இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இது யாருடைய ஆளுகைக்கு உட்பட்டது...!


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
இது யாருடைய ஆளுகைக்கு உட்பட்டது...!
Permalink  
 


ஒரு சில போதகர்கள் பிரசங்கம் முடிந்ததும் இன்று பிரசங்கம் எப்படி இருந்தது நன்றாக இருந்தத ? ஜனங்கள் என்ன சொல்லுகிறார்கள்  என்றெல்லாம் சொல்லி இருகிறதை நான் கேட்டு இருக்கிறேன். 

அதுமட்டும் அல்ல தீர்கதரிசனம் சொல்லிவிடுவேன் ஜனங்கள் பயந்து விடுவார்கள் ஆவியில் துள்ளி குதிக்க வைத்து விடுவேன்  என்றெல்லாம் சொல்லி கேட்டு இருக்கிறேன்.

தயவு செய்து நான் குற்றம் சொல்லுகிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம் எனக்கு இந்த காரியத்தில் ஒருசில சந்தேகம் இருக்கிறது அதை தெரிந்து கொள்ளவேண்டும் என்றுதான் இதை பதிவிடுகிறேன்.  

தாங்கள் செய்கிறது சொல்லுகிறது இதெல்லாம் நம்முடைய பெலத்திலா  நடக்கிறது..! அதை நம் இஸ்டத்திற்கு செய்வதற்கு அல்லது ஆவியானவருடைய மகிமையை இவர்கள் தங்களுடேய் ஆளுகைக்குள் வைத்து செயல் படுத்துகிறார்களா..!

தீர்கதரிசன் ஆவிகள் தீர்கதரிசிகளுக்கு  கட்டுப்பட்டு இருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது இருந்தாலும் இப்படி பண்ணி இருப்பேன் அப்படி பண்ணி இருப்பேன் என்று சொல்வதால் எனக்கு சற்று சந்தகம் உள்ளது... 
தெரிந்த தல சகோதர்கள் பதிவிடலாமே....!


__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

I யோவான் 2:27 நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.

என்று வசனம் சொல்வதால், அவரவர் அபிஷேகத்தின் அடிப்படையில் தேவன் கட்டளையிட்டதற்கு ஏற்ப, சில காரியங்களை சொல்லலாம் செய்யலாம் அதில் நாம் தலையிடமுடியாது. ஆகினும் என்னுடைய அனுபவ அடிப்படையில் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்    
 
 Stephen wrote:
///ஒரு சில போதகர்கள் பிரசங்கம் முடிந்ததும் இன்று பிரசங்கம் எப்படி இருந்தது
நன்றாக இருந்தத ? ஜனங்கள் என்ன சொல்லுகிறார்கள்
என்றெல்லாம் சொல்லி இருகிறதை நான் கேட்டு இருக்கிறேன்.///
 
இதில் தவறொன்றும் இருப்பதுபோல் எனக்குதெரியவில்லை. ஆனால் உண்மையில் அவர் ஆவியின் அபிஷேகத்தில் பிரசங்கிக்கவில்லை என்றும் தனது சுய பெலத்தினால் தனது மனித ஞானத்தினால் அந்த போதகத்தை செயாதர் என்பதை அறியமுடியும். நானும் ஏன் சுய முயற்ச்சியால் வேதத்தை புரட்டியெடுத்து பிரசங்கித்த காலங்களில், இதுபோல் கேட்கவில்லை என்றாலும் யாராவது நமது பிரசங்கம் நன்றாக இருந்தது என்று  சொல்ல மாட்டார்களா என்று எதிர் பார்த்திருக்கிறேன். ஆனால் அது நிச்சயம் ஆவியானவர் வார்த்தைகள் அல்ல என்பது எனக்கு தெரியும்

Stephen wrote:
 
///அதுமட்டும் அல்ல தீர்கதரிசனம் சொல்லிவிடுவேன் ஜனங்கள் பயந்து விடுவார்கள் ஆவியில் துள்ளி குதிக்க வைத்து விடுவேன்  என்றெல்லாம் சொல்லி கேட்டு இருக்கிறேன்.///

இந்த வார்த்தைகளின் உண்மை தன்மையை அதாவது அவர் தேவனின் வார்த்தையை  சொல்கிறாரா அல்லது பிதற்றுகிறாரா என்பதை நாம் ஆவியில் நிறைந்து இருந்தால் மட்டுமே அறிய முடியும்.  
 
என்னை ஆண்டவர் அபிஷேகம் செய்தபோது எனக்கு முன்னேயிருந்து பேசிய எனது நண்பர் மிக கடினமான வார்த்தைகளை பேசினார். எனக்குள் இருந்த தேவ ஆவியானவர் நான் ஒரு வார்த்தை சொன்னால்  அவரை  சுட்டு எரித்துவிடுவார் என்பது எனக்கு மிக நன்றாக தெரிந்தது.  ஆனாலும் நான் அவர் முன்னால் அவர் முன்னால் என்னை தாழ்ந்து அழுதேன். "நீங்கள் இப்படி பேசாதீர்கள் நண்பரே, நான் ஒரு வார்த்தை உங்களை சபித்தால் நீங்கள் இந்த இடத்திலேயே சுருண்டு விடுவீர்கள்,தயவு செய்து இங்கிருந்து  போய்விடுங்கள்" என்று சொன்னேன். அந்நேரத்தில்தான் நான் இயேசு அத்திமரத்தை எப்படி ஒரே வார்த்தையால் படுபோக வைத்தார் என்றும் மலையை பெயர்க்கும் விசுவாசம் எது என்பதையும் அறிந்து கொண்டேன். அதெல்லாம் தேவ ஆவியானவர் நமக்குள் வந்தால் மட்டுமே சாத்தியம். (அவர் யாருக்குள்ளும் தொடர்ந்து தங்குவது இல்லை) அதன்பின் அதுபோல் ஒரு விசுவாசத்தை இன்றுவரை அறியவில்ல மற்றபடி  நமது விசுவாசம் எல்லாம் அற்பவிசுவாசம்.        
 
எனவே  ஒருவர் சொல்லும் இதுபோன்ற வார்த்தைகளை நாம் அசட்டை பண்ணவும் முடியாது அதே நேரத்தில் எல்லா வார்த்தைகளையும் உண்மை என்று எடுத்து கொள்ளவும் முடியாது. நாம் ஆவியில் நிறைந்திருந்தால் மட்டுமே அவரின் உண்மை ரூபத்தை அறியமுடியும்.   
 
Stephen wrote:     
///தயவு செய்து நான் குற்றம் சொல்லுகிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம் எனக்கு இந்த காரியத்தில் ஒருசில சந்தேகம் இருக்கிறது அதை தெரிந்து கொள்ளவேண்டும் என்றுதான் இதை பதிவிடுகிறேன்.////  
 
உங்கள் நோக்கம் நல்லதாக இருந்தால் நிச்சயம் எவ்வித தவறும் இல்லை. ஆனால் என்னுடைய வலியுறுத்துதல் என்னவென்றால் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதை பிறரிடம் நிச்சயம் கேட்கலாம் நிவர்த்தி செய்யலாம் ஆனால உண்மையை அறியாமல்  அடுத்தவரிடம் கேலியாக பேசவேண்டாம் என்பதே!  ஒருவேளை அது உண்மையான தேவஆவியின் வெளிப்பாடு என்றால் நாம்தண்டிக்கப்பட நேரிடலாம்.
 
Stephen wrote:
/////தாங்கள் செய்கிறது சொல்லுகிறது இதெல்லாம் நம்முடைய பெலத்திலா  நடக்கிறது..! அதை நம் இஸ்டத்திற்கு செய்வதற்கு அல்லது ஆவியானவருடைய மகிமையை இவர்கள் தங்களுடேய் ஆளுகைக்குள் வைத்து செயல் படுத்துகிறார்களா..!////

இந்த கருத்து முற்றிலும் உண்மையான கருத்து. எதுவுமே நமது பெலத்திலோ அல்லது நாம் நினைத்தவுடன் செய்துவிடவோ முடியாது. ஒரு நாள் இரவு முழுவதும் ஆண்டவரே   உமது  வல்லமையால் என்னை நிரப்பும் என்று கண்ணீர் விட்டு கதறினாலும்  ஒரு சிரு துளி  வல்லமையைகூட உணர முடியாது. அதே நேரத்தில், எதிர்பார்க்காத வேளையில் அவர் அபிஷேகம் நம்மை பணியைபோல் முற்றிலும் மூடியிறக்கும். அவர் இஸ்டப்படியே அவர் நம்மை அபிஷேகிப்பார், நாம் கையில் வைத்து ஆடுவதற்கு ஆவியானவர் ஒரு மேஜிக் ஸ்டிக் அல்ல.
 
அடிக்கடி "அதுபோல் செய்துவிடுவேன் இதுபோல் செய்துவிடுவேன்" என்ற வார்த்தைகளை உபயோகிப்பவர்கள்  என்ன ஆவியை பெற்றிருக்கிறார்கள் என்பதை ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது. அவர்கள் ஆவிக்குரிய வாழ்வில்  தவறான நிலையில் இருக்க அனேக வாய்ப்பிருக்கிறது!   
 
 

-- Edited by SUNDAR on Monday 21st of June 2010 10:19:24 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard