இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜாமக்காரர்களும், ஊழியர்களும்


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
ஜாமக்காரர்களும், ஊழியர்களும்
Permalink  
 


ஜாமக்காரர்களும், ஊழியர்களும் :

பிரபல ஊழியர் ஒருவர் பிற பிரபல ஊழியர்களை குறை சொல்லி எழுதும் ஜாமக்காரன் பத்திரிக்கை பற்றி அனேகருக்கு தெரியும். இதை படித்த பிறகு யார் சரியான ஊழியர் என்ற கேள்வி மக்கள் மனதில் ஏற்பட்டு யாரைத்தான் நம்புவது என்று குழம்புவது சகஜமாக உள்ளது. அனேக மக்கள் மிகவும் விருப்பப்பட்டு படிக்கும் இந்த பத்திரிக்கையை இதன் ஆசிரியருக்கு சொந்தமானவர் கூட படிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரு மாதங்களுக்கு ஒரு முறை வரும் இந்த பத்திரிக்கை மாதத்திற்க்கு ஒன்று அல்லது வாரத்துக்கு ஒன்று என வராதா என எதிர்பார்க்க வைக்கும் ஒரு கிருத்துவ நக்கீரன் பத்திரிக்கை. சில சமயம் பாவம் செய்து விட்டோமோ என கவலை வரும் போது அந்த குறிப்பிட்ட ஊழியரை விட நான் பரவாயில்லை என மனக் கவலையை குறைக்கும் பத்திரிக்கை. இவர் சொல்லும் சில காரியங்களை பற்றி இங்கே அலசப் போகிறோம்.

ஒரு பிரபல ஊழியர் எய்ட்ஸ் நோய் குணமானது என்று பொய் சொன்னார் என்பது மோகன் சி. லாசரஸ் என்னும் பிரபல ஊழியர் மேல் இவர் கூறும் குற்றச்சாட்டு. இஙகே யார் சரியானவர் என்று ஆராயாமல் இந்த காரியத்தை பற்றி பார்ப்போம்.

தேவ ஊழியர்கள் தேவ ஆவியினால் ஏவப்பட்டு பேசினார்கள், தேவ ஆவியினால் வெளிப்பாட்டை பெற்றார்கள், தரிசனங்களை கண்டார்கள் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது மனிதனின் ஆவி என்னும் பகுதியில் பரிசுத்த ஆவியானவர் அருளப்படுகிறார். இவர் மூலம் பரலோகத்தோடு மனிதனுக்கு தொடர்பு ஏற்படுகிறது. தமக்கு சித்தமான சிலருக்கு பரலோகத்தின் தேவன், பரிசுத்த ஆவியானவர் மூலம் வரங்களை, தீர்க்க தரிசனங்களை, தரிசனங்களை, வெளிப்பாட்டை கொடுக்கிறார்.இவ்வாறான வெளிப்பாடுகளை தேவன் இரண்டு காரியங்களுக்காக கொடுக்கிறார்.

1. வெளிப்பாட்டை பெற்றவரின் சுய ஆன்மிக வளர்ச்சிக்காக, பிரயோஜனத்திற்காக

2. அவரின் மூலமாக மற்றவர்களின் ஆன்மிக வளர்ச்சிக்காக, பிரயோஜனத்திற்காக

குறிப்பாக ஊழியர்களுக்கு பெரும்பாலும் மற்றவர்களின் ஆன்மிக வளர்ச்சிக்காக தேவன் இந்த வெளிப்பாட்டை தருகிறார்.

தேவனும் வார்த்தையும் :

தேவன் இந்த பூமியில் மனிதர்களின் மேலான தன் சித்தத்தை தன் வார்த்தையை கொண்டே நிறைவேற்றுகிறார். இந்த வார்த்தையை தன் ஊழியக்காரர்களை கொண்டே இந்த பூமியிலுள்ள மக்களுக்கு அறிவிக்கிறார்.

தேவ வார்த்தையும் கடவுளின் பணியும் பிரிக்க முடியாதவை. கடவுளின் வார்த்தை இல்லாவிடில் மனிதர்கள் மேல் அவரின் நடத்துதலும் இல்லை. இந்த பணியை செய்ய அவர் தேவ தூதர்களையோ (சில அவசர காலங்களை தவிர) அல்லது அவராகவோ அல்லது வேறு வித்தியாசமான வழிகளையோ ஏற்படுத்தாமல் மனிதர்களையே அவர் சார்ந்திருக்கிறார்.

இவ்வாறு மனிதர்களை பயன்படுத்தும் கடவுள் மனிதர்களை நடமாடும் சி.டி பிளேயர் போல் பயன்படுத்தி தன் வார்த்தையை சொல்லாமல் ஒரு வித்தியாமான, ரிஸ்க் அதிகம் உள்ள ஒரு முறையின் மூலம் பயன்படுத்துகிறார்.

அது என்னவெனில் பரலோகம்-பரிசுத்த ஆவி-மனிதனின் ஆவி வழியாக வெளிப்பாட்டை பெறும் மனிதன் அந்த வெளிப்பாட்டை தன் ஆத்துமா, மற்றும் சரீரத்தின் வழியாக மற்றவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதே அது. (ஆத்துமா என்பது மனிதனின் எண்ணம்-உணர்வு-ஆசை என்னும் பகுதிகளை கொண்டது) தேவன் எடுக்கும் ரிஸ்க் என்ன? ஏன் அவ்வாறு செய்கிறார் என்று பார்ப்போம்.

ஆனால் மனிதனின் மனம் என்பதே பல குறைபாடுகள் உள்ளது. அவைகளை பற்றி இங்கே காண்போம்.

1. சுமார் 20 வயதுள்ள "ஆ" என்று ஒருவர் இருக்கிறார் என்று வைத்து கொள்வோம். ஒரு மேஜையில் சுமார் 20 வேறு வேறு பொருட்களை வைத்து விட்டு (சீப்பு, புத்தகம் இப்படி) இவரை 1 நிமிடத்துக்கு பார்க்க அனுமதிக்கிறோம் என வைத்துக் கொள்வோம். அதன் பிறகு இவரை என்ன என்ன பொருட்கள் பார்த்தீர்கள் என கேட்டால் எத்தனை பொருட்களை இவர் சரியாக சொல்ல முடியும். இவர் ஏதாவது பொருட்களை தவறாக சொல்லி விட்டாலோ அல்லது சொல்லாமல் விட்டாலோ நீ பொய் சொல்கிறாய் அல்லது என்னை ஏமாற்றி விட்டாய் என்று சொல்லலாமா? ஒரு 12 பொருட்களை சரியாக சொன்னார் என்று வைத்து கொள்வோம் நாளை இதே போல ஒரு போட்டி வைக்கும் போது நேற்றைக்கு போலவே சரியாக 12 பொருட்களை சொல்வார் என்பது என்ன நிச்சயம்? நேற்று 12 சரியாக சொன்னாய் இன்று பத்து மட்டுமே அல்லது 14 சரியாக சொல்லுகிறாய் அதனால் நீ பொய் சொல்லுகிறாய் என்று சொல்லலாமா?

கண் முன்னால் பார்த்த காட்சியை சொல்வதிலேயே இவ்வளவு தவறுகள் எனில் பரலோகம்-பரிசுத்த ஆவி-மனிதனின் ஆவி-மனிதனின் மனம் இத்தனை வழியாக வரும் வெளிப்பாட்டை அந்த மனிதனால் எவ்வளவு சரியாக மற்றவர்களுக்கு சொல்ல முடியும்?

2. ஒரு மேஜையின் மேல், கண்ணாடி டம்ளரில் அரை கிளாஸ் வரை தண்ணீர் நிரப்பி அதை ஒரு மூடி போட்டு வைத்து விட்டு ஒரு பத்து பேரை கூப்பிட்டு நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்று கேளுங்கள். பத்து வித்தியாசமான பதில்கள் வருவதை காண முடியும். (உ.ம்)

1. மேஜை மேலே தண்ணீர், 2. அரை கிளாஸ் தண்ணீர்3. கண்ணாடி தம்ளரில் தண்ணீர்4. மூடியுள்ள தம்ளரில் தண்ணீர்

இப்படி பல. இன்னும் பொருள்களை அதிகப்படுத்த இன்னும் பல வித்தியாசமான பதில்கள் கிடைப்பதை பார்க்கலாம். எல்லோரும் பார்த்தது ஒரே காட்சியையே. அப்படியானால் எப்படி இத்தனை வித்தியாசமான பதில்கள். இதில் யார் சரியாக சொன்னது? யார் தவறாக சொன்னது? கண் முன்னால் பார்த்த காட்சியை விளக்குவதிலேயே இவ்வளவு சிக்கல் எனில் பரலோகம்-பரிசுத்த ஆவி-மனிதனின் ஆவி-மனிதனின் மனம் இத்தனை வழியாக வரும் தரிசனத்தை அந்த மனிதனால் எவ்வளவு சரியாக மற்றவர்களுக்கு சொல்ல முடியும்?

3. பத்து பேர் உள்ள கூட்டத்தில் ஒரு வார்த்தையை ரகசியமாக ஒருவருக்கு சொல்லி அதை அப்படியே மற்றவருக்கு சொல்லும்படி செய்து கடைசியாக இருப்பவரிடம் என்ன வார்த்தை என்று கேட்டால் முதலில் சொன்ன வார்த்தை சரியாக இருக்குமா? கண் முன் சொல்லும் வார்த்தையே பல பேரை வந்தடையும் போது மாறி போனால் பரலோகம்-பரிசுத்த ஆவி-மனிதனின் ஆவி-மனிதனின் மனம் இத்தனை வழியாக வரும் வார்த்தையை அந்த மனிதனால் எவ்வளவு சரியாக மற்றவர்களுக்கு சொல்ல முடியும்?

கண்ணுக்கு முன்னால் பார்த்த பொருட்களின் நிலைமையே இப்படி இருக்க சில சூட்சுமமான விஷயங்கள் ஆவி-ஆத்துமா-சரீரம் என்னும் பல பகுதிகளை கடந்து வரும் போது அதில் தவறு இருக்காது அல்லது இருக்க கூடாது என்பது என்ன நியாயம். ஒருவர் ஒரு தரிசனத்தை காணும் போது அதை ஆத்துமா வேறு மாதிரி புரிந்து கொள்வதற்க்கு அதிக வாய்ப்புண்டு.

உணர்வுகளின் தாக்கம் :

தேவன் மனிதர்களுக்கு தன் வெளிப்பாட்டை தந்து மற்றவர்களுக்கு வெளிப்படுத்த சொல்லும் போது அவர் அந்த மனிதன் தான் எதிர்பார்க்கும் உணர்ச்சியோடே அந்த வார்த்தையை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார். உதாரணமாக அழியும் ஆத்துமாக்களை பற்றின பாரத்தை அவர் ஒரு மனிதனில் வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த காரியத்தை அந்த மனிதன் பிறருக்கு வெளிப்படுத்தும் போது சிரித்து கொண்டே அனேக ஆத்துமாக்கள் அழிந்து போகும் கடவுள் சொன்னார் என்று சொல்லலாம் அல்லது தேவன் எதிர்பார்க்கும் சோக உணர்வுடன் அதை பிறருக்கு சொல்லலாம் அல்லது தேவனே ஆச்சரியப்படும்படியாக ஒப்பாரி வைத்தும் சொல்லலாம். ஆனால் தேவனோ தான் எதிர்பார்க்கும் உணர்வுடன் அதை சொல்லவேண்டும் என்று விருப்பமுள்ளவராயிருக்கிறார். தேவன் மனிதனை சி.டி பிளேயர் போல பயன்படுத்தாத காரணம் இதுவே. தேவ வார்த்தைகள் தேவனுக்குரிய உணர்வோடு வெளிவர வேண்டும் என்பதாலேயே.

தேவனுக்குரிய உணர்வை வெளிப்படுத்த கூடிய ஊழியர்கள் கூட சில சமயங்களில் தங்கள் சொந்த அல்லது சபை வாழ்க்கையில் துன்பம் வரும் போது இந்த பகுதியில் தவறி விடுகின்றனர். சில ஊழியர்கள் தங்களுக்கு சரீர பிரச்சனை இருந்தாலும் அதை தாங்கி கொண்டு மற்றவர்களுக்கு கர்த்தரின் பெயரால் சரீர சுகம் கொடுக்க வேண்டியுள்ளது. சில சமயம் கூட்டத்தில் நடக்கும் அற்புதங்களை பார்த்து அந்த ஊழியக்காரரே உணர்ச்சி வசப்பட வாய்ப்புண்டு.

வேதத்தின் இந்த பகுதியில் (1இராஜா: 12,13) பெயர் சொல்லப்படாத ஒரு ஊழியரை பார்க்கிறோம். தேவனை வணங்குவதற்க்கு பதிலாக பொன் கன்றுகுட்டிகளை வணங்கி மற்றவர்களையும் வணங்க செய்த ராஜாவுக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் சொல்ல வந்தவர் இந்த தேவ மனிதன். இவ்வாறு செய்த ராஜாவின் மேல் கோபம் கொள்ளாமலும், தன்னை கொல்ல சொன்ன அந்த ராஜாவின் மேல் கோபம் கொள்ளாமலும் அந்த ராஜாவின் கை சரியாகும்படி கடவுளிடம் வருந்தி வேண்டுகிறான். இதன் மூலம் ராஜாவிடம் இருந்து தன்னை காபாற்றிய தேவனை அவன் வெட்கப்படுத்துகிறான். கோபம் என்னும் தேவனுக்குரிய உணர்வை வெளிப்படுத்த வேண்டிய இந்த மனிதன் அதற்கு பதிலாக தேவ விரோதியிடம் இரக்கம் என்னும் உணர்வை காண்பித்து (இந்த இடத்தில் ஏன் தேவன் அந்த ராஜாவின் கையை சரிபடுத்த வேண்டும்? அப்படியே விட்டிருக்கலாமே என்னும் கேள்வி வரலாம். இந்த தீர்க்கதரிசி ராஜாவுக்காக வருந்தி கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்கிறான் இந்த ஜெபத்தை தேவன் கேட்காவிடில் இந்த மனிதன் தேவனுடைய தீர்க்கதரிசி என்பது பொய்யென ஆகும். அதனாலேயே) ராஜாவின் மேல் இருந்த தேவ கோபத்தை இந்த தீர்க்கதரிசி வாங்கி கொள்கிறான். இந்த தீர்க்கதரிசியின் உணர்வு தேவனுக்குரியதாய் இல்லை என்பது கர்த்தரின் சித்தப்படி இன்னொறு தீர்க்கதரிசியால் வெளிப்படுத்தப்பட்டு துர்மரணத்தை அடைகிறான். (கர்த்தர் தனக்கு சொன்ன வார்த்தையை விட கர்த்தரின் வார்த்தையாக ஒரு தூதன் அறிவித்து, அதை ஒரு தீர்க்கதரிசியின் வாயால் கேட்டு அதை உண்மை என நம்பி செய்யக்கூடாத காரியத்தை செய்து தேவ தண்டனையை பெற்று கொள்கிறான்)

தன் கை குணமாக கர்த்தரிடம் வேண்டும்படி கேட்டு கொண்ட ராஜாவுக்கு நீயே கர்த்தரிடத்தில் உனக்காக மன்னிப்பு கேட்டு கொண்டு அவரிடம் ஜெபித்து உன் கையை சுகமாக்கி கொள் என்று சொல்லியிருக்க வேண்டும். அவ்வாறு சொல்லியிருந்தால் ஒருவேளை அந்த ராஜா திருந்தியிருக்க கூடும். ஆனால் அதற்கு இந்த தேவ மனிதன் வாய்ப்பு கொடுக்கவில்லை.

ஆசைகளின் (விருப்பம், சித்தம்) தாக்கம் :

தேவன் தன்னுடைய ஆசையை (எதிர் கால நோக்கம்) போலவே தான் பயன்படுத்தும் மனிதன் ஆசை (நோக்கம், அளவு) உடையவனாயிருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார். மனிதர்கள் இந்த எதிர்பார்ப்பை மீறும் போது தேவனின் கிரியை பாதிக்கப்படுகிறது.

பிலேயாம் என்பவனுக்கு தேவன் விஷேசித்த வரத்தை தந்திருந்தார், அது என்னவெனில் அவன் ஆசிர்வதிப்போர் ஆசிர்வதிக்கபடவும் அவன் சபிப்போர் சபிக்கபடவும் கடவார்கள் என்பதே அது. பாலாக் என்னும் ராஜா அவனை தேவ மனிதர்களான இஸ்ரவேலுக்குவிரோதமாக சபிக்கும்படி அவனை அழைக்கிறான். பிலேயாமோ கர்த்தரின் சித்தம் இஸ்ரவேலை ஆசிர்வதிப்பதே என்று தெரிந்தும் பாலாக் ராஜாவுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற தன் ஆசையிலிருந்து மாறாமலேயே கர்த்தரின் வார்த்தையை வேண்டாவெறுப்பாக சொல்ல புறப்படுகிறான். புறப்படுகிறதற்கு முன் என்ன சொல்ல வேண்டும் எனவும் அவன் கர்த்தரை கேட்கவில்லை. கர்த்தர் தன் தூதனை அனுப்பியும், கழுதையை பேச செய்தும் அவன் மதிகேட்டை தடுத்து இஸ்ரவேலை ஆசிர்வதிக்கும்படி செய்தார். ஆனாலும் இந்த தீர்க்கதரிசி கர்த்தருக்கேற்ற ஆசை கொள்ளாமல் பாலாக் ராஜாவுக்கு உதவி செய்ய ஆசை கொண்டு இஸ்ரவேலை அழிக்க பல்வேறு உபாயங்களை பாலாக்குக்கு சொல்லி தருகிறான். அதன் மூலம் தன் துர்மரணத்தை அவன் சந்தித்தான். இதிலிருந்து ஊழியக்காரரின் ஆசை என்பது எவ்வளவாய் கர்த்தரின் சித்தத்தோடு ஒத்துப் போக வேண்டும் என அறியலாம். (எண்ணா : 22-24)

பெருமையின் தாக்கம் :

சில சமயங்களில் தேவனால் வெகுவாக பயன்படுத்தப்படும் ஊழியர் தன் மூலமாக அனேக அற்புதங்கள் நடைபெறுவதை கண்டு அதுவரை கர்த்தரிடம் தான் வைத்திருந்த தாழ்மையை விட்டு பெருமை கொண்டு அதன் மூலமாக கர்த்தரை விட்டு விலகுவதால் தன் சொந்த எண்ணங்களை, தரிசனங்களை கர்த்தர் சொன்னதாக சொல்ல இடமுண்டு. சில சமயங்களில் அனேக மக்கள் விரும்பும் செய்தியை சொல்லி அதன் மூலம் மக்களை ஆதாயப்படுத்தும் சுயமான முயற்சியிலும் சிலர் ஈடுபடுவதுண்டு.

மனிதர்களை தேவன் பயன்படுத்துவதில் இவ்வளவு சிக்கல் இருந்த்தும் தேவன் இந்த வழியையே தேர்ந்தெடுத்துள்ளார். இதற்காக அவர் தான் பயன்படுத்த விரும்பும் மனிதனை முதலில் பண்படுத்துகிறார்.

இதிலிருந்து ஊழியர்களை மூன்று வகையாக பிரிக்கலானம்

1. தேவ சித்தப்படி ஊழியம் செய்பவர்கள்

2. தங்கள் ஆத்துமாவின் குறைவோடு ஊழியம் செய்பவர்கள்

3. மனதறிந்து தங்கள் சொந்த சக்தியை பயன்படுத்தி ஊழியம் செய்பவர்கள், தங்கள் சொந்த வார்த்தையை பேச துணிபவர்கள்.

இவர்களில் இரண்டு வகை உண்டு.

அ. இயேசுவின் மகிமைக்காக ஊழியம் செய்பவர்கள்

ஆ. மனிதர்களை விட்டு இயேசுவை விலக்க வேண்டும் என்பதற்காக தந்திரமாக ஊழியம் செய்பவர்கள்

இந்த மூன்றில் தேவ சித்தப்படி ஊழியம் செய்பவர்கள் கூட சில நேரங்களில் ஆத்துமாவின் குறைவோடு (ஆத்துமாவை ஆவிக்கு அடிமைபடுத்தாததினால்) ஊழியம் செய்பவர்களாக உள்ளனர்.

(தொடரும்... இந்த கட்டுரைக்கும் தேவ வார்த்தையை கையாளுதல், தேவ வார்த்தையை பகுத்தறிதல் போன்ற கட்டுரைக்கும் தொடர்புண்டு)



-- Edited by SANDOSH on Sunday 20th of June 2010 04:28:04 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard