இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அக்கினிக்கு நேரான உலகமும் தேவதிட்டமும்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
அக்கினிக்கு நேரான உலகமும் தேவதிட்டமும்!
Permalink  
 


ஒரு மாபெரும் கட்டிடம் தீப்பற்றி எரியப்போகிறது என்றொரு நிலை ஏற்ப்படுகிறது. அப்பொழுது  அங்கு என்னென்னே செயல்கள் வேகமாக நடக்கும் என்பதை நாம் சற்று கற்பனை செய்து பார்ப்போம். அங்கு மூன்று மிக முக்கியமான காரியங்கள் நிச்சயம் நடைபெறும் சாத்தியங்கள் உள்ளன.
 
1. அந்த கட்டிடம் தீபிடித்துவிடாமல் தடுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் நடக்கும் 

2. அந்த கட்டிடத்தில் உள்ளவர்களை உடனடியாக வெளியில்
கொண்டு சொல்லும்
நடவடிக்கைகள் அதி வேகமாக நடக்கும் 

3. அதையும் மீறி அந்த கட்டிடத்துக்குள் மாட்டி காயமுற்றவர்களை காப்பாற்றுவதற்கு தேவையான முன் எச்சரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்டும்.
 
இது அனைவரும் அறிந்த ஒரு செய்தி.
 
இதற்க்கு சரியான காரியங்களே இன்று உலகில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிய வேண்டும்!
 
II பேதுரு 3:7 இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.
II பேதுரு 3:10 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்.

மேலே சொல்லப்பட்ட வசனங்களின்படி இந்த உலகமானது பாவம் என்னும் அசுத்தத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு,  இனி இதை சரிசெய்ய முடியாது என்ற நிலைக்குள்ளாகி அழிவை நோக்கி காத்திருக்கிறது. உலகில் உள்ள காற்று மண்டலம் முழுவதும் அசுத்த ஆவிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளது. நமது கண்களை தேவன் திறந்தால் இந்த உலகில் (கேயாசி தேவ சேனையின் பாதுகாப்பை பார்த்தது போல்) அசுத்த ஆவிகள் செய்யும் கிரியைகளையும் அது பச்சிளம் குழந்தைகள் முதல் அனைவரையும்  பிடித்து வைத்திருப்பதையும் அப்படியே பார்க்க முடியும். வீசும் காற்றெல்லாம் அசுத்த ஆவிகள் நிறைந்துள்ளன
அதுவும் இரயில்வே தண்டவாளத்தின் இருபுறமும் அசுத்த ஆவிகளின் கூட்டம் குவிந்து கிடக்கிறது.  

பூரண பரிசுத்தன்  என்று இல்லாதபடி இந்த உலகினுள் வந்து ஒருவர் பிறந்தாலே உடனே அவர்  அந்த  அசுத்த ஆவியின் பிடியினுள் சிக்கிக்கொள்ளும் நிலையே இன்று எங்கும் இருக்கிறது. எந்த ஒரு மனிதனும் தனது முயற்ச்சியால் இந்த உலகை கடந்து எங்கும் சென்று தங்கிவிட முடியாது. அப்படியே கடந்து போனாலும் அவன் ஓன்று மரிக்க வேண்டும் அல்லது திரும்பி இந்த பூமிக்குள் வந்து சேரவேண்டும் என்ற நிலையே உள்ளது.  இப்படி கூண்டோடு அழிவை நோக்கி உலகம் போகும் ஒரு அபாய நிலையிலேயே உலகம் இருந்தது.
 
இந்நிலையில் தீக்கிரையாகபோகும் வீட்டை  பாதுகாக்க எடுக்கும் முயர்ச்சிபோல் தேவன் தனது  மூன்றுவித செயல்பாடுகளை ஆரம்பித்து தனது மீட்பின் திட்டத்தை நடத்தி வருகிறார்.
 
இரட்ச்சகராம்  இயேசுவை பூமிக்கு அனுப்பி  அவரை பலியாக கொடுத்து அவரின் இரத்தத்தின் வழியாக  மாளப்போகும் மக்களின் மீட்புக்காக ஒரு ஒரு வழியை ஏற்ப்படுத்தினார். அந்த ஒரே வழியிலேயே மனிதர்கள் இந்த அழியப்போகும் உலகை விட்டு வெளியேற முடியும். அனால் அந்த இயேசு என்னும் ஒரே வழியில் மேற்க்கூரிய எரியப்போகும் கட்டிடத்தில் இருந்து மீட்கும் தேவனின் மீட்பின்  மூன்று நடவடிக்கைகளும்  நிறைவேறும் நிலை இருக்கிறது (அதாவது ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள்) அதைப் பற்றி ஒன்றொன்றாக பார்க்கலாம்.   
 


-- Edited by SUNDAR on Tuesday 15th of June 2010 04:17:29 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

தீப்பிடித்து எரியப்போகும் ஒரு பெரிய கட்டிடம்போல இந்த உலகம் அக்கினிக்கு நேராக இருக்கிறது என்று பார்த்தோம்.  அதிலிருந்து மனுஷர்களை மீட்கும் தேவனின் திட்டங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
 
மீட்பின்  திட்டம்  - 1  கூவி அழைத்தல்

எரியப்போகும் ஒரு கட்டிடத்துக்குள் இருக்கும் மக்களுக்கு
அந்த கட்டிடம் எரியப் போகும்  செய்தியை ஏதாவது ஒரு வழியில் தெரியப்படுத்தி எல்லோரும் வெளியில் வந்து பாதுகாப்பான இடங்களில் தங்கிகொள்ளுங்கள் என்று எச்சரிப்பதுதான் இத்திட்டம்.  இந்த அழைப்பை நம்பி உடனே வெளியேறியவர்கள் நிச்சயம் தப்பித்து கொள்ளலாம்.
 
அதுபோல் ஆண்டவராகிய இயேசுவை  நம்முடைய பாவங்களுக்கு பாவ நிவாரண பலியாக அனுப்பி அவரை ஏற்றுக்கொண்ட அனைவரையும் நீதிமான்களாக்கி அவரை ஏற்றுக்கொள்வதன்  மூலம் எரியப்போகும் உலகத்தில் இருந்து அவர்களை
வெளியில் அழைத்து
வந்து  வந்தவர்கள் எல்லோருக்கும் தனியான ராஜ்ஜியம் ஒன்றைகொடுத்து பாதுகாப்பதுதான் இந்த திட்டம்.
 
மத்தேயு 4:17 அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
 
ஆம்! அன்று ஆண்டவராகிய  இயேசு கூவி அழைத்த அழைப்பு, இன்று அவருடைய ஊழியக்காரர்களால் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. அனேக தேவ ஊழியர்கள் ஆயிரமாரியமாக பெருகி வானொலி, தொலைகாட்சி, பொதுக்கூட்டம், தெருக்கூட்டம் சபைகள் என்று பலவிதமான வழிகளில் மனிதர்களை எச்சரித்து  தீப்பிடிக்க போகும் இந்த உலகத்தின் துன்மார்க்க வாழ்வில் இருந்து வெளியில் வாருங்கள் என்று எச்சரித்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வார்த்தைகளை கேடடு எச்சரிக்கை அடைந்து  இயேசுவின் பாதுகாப்பு கரங்களுக்குள் ஓடி வந்தவர்களுக்கு நிச்சயம் மீட்பு உண்டு.
 
யோவான் 3:18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான் 
 
நம்பி வந்தவனுக்கு நிச்சயம் ஆக்கினை இல்லை! அனால் ஏனோ அனேக மக்கள் அந்த அழைப்பின் அவாசரத்தை உணராமல் அதை அசட்டை செய்துகொண்டு வாழ்கின்றனர். நாம் தங்கியிருக்கு கட்டிடத்தில் "பாம்" இருக்கிறது என்று ஒரு புரளி  உண்டானால் எவ்வளவு வேகமாக அங்கிருந்து ஓட நினைப்போமோ அதே போல் வேகத்தில் இயேசுவை நோக்கி ஓடவேண்டும் கூடவே நமது குழந்தை குட்டிகளையும்  இழுத்துக்கொண்டு ஓடவேண்டும் அப்பொழுதுதான் தப்பிக்க முடியும்!   
 
நமது தலையில் விழுபோகும்  கல்லை யாரோ தாங்கி தடுத்து நிருத்தியதுபோல், நம்மேல் இரக்கமுள்ள தேவன் எரியப்போகும் உலகை சில காலம்  தடுத்து நிறுத்தி வைத்துகொண்டு இருக்கிறார் என்பதை அறியவேண்டும்! எனவே எவ்வளவு சீக்கிரம் இயேசுவின் பாதுகாப்பு கரங்களுக்குள் வரமுடியுமோ அவ்வளவு வேகமாக  செயல்பட வேண்டும் இல்லையேல் உள்ளே மாட்டுவது நிச்சயம்
 
மீட்பின் இந்த முதல் திட்டத்தின்கீழ் ஒருவர் உலகை விட்டு வெளியில் வந்தால் அவர் மிக சுலபமாக தப்பித்துவிடுவதொடு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து என்னும் மிகுந்த  அன்பும் இரக்கமும் உள்ள  தேவ குமாரனின் பாதுகாவலில் நித்தியத்துக்கும் வாழமுடியும்.
 
மத்தேயு 11:28. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

என்று   ஆண்டவராகிய இயேசு ஒவ்வொருவரையும்
கூவி அழைக்கிறார். நடக்க போகும் விபரீதத்தை அறிந்த அவர் உங்களுக்காக பரிதபித்து அழைக்கும் இந்த வார்த்தை உங்கள் காதுகளில் நிச்சயம் எதிரொலிக்கும். இதுவே தேவனின் முதல் மீட்பின் திட்டம்.  
 
இந்த இலகுவான முதல் திட்டத்தை நழுவவிட்டவர்கள் எல்லோருமே மிகுந்த வேதனையை சந்திக்க வேண்டியதாய் இருக்கிறது!  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

4. இயேசுகிறிஸ்துவின் 1000 வருட பூலோக அரசாட்சியின் நோக்கம்தான் என்ன?யார் அதில் பிரஜைகள்? அதில் மரணம் உண்டா? இரட்சிப்பு உண்டா?
 
மீட்பின்  திட்டம்  - 2 - காயம்பட்டு தப்பித்தோருக்கு டிரீட்மென்ட்
 
தேவனின் முதல் திட்டமாகிய விசுவாசிகள் மற்றும் சபையால் கூவி அழைத்து எச்சரிக்கப்படும்  எச்சரிக்கை செய்தியை கேடடு, எரியப் போகும் கட்டிடமாகிய இந்த உலகினுள் இருந்து  வெளியில் வராமல் டும்பு பிடித்து,  தீபிடித்தபின் உலகமாகிய ட்டிடந்த்துக்குள் மாட்டிகொண்டோரில் இறந்தோர் போக காயம்பட்டோர் மற்றும் 
பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு ற்றும் புரணமைப்புபணிகளை மேற்கொள்வதே இரண்டாம்  மீட்பின்  திட்டம். 
 
கிருபையின் காலத்தின் அழைப்பு முடிந்தபின்னர் சபையானது எடுத்துக்கொள்ளப் படும்.  பின்னர்   
 
மீகா 1:4 மெழுகு அக்கினிக்கு முன்பாக உருகுகிறதுபோலவும், மலைகளிலிருந்து பாயுந் தண்ணீர் தரையைப் பிளக்கிறதுபோலவும், பர்வதங்கள் அவர் கீழே உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.
எசேக்கியேல் 22:21
நான் உங்களைக் கூட்டி, என் கோபமாகிய அக்கினியை உங்கள்மேல் ஊதுவேன்; அதற்குள்ளே நீங்கள் உருகுவீர்கள்.
 
அக்காலத்தில் பூமியில் மீதம்  இருப்போர்கள் கொடிய காலத்துக்குள் கடந்துசெல்ல வேண்டும்.   உபத்திரியம் மற்றும் மகா உபத்திரிய காலங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்ப்படும். சுமார் ஏழு வருடங்கள் தொடரும் இந்த உபத்திரிய காலங்கள மற்றும் தேவ கோப கலசங்கள் ஊற்றப்படும்  காலங்களில் நடக்கும் காரியங்கள் உலகம் தீப்பிடித்து எரியும் காலங்களுக்கு ஒப்பிடலாம்.
 
மத்தேயு 24:29 அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும்
சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.
ஏசாயா 24:17 தேசத்துக் குடிகளே, திகிலும், படுகுழியும், கண்ணியும் உங்களுக்கு நேரிடும்.
ஏசாயா 24:19 தேசம் நொறுங்கவே நொறுங்கும், தேசம் முறியவே முறியும், தேசம் அசையவே அசையும்.
 
அந்திகிறிஸ்த்து என்னும் கொடூரன் கையில் உலகம் ஒப்புகொடுக்கபட்டு உலகில் மீதம் உள்ளவர்கள் அனைவரும் பிசாசின் போதனைகளை  கடைபிடிக்க கட்டாயப் படுத்தபடுவர்.  இந்த காலகட்டங்களில் பரிசுத்தத்தை கடைபிடித்து ஒருவர் மீளுவது என்பது  மிக கடினமான காரியம். அதன்பின் தேவனின் கோப கலசங்கள் எல்லாம் பூமியில் ஊற்றப்படும். 
 
எசேக்கியேல் 5:12 உன்னிலே மூன்றில் ஒரு பங்கு கொள்ளைநோயால் சாவார்கள், பஞ்சத்தாலும் உன் நடுவிலே மடிந்துபோவார்கள்; மூன்றில் ஒரு பங்கு உன்னைச் சுற்றிலும் இருக்கிற பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள்; மூன்றில் ஒரு பங்கை நான் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.
 
வெளி 9:௧௮ அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில் மூன்றிலொருபங்கு கொல்லப்பட்டார்கள்.

ஏசாயா 24:13
ஒலிவமரத்தை உலுக்கும்போதும், திராட்சப்பழங்களை அறுத்துத் தீரும்போதும், பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீந்திருப்பதுபோல தேசத்துக்குள்ளும் இந்த ஜனங்களின் நடுவிலும் கொஞ்சம் மீந்திருக்கும்
 
 
சகரியா 13:8 தேசமெங்கும் சம்பவிக்கும் காரியம் என்னவென்றால், அதில் இருக்கிற இரண்டு பங்கு மனுஷர் சங்கரிக்கப்பட்டு மாண்டுபோவார்கள்; மூன்றாம் பங்கோ அதில் மீதியாயிருக்கும்.
 
இறுதியில் மீதம் இருக்கும் ஜனங்கள் ஆயிரம்வருட அரசாட்சியில் ஆளப்படும் பிரஜைகளாக இருப்பார்கள்    
 
வெளி 20:4  இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.
 
என்ற வசனப்படி, 

யிரம் வருட அரசாட்சியில்  கிறிஸ்த்துவுடனே  அரசாளுபவர்கள் 
 
1. தேவனுடைய வசனத்தினிமித்தம் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்கள்.  
2. இலக்கம் 666 என்னும் மிருகத்தின் முத்திரையை/ சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்கள்.  
 
ஆளப்படும் மக்கள்:
 
உபத்திரியம்  மற்றும் மகா உபத்திரிய காலத்தை கடந்து  வந்த மக்கள் அதாவது அக்கினியில் இருந்து பிடுங்கப்பட்ட கொள்ளி போன்றவர்கள். அல்லது ஒலிவ மரத்தை உலுக்கிய பின்னர் மீதம் இருக்கும் காய்கள் போன்றவர்கள். 
 
இக்காலங்களில் பிசாசு கட்டப்பட்ட நிலையில் இருந்தாலும் பிசாசினால் ஏற்கெனவே  பீடிக்கப்பட்டவர்களுக்கு இங்கு நியாயக் கற்றுத்தரப்படும்.  இக்காலகட்டங்களில் பிறப்பு மற்றும்  மரணம் உண்டு மற்றும் இவர்களில் பாவிகள் இருக்கத்தான் செய்வார்கள் என்று வேதம் சொல்கிறது
 
ஏசாயா 65:௨௦ அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான்; நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.
ஏசாயா 66:7 பிரசவவேதனைப்படுமுன் பெற்றாள், கர்ப்பவேதனை வருமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள்
 
இயேசுவின் ஆயிரம்வருட அரசாட்சியில் மிகுந்த சமாதனம் இருக்கும். பாவிகள் அங்கு இருந்தாலும் அவர்களை பாவம் செய்யவைக்க பிசாசு இருக்காது. நீதியை கற்றுக்கொள்ள அவர்களுக்கு  வாய்ப்புகள் வழஙகப்படும்.   
 
ஏசாயா 26:9  உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.
ஏசாயா 29:24 வழுவிப்போகிற மனதை உடையவர்கள் புத்திமான்களாகி, முறுமுறுக்கிறவர்கள் உபதேசம் கற்றுக்கொள்ளுவார்கள்.
 
ஒரு சிறு உதாரணமாக: வலைத்தளத்தில் மூலம் பரவிய கொடிய வைரஸ் ஓன்று
அனேக கணினியை கெடுத்துவிட்டது என்று வைத்துகொண்டால் அந்த வைரசானது மேலும் பலருக்கு பரவாமல் தடை செய்யப்படும். 
(அதுவே சாத்தான் கட்டப்படுதல் அடுத்து,  ஏற்கெனவே வைரசால் பாதிக்கப்பட்ட கணினியை சீர் செய்யும் பணி நடைபெறும். அதில் சில தேறும் சில தேறாது. அது எந்த அளவு உள்ளே பாதிப்படைந்திருக்கிறது என்பதற்கு ஏற்ப, அதை சரி செய்யவோ அல்லது  சரிசெய்ய முடியாத நிலையிலோ இருக்கும். 
 
அதுபோல் பிசாசினால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட சில துன்மார்க்கர்கள் என்னதான் நியாயத்தை சொன்னாலும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்வது இல்லை
 
ஏசாயா 26:௧௦ துன்மார்க்கனுக்குத் தயை செய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்.
 
உப செய்தி:  
இதற்கு முன்னரோ பின்னரோ மரணமடைந்த மற்றவர்கள் எவரும் இந்த ஆயிரம் வருட அரசாட்சியின்போது உயிர்பிக்கப்படவில்லை.
வெளி 20:5மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை.  அவர்கள்எல்லோரும் நேரடியாக தேவனின் வெள்ளைசிங்காசன  நியாயதீர்ப்புக்குதான் எழுந்து வருவார்கள்.   
 
வெளி 20: 11. பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.12 மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்
 
இவர்கள் அனைவருக்கும் அவரவர் கிரியையின் அடிப்படையில் நியாயதீர்ப்பு வழங்கப்படும்:
 
12.   அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

அசுத்த  ஆவிகளால்  முழுமையாக   பாதிக்கபாட்டு  அக்கினிக்கு காத்திருக்கும் இந்த
உலகில், தேவனால் நிறைவேற்றப்பட்டு வரும் மீட்பின் திட்டங்கள்   இரண்டு திட்டங்களை பற்றி மேலே பார்த்துவிட்டோம் 
 
1. எச்சரிக்கை விடுத்து  ஜனங்களை வெளியில் கொண்டுவருவது  -   சுவிசேஷம் சொல்லி ஜனங்களை இயேசுவை நோக்கி திருப்புதல். 
 
2. தீப்பிடித்த கட்டிடத்துக்குள் மாட்டி மீட்கபட்டவருக்கு மறுவாழ்வு = ஆயிரம் வருஷ அரசாட்சி  
  
இப்பொழுது தேவனின் மூன்றாவது திட்டம் பற்றி இங்கு பார்க்க போகிறோம். இது பல கிறிஸ்த்தவ சகோதரர்கள் நம்ப முடியாததாக இருக்கலாம்  ஆனால் இந்த திட்டமும் தேவனிடம் இருக்கிறது. மேலும் இத்திட்டம் நிறைவேற வேண்டும் என்பதே தேவனின் பிரதான
விருப்பமும் கூட!
   
இந்த திட்டத்தை ஓரளவு  அறிந்த சில சகோதரர்கள் இதைப்பற்றி வேறுவிதமாக போதித்து முதல் திட்டத்தின் மூலம் மீட்கப்படும் ஜனங்களை வழிகெடுத்து வருகின்றனர். ஆனால தேவனின் இந்த திட்டம் நிறைவேறுவதும் நிறைவேராததும் நம் போன்ற  மனிதர்களின் கையில் இருக்கிறது.
 
(மனிதர்களின் நடவடிக்கைகளுக்கு ஏற்றாற்போல் தேவன் தன் சித்தத்தை மாற்றுவாரா? என்பதற்கு  ஆம்  என்றே  பதில்  தரமுடியும்  அதற்க்கான விளக்கத்தை கீழ்கண்ட சுட்டியை சொடுக்கி வாசிக்கவும்  
 
 
மீட்பின் மூன்றாவது  திட்டம்!
 
ஒரு கட்டிடம் தீப்பிடிக்கும் நிலைமையிலோ  அல்லது பாம் வைக்கப்பட்டு தகர்ந்து போகும் தருவாயில் இருந்தாலோ முதலில் அந்த காரியம் நடந்துவிடாதபடி தடுத்து அந்த கட்டிடத்தை எந்த சேதமும் இல்லாமல் அப்படியே பாதுகாக்க தேவையான அடிப்படை நடவடிக்கைகள் நிச்சயம் மேற்கொள்ளப்படும்.
 
அதுபோல் 
 
இந்த உலகம் முழுவதும் அழிவினை சந்தித்துவிடாமல் தடுப்பதற்கு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கையை எடுப்பதற்கும், இந்த உலகத்தை அப்படியே முழுமையாக பாதுகாக்கவும் எவர்  ஒருவரும்   கெட்டு சாத்தானின் இடமாகிய நித்திய அக்கினிக்கு போகாமல்  பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளையும் தேவன் மற்றொரு புறம்   நிறைவேற்றி வருகிறார்.
 
இந்த திட்டத்தை பற்றிய தேவனின் மன வாஞ்சையையே  கீழ்கண்ட வசனங்கள் தெரிவிக்கின்றன! 
 
மத்தேயு 18:14 இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.
 
II பேதுரு 3:9  ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
   
 I தீமோத்தேயு 2:4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்
 
"ஒருவரும் கெட்டுபோக கூடாது" என்பதுதான் தேவனின் பிரதான விருப்பமாக இருக்கும் பட்சத்தில் அதற்க்கான நடவடிக்கைகளை தேவன் நிச்சயம் எடுத்தே தீருவார். அதுவே இந்த மூன்றாவது திட்டம்.
 
இந்த மூன்றாவது திட்டத்தின் அடிப்படையில்
 
ஆதாம் என்னும் ஒரு மனிதன் தேவனின் கட்டளையை மீறி செயல்பட்டதால் மொத்த மனுக்குலமும் சாத்தானின் அடிமைகளாகி போனது. பழைய ஏற்பாட்டு காலத்தில் பல  பரிசுத்த  மனிதர்கள் வாழ்ந்தும்.  ஆவியாக இருந்து செயல்படும் சாத்தனை இன்றுவரை எந்த மனிதனும்  ஜெயிக்கமுடியவில்லை.  அவனை ஜெயிக்கவே பரிசுத்த ஆவி என்னும் வல்லமை இயேசுவின் மரணத்தின் மூலம் அருளப்பட்டது அந்த ஆவியானவர் பெலத்துடன்   யாராவது ஒரே ஒரு மனிதன் தேவனின் வார்த்தைகளின்படி சரியாக வாழ்ந்து சாத்தானை ஜெயம்கொண்டு விட்டால் அவனுக்கு மனிதனின் மேலுள்ள அதிகாரம் பிடுங்கப்பட்டு  மொத்த உலகமும் மீட்கப்படும்.  அவ்வாறு ஜெயிப்பவனே தேவன் குறிப்பிடும் "ஜெயம்கொள்கிறவன்".
 
மொத்த உலகமும் மீட்கப்பட்டுவிடும் என்றால் சிலர் கருதுவதுபோல்
எல்லோரும்  எந்த தண்டனையும் இன்றி தப்பிவிடலாம் என்று பொருள் அல்ல!
 
சாத்தானின் பிடியில் இருந்து இந்த உலகம் பிடுங்கப்படும். சாத்தனுடன் சேர்ந்து நித்திய அக்கினிக்கு எந்த மனுஷனும் போவதில்லை. மொத்த நியாயதீர்ப்பும் தேவனின் கரத்தில் ஒப்புகொடுக்கப்படும் அவர் அவர்களை
 
வெளி 20:13  மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்
 
மத்தேயு 16:27   அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.

தேவன் மிகுந்த இரக்கம் உள்ளவர் எனவே அவர் நிச்சயம் ஓரளவு
தண்டித்து ஏற்றுக் கொள்வார்   
 
ஆனால் இக்காரியம் நடந்து ஒருவன் சாத்தானை ஜெயிப்பதற்கு முதலில் இயேசுவை ஏற்றுக்கொண்டு தனது பாவங்கள் நீங்க கழுவப்பட வேண்டும் பரிசுத்த ஆவி என்னும் கூடுதல் வல்லமையை வாஞ்சித்து பெற்றுக்கொள்ள வேண்டும் இயேசுவின் போதனை மற்றும் பிரதான கர்ப்பனைகளின்படி வாழ வேண்டும் தேவனாகிய கர்த்தரிடம் முழு மனதோடு அன்புசெலுத்தி அவரின் கற்பனைகளுக்கு கீழ்படிய வேண்டும் தேவனின் வழிநடத்துதலில் சாத்தானின் சோதனைகளை மேற்கொண்டு இயேசுவைப்போல் சாத்தானை ஜெயிக்கவேண்டும்! அவ்வாறு ஜெயித்தவனுக்கு இயேசுவுடன் கூட சிங்காசனத்தில் அமரும் பாக்கியம் அருளப்படும்!
 
வெளி 3:21 நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.

இது சுலபமான காரியம் அல்ல. சாத்தானின் தன்  தந்திரத்தால் ஜனங்களை ஏமாற்றுவதில் வல்லவன். சாத்தானின் இறுதி  முடிவு  இத்திட்டத்தில் இருப்பதால் இது  அவனுக்கு  வாழ்வா?
சாவா?  என்ற  போராட்டம் எனவே அவ்வளவு சீக்கிரம் அவன் இத்திடாம் நிறைவேற விடமாட்டான்.  எனவே  ஏற்கெனவே நாம் பார்த்தபடி தற்போது  மனித கூட்டத்தை தன் தந்திரத்தால்   துண்டு துண்டாக பிரித்து வைத்துள்ளான்  
 
இறைவனை நம்பாதவர்கள்/ விக்ரகங்களை வழிபடுபவர்கள்/ நபி காட்டிய வழி நடப்பவர்கள்/ மாதாவை  வழிபடுபவர்கள் என்று பிரித்து  இயேசுவின்  மீட்பின் ரகசியத்தை   அவர்களுக்கு  மறைத்து  வைத்துள்ளான்  
 
அப்படியே இயேசுவை ஏற்றுக்கொண்டாலும்   பரிசுத்தத்  ஆவியை நம்பாதவர்கள் பரிசுத்தத் ஆவியை பெற்றும் இயேசுவின் போதனைபடி வாழவேண்டியத் தேவையில்லை என்று வாழபவர்கள்  இயேசுவின் வார்த்தைகளை கைகொள்ளலாம் அனால் கர்த்தரின் பழய ஏற்பாட்டு நிச்சயம் நமக்கு கைகொள்ள தேவையில்லை என்று பல்வேறு வழிகளில் ஜனங்களை  திசைதிருப்பி உண்மையை அறிந்துவிடாதபடி தடுத்து வருகிறார்ன்    
 
சாத்தானின் இந்த தந்திரங்களை எல்லாம் கடந்து அவனை ஜெயிப்பது  என்பது  சுலபமான காரியம்அல்ல.
 
ஆகினும் தேவபெலத்துடன் முழு  கீழ்படிதலோடு ஒருவர்  முயன்றால் இக்காரியம் நிச்சயம் நிறைவேறலாம்!
 
இதுவே மீட்பின் மூன்றாவது திட்டம்!
 
இந்த திட்டத்தை அநேகர் அறியும்படி  தெரிவித்தாலேயே சாத்தானுக்கு பற்றிக்கொண்டு வரும் என்பது எனக்கு நன்றாக  தெரியும் ஆகினும் சொல்ல வேண்டியது நமது கடமை எனவே சொல்கிறேன்  
 
ஞானம் உள்ளவவர்கள்  சிந்திக்க கடவர்கள்!
 


-- Edited by SUNDAR on Thursday 2nd of September 2010 08:22:53 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard