நான் ஆண்டவரை அறிந்துகொள்வதற்குமுன்னர் ஓரளவு நேர்மையாக நடந்தாலும் வேத வார்த்தைகளின் அடிப்படையில் நான் ஒரு பெரிய குற்றவாளியாகவே ருந்தேன். ஆண்டவர் என்னை தெரிந்துகொண்டபோது "நீ வேத புத்தகத்தை தேவனின் வார்த்தை என்று நம்பி என்னை ஏற்றுக்கொண்டால், அதில் உள்ள வார்த்தைகளை கட்டாயம் கைகொண்டு வாழவேண்டு" என்ற நிபந்தனையுடனேயே என்னை அபிஷேகித்து அனேக உண்மைகளை தெரியப்படுத்தினார்.
எனவே ஆண்டவரை ஏற்றுக்கொண்ட சில மாதங்களில் நான் ஒவ்வொரு தீய காரியங்களை கைவிட ஆரம்பித்தேன். அதில் முதலில் நான் எடுத்துகொண்டது:
பொய் சொல்வது தவறு என்று வேதம் பல இடங்களில் போதித்தாலும் பலர் அதை கண்டுகொள்வது இல்லை. ஆகினும்நான் அதை முதலில் எடுத்துக்கொண்ட காரணம், பொய் என்பது நமது வாழ்வில் சாதாரணமாக கலந்துவிட்டஓன்று எனவே அதை விடுவது எனக்கு மிகபெரிய சவாலாகவும் அவசியமாகவும் தென்பட்டது.
என்று போதித்துள்ளார். அதாவது இருப்பதை இருக்கிறது என்றும் இல்லாததை இல்லை என்றும் சொல்வதற்கு மேல் எந்த காரியம் செய்தாலும் அது தீமையினால் உண்டானது என்று தெளிவாக சொல்கிறார்.
இந்த கருத்து:
பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்த்த
நன்மை பயக்கும் எனின்
என்ற வள்ளுவரின் கருத்துக்கு முற்றிலும் எதிரானது. வள்ளுவர் சொல்கிறார் "ஒரு நன்மை தரும் என்று ஒருவர் கருதினால் அங்கு பொய் என்பது உண்மையாகவே கருதப்படும்" என்று. அனால் நமது ஆண்டவரோ எந்த சூழ்நிலை ஆனாலும் உள்ளதை உள்ளது என்று சொல் இல்லாததை இல்லை என்று சொல் அதற்க்கு மிஞ்சியது தீமையினால் (சாத்தானால்) உண்டானது என்று சாத்தானால் உண்டாகும் செயலுக்கு நாம் கீழ்படியலாமா? கூடாதே எனவே இனி எச்சூழ்நிலையிலும் பொய் சொல்லகூடாது என்று முடிவெடுத்தேன்.
பல முறை முடியாமல் தவறினேன். நீண்டநாள் வேலையில்லாமல் இருந்து, சென்னைக்கு வந்து மிகவும் கஷ்டப்பட்டு கிடைத்த வேலை ஸ்தலத்தில் பல இக்கட்டுக்களுக்கு நெருக்கடிகளுக்கு ஆளாளேன். சிறு கை குழந்தை வேறு வேலையை விட்டால் வாடகைகூட கொடுக்க முடியாத நிலை.
எனது டைரக்டர் எனது அருகிலேயே அமர்ந்து கொண்டு எதாவது போன் வந்தால் "நான் இல்லை என்று சொல்லிவிடுங்கள்" என்று சிம்பிளாக சொல்லிவிடுவார்கள். சில நாட்கள் மிகவும் கஷ்டப்பட்டு பொய் சொன்னேன். அடுத்து சில நாட்களில் "நான் இதுபோல் பொய் சொல்லமாட்டேன் எனக்கு மிகவும் மன வேதனையாக இருக்கிறது என்னை மன்னித்து விடுங்கள்" என்று சொல்லி விட்டேன். அதன்பின் அவர்கள் என்னை அவ்வாறு சொல்லும்படி கட்டாயப்படுத்தவில்லை.
ஒருநாள் கடன்காரர் ஒருவர் பணத்துக்காக போனபண்ண ரிசீவரை அவர்களே கையில் எடுத்துவிட்டார்கள். குரலை கேட்டதும் கடன்காரன் என்பதை அறிந்து, ரிசீவரை மூடிக்கொண்டு என்னிடம் கொடுத்து "நான் இல்லை" என்று சொல்லி விடுங்கள். என்று சொல்லிவிடார்கள். அந்நேரத்திலும் "நான் அவ்வாறு சொல்ல முடியாது" என்று அவர்களிடம் விவாதிக்க. அவர்களுக்கு கடும் கோபமாகி வேறு ஒருவருக்கு போனை கொடுத்து அவ்வாறு சொல்ல சொல்லிவிட்டு. நேரே MD இடம் சென்று புகார் கொடுத்து விட்டார்கள். அவர் என்னை கூப்பிட்டு "YOU ARE JUST LIKE A ANSWERING MACHINE TELL WHAT WE SAY" என்று கத்தினார் நான் எதுவும் பதில் சொல்லாமல் வந்துவிட்டேன்.
அதன்பின் அந்த டைரக்டர் என்னை மிகவும் பாராட்டினார்களே தவிர என்மேல் எதுவும் கோபம் கொள்ளவில்லை. அடுத்ததாக ஒருநாள் காசோலை வாங்க வந்த ஒருவர் வரவேற்ப்பு அறையில் அமர்ந்திருக்க MD என்னைஅழைத்து ஒரு செக்கை கையில் கொடுத்து இதை கொண்டு வந்திருப்பவரிடம் கொடுங்கள் அவர் செக்கை பார்த்துவிட்டு, நான் உங்கள் MD இடம் பேசவேண்டும் என்று சொன்னால் MD இல்லை என்று சொல்லிவிடுங்கள் என்று கையில் கொடுத்தார் ஏனெனில் செக் பின் தேதியிடபட்டிருந்தது (POST DATED)
மிக இக்கட்டான நிலையில் மாட்டிய நான், ஒரே ஒரு சிரு ஜெபம் செய்தேன் "ஆண்டவரே எனக்கு இந்த போய் சொல்ல சிறிதும் விருப்பம் இல்லை அதே நேரத்தில் இவரை எதிர்த்து பேசவும் திராணி இல்லை என்னை காப்பாற்றுங்கள்" என்று ஜெபத்தோடு வந்து அவரிடம் காசோலையை கொடுத்தேன் அவர் எதையும் கவனிக்காமல் காசோலையை வாங்கி சென்றுவிட்டார்
ஆம்! நாம் பெலகீனமானவர்களே! நமக்குமேல் பல அதிகாரங்கள் இந்த உலகில் இருக்கிறது. ஆனால் ஒருகாரியத்தை செய்யகூடாது என்று நாம் மனதில் எடுக்கும் தீர்மானத்தின் அடிப்படயிலே நமக்கு ஆண்டவர் உதவி செய்கிறார். எந்த ஒரு தீர்மானத்தையும் ஆண்டவரின் துணையோடு நிறைவேற்றுவது எனபது
நமக்கு நிச்சயம் வெற்றி தரும் என்பதை அறிந்துகொண்டேன்
இறுதியாக என்னை பொய் சொல்ல வைத்தே ஆகவேண்டும் என்றொரு மிகப் பெரிய சோதனையை சந்திக்க நேர்ந்தது.
அதாவது நான் அந்நாட்களில் கோபக்காரனாக இருந்தேன். ஒருநாள் எங்கள் பக்கத்து வீட்டு பெண்மணி (கொஞ்சம் அகங்காரம் நிறைந்தது ஏனெனில் அது பாண்டிச்சேரி ராஜா பரம்பரையாம் அதற்க்கு எனக்கும் கொஞ்சமும் பிடிக்காது) கை கழுவுகிறேன் என்ற சாக்கில் எங்கள் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த என்மேல் சிறிது தண்ணீரை ஊற்றிவிட்டது. அதனால் கோபமடைந்த நான் ஒரு ஜக் நிறைய தண்ணீர் எடுத்து அதன் வீட்டுக்குள் ஊற்றிவிட்டேன்.
அவர்களது கணவன் வந்ததும் "இவன் என்னை அடித்துவிட்டான் என்று பொய் சொல்லி போலீசில் புகார் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தி அனுப்பி, அவரும் சென்று புகார் கொடுத்துவிட்டார். இரவு பத்து மணிக்கு போலிஸ் என்னை பிடித்து சிறிது நேரத்தில் வீட்டு ஓணர் வந்து என்னை ஜாமீனில் எடுத்துவிட்டார்.
இறுதியில் இந்த புகார் கோர்ட் கேஸ் ஆகிவிட்டது. அப்பொழுது எனக்கு மிகவும் வேண்டிய விஷயம்தெரிந்த ஒருவரைஅணுக அவர் "நீங்கள் எக்மோர் கோர்ட்டுக்கு போகவேண்டும், அங்கு உங்கள் பெயரை சொல்லி கூப்பிடுவார்கள கூப்பிட்டு "நீங்கள் இந்த பெண்ணை அடித்தீர்களா? என்று கேட்பார்கள். "ஆம்" என்று சொல்லி விட்டால் 300௦௦/- ரூபாய் அபராதம் போட்டு அனுப்பிவிடுவார்கள். "இல்லை" என்று சொன்னால், அது பெரிய கேஸாகி நீண்டநாள் வாய்தாவுக்கு போகவேண்டும் அதனால் உங்கள் வேலை மற்றும் எல்லாமே பாதிக்கப்படும். எனவே அவர்கள் கேட்கும்போது "ஆம் அடித்தேன்" என்று மட்டும் ஒரு பொய் சொல்லிவிடுங்கள் என்று அன்போடு கேடடு கொண்டார். என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டுக்கு கடந்துபோனேன்..........
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நீண்ட யோசனைக்கு பிறகு, என்ன வந்தாலும் பொய் சொல்ல கூடாது என்று முடிவெடுத்தேன். மறுநாள் அவர்களிடம் சென்று "அந்த பெண்ணை அடித்தேன் என்று நான் பொய் சொல்லமாட்டேன்" அதனால் என்ன விளைவுகள் வந்தாலும் நான் எதிர்கொள்ள தயார் என்று சொல்லிவிட்டேன். பலர் சேர்ந்து என்னை வற்ப்புறுத்தி 'ஒரே ஒரு பொய் தானே சொல்லிவிடுங்கள் இல்லைஎனில் அது நீண்ட நாட்கள் எல்லோருக்கும் பிரச்சனையாக இருக்கும்' என்று பயம் காட்டினர். ஆனால் நான் மறுத்துவிட்டேன், என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அதன் பிறகு யாரும் என்னைவந்து அழைக்கவும் இல்லை ஒரு நாள்கூட நான் கோர்ட்டுக்கு போகவும் இல்லை அந்த கேசை எப்படியோ அவர்கள் முடித்து விட்டனர். என்னிடம் ரூ 900௦௦/- பணம் மட்டும் வாங்கி சென்றனர்
நீண்ட நாட்களாக எனக்கு அங்கு என்ன நடந்தது இவர்கள் எப்படி இந்த பிரச்சனையை சமாளித்தார்கள் என்பது புரியாத புதிராக இருந்தது. அவர்களிடம் அதுபற்றி விசாரித்ததற்கு நான் வேறு வழியில் சமாளித்துவிட்டோம் என்று மட்டும் பதில் தந்தனர்.
இந்த சம்பவங்கள் நடந்து சில வருடங்களுக்கு பிறகு நான் வேலை பார்த்த கம்பனியில், பல வருடங்களாக நடந்து கொண்டிருந்த ஒரு கோர்ட் கேசை பார்த்து கொண்டிருந்த ஒருவர் வேலையே ராஜினாமா செய்து போய்விடவே, எனக்கும் எனது வேலைக்கும் சம்பந்தமே இல்லாத அந்த கேசுக்கு எக்மோர் கோர்ட்டில் போய் ஆஜராகி நான் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது.
அனேக நாட்கள் வாய்தா வாய்தா என்று அலைந்து அந்த பெரிய கூட்டத்தில் ஜட்ஜ் என்னை எப்பொழுது கூப்பிடுவார் என்று எட்டிஎட்டி பார்த்து மிகவும் அலுத்துபோய் விட்டேன். சரி ஏதோ காரணத்துக்காகதான் ஆண்டவர் நம்மை இங்கு அழைத்து வந்திருக்கிறார் என்று எண்ணி, கோர்ட்டிலே சுற்றி அங்குவரும் எல்லோருக்காகவும் ஜெபித்து கொண்டிருந்தேன். ஆகினும் நீண்ட நாளாக அந்த பிரச்சனை தீராத காரணத்தால் மிகுந்த மனமடிவாகி "ஆண்டவரே ஏன் என்னை இந்த கோர்ட்டில் எந்த சம்பந்தமும் இல்லாமல் அழைத்து வந்து இவ்வளவு வேதனை படுத்துகிறீர்"
என்று விசாரித்த போது.
"இதற்க்கு முன்னே நீ பொய் சொல்லமாட்டேன் என்று நிராகரித்த அந்த பழைய விஷயத்துக்கு இந்த கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்ல வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் அந்த காரியத்தை பணம் கொடுத்து வேறு ஒருவரை வைத்து அவர்கள் எல்லோரும் சேர்ந்து சமாளித்துவிட்டனர். அதற்க்கு ஈடாக சம்பந்தமே இல்லாத ஒரு காரியத்துக்கு இப்பொழுது நீ இங்கு வரவேண்டிய சூழ்நிலை உண்டானது" என்று சொன்னார்.
உடனே நான் ஆண்டவரிடம் மன்றாடி "அவர்கள் என்ன செய்தார்கள் என்று எனக்கு சரியாக தெரியவில்லை ஆண்டவரே நான் அந்த நேரத்தில் சென்னை பட்டணத்துக்கு புதிது எனவே எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று ஜெபித்து மன்னிப்பு கேட்டேன். ஆச்சர்யமாக அடுத்த வாய்தாவுக்கு வந்த எதிர் தரப்புகாரர் அவர் தரவேண்டிய பணத்துக்கு ஒரு DD எடுத்து கொடுத்து கேசை முடித்து விட்டார்.
இவ்விஷயத்தில் நான் பல பாடங்களை படித்துகொண்டேன்:
1. சோதனை என்பது வெறும் பயம் காட்டுதல் மட்டும்தான். தனது நிலையில் உறுதியாக இருப்பவர்களை எந்த சோதனையும் ஒன்றும் பண்ண முடியாது. தனது ஆட்கள் நான்குபேரை வைத்து பூச்சை பிடித்து காண்பிபது போல பயம் காட்டுவது தான் பிசாசின் வேலை. "அப்படியாகிவிடுமோ இப்படியாகிவிடுமோ" என்று சிந்திக்க வைத்து பயம்காட்டி தவறை செய்யவப்பதுதான் அதனுடைய டெக்னிக். நாம் துணிந்த செயல்படும்போது பலூன் போல பூதாகரமாக பெரிதாகும் பிரச்சனை புஸ என்று காற்றுபோவதுபோல ஒன்றுமில்லாததாகிவிடும்
2. நமக்கு முன்னேவரும் பிரச்சனைகளில் இருந்து நாம் எங்கும் தப்பித்து போகவே முடியாது. எங்கு போனாலும் அது நமக்காக காத்திருக்கும். ஓன்று அதில் ஜெயிக்க வேண்டும் அல்லது தோற்றே ஆக வேண்டும். மற்றபடி அந்த பிரச்சனையை விட்டு விலகி ஓடினாலோ அல்லது தவிர்த்தாலோ அது வேறுஒரு ரூபத்தில் வருமேயன்றி நம்மை விட்டு போகாது.
3. தவறுக்கான தண்டனை எங்குசென்றாலும் நம்மை விட்டுவிடுவது இல்லை. இந்த உலகத்தின் கடைசிக்கு சென்றாலும் அல்லது எங்குபோய் ஒழிந்து கொண்டாலும் அது நிச்சயம் நம்மை தேடி வந்துவிடும்.
4. உலகில் நமக்கு நடக்கும் எந்த ஒரு தீமையான மற்றும் மன சங்கடத்தை ஏற்ப்படுத்தும் நிகழ்வுகளும், நம்முடைய தவறுதலோ அல்லது பாவமோ இல்லாமல் நமக்கு வருவதே இல்லை. அதற்க்கான காரணத்தை அமர்ந்து ஆண்டவரிடம் விசாரித்தல் நிச்சயம் அறிந்துகொள்ளலாம்
எனவே அன்பானவர்களே! சாத்தானின் பயம்காட்டுதலுக்கு அஞ்சாமல் பாவத்தை விட்டுவிட துணிந்து உறுதியான முடிவெடுங்கள் ஆண்டவருடைய துணையுடன் ஜெயம்கொள்ளுங்கள்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தாங்கள் சொல்லும் காரியம் உண்மையாகவே ஆச்சர்யமாகவே உள்ளது.
சுந்தர் எழுதியது.....\\ "இதற்க்கு முன்னே நீ பொய் சொல்லமாட்டேன் என்று நிராகரித்த அந்த பழைய விஷயத்துக்கு இந்த கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்ல வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் அந்த காரியத்தை பணம் கொடுத்து வேறு ஒருவரை வைத்து அவர்கள் எல்லோரும் சேர்ந்து சமாளித்துவிட்டனர். அதற்க்கு ஈடாக சம்பந்தமே இல்லாத ஒரு காரியத்துக்கு இப்பொழுது நீ இங்கு வரவேண்டிய சூழ்நிலை உண்டானது" என்று சொன்னார். .......\\
உண்மை,,! நீதிமானுக்கு இந்த பூமியிலே சரிகட்டப்டுமே..!
எதாகிலும் ஒருவிதத்தில் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ அது சரிகட்டபடுகிறது.
நம்முடைய தேவன் மகா நீதிபரர் ஆச்சே...!
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
உண்மையின் பாதையில் சோதனைகள் என்பது எல்லாராலும் ஏற்றுகொள்ளபடதக்கதுதான். எனக்கும் இப்படிப்பட்ட சம்பவம் நடந்து இருக்கிறது.
ஒரு சில வருடங்களுக்கு முன்பு நான் ஒரு export இல் வேலை செய்து கொண்டுஇருந்தேன். என்னுடைய ஓனர் இந்து மதத்தை சார்ந்தவர். வாரம்தோறும் வெள்ளிகிழமைகளில் பூஜை போடுவார்கள் நான் அதில் கலந்து கொள்ளமாட்டேன்.
இதினால் என்னோடு இருபவர்கள் என்மீது கோவம்கொள்வார்கள் நான் இதற்காகவே அந்நேரங்களில் வேறு எங்காவது சென்று விடுவது வழக்கம். இந்த ஒருகாரியத்தை தவிர வேற எந்த காரியத்திலும் என்மீது எந்த குற்றமும் இல்லாதிருந்தது.
சண்டே ஆலயதிருக்கு போகவேண்டும் என்பதால் நான் வேளைக்கு செல்வதில்லை இதினால் என்னோடு இருபவர்களுக்கும், என்னுடைய ஓனருக்கும் என்மீது கோவம் இருந்து கொண்டே இருந்தது.
ஒருநாள் என்னை கூப்பிட்டு இப்படியெல்லாம் இருக்க கூடாது. எல்லாரையும் போலதான் இருக்கவேண்டும் அப்படி இருக்க முடியாவிட்டால் நீ நாளையில் இருந்து வேலைக்கு வர வேண்டாம் என்று சற்று கடினாமாக சொல்லிவிட்டார்.
எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை அவருக்கோ என்னை மிகவும் பிடிக்கும் அனால் நான் ஆண்டவர்மிது கொண்டுள்ளா பக்தி வைராக்கியத்தைதான் அவருக்கு பிடிக்கவில்லை.
என்னுடைய குடும்பமோ சற்று ஏழ்மையானது. ஆகவே நான் எப்படி இந்த வேலையை விடுவது என்று எண்ணினேன் அதற்காக என்னுடைய பக்தி வைராக்கியத்தைதையும் என்னால் விடமுடியவில்லை. கடைசியில் என்ன நடந்தாலும் பரவாயில்லை என் தேவனுடைய ஆலயத்திருக்கு செல்வதையும் இந்துக்களுடைய பூஜைகளில் கலந்து கொள்ள கூடாது என்று முடிவெடுத்து வேலையை விட்டேன்.
கொஞ்ச நாட்கள் வேலை இல்லாமல் வீட்டில் தான் இருந்தேன். அந்நாட்களில் எல்லாம் ஜெபித்து கொண்டும் வேதம் வாசித்து கொண்டும் இருந்தேன். இரு சில மாதங்களுக்கு பிறகு எனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தது முன்பு நான் செய்த வேலையை காட்டிலும் எனக்கு சம்பந்தமே இல்லாத வேலை கிடைத்தது.
நான் முன்பு வாங்கி கொண்டிருந்த சம்பளத்தை பார்க்கிலும் இரண்டு மடங்கு அதிகமாகவும் கிறிஸ்தவ அலுவலகமாகவும் கிடைத்தது. என் தேவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். அதருக்கு பின்பாகும் ஏன் வாழ்க்கையில் உண்மைக்கு சோதனை வந்தது.
தொடரும்...............
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )