இந்து புராணங்களை நான்படிக்கும்போது எனக்குமிகவும் பிடித்த அனைவருக்கும் உகந்த படிப்பினை தரக்கூடிய பல நல்ல கருத்துக்களை அதன் மூலம் அறிந்து கொண்டேன்.
நல்ல கருத்துக்கள் எந்த இடங்களில் இருந்தாலும் அதை எடுத்து கொள்ளலாம் என்ற கருத்தில் சில நல்ல கருத்துக்களை இங்கு பதிவிடலாம் என்று கருதுகிறேன். தள சகோதரர்களும் தங்களை மிகவும் கவர்ந்த இந்துமத கருத்துக்களை இங்கு பதிவிடலாமே.
கண்ணீர் விட்டழுத கண்ணன்!
மகாபாரத போரில் அர்ஜுனனின் மகன் அபிமன்யு இறந்ததை எண்ணி அர்ஜுனன் மிகவும் அழுது கண்ணீர் வடித்துக் கொண்டு "இனி நான் என் உயிர் வாழ வேண்டும்?' என்று அரற்றிக்கொண்டு இருந்தானாம். அப்பொழுது அவன் தலையில் எதோ நீர்த்துளிகள் விழவே மேலே நோக்கி பார்த்தால் அவனுக்கு கீதையை உபதேசித்த கண்ணன் அங்கு அழுதுகொண்டு நின்றாராம். அவர் கண்ணீர்தான் அர்ஜுனன் தலையில் விழுந்ததாம்.
அப்பொழுது அருஜுனன் கண்ணனை பார்த்து "நான்தான் சாதாரண மனிதன், மரணம் இன்பம் துன்பம் போன்ற உலக நிலைகளில் இருந்து விடுபடாதவன், எனதுமகனை இழந்ததால் அழுகிறேன்; ஆனால் நீர் தெய்வமாயிற்றே! இதை எல்லாம் கடந்தவர் அல்லவா? நீர் ஏன் அழுகிறீர்? என்று கேட்டாராம்.
அதற்க்கு கண்ணன் "இப்பொழுதுதான் உனக்கு பல மணிநேரம் செலவு செய்து கீதையை உபதேசம் பண்ணினேன். உலகில் உள்ள எல்லாமே மாயை, எதுவும் யாருக்கும் சொந்தமில்லை, இன்று உன்னுடையதாக இருப்பது நாளை இன்னொரு வருடையது ஆகும். எனவே எதற்க்காகவும், எந்த ஒரு இழப்பிற்க்காகவும் நாம் கண்ணீர் சிந்த வேண்டிய அவசியம் இல்லை என்று மிக சிரமபட்டு போதித்தேன். ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் அது பயனற்று போய்விட்டதே. அனைத்தையும் நேரடியாக கேட்ட நீயே அதை உடனே மறந்துவிட்டு உன் மகனுக்காக இவ்வளவு கண்ணீர் வடிக்கிறாயே, இந்த மனுக்குலத்தை எப்படி திருத்த? என்பதை எண்ணித்தான் நான் அழுகிறேன்" என்றாராம்!
மனிதனுக்கு என்னதான் நல்ல கருத்துக்களை எடுத்து சொன்னாலும் அது மிக விரைவிலேயே மறந்து போய்விடும். "உங்களை சபிப்பைவரை ஆசீர்வதியுங்கள்" என்ற வசனத்தை எத்தனை முறை படித்தாலும் ஒருவர் சபித்தால் உடனே அவர்களை திருப்பி சபிக்கத்தான் மனிதன் முயல்வானே தவிர உடனே அவனை ஆசீர்வதிக்கும் அளவுக்கு அவனது மனது இடம்கொடுப்பதில்லை. ஆகினும் நாம் சிரத்தைஎடுத்து முயன்று இறைவனின் கட்டளைகள்படி செய்ய பிரயாசப்பட வேண்டும்
"மாயை மாயை எல்லாம் மாயை" என்று பிரசங்கி சொன்னது போல இந்த உலகம் ஒரு மாயை, இது நிலையானது அல்ல, இங்குள்ளது எல்லாமே ஒருநாளில் அழிந்துவிடும், இங்குள்ள யாரும் நிலையானவர் அல்ல, என்பதை அனைவரும் அறிந்து உலகப் பற்றினை துறந்து தேவனின் மேல் பற்றுகொண்டு அவரின் சித்தம் ஒன்றை செய்வதுதான் நோக்கமாக கொண்டு வாழவேண்டும் என்பதை போதிக்கும் நல்ல கருத்தாக இதை எடுத்துகொள்ளலாம்!
-- Edited by இறைநேசன் on Saturday 26th of June 2010 11:55:25 AM
ஏசாயா 6:10இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தில் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்.
என்ற வசனம் சொல்வதுபோல் மனிதனின் கண்கள் காதுகள் இருதயம் போன்றவை அடைபட்டநிலையில் இருப்பதால் தங்கள் அறிந்தவற்றை கேட்டவற்றை உணர்ந்து, வரும் அழிவில் இருந்து தப்பிக்க மனதில்லாமல் மந்த நிலையில் இருக்கின்றனர். ஆண்டவர் அவர்களுக்கு உணரத்தக்க இருதயத்தை கொடுக்கவில்லை. அவர்களுக்கு எத்தனை முறை எடுத்துசொன்னாலும் புரியவும் புரியாது. எங்காவது ஏதாவது இலவசமாக கொடுக்கிறார்கள் என்று அறிந்தால் ஊரில் உள்ள மொத்த கூட்டமும் அங்குதான் இருக்கும், ஆனால் ஆண்டவரின் வழிகளை பற்றி சொன்னால் ஒரு சில நிமிடங்களில் எல்லாம் மறந்துவிடும்.
கர்த்தருடைய வழிலில் சரியாக நடப்பவர்கள் அனைத்தையும் அறிந்து உணர்ந்து கொள்வார்கள் மற்றவர்களோ அதில் இடறிவிழுவார்கள். இதை பற்றி அந்த கண்ணன் அறியவில்லை போலும் எனவேதான் அவரும் சேர்ந்து அழுகிறார் என்று கருதுகிறேன்.
-- Edited by SUNDAR on Tuesday 29th of June 2010 10:58:52 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)