ஒரு மனிதன் குழந்தையாக பிறக்கும் போது எந்த ஒரு பாவமும் அறியாத களங்கமில்லா மனதோடுதான் பிறக்கிறான். அவன் வளரும் சூழ்நிலை மற்றும் அவனை வளர்க்கும் நபர் போன்ற காரணிகளின் அடிப்படையிலேயே ஒருவன் நல்லவனாகவோ தீயவனாகவோ மாறும் வாய்ப்பிருக்கிறது என்று பலர் கருதுகின்றனர்.
பொதுவாக, பசியே அறியாமல் பணக்கார வீட்டில் வளரும் ஒரு குழந்தைக்கு யாருடைய உணவையோ பொருளையோ அல்லது பணத்தையோ திருடும் எண்ணம் சீக்கிரம் வராது. ஆனால் நல்ல உணவையோ அல்லது நல்ல பொருளையோ பார்த்திராத பிள்ளைக்கு இவைகளை காணும்போது திருடும் எண்ணம் உருவாகிறது. எனவே திருட்டு என்னும் இந்த செயலுக்கு அடிப்படையாக இருப்பது அதன் வாழ்க்கை நிலைதானே?
இந்நிலையில் திருடாதவனை நல்லவன் என்றும் திருடியவனை தீயவன் என்றும் பழிப்பது எவ்விதத்தில் சரி?
-- Edited by இறைநேசன் on Friday 18th of June 2010 10:52:15 PM
இந்த கேள்வி அனேக இந்துமத சககோதரர்களால் கேட்கப்படுவதும் இவ்வாறு ஒரு கேள்வியை எழுப்புவதன் மூலம் உலகில் நடக்கும் நன்மை தீமை அனைத்திற்கும் தேவன்தான் பொறுப்பு என்று தேவன்மேலேயே பழியைபோட்டு தான் தப்பித்து கொள்ள நினைப்பதும், தான் செய்யும் செயலை நியாப்படுத்துவதுமே இக் கேள்வியின் நோக்கமாக இருக்கிறது.
தேவன் பட்சபாதம் உள்ளவர் அல்ல. உலகில் வரும் சோதனைகளில் இருந்தோ அல்லது சாத்தானின் பார்வையில் இருந்தோ எவனும் தப்பவே முடியாது. இங்கு ஏழை பணக்காரன் என்றோ படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடோ கிடையாது. எல்லோருக்கும் அவரவர் இருக்கும் சூழ்நிலைகளில் அதற்க்குதகுந்த சோதனைகள் உண்டு.
ஏழைகள் கடையில் சென்று ஒரு வடையை தன் பசிக்காக திருடலாம் அவனது பசியே அவனை திருடும்படி தூண்டியிருக்கலாம். ஆனால் பணக்காரன் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை சரியாக செலுத்தாமல் அரசு பணத்தை எந்த தூண்டுதலும் இல்லாமல் திருடுகிறான். இரண்டுமே திருட்டுதான்! ஆனால் இங்கு பசிக்காக திருடிய ஏழையைவிட படோபர வாழ்க்கைக்காக அடுத்தவர் பணத்தை சுரண்டும் பணக்காரனுக்கு அதிக தண்டனை உண்டு!
எனவே இந்த இருவரில் ஏழையே தேவனுக்கு சாதகமான நலையில் இருக்கிறான் என்பதை அறியவேண்டும்!
உலகில் சோதனைகளும் துன்பங்களும் இல்லாத மனிதன் எவனுமே இல்லை. எல்லோருக்கும் சோதனையும் துன்பங்களும் உண்டு அவரவர் இருக்கும் நிலைக்கு தகுந்தல்போல் குறைந்த அல்லது கூடிய சோதனைகள் அவன் முன் வைக்கப்படும். நாம் துன்பமும் நமக்குள்ள சோதனையும் நமக்கு பெரியதாக தெரியலாம் நம்மை விட எவ்வளவோ பெரிய துன்பத்திலும் சோதனையிலும் வாடும் அநேகர் இந்த உலகில் இருக்கிறார்கள் என்பதை அறியவேண்டும்.
சைக்கிளில் போகும் ஒருவன் தினம் நடந்து போகும் ஒருவனை பார்த்து தன்னை தேற்றிக்கொள்ளவேண்டும். பைக்கில் போகிறவன் சைக்கிளில் போகிறவனை பார்த்து தன்னை தெரிக்கொள்ளவேண்டும் அதுவே மன ரம்யமாக வாழ்வதற்கு சிறந்த வழிமுறை.
இறுதியாக எனது கருத்து என்னவெனில்:
ஒரு மனிதன் செய்யும் தவறுக்கு அவனது சூழ்நிலையே காரணம் என்று சொல்லி ஒருநாளும் தப்பிக்க முடியாது.
வேதாகமத்தில் வரும் யோசேப்பு பிறனுக்கு அடிமையாக இருந்தபோது போத்திபாரின் மனைவியுடன் சயனிக்கவும் அதன் மூலம் அவன் ஒரு அருமையான வாழ்வை அமைத்துக்கொள்ளவும் கிடைத்த சந்தர்ப்பத்தை தள்ளி சிறைக்கு போகவும் தயாரானான்.
ஆனால் அனைத்தையும் குறைவின்றி பெற்று அரண்மனையில் வாழ்ந்த தாவீதோ எந்த தூண்டுதலும் இல்லாமல் அடுத்தவன் மனைவியை இச்சித்து ஆண்டவருக்கு தகாத செயலை செய்தான்.
இங்கு மனிதன் என்ன நிலையில் இருக்கிறான் என்பது ஒரு பொருட்டே அல்ல! அவன் எண்ணங்கள் மற்றும் மனநிலை தேவனுக்குமுன்னால் எவ்வாறு இருக்கிறது என்பதுதான் முக்கியம்.
தவறு செய்பவன் எந்த முகாந்திரமும் இல்லாமல் தவறு செய்வான். ஆனால் உத்தமனாக வாழ விரும்புபவனோ எந்த மோசமான சூழ்நிலையில் வளர்ந்தாலும் இருந்தாலும் தனது உத்தமத்தை காப்பான்!
எனவே தவறுகளுக்கு மனிதனின் சூழ்நிலைதான் காரணம் என்பது என்றுமே ஒரு தவறான கருத்து!
-- Edited by SUNDAR on Monday 26th of July 2010 03:26:43 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)