரத்தில் தேவ ஆவியானவர் "திட்டமிட்டார்" என்றோ அல்லது 'உருவாக்க எண்ணினார்" என்றோ அல்லது உருவாக்க தீர்மானித்தார் என்றோ அல்லது அதற்க்கு ஒத்த வார்த்தைகளோ நிச்சயம் இல்லை.
சகோதரர்களே முதல் அதிகாரத்தில் தேவன் திட்டமிட்டார் என்று சொல்கின்றீர்கள் சரி
நான் சில கேள்விகளை கேட்கவிரும்புகின்றேன்
தேவ ஆவியானவர் முதல் அதிகாரத்தில் திட்டமிட்ட வானமும், பூமியும்
சூரியனும், நிலவும் மற்றும் நட்சத்திரங்களும், சமுத்திரமும்,சுடர்கள் போன்றவற்றை முதல் அதிகாரத்தில் திட்டமிட்ட
கர்த்தர் ஏன் இரண்டாம் அதிகாரத்தில் நிறைவேற்றவில்லை ?
இரண்டாம் அதிகாரத்தில்கர்த்தர் ஆதாம் ஏவாள் மற்றும் கனிகள் செடி கொடிகள் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கிகின்றார்
இவைகளை உருவாக்கியவர் ஏன் முதல் அதிகாரத்தில் திட்டமிட்ட முக்கியமானவைகளை அதாவது சூரியனும், நிலவும் மற்றும் பெரிய நட்சத்திரங்களும், சமுத்திரமும்,சுடர்கள் போன்றவற்றை ஏன் நிறைவேற்றவில்லை
பாதி திட்டமிட்டு பாதியை நிறைவேற்றாமால் போனாரா அல்லது முதல் அதிகாரத்தில் சொன்னதயே திரும்பவும் ஏன் இரண்டாம் ஆதிகாரத்தில சொல்லவேண்டும் என்று நினைத்து சில வற்றை மட்டும் சொல்லிவிட்டு அதுவும் மாற்றி மாற்றி சொல்லுவதற்கு காரணம் என்னவோ ?
தேவன் இப்படி செய்வதற்கு காரணம் என்ன ?
சகோதரர்கள் பதில் சொல்லுமாறு கேட்டுகொள்கின்றேன் மழுப்பாமல் சொல்லவேண்டும் அதாவது
புரிகின்றமாதிரி சொல்லவேண்டும் என்று கேட்டுகொள்கின்றேன்...
-- Edited by EDWIN SUDHAKAR on Monday 19th of September 2011 08:43:57 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
EDWIN SUDHAKAR wrote:தேவன் இப்படி செய்வதற்கு காரணம் என்ன ? சகோதரர்கள் பதில் சொல்லுமாறு கேட்டுகொள்கின்றேன் மழுப்பாமல் சொல்ல வேண்டும் அதாவது புரிகின்ற மாதிரி சொல்லவேண்டும் என்று கேட்டுகொள்கின்றேன்...
திரு.எட்வின் அவர்களே,
நீங்கள் ஏன் இவ்வளவு சிரமப்படவேண்டும், வேதம் தேவனுடைய வார்த்தை என்கிறீர்கள் அல்லவா, அதிலேயே வாசியுங்கள்; நீங்கள் நம்பும் தேவன் உயிரோடு தானே இருக்கிறார்? அப்படியானால் அவரிடம் கேட்கவேண்டிய கேள்வியை ஏன் மனிதர்களிடம் கேட்கிறீர்கள்? அவர்கள் எந்த அதிகாரத்தில் பதில் சொல்லுகிறார்களோ, அதே அதிகாரமும் உரிமையும் அறிந்துகொள்ள உங்களுக்கு இல்லையோ? பாமரர்களாகிய நாங்களே வேதத்தை வாசித்து நம்பி சந்தோஷமாக இருக்கிறோமே!!!
நீங்கள் ஏன் இவ்வளவு சிரமப்படவேண்டும், வேதம் தேவனுடைய வார்த்தை என்கிறீர்கள் அல்லவா, அதிலேயே வாசியுங்கள்; நீங்கள் நம்பும் தேவன் உயிரோடு தானே இருக்கிறார்? அப்படியானால் அவரிடம் கேட்கவேண்டிய கேள்வியை ஏன் மனிதர்களிடம் கேட்கிறீர்கள்? அவர்கள் எந்த அதிகாரத்தில் பதில் சொல்லுகிறார்களோ, அதே அதிகாரமும் உரிமையும் அறிந்துகொள்ள உங்களுக்கு இல்லையோ? பாமரர்களாகிய நாங்களே வேதத்தை வாசித்து நம்பி சந்தோஷமாக இருக்கிறோமே!!!
இவைகளை உருவாக்கியவர் ஏன் முதல் அதிகாரத்தில் திட்டமிட்ட முக்கியமானவைகளை அதாவது சூரியனும், நிலவும் மற்றும் பெரிய நட்சத்திரங்களும், சமுத்திரமும்,சுடர்கள் போன்றவற்றை ஏன் நிறைவேற்றவில்லை
பாதி திட்டமிட்டு பாதியை நிறைவேற்றாமால் போனாரா அல்லது முதல் அதிகாரத்தில் சொன்னதயே திரும்பவும் ஏன் இரண்டாம் ஆதிகாரத்தில சொல்லவேண்டும் என்று நினைத்து சில வற்றை மட்டும் சொல்லிவிட்டு அதுவும் மாற்றி மாற்றி சொல்லுவதற்கு காரணம் என்னவோ ?
தேவன் இப்படி செய்வதற்கு காரணம் என்ன ?
சகோதரர்கள் பதில் சொல்லுமாறு கேட்டுகொள்கின்றேன் மழுப்பாமல் சொல்லவேண்டும் அதாவது
புரிகின்றமாதிரி சொல்லவேண்டும் என்று கேட்டுகொள்கின்றேன்...
சகோ. HMV அவர்களே சகோ. எட்வின் அவர்களுக்கு நான் எழுதியிருக்கும் வேறுபாடுகள் தெளிவாக புரிவதால், முதல் மற்றும் இரண்டாம் அதிகாரங்களில் உள்ள படைப்புகளுக்கிடையே வேற்றுமை இருப்பதை ஏற்க்கும் நிலையில் இருக்கிறார்.
இந்நிலையில், பொதுவான கிறிஸ்தவ கூற்றுப்படி "முதலில் திட்டமிட்டார் பின்னர் உருவாக்கினார்" என்ற கருத்து உண்மையாக இருக்குமாயின் அந்த கருத்தை நம்புகிறவர்கள் அவரது கேள்விக்க சரியான விளக்கம் தரும்படி அவரது சார்பில் ஒரு கேள்வியை முன்வைத்துள்ளார். எடுத்த எடுப்பில் எதையும் அவர் ஏற்க்க விரும்பாததால் தீர ஆராய்ந்து மற்றவர்கள் சொல்லும் கருத்தையும் ஆராய்ந்த பின்னர் ஒரு முடிவுக்கு வர விரும்பியே இந்த கேள்வியை முன்வைத்துள்ளார்.
தாங்கள் சொல்வதுபோல் தேவனிடம் விசாரித்தால் அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில் கிடைக்கும் என்பது உண்மையே ஆனால் எல்லோரும் எல்லா கேள்விகளுக்கும் தேவனிடம் இருந்து பதில் பெறமுடியாது. மோசேக்கு சீனாய் மலையில் தெரிவிக்கபட்டது மற்ற இஸ்ரவேல ஜனங்களுக்க தெரிவிக்கப் படவில்லை. அவர்கள் தேவன் சொன்னதை மோசே மூலமாகவே அறிந்து கொண்டார்கள். அதேபோல் ஆண்டவராகிய இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு சொன்ன அனேக உண்மைகள் மற்றவர்களுக்கு மறைபொருளாகவே இருந்தது அவகளுக்கு வெளிப்படுத்தபடவில்லை.
எனவே எல்லோருக்கும் தேவனிடத்தில் கேடடு உண்மையை அறிய உரிமை இருக்கிறது. தேவன கேற்ற விதமாக வாழத்தான் தேவன் சகல உண்மைகளையும் தெரிவிப்பார் மற்றவர்கள் உண்ம அறிந்தவர்கள் மூலமே காரியங்களை அறிய முடியும். அதுபோல் தேவனை பற்றிய பல உண்மைகள அடுத்தவர் வாயில் இருந்தே நான் அறிந்திருக்கிறேன்.
இங்கு நான் எழுதிய கருத்துப்படி தேவனின் சீரிய திட்டத்தின் அடிப்படையில் ஆதியாகமம் முதல் மற்றும் இரண்டாம் அத்தியாயத்தில் உள்ள படைப்புகளுக்குள் வேறுபாடு உண்டென்று நாங்கள் நம்புகிறோம். அப்படியில்லை இரண்டும் ஒன்று தான் என்று எண்ணுகிறவர்கள் இங்குள்ள கேள்விகளுக்கு தெரிந்தால் சரியான பதில் தரலாம்.அல்லது குறைந்த பட்சம் நாங்கள் சொல்லும் கருத்து குறித்து ஆண்டவரிடம் விசாரித்து உண்மையை அறிய முயற்சி செய்யலாமே!
தேவனிடமிருந்து உண்மையை அறிந்து யார் எழுதினாலும் அவருக்கு விரோதமாக ஒரு நாவும் நிச்சயம் அசைய முடியாது!
மேலும் சகோ. எட்வின் அவர்களுக்கு நமது கருத்துக்களை நம்புகிறவர்கள் நம்பட்டும் நம்பாதவர்கள் விட்டுவிடட்டும். எல்லோரையும் நம்ப வைக்கும் முயற்ச்சியில் இறங்கவேண்டாம் என்று அன்புடன் வேண்டுகிறேன். அது நடக்கிற காரியம் அல்ல என்றே நான் கருதுகிறேன். எனவே இங்கு எழுத வேண்டியதை எழுதி வைப்போம். எதிர் கருத்து எங்கு தெரிவிக்கபட்டாலும் அதற்க்கு நாம் விளக்கம் கொடுக்கலாம். அல்லது அது சரியாக இருக்கும் பட்சத்தில் நமது கருத்துக்களைமறு பரிசீலன செய்யலாம்.
ஒரே பைபிளை வைத்து ஆராயும் சகோதரருக்குள்ளே 2000௦௦ வகையான சபை பாகுபாடு இருக்கிறதே. அதில் யார் சரியான தேவனுக்கேற்ற வழியில் நடக்கிறார்கள் என்பது தேவனுக்கு மட்டும்தான தெரியும்!
-- Edited by SUNDAR on Tuesday 20th of September 2011 08:34:23 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இந்த திரியில் ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் உள்ள சிருஷ்டிப்பிர்க்கும் இரண்டாம் அதிகாரத்தில் இருக்கும் ஆதாம் ஏவாள் படைப்புக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை விளக்கி காட்டுவதற்கு சரியான விளக்கம் அறிய கீழ்கண்ட திரியை சொடுக்கவும்
15 அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பூரணமாயிருந்ததே. பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம் பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். மல்கியா 2 :15
இந்த வசனத்தில் முதலில் படைக்கப்பட்டவன் தேவசாயலில் படைக்கப்பட்டான்.இரண்டாவது படைக்கப்பட்டவன் மன்னினால் படைக்கப்பட்டான்.
இருவேறு நிலை!!!
இவ் வசனங்கள் மூலம் ஆதாமின் வம்ச வரலாறு என்று குறிப்பிடப்பட்டு அவர்களை பற்றி கூறப்படுகிறது.. ஆக மனுஷ சிருஷ்டிப்பில் எப்படி இரு நிலைகள் உருவானதாக தாங்கள் குறிப்பிடுவது எப்படி விளக்கவும்...
ஆதி 5: 1. ஆதாமின் வம்சவரலாறு:தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார். 2. அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார்.
இது முதல் நிலை மனுஷனை பற்றியது
3. ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.
இது இரண்டாம் நிலை மனுஷனை பற்றியது.
ஆதாமின் வம்ச வரலாறு என்று வரும்போது முதல் நிலை மனுஷனையும் சொல்லியே ஆக வேண்டும். முதல் அதிகார மனுஷனின் தொடர்ச்சியே இரண்டாம் அதிகார ஆதாம்.
முதல் நிலையில் படைக்கப்படட மனுஷனில் ஆரம்பித்து வரலாறை சொல்லி, அது இரண்டாம் நிலை மனுஷனோடு அது இணைக்கப்படுகிறது.
அப்படி இணைப்பதுதான் தேவ திடடமும் கூட! எனவே அவர் அப்படியே சொல்கிறார்.
ஆதாமின் வம்ச வரலாறு முதல் மனுஷனோடு தொடர்ச்சியுடையது அந்த முதல் நிலை மனுஷனின் தொடர்ச்சியாக இரண்டாம் நிலை மனுஷன் படைக்கப்டான்
என்று வசனம் சொன்னால் ஆபிரகாமுக்கு முன்னர் யாரும் இல்லை என்று எடுத்துகொள்ள முடியுமா?
அதேபோல் இங்கு
முதல் நிலையில் படைக்கப்படட மனுஷநில் ஆரம்பித்து தொடர்ந்து வந்த இரண்டாம் நிலை மனுஷனாகிய ஆதாமின் வம்ச வரலாறு வருகிரது.
தற்போது நாம் காண்கிற இந்த உலகத்தை பொறுத்தவரை ஆதாம் ஒரு முந்தின மனுஷன்தான்.
ஆதாம் ஏவாள் படைக்கப்படட அந்த ஏதேன் தோட்டமே நம் கண்ணுக்கு தெரிவவில்லை, அப்படியிருக்கு முதல் நிலை மனுஷன் படைக்கப்படட அந்த உலகமும் நம் கண்ணுக்கு தெரியாது.
தேவன் முதலில் மனுஷனை படைத்து "நல்லது என்று கண்டார்" என்று சொல்லும் முதல் அதிகாரத்துக்கும் பின்னர் ஆதாமை படைத்து "நல்லதல்ல" என்று சொல்லும் இரண்டாம் அதிகாரத்துக்கும் இடையிலேயே பாவம் உலகத்துக்குள் புகுந்தது.
இரண்டுமே ஒன்றோடொன்று தொடர்புடையது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
எனக்கு ஆண்டவர் தெரிவித்த இந்த காரியங்கள் குறித்து பல்வேறு வேத ஆராச்சியாளர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர் அதில் ஒன்றிரண்டை உங்களுக்கு தருகிறேன் ஆர்வம் இருந்தால் படித்து பாருங்கள்.
First one is heavenly creation of man and second one is earthly creation of man both is connective.
இவர்கள் எழுதியது எதுவும் எனக்கு தெரியாது. இப்போது தேடி பார்த்தபோது இது குறித்து எழுதப்பட்டு இருப்பதை என்னால் அறிய முடிந்தது.
மேலும் மறைவான உண்மைகள் எதுவும் நேரிடியாக பார்த்தால் தெரியாத அளவுக்கு மறைக்கப்பட்டிருக்கும் அதை ஆழ்ந்து நோக்கினால் மட்டுமே தேவ வெளிச்சத்தில் அதில் இருக்கும் உண்மையை அறிய முடியும்.
எல்லோருக்கும் தேவன் எல்லாவற்றையும் சொல்வதும் இல்லை கேட்ப்பவர்கள் எல்லோகுக்கும் தேவன் வெளிப்படுத்தியதை இருக்கும் மன பக்குவம் இருப்பதும் இல்லை.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)