இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நீதிமானுக்கு பூமியில் சரிகட்டப்படும்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
நீதிமானுக்கு பூமியில் சரிகட்டப்படும்!
Permalink  
 


நான் மும்பை பட்டணத்தில் பேச்சலராக வசித்தபோது ஆண்டவரை அறிவதற்கு முன்னர் எனக்கு வேண்டியவர்கள் மற்றும் நண்பர்கள் யாராவது பண தேவையால் கஷ்டப்பட்டு என்னிடம் வந்தால் பணம் கையில் இருந்தால் கொடுத்துவிடுவேன் ஒருவேளை கையில் பணம் இல்லை என்றால் அவர்களின் நிலைமையை அனு சரித்து எனது அலுவலகத்தில் இருந்து தவறான வழியில் பணம் எடுத்து கொடுக்கும் வழக்கம் இருந்தது.

அலுவலகத்தில் இருந்து கணக்கில் காட்டாமல் எவ்வளவோ லட்ச கணக்கில் பணம் எடுக்கு வாய்ப்பு இருந்தும் எனக்கென்றோ எனது பிற்க்காலத்துக்கென்றோ  எந்த பணமும் சேர்த்து வைக்காமல்  அடுத்தவர்களின் தேவைக்கு மட்டும் பணம் எடுத்து உதவி வந்தேன்.

அந்நேரங்களில் குடியிருக்க வீடு இல்லாமல் கஷ்டப்பட்ட ஊரில் இருந்த எனது குடும்பத்தினர் ஒரு இடம் வாங்கி வீடுகட்ட போவதாகவும் அதற்க்கு முடிந்த அளவு பணம் அனுப்பும்படியும் என்னிடம் கேட்டுகொண்டனர். அவர்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு எனது கையில் இருந்த பணம் மற்றும் எனது  அலுவலத்தில் இருந்து தெரியாமல் சுமார்  20000௦௦௦௦/- எடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டேன். (1990 களில் அப்பணம் ஒரு பெரிய தொகையே) வீட்டிற்கும் எனக்கும் அதிக போக்கு வரத்து இல்லாத காரணத்தால் எனக்காக என்று அல்லாமல் யாருக்கோ உதவி செய்கிறோம் என்ற நோக்கில் அதை செய்தேன்.
 
சுமார் 15 வருடங்கள் கழித்து எனது சகோதரர்களுக்கிடையே பாகம் பிரிக்கும்போது அந்த வீடு கிரயம் போடப்பட்டு அதன் பங்கு  தொகையாக எனது கையில் ரூபாய் 80000௦௦௦/- கொடுக்கப்பட்டது. அந்த பணம் கையில் வரும்போதே ஆண்டவர் என்னிடம் "இந்த பணத்தில் ரூபாய் 50000௦௦௦௦/- எடுத்து கொண்டு மும்பையில் நீ வேலைசெய்த முதலாளியிடம் சென்று கொடுத்து, நான் உங்கள் வங்கியில் இருந்து பணம் திருடினேன் அதை வட்டியோடு சேர்த்து திரும்ப தருகிறேன் என்று சொல்லி மன்னிப்பு கேட்டு கொடுத்துவிடு" என்று கட்டளைஇட்டார். நான் அவர் என்னை போலீசில் பிடித்து கொடுத்துவிடுவாரோ என்று பயந்தேன் ஆனால் ஆண்டவர் அப்படி எதுவும் நடக்காமல் நான் பார்த்துகொள்கிறேன் நீ போ என்றார் அல்லது அப்படி உனக்கு நேரே சென்று கொடுக்க பயமாக இருந்தால் ஒரு DD எடுத்து மன்னிப்பு  கேட்டு  கடிதம்எழுதி அனுப்பிவிடு என்று தெளிவாக என்னோடு பேசினார்.
 
இதைப்பற்றி எனது மனைவியிடமும் எனது அப்பா அம்மாவிடமும் சொன்னபோது அவர்கள் "இது  உனது மன பிரம்மை, இயேசு  நமக்காக மரித்து  தெரியாத காலங்களில்  செய்த பாவங்கள் எல்லாவற்றையும் அன்றே மன்னித்துவிட்டார் எனவே இப்பொழுது திருப்பிகொடுக்க வேண்டிய தேவை இல்லை" என்று சொல்லி திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். என் மனைவியோ நீங்கள் தனியாக இருந்தபோது செய்த தவறுக்கு இப்பொழுது பணம் எதுவும் கொடுக்க முடியாது அந்த பணத்தை கொண்டுவந்து என்னிடம் மொத்தத்தையும் கொடுத்துவிடவேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார்.
 
எனது அப்பாஅம்மாவை சுலபமாக சமாளித்துவிடலாம் ஆனால எனது மனைவியை சமாளிக்க முடியாது என்ற காரணத்தால் அவளிடம் பலமுறை எடுத்து சொல்லியும் பலனில்லாமல் இறுதியில் பணத்தை அவளிடம் கொடுத்துவிட்டு ஆண்டவரிடம் "ஆண்டவரே எனக்கு பணத்தை திருப்பி கொண்டு கொடுப்பதில் எந்த வருத்தமும் இல்லை ஆனால் எனது நிலைமையிநிமித்தம் மன்னித்தருளும்" என்று ஜெபித்து விட்டு விட்டுவிட்டேன். ஆகினும் ஆண்டவர் இது சம்பந்தமாக பலமுறை எனக்கு நினைபூட்டிகொண்டே இருந்தார். நானும் என் மனைவியிடம் அதைப்பற்றி சொல்லிக்கொண்டே இருந்தேன்.  அவள்  அதை அலட்சியம் செய்துவிட்டாள்.
 
மீதம் அடுத்த பதிவில் பார்க்கலாம்....  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

இந்நிலையில் எங்கள் வீட்டு பக்கத்தில் குடியிருந்த பல பெண்கள் ஓரிடத்தில் புறம் போக்கு நிலம் குறைந்த விலையில் கிடைப்பதாகவும் அதை வாங்கும்படி  என் மனைவியை ஊக்குவிக்க, அதில் ஆசைப்பட்ட அவள் சுமார் ஒரு கிரவுண்டு புறம்போக்கு நிலத்தை ரூபாய் 80000௦௦௦௦/- கொடுத்து வாங்க முற்ப்பட்டர்.  "ஒரு சென்ட் இடம் வாங்கினாலும் நல்ல இடத்தை வாங்குவோம் இந்த இடம் வேண்டாம்" என்று சொல்லி நான் எவ்வளவோ தடுத்தேன் ஆனால் எனது வார்த்தை அங்கு எடுபட வில்லை. இறுதியில் ஒரு  கட்சிகாரனிடம் (அதுவும் அவன் ஒரு AG சபை விசுவாசி) பணத்தை கொடுத்துவிட்டோம்.
 
சுமார்  ஆறு மாத காலத்துக்குள் அதே இடத்தை பலபேர் வாங்கியிருப்பதாக அங்கு வந்து எங்களிடம் பிரச்னைக்கு வரவே.  வீண் பிரச்சனை வேண்டாம் என்று எண்ணி அவனிடம் போய் பணத்தை திருப்பிதருபடி கேட்டோம். தருகிறேன் என்று சொன்ன அவன் வருட கணக்கில் ஏமாற்றவே, அவன் எழுதி கொடுத்த பத்திரம் மற்றும் வங்கியில் இருந்து திரும்பிய செக் எல்லாம் என்னிடம் இருந்தது அதை வைத்த காவல் நிலையத்தி புகார்  கொடுக்கலாம் என்று கருதினேன் ஆனால் வேதத்தில் உள்ள இந்த வசனம் என்னை தடுத்தது.
 
I கொரிந்தியர் 6:1 உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல், அநீதக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன?

ஒரு கிறிஸ்த்தவ  சகோதரனாகிய அவனுடன் உண்டான வழக்குக்கு போலீசிடம் போக எனக்கு மனம் வரவில்லை. சபை பாஸ்டரிடம் கடித்தம் மூலம் தெரிவித்தேன். அவரும்  அந்த குடும்பத்தினரை அழைத்து புத்தி சொல்லியும் கேட்கவில்லை.  
 
தனி வீடு கார் போன்ற நல்ல வசதியான நிலையில் இருக்கும் அவர்களிடம் எப்படியாவது பணத்தை வாங்கிவிடவேண்டும் என்று அவன் வீட்டுக்கு போனபோது அவனது தகப்பனார் (வங்கியில் வேலை பார்க்கிறார்) என்னிடம் வந்து "ஆண்டவராகிய இயேசு என்ன சொல்லியிருக்கிறார்?  தவறு செய்தவனை மன்னிக்க சொல்லியிருக்கிறார்.  அவர் வார்த்தைப்படி வாழ்கிறேன் என்று சொல்லும் நீ  என்னவென்றால்,  தெரியாமல் எனது மகன் செய்த தவறை மன்னிக்காமல்  இப்படி வந்து வந்து பணம் கேட்கிறாரே, நீ ஆண்டவர் வார்த்தைகள்படி சரியாக நடக்கிறாயா? என்று என்னை கேட்டார். (மனுஷர்கள் நியாயத்தை பாருங்கள்)  அந்த வார்த்தை என்னை மிகவும் பாதித்து விட்டது. ஒரு பிசாசு என்னை பார்த்து   இப்படி கேடடு சோதிப்பதாக எடுத்துகொண்டு  அதற்க்கு வெட்கம் உண்டாகும்படி அந்த பணத்தை வேண்டாம் என்று மன்னித்து விட்டுவிட்டேன்.     
  
அதன் பிறகு எனது மனைவியின் மிகப்பெரிய முயற்ச்சிகளுக்கு பின் அவன் 30000௦௦௦௦/- ரூபாயை திருப்பி  கொடுத்துவிட்டு, நீங்கள் கிறிஸ்த்தவர் என்கிறபடியால் இந்த பணத்தயாவது  திருப்பி கொடுத்தேன், இத்தோடு முடித்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டான். கர்த்தர் மும்பையில் கொடுக்க  கட்டளையிட்ட பணமாகிய  ரூ  50000௦௦௦௦/- அப்படியே அங்கு போய்விட்டது.  
 
இதை நான் எழுதுவதற்கு காரணம்,  தேவன் எதை செய்ய சொல்கிறாரோ அதை உடனே  செய்துவிடுவது நல்லது. தேவன் எதை கொடுக்க சொல்லியிருக்கிராரோ அதை கணக்கு பார்த்து கொடுத்து விடுவது நல்லது.  இல்லையேல் அது  உங்களிடம் இருந்து எவ்விதத்திலாவது பிடுங்கப்படும். அப்பொழுது ஐயோ ஆஸ்பத்திரிக்கு செலவாகிறதே அவன் ஏமாற்றிவிட்டானே  என்று  புலம்புவதில் பயனில்லை. தேவன் காரணமின்றி எதையும் யார் கையில் இருந்தும் பிடுங்கமாட்டார்.
 
தேவனுக்கு கொடுக்கவேண்டியவற்றை வஞ்சித்து எடுத்து கொள்வதோ அல்லது பிறரை ஏமாற்றி நோகடித்து  சம்பாதிப்பதோ மிகுந்த மன வேதனையுடன் நமது கரத்தில் இருந்து  கட்டாயமாக பிடுங்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு   
 
மாற்கு 12:17  : இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் (சரியாக)  செலுத்துங்கள்  
 
இதற்க்கு சம்பதமுள்ள  வேதாகம சம்பவம் ஓன்று பார்க்கலாம்...
 


-- Edited by SUNDAR on Thursday 8th of July 2010 11:21:19 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

கர்த்தராகிய  தேவன் இஸ்ரவேல் ஜனங்களை எகித்து தேசத்திலிருந்து கானானுக்கு அழைத்து வந்த போது வயல்களில் வெள்ளாமை செய்வது பற்றி ஒரு கட்டளை கொடுத்தார்.
 
லேவியராகமம் 25: 3. ஆறு வருஷம் உன் வயலை விதைத்து, உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழித்து, அதின் பலனைச் சேர்ப்பாயாக.
4 ஏழாம் வருஷத்திலோ, கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வு தேசத்திற்கு இருக்கவேண்டும்; அதில் உன் வயலை விதைக்காமலும் உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழிக்காமலும் தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காதேவிட்ட திராட்சச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பாயாக; தேசத்துக்கு அது ஓய்வுவருஷமாயிருக்கக்கடவது.

என்பதே அந்த கட்டளை.
 
ஆனால் இஸ்ரவேல் தேவனின்கட்டளையை மறுபாடாக்கி எல்லா வருஷங்களிலும்
பயிரிட்டு
அவரின்   உடன்படிக்கையை முறித்தார்கள்
 
ஏசாயா 24:5 தேசம் தன் குடிகளின் மூலமாய் தீட்டுப்பட்டது; அவர்கள் நியாயப் பிரமாணங்களை மீறி, கட்டளையை மாறுபாடாக்கி, நித்திய உடன்படிக்கையை முறித்தார்கள்.

இவை எல்லாவற்றையும் கவனித்து சரியாக கணக்கில் வைத்திருந்த கர்த்தர், ஒருநாள் எல்லா இஸ்ரவேலரையும்  பாபிலோனுக்கு சிறைகளாக போகும்படி அனுப்பி "நீங்கள்  எழுபது வருடங்கள் அடிமையாக   பாபிலோனில் இருக்க வேண்டும்" என்று எரேமியா தீர்க்கன்  மூலமாக சொல்லிவிட்டார்  
 
எரேமியா 29:10 பாபிலோனிலே எழுபதுவருஷம் நிறைவேறினபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன்
 
இந்த எழுபது வருட கணக்குக்கு காரணம்  எண்ண  என்று ஆராய்ந்து பார்த்தால் அதற்க்கு பதில் கீழ்க்கண்ட வசனம் சொல்கிறது.
 
 II நாளாகமம் 36:21 கர்த்தர் எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறும்படிக்கு, தேசம் தன்னுடைய ஓய்வு வருஷங்களை இரம்மியமாய் அநுபவித்துத் தீருமட்டும், அது பாழாய்க்கிடந்த நாளெல்லாம், அதாவது, எழுபதுவருஷம் முடியுமட்டும் ஓய்ந்திருந்தது.

அதாவது அவர்கள் எத்தனை ஓய்வு வருஷங்களில் வயற்க்காட்டுக்கு ஒய்வு கொடுக்காமல் வெள்ளாமை செய்தார்களோ அத்தனை ஒய்வுவருஷங்கள் வயல்கள் ஒய்ந்து இருக்கும்படி அவர்கள் நாடு கடத்தபட்டார்கள் என்பதே.   
 
உலகில் உள்ள அனேக கணக்குபுலிகளைவிட நமது ஆண்டவர் கணக்கு பார்ப்பதில் வல்லவர். அவர் போடும் கணக்கு ஒருபோதும் தப்பாது.  ஆண்டவரையும் அவரது வார்த்தைகளையும் அவரிட்ட கட்டளையையும்  அறிந்த தேவ பிள்ளைகள்  அவர் சொன்னபடி சரியாக செய்யாமல் பிறரை ஏமாற்றியோ அல்லது எய்த்தோ அல்லது வஞ்சகமாகவோ பணம் சம்பாதித்தால் அதற்க்கு ஈடான காரியம் அவர்களிடமிருந்து 
ஒரு நாளில் கணக்குபோட்டு  நிச்சயம் பிடுங்கப்படும்!   
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard