இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிந்தனைகள் எண்ணங்களில் தடங்கல்கள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
சிந்தனைகள் எண்ணங்களில் தடங்கல்கள்!
Permalink  
 


கடந்த சில நாட்களாக என்னுடைய எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளில் தடங்கல்கள் ஏற்ப்பட்டு ஆவிக்குரிய காரியங்களை சரியாக சிந்தித்து எழுத்தாக வடிவமைக்க முடியாத நிலையில் இருப்பதால் இங்கு அதிகம் பதிவிட முடிய வில்லை. அனேக காரியங்களை அறிந்திருந்தும் அதை எப்படி எழுத என்று குழப்பமாக இருக்கிறது.  
 
இந்த இடைபட்ட காலங்களில், தேவன் எதிர்பார்க்கும் பரிசுத்த நிலையை ஒருவரும் எட்ட முடியாதவர்களாக இருக்கிறோம் என்று தெரிவித்ததால் எனக்கு மிகுந்த மனகஷ்டமாகவும் அதை எட்டுவதே பிரதான நோக்கமாகவும்  இருக்கிறது.
 
ஆதியில் இருந்து நடந்தது என்ன? என்பதை  தேவன் எனக்கு சரியாக அனேக வெளிப்பாடுகள் மூலம் புரிய வைத்திருந்தாலும் அதை எழுத்தில் கொண்டுவர என்னால் முடியவில்லை. நான் தரிசனமாக கண்ட சில காட்சிகள் வேததத்துக்கு  சம்பந்தம் இல்லாததும் தொடக்கம் முடிவு தெரியாததுமாக இருப்பதால் அதை எப்படிஎழுத என்பது எனக்கு புரியவில்லை.
 
இந்த நிலை நீங்கி மீண்டும் ஆவிக்குரிய காரியங்களையும் வெளிப்பாடுகளையும் பதிவிட வேண்டிய ஞானத்தை தேவன் தரும்படி எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள்!   
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

எனது சிந்தனையில் தந்தைகள் ஏற்பாடு  சில  நாட்களாக சரியாக எழுத முடியாத நிலையில் உள்ளதை அறிந்து சிலர் ஏளனமாக கருதுகின்றனர். எனது சிறுமையை கருத்தில் கொண்டு மீண்டும் தொடர்ந்து எழுத  தேவையான ஞானத்தை ஆண்டவர் தருவார் என்று விசுவாசிக்கிறேன்,
 
இதுபோன்ற நிலை  ஒன்றும் புதிதல்ல!  வேதாகம மனிதர்களுக்கும் இதுபோன்ற நிலை ஏற்ப்பட்டிருக்கிறது.  
 
வானத்தில் இருந்து அக்கினியை இறக்கிகாட்டிய எலியாவேகூட, என்னதான் மக்களுக்கு  எடுத்து சொல்லியும் காதில்  கேட்காமல் கேலி பேசி கொல்ல வகை தேடிய மனிதர்களை பார்த்து  நொந்துபோய் 
 
I இராஜாக்கள் 19:4 அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்;  
 
என்று மனமடிவுடன் கூறியிருக்கிறார்!
 
அதேபோல் ஆவியில் அனேக வெளிப்பாடுகளை பெற்ற எசேக்கியேல், சில வெளிப்பாடுகளை அறிந்தபோது அதை விளக்கி சொல்லமுடியாமல் பிரமித்தவனாய் ஏழு நாட்கள் தங்கி இருந்திருக்கிறான்.  
  
எசேக்கியேல் 3:15 கேபார் நதியண்டையிலே தெலாபீபிலே தாபரிக்கிற சிறைப்பட்டவர்களிடத்துக்கு நான் வந்து, அவர்கள் தாபரிக்கிற ஸ்தலத்திலே தாபரித்து, ஏழுநாள் அவர்கள் நடுவிலே பிரமித்தவனாய்த் தங்கினேன்.

எனவே எனக்கு தற்போதுள்ள நிலைமை வேதத்தில் இல்லாத ஒரு புதிய நிலை இல்லை. அடுத்தவரை குறை கண்டுபிடிப்பதிலேயே நோக்கமாக இருக்கும் இந்த மக்கள் மத்தியில்  நான் எதை எழுதி என்ன ஆகிவிடப்போகிறது? என்ற ஒரு எண்ணமே என்னை எழுதவிடாமல் நிறுத்தி வைத்திருக்கிறது. ஆகினும் ஆண்டவர் என்னிடம்
 
 எசேக்கியேல் 2:7 கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு.

என்று தொடர்ந்து கட்டளையிட்டு வருகிறார். எனவே நான் அறிந்தவற்றை எழுதி வைத்துவிடுவது "நம்புவோர் நம்பட்டும் கேலி பேசுவோர் பேசிவிட்டு போகட்டும்" என்று முடிவு செய்துள்ளேன்.  
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

//....... இந்த நிலை நீங்கி மீண்டும் ஆவிக்குரிய காரியங்களையும் வெளிப்பாடுகளையும் பதிவிட வேண்டிய ஞானத்தை தேவன் தரும்படி எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள்! ...............//

நிச்சயமாக நான் உங்களுக்காக ஜெபிப்பேன். உங்களுக்கு தேவையான ஞானத்தை கர்த்தர் தருவார். திட மனதாய் இருங்கள் கர்த்தருடைய ஆவியானவர் நம்மோடு இருக்கிறார்.

//...........என்று தொடர்ந்து கட்டளையிட்டு வருகிறார். எனவே நான் அறிந்தவற்றை எழுதி வைத்துவிடுவது "நம்புவோர் நம்பட்டும் கேலி பேசுவோர் பேசிவிட்டு போகட்டும்" என்று முடிவு செய்துள்ளேன். ................//

யாருக்காகாவும் நீங்கள் எடுத்த முயற்சியை கைவிட வேண்டாம் என்று நான் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். காலம் வரும்போது பதர் விலகி கோதுமை மணிகள்தான் நிலை நிற்க போகிறது.

எனக்கு தெரிந்த வரை உண்மையும் நேர்மையும் உத்தமும் எங்கயோ அங்குதான் நெருக்கமும் நிந்தனைகள் அதிகமாய் பெருகும். சோர்ந்து போகாதிருங்கள்

-- Edited by Stephen on Monday 5th of July 2010 02:04:27 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

வலையில்  உள்ள பல்வேறு தளங்களில் ஏதேதோ தேவையற்ற அனேக வார்த்தைகள் இருக்கும் போது, நாம் அறிந்த உண்மைகளை பதிவிட தயங்க வேண்டிய அவசியமே இல்லை என்பது உண்மையே.. 
 
குறை கூறுபவர்கள் கூறிக்கொண்டேதான் இருப்பார்கள். அவர்கள் யாரை குறை கூறவில்லை? தேவ குமாரன் இயேசுவையும் குறை கூறினார்கள் அப்போஸ்தலர்களையும் குறை கூறினார்கள், தீர்க்கதரிசிகளையும் குறை கூறினார்கள் தானே? 
 
சில  தளங்களில் உள்ள பதிவுகளில் பாதிக்குமேல் பிறரை தரக்குறைவாக மரித்யாதை இல்லாமல் விமர்சிக்கும் பதிவுகள்தான் அதிகம். நமது தளம் அப்படியல்ல.  நமது தளத்தில் உள்ள பதிவுகளில் எந்த பதிவாவது யாரையாவது துன்மார்க்கமாக திருப்பும் பதிவினை போல் இருந்தால் மட்டும் தெரிவிக்கட்டும் அதை ஆராய்ந்து பார்த்து  உடனே நீக்கிவிடலாம். 
 
மற்றபடி சகோதரர் ஸ்டீபன் சொல்வதுபோல்  எதிர்ப்புகளுக்கு அஞ்சுவது தேவையற்றது என்றே கருதுகிறேன்.  
    


-- Edited by இறைநேசன் on Monday 5th of July 2010 07:04:35 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

சகோதரர்களே!  இந்த உலகில் நாம் செய்யும் எல்லா காரியத்தை விடவும் உண்மைக்கும் உத்தமத்துக்கும் பரிசுத்தத்துக்குமே தேவன் முதலிடம் கொடுக்கிறார், என்பதை அறிந்துகொண்டதால், அலுவலக நேரத்தில் பதிவிடுவதை முற்றிலும் தவிர்க்க விரும்புகிறேன்
 
I யோவான் 2:10 தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை.

என்று வேதம் சொல்வதால் தன சகோதரனிடத்தில் அன்பில்லாதவன் ஒளியில் நிலை கொள்ளவில்லை என்பதை அறிய முடிகிறது. தேவ ஞானத்தையும் வேதம் சொல்லும் கருத்தின் முழு உண்மையையும் அறிந்தவர் ஒருவரும் இல்லை! எனவே காலம் வருவதற்கு முன்னர் யாரையும் குற்றவாளியாக தீர்க்காமல்,  தன சகோதரன்  எப்படிபட்டவனாக இருந்தாலும் அவனிடம் அன்புகூற நாம் கடமை பட்டுள்ளோம்.

"அன்பில்லாதவன் தேவனை அறியான்" என்று வேதம் சொல்கிறது, எனவே நம் சகோதரர்கள் செய்யும் தப்பிதங்களை மன்னித்து அவரகளிடத்தில் அன்பு கூறக்கடவோம்  
 
கொலோசெயர் 3:13 ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
 
என்று வசனம் சொல்வதால் எல்லோரையும் மன்னிக்க சித்தம் உள்ளவர்கள் எவ்வளவுதான் தூர விலகிபோனாலும் அவர்களை  தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க சில சக்திகள் ஓயாமல் போராடுவது இயல்பு.  இப்படிப்பட்டவர்களிடம் எத்தனை வசனத்தைகாட்டி வாதிட்டாலும் அதனால் எந்தபயனும் ஏற்ப்படப்போவது இல்லை!
எனவே   அப்படிபட்ட்வர்களுக்காக ஆண்டவரிடம் ஜெபிப்போம். சர்வவல்ல தேவன் தாமே உண்மையை அறிந்துகொள்ளும் ஞானத்தை கட்டளையிடுவாராக!  
 
என்னை பொறுத்தவரை நான் எந்த ஆதாயத்துக்காகவும் இந்த உழியத்தை செய்ய வில்லை! அதே நேரத்தில் என்னுடைய பதிவில் எங்கும் ஜனங்களை தவறான வழிக்கு திசை திருப்பும் பதிவோ அல்லது ஜனங்களை நிர்விசாரமாக வாழதூண்டும் பதிவோ இருந்ததில்லை.

எனது முக்கிய வேண்டுகோள் "உண்மை உத்தமம் நீதி நேர்மை தேவனுடைய வார்த்தையை கைகொள்ளுங்கள் " என்பதே. அவர் வார்த்தையை கைகொண்டு நடப்பதால் யாருக்கும் எந்த காலத்திலும் தீங்கு நேராது!  

சங்கீதம் 37:34
நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்  
 
மேலும் கர்த்தருடைய வழிகளை அறிந்து அதை சரியாக கைகொண்டால் இச்சகம் பேசும் துன்மார்க்கர்கள் யாவரும் அறுப்புண்டு நாம் பூமியை சுதந்தரிக்கும் அளவுக்கு தேவன் நம்மை உயர்த்துவார்!


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 38
Date:
Permalink  
 


தங்களின் அத்துமீறலான ப‌திலும் சற்றும் நாகரீமற்ற வார்த்தைகள் (திரியின் தலைப்பு "க‌ள்ள‌ ஆசாமிக‌ள்!! இது  என்ன  சகோதரரே? உங்கள் பெயரை நீங்களே திரியின் தலைப்பாக் வைத்திருக்கிறீர்கள்!) தங்களின் உண்மை நிலையும் எந்த ஆண்டவன் தங்களிடம் பேசுகிறான் என்பதையும் தெளிவு படுத்தியிருக்கிறது. இப்படி பட்ட புத்தி படைத்த ஒரு மனிதனிடம் தேவன் பேசுவார் என்பது வெறும் பிதற்றல். வேதத்தில் இருக்கும் வசனங்கள் யாரை சார்ந்தது என்கிற அடிப்படை ஞானம் கூட இல்லாதவராக இருப்பவரிடம் நிச்சயமாகவே வேதத்தை குறித்து விவாதம் செய்வது செவிடன் காதில் சங்கு ஊதுவதற்கு ஒப்பாகும்.

"நீ கரு தாங்கி ஒரு மகனை பெற்றெடுப்பாய்" என்கிற வசனத்தை எப்படி அனைவரும், எடுத்துக்கொள்ள முடியாதோ, அப்படியே தான்,

ஏசாயா 30:19 ;  உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்

ஏசாயா 58:9 அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார்

மேலே உள்ள வசனங்களும் அப்படியே. வாசிக்கும் அனைவருக்கும் இது பொருந்தாது என்கிற தெளிவு இல்லாதவர்களிடம் தான் சாத்தான் பேச முடியும், அது தான் உங்களுக்கு நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. ஆகவே தான் தேவன் என்னிடம் பேசி, வேதத்தில் இல்லாத பல வெளிப்படுகளை தருகிறார் என்று மக்களை மோசம் போக்கி கொண்டு இருக்கிறீர்கள்.

", தேவன் மனிதனிடம் பேசமாட்டார் என்று சாத்தான் சொல்லும் பொய்யை நம்பி ஏமாந்து கொண்டு இருப்பதோடு, பிற ஜனங்களையும் தேவனுடைய வார்த்தைக்கு பயப்படாமல்/ கீழ்படியவிடாமல்  திசைதிருப்பி மோசம்போக்கி கொண்டு இருக்கும் உங்கள் போன்றவர்களுக்கு  பிறரை எவ்விதத்திலும் குறைகூற எந்த முகாந்திரமும் இல்லை என்பதை கருத்தில் கொள்க!"

பித‌ற்ற‌லின் உச்ச‌க்க‌ட்ட‌த்தில் வெளியான‌ வார்த்தைக‌ள் இவை. என்ன‌ பேசுகிறோம் என்கிற‌ அடிப்ப‌டி ஞான‌ம் கூட‌ இல்லாத‌ உங்க‌ளிட‌த்தில் பேசும் சாத்தான் தான் வேத‌த்தில் இல்லாத‌ விஷ‌ய‌ங்க‌ளை வெளிப்பாடுக‌ளை தொட‌ர்ந்து த‌ந்து கொண்டு இருக்கிறான்.இதை வைத்துக்கொண்டு வேத‌த்தில் இல்லாத‌ விஷ‌ய‌ங்க‌ளை சொல்லி யார் ம‌க்க‌ளை திசை திருப்பி மோச‌ம் போக்கி கொண்டு இருக்கிறார்க‌ள் என்று ம‌ன‌சாட்சியை அல்ல‌ தேவ‌னிட‌மே கேட்டு கொள்ளுங்க‌ள் (ஏனென்றால் உங்க‌ளை போல் ப‌ரிசுத்த‌வான்க‌ளிட‌ம் தான் தேவ‌ன் அடிக்க‌டி பேசுவாரே)!!

" இனி நீ என்ன செய்தாலும் தவறு கிடையாது. துணித்து என்ன வேண்டுமானாலும் செய். "
இப்ப‌டி நான் எழுதிய‌தாக பதியும் முன் தயவு செய்து நல்ல கண் மருத்துவரிடம் தங்களின் கண்களை பரிசோதித்து விட்டு எழுதுங்கள்! பிதற்றலாக எதையும் பதிய வேண்டாம். மேலும் உலகில் உங்களை போல் நீதியை போதிப்பவர் வேறு யாரும் இல்லை என்கிற மமதையிலிரும் இருக்க வேண்டாம். நான் அப்போ மட்டும் இல்லை, எப்பவும் வேதத்தில் இருக்கும்படியே, தாங்கள் சுற்றி காட்டிய நற்கிறியைகள் எதற்கும் உதவாது, தேவ கிருபையே உதவும என்பதை தான் சொல்லி வருகிறேன்.

பல கடவுள்கள் மேல் நம்பிக்கை வைத்து அதை எல்லாம் தங்களின் தளத்தில் எழுதி வருவது தங்களிடம் எந்த தேவன் வேசுகிறான் என்று தெளிவாக இருக்கிறது. நேரடியாக யாரையும் சொல்லாமல், இப்படி தேவன் என்னிடத்தில் பேசுகிறார் என்று சொல்பவர்களை பற்றி தான் தான் எழுதினேன், ஆனால் நேரடியாக உங்களை சுற்றி காட்டி, உங்களிடத்தில் பேசுவது சாத்தான் தான் என்று அனைவருக்கும் எடுத்து சொல்ல வைத்து விட்டீர்கள்.

யாரையும் குறை சொல்லுவதில்லை என்று சொல்லிக்கொண்டு, இந்த தளத்தில் வந்து என்னை தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதிய உங்களிடத்தில் பேசுவது நிச்சயமாக வேதம் கூறுகிற அந்த ஒன்றான மெய் தேவனான யெகோவா தேவனோ, அல்லது அவரின் குமாரனான இயேசு கிறிஸ்துவோ கிடையாது, மாறாக இந்த பிரபஞ்சத்தின் தேவனான சாத்தான் தான் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஏனென்றால் சவுல் போன்ற உதாரனங்களை வைத்து என்னை சொல்லி தங்களை பேரிய நீதிமான் என்றும் நியாயாதிபதி என்றும் முடிவு செய்தி இருக்கிறீர்கள் போல். என்னை நியாயம் தீர்க்க தேவன் இருக்கிறார், உங்களை போன்ற சுய நீதியில் பிரியப்படுகிறவர்கள் தேவை இல்லை என்பதை கூற விரும்புகிறேன்.

இனியும் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுத இந்த தளத்தில் வர முயற்சி செய்யாதீர்கள்.



http://kovaibereans.activeboard.com/index.spark?aBID=128972&p=3&topicID=36868277

__________________

"உம்முடைய‌ வசனமே சத்தியம்." யோவான் 17:17



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

VEDHAMAANAVAN WROTE:
////தங்களின் அத்துமீறலான ப‌திலும் சற்றும் நாகரீமற்ற வார்த்தைகள் (திரியின் தலைப்பு "க‌ள்ள‌ ஆசாமிக‌ள்!! இது  என்ன  சகோதரரே? உங்கள் பெயரை நீங்களே திரியின் தலைப்பாக் வைத்திருக்கிறீர்கள்!) தங்களின் உண்மை நிலையும் எந்த ஆண்டவன் தங்களிடம் பேசுகிறான் என்பதையும் தெளிவு படுத்தியிருக்கிறது.///

காம் டவுன்  சகோதரர்  அவர்களே! உணர்ச்சி வசப்பட வேண்டாம்! 
 

இது  என்னுடைய  பதிவு  /ஆதியில் இருந்து நடந்தது என்ன? என்பதை  தேவன் எனக்கு சரியாக அனேக வெளிப்பாடுகள் மூலம் புரிய வைத்திருந்தாலும் அதை எழுத்தில் கொண்டுவர என்னால் முடியவில்லை.//

இது உங்கள் பதிவு:
//க‌ள்ள‌ ஆசாமிக‌ள்!!
இவ‌ர்க‌ள் எந்த‌ ஆவியில் இந்த‌ வெளிப்பாடுக‌ளை பெறுகிறார்க‌ள் என்று தெரிய‌வில்லை. மெய்யாக‌வே தேவ‌னிட‌த்திலிருந்து தான் வ‌ருகிற‌து என்றால், எழுத்து வ‌டிவ‌த்தில் கொண்டு வ‌ர‌ அப்ப‌டி என்ன‌ த‌ட‌ங்க‌ள் என்று புரிய‌வில்லை.//  
 
நீங்கள் யாரை குறித்து எழுதுகிறீர்கள் என்பது குழந்தைக்கு கூட புரியுமே! ஏதோ யாரையுமே குறை சொல்லாத ஒரு உத்தமனை குறை சொல்லிவிட்டதுபோல் எழுதுகிறீர்கள். அதாவது உங்கள் கொள்கைப்படி  நேரடியாக குத்தகூடாது மறைந்திருந்து பின்னால் வந்து தெரியாமல்  குத்தவேண்டும் என்று சொல்கிறீர்கள் அப்படியா?  

தளம் முழுவதும் தேவ ஊழியர்களை நேரடியாக பெயர் சொல்லி தாக்கி  எழுதிக் கொண்டு இருப்பது உங்கள் தளத்தில்தான். சும்மா ஒரு சாம்பிளுக்கு உங்களை  அதுபோல் குற்றப்படுத்தினால் எப்படியிருக்கும் என்று உங்களுக்கு உணர்த்துவதற்காகவே அப்பதிவை எழுதினேன் மனதில் ரொம்ப வலிக்கிறதல்லவா அதுபோலத்தானே மற்ற ஊழியர்களும்!
 
 
போன்ற தலைப்புகளில்  தளம் முழுவதும் தேவ உழியர்களை  பெயர் சொல்லி குறைகூறி தீர்க்கிறீர்களே மற்றவர்களுக்கு எவ்வளவு வலிக்கும்? உலகில் உள்ள எல்லா ஊழியர்களையும் குறைசொல்லி விட்டால் நாம்  முன்னுக்கு வந்துவிடலாம் என்று நக்கீரன் பாணியில் செயல்படுகிறீர்களா?  
 
"உங்களை நீங்கள்  நேசிப்பதுபோல பிறரையும்  நேசியுங்கள்" அது ஒன்றுபோதும்!  
 

-- Edited by SUNDAR on Thursday 8th of July 2010 08:00:38 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 38
Date:
Permalink  
 

இந்த தலைப்புகள் மாத்திரமே தங்களின் கண்கன்களுக்கு தெரிந்திருப்பது வியப்பாக தான் இருக்கிறது. இதில் உள்ளவர்களை தாங்கள் வேண்டுமென்றால் தேவ ஊழியர்கள் (எந்த தேவனுக்கு என்று தெரியவில்லை) என்று வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் இவர்கள் எப்படி நாறி போயி இருக்கிறார்கள் என்று அங்கே அந்த பதிவுகளில் உள்ள தொடுப்புகளில் போய் பாருங்கள். தலை சாய்க்க இடம் இல்லை என்று சொன்ன இயேசுவின் நாமத்தினால் ஜனங்கலை கொள்ளை அடித்து பரம்பரை பரம்பரையாக உட்கார்ந்தும் என்ன முடியாத அலவிற்கு சொத்தும், சுகமும் வைத்து வாழும் இவர்களுக்கு பரிந்து பேசுகிறீர்கள் என்று புரிந்து போய் விடும். வெளி வேஷம் இட்டவர்களின் சாயம் அந்த நாடுகளில் வெளுத்துக்கிட்டு தான் இருக்கிறது என்பது இந்த ஓநாய்களின் சாயம் வெளுத்து வருவதை வைத்து புரிந்துக் கோல்வீர்கள்!!

வேதத்தில் பவுல் எப்படி பேதுருவின் வேஷத்தை கூச்சலிட்டு சொல்லுகிறாரொ, நாங்களும் அதையே செய்து வருகிறோம். இவர்களை தேவ ஊழியர்கள் என்று சொல்லுவதால் உங்களுக்கு ஒரு வேளை நாங்கள் இப்படி வெளிச்சம் போட்டு காட்டுவதால் கஷ்டமாக இருந்தால் வாசிக்காதீர்கள்!!

1500 பதிவுகளுக்கு மேல் தந்திருந்தும் அதில் உள்ள சத்தியங்களை எல்லாம் விட்டு விட்டு இந்த தலைப்புகள் மாத்திரம் உங்கள்  பார்வையில் இருப்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது!!



__________________

"உம்முடைய‌ வசனமே சத்தியம்." யோவான் 17:17



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

vedamanavan wrote:

1500 பதிவுகளுக்கு மேல் தந்திருந்தும் அதில் உள்ள சத்தியங்களை எல்லாம் விட்டு விட்டு இந்த தலைப்புகள் மாத்திரம் உங்கள்  பார்வையில் இருப்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது!!



  
உங்கள்  1500 பதிவுகளில்  உள்ள  சத்தியத்தை ஓரிரு  வரியில் சொல்லட்டுமா?
 
"உனது இஸ்டப்படி நீ எப்படி வேண்டுமானாலும் வாழலாம் தேவன் உன்னை மட்டுமல்ல  எல்லோரையும் மீட்டுவிடுவார். நரகமில்லை பாதாளமில்லை, தப்புக்கு தண்டனையே  இல்லை,  ஜெபம் வேண்டாம் சுவிஷேசம் வேண்டாம் என்பதுதானே.
 
இதைதான்  இன்று உலகில் தெய்வபயம் இல்லாத எல்லோருமே செய்துகொண்டு இருக்கிறார்கள்.  இதற்க்கு தனியாக ஒரு தளம் அமைத்து கொஞ்சம் வித்தியாசமாக இயேசு கொடுத்த இரட்சிப்பு என்னும் லைசென்ஸ் வழியாக எதை வேண்டுமானாலும் செய்யும் அனுமதி நமக்கு கிடைத்துள்ளது என்று போதிக்கிறீர்கள். நீங்கள் போதிக்காவிட்டலும் தெய்வபயம் இல்லாத எல்லோரும் அதைதான் செய்வார்கள் ஆனால் நீங்கள் சில வசனத்தையும் ஆதாரம் காட்டி சொல்வதால் அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் இடறி உலகத்தார் போல மாற வழி ஏற்ப்படுகிறது அவ்வளவுதான்.
 
சரி போதும் சகோதரரே!  நீங்களும் உங்கள் கூட்டாளியும் யார் என்பது புரிந்துவிட்டது. இனி உங்கள் தளத்தில் வந்து நான்  மூக்கை நுழைக்க மாட்டேன். 
 
நாம் இத்துடன்  விட்டுவிடுவோம்.  நீங்கள் சொல்வதுபோல் எல்லோருக்கும் மீட்பு மற்றும் நரகம் பாதாளம் எதுவுமே  இல்லாமல் பாதாளம்  என்பது   பிரேதகுளியாகவும்,  அவியாத அக்கினி என்பது எருசலேமில் உள்ள குப்பை  மேட்டில் எரியும் அக்கிநியாகவே இருந்துவிட்டு போகட்டும்   
   
அப்படியே   நடந்தாலும், சில வெளிப்பாடுகளை  எழுதி  இந்த தளத்தின் மூலம் நான் பிரதானமாக போதித்துவரும் உண்மை நேர்மை உத்தமம் இவைகளை கைகொண்டு பாவங்களை தவிர்க்கும்படி  போதிப்பதன் மூலம் யாருக்கும்  தீமை எதுவும் ஏற்ப்பட்டுவிட போவது இல்லை மாறாக
 
யோபு 35:8 உம்முடைய பாவத்தினால் உம்மைப்போன்ற மனுஷனுக்கு நஷ்டமும், உம்முடைய நீதியினால் மனுபுத்திரனுக்கு லாபமும் உண்டாகும்.

என்ற வார்த்தைகள்படி சக மனிதர்களுக்காவது நல்லது நடந்து விட்டு போகட்டும். மற்றபடி ஒருவரின் நீதியான நடக்கையினால் யாருக்கும் எந்த பாதிப்பும் நிச்சயம் வரப்போவது இல்லை! 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 38
Date:
Permalink  
 

"உங்கள்  1500 பதிவுகளில்  உள்ள  சத்தியத்தை ஓரிரு  வரியில் சொல்லட்டுமா?
 
"உனது இஸ்டப்படி நீ எப்படி வேண்டுமானாலும் வாழலாம் தேவன் உன்னை மட்டுமல்ல  எல்லோரையும் மீட்டுவிடுவார். நரகமில்லை பாதாளமில்லை, தப்புக்கு தண்டனையே  இல்லை,  ஜெபம் வேண்டாம் சுவிஷேசம் வேண்டாம்"  என்பதுதானே. "

பிசாசு காட்டும் வெளிப்பாடுகளில் பிழைத்து ஜனங்களை மோசம் போக்கி கொண்டிருப்போரு தேவனின் இரட்சிப்பை நிச்சயமாக இப்படி தான் அசட்டையாக புறிந்துக்கொள்வார்கள் என்பது தங்களின் இந்த வரிகள். "உன் இஷ்டப்படி வாழலாம்" என்று நான் ஒரு போதும் சொல்வதில்லை. ஆனால், இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பொருளால் (1தீமோ 2:4,5,6) எல்லாருக்கும் இரட்சிப்பு உண்டு என்று சொல்வதில் தயங்குவதில்லை. அவியாத அக்கினியில் தான் தேவ அன்பு வெளிப்படுகிறது என்று பிசாசின் வெளிப்பாடுகளை வைத்து தேவனை கொச்சை படுத்தும் உங்களை போல் இந்த வசனத்தை புரிந்துக்கொள்ள மாட்டார்கள், சொல்லவும் மாட்டார்கள். இருதயத்தில் நினைவுகளை வாய் பேசும் என்பது தான் வசனம். உங்களை போன்றோர் அவ்வித அன்பின்றி இருப்பதால் தான் அநேகரை தேவன் அக்கினியில் நித்தியத்திற்கும் போட்டு எடுப்பார் என்பது போன்ற என்னங்களும் அதினால் வரும் பிசாசின் கனவுகளை தேவ வெளிப்பாடு என்று தேவனை தூஷித்துக்கொண்டு எழுத துனிந்திருக்கிறீர்கள். இது உங்களுக்கு மாத்திரம் இல்லை உங்களை போல் அநேகர் இந்த தூஷனத்தை செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஜெபிக்க வேண்டாம் என்பது எங்கள் கருத்து அல்ல, தேவ சித்தத்தின் படி ஜெபியுங்கள் என்பது தான் நாங்கள் எங்கள் தளத்தில் சொல்லுகிறோம். அப்படியே, இரட்சிப்பை தான் சுவிசேஷமாக சொல்லி வருகிறோம் அது நிசயமாக உங்களை போல் ஜனங்களின் அழிவை ரசிப்பவர்களுக்கு சுவிசேஷமாக தெரியாது. நாங்கள் நரகத்தை போதிக்காத‌தினால் அது உங்கள் பார்வையில் நாங்கள் சுவிசேஷம் சொல்லவில்லை என்று ஆகிவிட்டது. என்ன செய்வது அவர் அவர் இருதயத்தில் இருப்பது தானே வெளிபடும்.

மேலும் தாங்கள் போதிக்கும் நீதியின் போதகம் எல்லா மார்கங்களும் மதங்களும் சொல்லும் போதகம் தான். அது நால் தான் பிரமன்னை முதல் தேவனாக உங்களால் தைரியமாக எழுத முடிகிறது. இப்படி எல்லாம் தேவ ஞானம் உள்ள உங்களிடம் எந்த தேவன் வெளிப்பாடுகளை தருகிறான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது.

உங்கள் தளத்தில் எழுதுவதில்லை ஆனால், எல்லா தேவ தூஷனங்களும் என் தளத்தில் நிச்சயமாக எதிர்த்து எழுதப்படும். வெளிப்பாடுகள் தரிசனங்கள் உட்பட. தேவ வெளிச்சம் மக்கள் மேல் வந்துக்கொண்டிருக்கும் காலம் இது, பிசாசின் தந்திரமான தரிசனங்கள் செயலிழந்துக்கொண்டிருக்கும் காலம் இது. மீண்டும் அனைவருக்கும் இரட்சிப்பு என்று தான் வேதம் சொல்லுகிறது என்று என் சுவிசேஷ பணியை செய்கிறேன்.



-- Edited by vedamanavan on Thursday 15th of July 2010 05:31:55 PM

__________________

"உம்முடைய‌ வசனமே சத்தியம்." யோவான் 17:17



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

சகோதரர்  அவர்களே உங்கள் பதிவுகளுக்கு எல்லாம் பதில்தர எனக்கு விருப்பம் உண்டு ஆனால் நாம் சுற்றிசுற்றி மீண்டும் அதே இடத்தில்தான் வந்து நிற்ப்போம். நம்மால் ஒரு முடிவுக்கு வரவே முடியாது.   
 
VEDAMANANVAN WROTE:
///"உன் இஷ்டப்படி வாழலாம்" என்று நான் ஒரு போதும் சொல்வதில்லை.  ////
 
சமீபத்தில்  "எட்டாம்  வகுப்புவரை  யாரையும் பெயில் பண்ண கூடாது" என்றொரு சட்டம் வந்துள்ளது  என்பது   தங்களுக்கு தெரியும். இந்த திட்டம் முன்புறம் பார்பதற்கு யாரையுமே பெயிலாக்க விரும்பாத உத்தமர்கள் செய்வது போல தோன்றினாலும் அதன் பின்புறம் "நீ  ஸ்கூலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் பரீட்சை எழுதினாலும்  எழுதாவிட்டாலும் படித்தாலும் படிக்கவிட்டாலும் நீ நிச்சயம் பாஸ்" என்று சொல்லி மாணவர்களை கெடுப்பது போன்ற செயலே.

அவ்வாறு சட்டம்  சொன்னால் அதன் பொருள்
என்ன?

நீ எப்படி வேண்டுமானாலும் உன் இஸ்டப்படி நட ஆனாலும் நீ பாஸாகி
விடலாம் என்பதுதானே? அதுபோல்தானே உங்கள் கருத்து இருக்கிறது!
 
ஓரிரு வசனத்தை பிடித்துகொண்டு "எல்லோருக்கும் மீட்பு" என்று சொல்லும்  நீங்கள், சுமார்  ஐம்பது அறுபது வசனம் சொல்லும் "துன்மார்க்கருக்கு தண்டனை உண்டு" என்றும் அதுவும் "நித்திய ஆக்கினை உண்டு" என்றும் சொல்லும் வசனத்தை ஏன் கருத்தில் கொள்வதில்லை? அவ்வசனமும் வேதத்தில்தானே இருக்கிறது!   

சங்கீதம் 9:17 துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.
 
மாற்கு 9:43  நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.

VEDAMANANVAN WROTE:
///ஆனால், இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பொருளால் (1தீமோ 2:4,5,6) எல்லாருக்கும் இரட்சிப்பு உண்டு என்று சொல்வதில் தயங்குவதில்லை. ////


தாங்கள் சொல்வதுபோல் எல்லோருக்கும் மீட்பு என்ற திட்டம்
தேவனிடத்தில் உண்டு. அதுபற்றிய முழு விளக்கமும் என்னிடம் உண்டு அதைப்பற்றி   நான் தனியான ஒரு தொடுப்பில் தருகிறேன் அங்கு  விவாதிக்கலாம்
 

VETHAMANAVAN WROTE:
////அவியாத அக்கினியில் தான் தேவ அன்பு வெளிப்படுகிறது என்று பிசாசின் வெளிப்பாடுகளை வைத்து தேவனை கொச்சை படுத்தும் உங்களை போல் இந்த வசனத்தை புரிந்துக்கொள்ள மாட்டார்கள், சொல்லவும் மாட்டார்கள். இருதயத்தில் நினைவுகளை வாய் பேசும் என்பது தான் வசனம்.////
 
தேவன் அன்பானவர்தான் என்பதில் எந்தசந்தேகமும் இல்லை அவர் யாரையும் நரகத்துக்கு அனுப்ப விரும்புவதும் இல்லை என்பதும் உண்மையே. அனால்  இந்த  நித்தய அக்கினி பிசாசுக்காக ஆயத்தப்படுத்தபட்டது என்று வேதம் சொல்கிறது
 
மத்தேயு 25:41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.

அங்குதான் நானும் போவேன் என்று பிடிவாதம் பிடிப்பவர்களை அன்பான தேவன் அவர்களது விருப்பபடியே பிசாசுடன் சேர்த்து அங்கு அனுப்பிவை க்கிறார் அவ்வளவுதான். அவர் விரும்பி அதை செய்யவில்லை!   
  
VEDAMANAVAN WROTE:  
///உங்களை போன்றோர் அவ்வித அன்பின்றி இருப்பதால் தான் அநேகரை தேவன் அக்கினியில் நித்தியத்திற்கும் போட்டு எடுப்பார் என்பது போன்ற என்னங்களும் அதினால் வரும் பிசாசின் கனவுகளை தேவ வெளிப்பாடு என்று தேவனை தூஷித்துக்கொண்டு எழுத துனிந்திருக்கிறீர்கள். இது உங்களுக்கு மாத்திரம் இல்லை உங்களை போல் அநேகர் இந்த தூஷனத்தை செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.////
 
உம்முடைய வேதமே சத்தியம் என்று நீங்கள் நம்பும் வேதம் சொல்லும் வசனத்தை கருத்தில் கொண்டுதான் அதுபற்றி சொல்கிரோமேயன்றி அந்த அவியாத அக்கினிக்கு  யாரும் போகவேண்டும் என்பது எங்களது விருப்பம் அல்ல  சகோதரரே!
 
வெளி 20:௧௦ அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.
15. ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.

இங்கு  வசனம் மிக தெளிவாக இரவும் பகலும் சதா காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள் என்று சொல்கிறது
எனவே இதை நாங்கள் நம்பிதானே ஆகவேண்டியுள்ளது!
 
VEDAMANAVAN WROTE
////ஜெபிக்க வேண்டாம் என்பது எங்கள் கருத்து அல்ல, தேவ சித்தத்தின் படி ஜெபியுங்கள் என்பதுதான் நாங்கள் எங்கள்தளத்தில் சொல்லுகிறோம். //
 
I தீமோத்தேயு 2:௧ நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;
பிலிப்பியர் 4:௬ நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

மேலே சொல்லப்பட்ட வசனங்களில் எல்லோருக்காகவும் எல்லாவற்றை குறித்தும் வேண்டுதல் விண்ணப்பம் செய்ய வேண்டும்  என்று எழுதப்பட்டுள்ளது   நாம்  நமது கடமையை செய்வோம் தேவன் தனது சித்தப்படி எது தேவையோ அதை நிறைவேற்றட்டும். நமக்கு தேவனின் சித்தம்  முழுவதும் தெரியாது எனவே எல்லாவற்றையும் குறித்து ஜெபிப்பதில் எந்த தவறும் இல்லை! 
 
VEDAMANAVAN WROTE
///மேலும் தாங்கள் போதிக்கும் நீதியின் போதகம் எல்லா மார்கங்களும் மதங்களும் சொல்லும் போதகம் தான். அது நால் தான் பிரமன்னை முதல் தேவனாக உங்களால் தைரியமாக எழுத முடிகிறது. இப்படி எல்லாம் தேவ ஞானம் உள்ள உங்களிடம் எந்த தேவன் வெளிப்பாடுகளை தருகிறான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது.////
 
எல்லா மார்க்கமும் சொல்லும் அதே நீதி நேர்மைதான் வேதாகமமும் சொல்கிறது கூடுதலாக சொல்லும் முக்கியமான ஓன்று "பாவிகளுக்கான இயேசுவின் மரணம் அதன் மூலம் நித்திய கிடைக்கும் ஜீவன்". அனால்அது அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு மட்டுமே பலிக்கும் என்று  வசனம் தெளிவாக சொல்கிறது.  
 
ரோமர் 3:௨௨ அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.

அவர் கொடுக்கும் இரட்சிப்பை பெற்றுக்கொள்ள கவலையற்று இருப்பவர்களுக்கு தண்டனை உண்டு என்றும் வேதம் திட்டமாக  எச்சரிக்கிறது

எபிரெயர் 2:4
   இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால்
தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.

VEDAMANAVAN WROTE 
 ////உங்கள் தளத்தில் எழுதுவதில்லை ஆனால், எல்லா தேவ தூஷனங்களும் என் தளத்தில் நிச்சயமாக எதிர்த்து எழுதப்படும்.///
 
இனி அதைப்பற்றி நான் கவலைப்பட போவது இல்லை சகோதரரே. தங்கள் எதிர்பார்க்கும் எல்லோருக்கும் மீட்பு என்ற தேவசித்தம் நிறைவேறவேண்டும் என்பதுதான் எனது ஆவலும் கூட,  அதற்காகவே தேவன்கொடுத்த் வெளிப்பாட்டின் அடிப்படையில் நானும்  பிரயாசப்படுகிறேன். அது  நிறைவேற நான் எனது பணியை தொடர்ந்து செய்கிறேன்.      


-- Edited by SUNDAR on Thursday 15th of July 2010 09:16:17 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard