இன்றுவரை நான் கேட்ட கிறிஸ்த்தவ பாடல்களில் எனது மனதை மிகவும் கவர்ந்த பாடல் "அழைப்பின் குரல் கேட்டேன், என்ஆண்டவர் என அறிந்தேன்" என்ற பாடலே
அழைப்பின் குரல் கேட்டேன் - என் ஆண்டவர் என உணர்ந்தேன் அருகினில் தயங்கி நடை பயின்றேன் பின்னே வா என முன் சென்றார்
1. அறிவில் குறைந்தவன் நான் அன்றோ அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் அறிந்தவர் செருக்கினை அகற்றிடவே - பின்னே
2. வலிமை குறைந்தவன் நான் அன்றோ அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் வலியவர் கொடுக்கினை வதைத்திடவே - பின்னே
3. குறைகள் நிறைந்தவன் நான் அன்றோ அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் கருவில் இருந்துன்னைத் தெரிந்தவன் நான் - பின்னே
இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் வலிமையான பொருள் நிறைந்ததாகவும், இனிமையான குரலில் மனதை கவரும் விதமாகவும் இருக்கிறது!.
இதில் முக்கியமாக என்னை மிகவும் பாதித்த வரிகள்
"குறைகள் நிறைந்தவன் நான் அன்றோ அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்"
என்ற வரியே!
எந்த ஒரு காரியத்திலும் நிறைவில்லாமல் எதையுமே அரை குறையாக அறிந்து கொண்டு வாழ்வின்மேல் எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் ஏன் வழ்கிறோம் என்றே தெரியாமல் மிகுந்த சோகத்தோடு ஏனோ தானோ என்றொரு வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்த என்னையும் ஆண்டவர் தெரிந்துகொண்டார்!
"எத்தனையோ அறிவில் சிறந்த நிறையுள்ள பெரிய மனிதர்கள், ஞானிகள் உலகில் இருக்கும்போது என்னை போய் ஏன் தெரிந்துகொண்டு அபிஷேகம் செய்து அனேக உண்மைகளை தெரியப்படுத்தினீர்? என்று ஆண்டவரை பார்த்து நானே கேட்பது போலவும்.
அதற்க்கு ஆண்டவர் "கருவில் இருந்துன்னைத் தெரிந்தவன் நான்" எனவே உன்னை பற்றி எனக்கு எல்லாமே தெரியும் பேசாமல்
"பின்னே வா என முன் சென்றார்" என்று பதில் தருவதுபோலவும்
மிக அருமையாக அமைத்துள்ள இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் எனக்கு சலிப்பது இல்லை. எனது செல்போனில் சேவ் செய்து வைத்து அடிக்கடி கேட்பது எனக்கு மிகுந்த ஆறுதலையும் உற்சாகத்தையும் தருகிறது!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)