ஒரு பெண்மணி, ஊழியர் ஒருவரிடம் தன் மகன் படித்து விட்டு வேலை இல்லாமல் இருப்பதாகவும் அவனுக்கு வேலை கிடைக்க வேண்டும் எனவும் அதற்காக ஜெபியுங்கள் எனவும் கேட்டுக் கொண்டார்கள். அதை கேட்ட ஊழியர் இதற்கெல்லாம் ஜெபம் எதற்க்கு? உன் மகனுக்கு வேலைதானே வேண்டும் அதை நான் தருகிறேன். இங்கே வந்து சபையின் சில காரியத்தை செய்யட்டும் என்றார். அதற்க்கு அந்த பெண்மணி இல்லை இல்லை அவனுக்கு மாதா மாதம் சம்பளம் வேண்டும் என்றார். அதை கேட்ட போதகர் அப்படியானால் நான் அவனுக்கு மாதா மாதம் 100 ரூபாய் சம்பளம் கொடுக்கிறேன் என்றார். அதற்க்கு அந்த பெண்மணி இல்லை இல்லை அவனுக்கு மாதா மாதம் ஒரு இலட்சம் வேண்டும் என்றார்கள். அதற்கு அந்த போதகர் அப்படியானால் மாதம் ஒரு இலட்சம் கிடைக்கும் கல் உடைக்கும் வேலை தாரும் என ஜெபிக்கட்டுமா என்றார். அதற்கு அந்த பெண்மனி இல்லை இல்லை சுலபமான வேலை வேண்டும் என்றார்கள். அதற்கு அந்த போதகர் அப்படியானால் இப்போது நான் அவனுக்கு ஜெபிக்கிறேன் என்று சொல்லி ஜெபித்த உண்மையான ஜெபம் என்னவெனில்
தேவனே1 இந்த மகனுக்கு மாதா மாதம் ஒரு இலட்சம் கிடைக்க வழி செய்யும். இதற்காகஅந்த மகனுக்கு உடல் வலிக்காத சொகுசான வேலை கிடைத்தாலும் பரவாயில்லை. ஆனாலும் கூடுமான வரையில் எந்த வேலையும் செய்யாமல் மாதம் ஒரு இலட்சமும், எல்லா வித அலவன்சும், கார் முதலிய வசதிகளும் கிடைக்க கிருபை தாரும் எனஉண்மையாக ஜெபித்தார்.
இன்றளவும் பல மனிதர்கள் தங்களூக்கு பணம் வேண்டும் என வெளிப்படையாக வேண்டாமல் வேலை வேண்டும் என கடவுளை ஏமாற்றி வருவது குறிப்பிடத்தக்கது அதனாலேயே கடவுள் பலருக்கு அதிக சம்பளம் கிடைக்காத வேலையை கொடுத்திருக்கிறார்)
மனிதன் : கடவுளே உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.
(மனதிற்குள்) என் துன்பத்தை என்னை விட்டு நீக்கி விடுவார்.
கடவுள் : மகனே என்னால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்று நீ சொன்னது சரியே! உன் துன்பத்தை உன்னை விட்டு நீக்காமல் அந்த துன்பத்தின் ஊடே நீ கடந்து செல்ல உனக்கு பலனளீப்பேன் ஏனெனில் என்னால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.
-- Edited by SANDOSH on Friday 9th of July 2010 09:03:12 PM