இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆதி முதல்....


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
ஆதி முதல்....
Permalink  
 


வேதத்தில் அனேக வசனங்கள் தேவனுடைய படைப்பை பற்றி இருக்கின்றன. அவைகளில் எனக்கு கிடைத்த வசனங்களை வைத்து இந்த

தலைப்பில் எழுதியுள்ளேன். பிறகு மேலும் வசனங்களை அறியும் போது அந்த வசனங்களும் இந்த பகுதியில் சேர்க்கப்படும்.

 

ஆதி முதல்....

 

வெறுமையில் முழுமை இருந்தது. முழுமையில் வெறுமை இருந்தது. ஒளியில் இருள் இருந்தது. இருளில் ஒளி இருந்தது. சூனியத்தில் பிரம்மம் இருந்தது. பிரம்மத்தில் சூனியம் இருந்தது. அமைதியில் இயக்கம் இருந்தது. இயக்கத்தில் அமைதி இருந்தது.

(இந்த இடத்தை சென்று அடைவதே புத்த, ஜைன, இந்து ஞானிகள், சித்தர்கள்

முதலானோரின் நோக்கமும், வழியாகவும் இருக்கிறது)

இதை சூனியம் (நெகடிவ்) என்று பெளத்தர்களும்

பிரம்மம் (பாஸிடிவ்) என்று இந்து ஞானிகளும்

பேரொளி என்று சில ஞானிகளும்

பேரின்ப நிலை என்று சிலரும்

நாதம் என்று சிலரும்

இயற்கை என்று சிலரும்

பலவாறாக சொல்கின்றனர். இந்த நிலைமை கீரிடம் (முடி) என்று காபாலா என்று சொல்லப்படும் யூத மத பிரிவால் சொல்லப்படுகிறது.

 

இந்த நிலையை அடைய முயன்றவர்கள், அடைந்ததாக சொல்லப்பட்டவர்க அதை அடைந்தார்களா இல்லையா என்பது எனக்கு தெரியாது. அப்படி ஒரு நிலைமையை அடைய முடியுமா என்பதும் எனக்கு தெரியாது. ஒரு யூத, கிருத்துவ, இஸ்லாமிய சமயத்தவருக்கும் இந்த பகுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் இதற்கு அடுத்த நிலையான தேவன் என்ற பகுதியிலிருந்தே ஆரம்பம் செய்கின்றனர். அதாவது அதற்கு முன்னர் என்ன என்பது தேவனுக்கே தெரியும். அதை பற்றி ஆராயக் கூடாது என்பதே இவர்கள் சொல்வது.

 

யோபு 37.23. சர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கக்கூடாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகா நீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார்.

தேவனுடைய முதல் நிலை :

உன்னதப்பாட்டு 5.11. அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருளாயும், காகத்தைப் போல் கருமையாயுமிருக்கிறது.

(ஒளியும், இருளும்அவரே, வெறுமையும், முழுமையும்அவரே, இயக்கமும், அமைதியும்அவரே)

இந்த நிலை தேவன் தூங்கும் நேரம் என்று சொல்லப்படுகிறது.

இந்த புரிய முடியாத நிலை உணர்வு பெற ஆரம்பித்தது.

 

26. இதற்காக நான் விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்; என் நித்திரை எனக்கு இன்பமாயிருந்தது. 



-- Edited by SANDOSH on Friday 9th of July 2010 09:00:16 PM

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

ஏக தேவன் : 

1. ஆதியிலே தானே உண்டான, தன்னை அறிந்த தேவன் ஒருவர் இருந்தார். 

அவர் தன்னைத்தான் அறிந்தார்

14. அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.

தன்னைத்தவிர யாரும் இல்லை,  எதுவும் இல்லை என்று அறிந்தார்

10. நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை.

6. நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.

8. இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.

(அல்பா, ஒமேகா - கிராப் படம் வரைபவர்கள் அதில் எக்ஃஸ் ஆக்ஸிஸ், ஒய் ஆக்ஸிஸ் என்று குறிப்பிட்டு அதன் தூரத்துக்கு எல்லை கிடையாது என்று குறிக்க ஒரு ஏரோ மார்க் போடுவார்கள். இந்த எல்லையில்லா கிடை மட்டும் நெடுக்கு கோடுகளே அல்பா, ஒமேகா எனப்படும். தேவன் இடம் மற்றும் காலத்தை உண்டாக்கினார்)

அவருக்கு முன்பு என்று ஒரு காலம் இருந்ததில்லை. அவரே காலத்தை உண்டாக்கினார். அவர் ஆதி சக்தியானார்.

13. நாள் உண்டகாததற்கு முன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்?.

தன்னுடைய உணர்வு நிலையை தக்க வைத்து கொள்ள வேண்டுமானால் தேவன் பல்வேறு உயிர்களை படைத்தாக வேண்டும். ஆதலால் அவருக்குள் உயிர்களை படைக்க வேண்டும் என்ற ஆசை உருவானது.

அவர் இச்சா சக்தியானார்.

இதை குறிக்கும் வசனங்கள் நேரடியாக இல்லை அல்லது கிடைக்கவில்லை. ஆனால் உயிர்களை படைத்த பிறகு ஏழாவது நாளில்

ஆதி 2.2. தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.

3. தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

இங்கே ஓய்வு நாள் என சொல்லப்பட்டுள்ளது (உயிர்களை படைத்ததினால் அவர் சோர்ந்து போய் விட்டு பிறகு ஓய்வு எடுப்பது போல) உண்மையில் இந்த நாள் கொண்டாட்டத்தின் நாள் என பொருள்படும். இந்த நாள் தேவனுடைய மனமகிழ்ச்சியின் நாள். படைப்பை குறித்த அவர் ஆசைகள் நிறைவேறின நாள். அவர் ஒருவேளை ஆனந்த நடனம் கூட ஆடியிருக்கலாம்.

ஏசாயா 40:28 பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது.

4. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.

தான் நினைத்த ஒவ்வொன்றையும் தேவன் படைத்த பிறகு அதைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தார்.

தேவன் பல ஆத்துமாக்களை உருவாக்கி. அவற்றை தன்னுடைய ஆவியினால் நிரப்ப ஆசை கொண்டார்.  இதுவே அவரது மிகப் பெரும் ஆசையாக இருந்தது. இந்த ஆசையை நிறைவேற்றவே தான் உணர்வு நிலை பெற்றதாக தேவன் சொல்கிறார்.

25. நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்.

26. இதற்காக நான் விழித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்; என் நித்திரை எனக்கு இன்பமாயிருந்தது. 



-- Edited by SANDOSH on Friday 9th of July 2010 08:58:48 PM

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

ஞானம் :

அவர்தனக்குள்ளிருந்தஞானத்தைகண்டுகொண்டார். (உள்ளுணர்வு)

அவர்அளவில்லாஆவியைஉடையவராகஇருந்தார்.

அவருடையஞானம்அளவிடப்படமுடியாதது. ஞானமானதுகர்த்தரின்பெண்சக்தியாகும்.. அவர்தன்னுடையஞானத்தோடுஆலோசனைசெய்தார்.

13. கர்த்தருடையஆவியைஅளவிட்டு, அவருக்குஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப்போதித்தவன்யார்?

யோபு 12.13. அவரிடத்தில்ஞானமும்வல்லமையும்எத்தனைஅதிகமாய்இருக்கும்? அவருக்குத்தான்ஆலோசனையும்புத்தியும்உண்டு.

14.
தமக்குஅறிவைஉணர்த்தவும், தம்மைநியாயவழியிலேஉபதேசிக்கவும்தமக்குஞானத்தைக்கற்றுக்கொடுக்கவும், தமக்குவிவேகத்தின்வழியைஅறிவிக்கவும், அவர்யாரோடேஆலோசனைபண்ணினார்?

11. அவர்நீர்த்துளிகளைமேகத்தில்ஏற்றி, மின்னலினால்மேகத்தைச்சிதறப்பண்ணுகிறார்.
12.
அவர்அவைகளுக்குக்கட்டளையிடுகிறயாவையும், அவைகள்பூச்சக்கரத்தில்நடப்பிக்கும்படி, அவர்அவைகளைத்தம்முடையஞானஆலோசனைகளின்படியேசுற்றித்திரியப்பண்ணுகிறார்.

யோபு 15.7  (யோபுவைபார்த்துஅவர்நண்பர்)  மனுஷரில்முந்திப்பிறந்தவர்நீர்தானோ? பர்வதங்களுக்குமுன்னேஉருவாக்கப்பட்டீரோ?
8.
நீர்தேவனுடையஇரகசியஆலோசனையைக்கேட்டு, ஞானத்தைஉம்மிடமாய்ச்சேர்த்துக்கொண்டீரோ?

ஞானம்சொன்னது :

நீதி8.14. (ஞானம்சொன்னது) ஆலோசனையும்மெய்ஞ்ஞானமும்என்னுடையவைகள்; நானேபுத்தி, வல்லமைஎன்னுடையது.

15. என்னாலேராஜாக்கள்அரசாளுகிறார்கள், பிரபுக்கள்நீதிசெலுத்துகிறார்கள்.

16.
என்னாலேஅதிகாரிகளும், பிரபுக்களும், பூமியிலுள்ளசகலநியாயாதிபதிகளும்ஆளுகைசெய்துவருகிறார்கள்.

22. கர்த்தர்தமதுகிரியைகளுக்குமுன்பூர்வமுதல்என்னைத்தமதுவழியின்ஆதியாகக்கொண்டிருந்தார்.
23.
பூமிஉண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும்அநாதியாய்நான்அபிஷேகம்பண்ணப்பட்டேன்.
24.
ஆழங்களும், ஜலம்புரண்டுவரும்ஊற்றுகளும்உண்டாகுமுன்னேநான்ஜநிப்பிக்கப்பட்டேன்.
25.
மலைகள்நிலைபெறுவதற்குமுன்னும், குன்றுகள்உண்டாவதற்குமுன்னும்,
26.
அவர்பூமியையும்அதின்வெளிகளையும், பூமியிலுள்ளமண்ணின்திரள்களையும்உண்டாக்குமுன்னும்நான்ஜநிப்பிக்கப்பட்டேன்.
27.
அவர்வானங்களைப்படைக்கையில்நான்அங்கேஇருந்தேன்; அவர்சமுத்திரவிலாசத்தைவட்டணிக்கையிலும்,
28.
உயரத்தில்மேகங்களைஸ்தாபித்து, சமுத்திரத்தின்ஊற்றுகளைஅடைத்துவைக்கையிலும்,
29.
சமுத்திரஜலம்தன்கரையைவிட்டுமீறாதபடிக்குஅதற்குஎல்லையைக்கட்டளையிட்டு, பூமியின்அஸ்திபாரங்களைநிலைப்படுத்துகையிலும்,
30.
நான்அவர்அருகேசெல்லப்பிள்ளையாயிருந்தேன்; நித்தம்அவருடையமனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும்அவர்சமுகத்தில்களிகூர்ந்தேன்.

ஞானத்தோடுசேர்ந்ததேவன்ஞானசக்தியானார்.



-- Edited by SANDOSH on Thursday 8th of July 2010 10:51:56 PM

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

ஞானம் :

அவர் தனக்குள்ளிருந்த ஞானத்தை கண்டு கொண்டார். (உள்ளுணர்வு)

அவர் அளவில்லா ஆவியை உடையவராக இருந்தார்.

அவருடைய ஞானம் அளவிடப்பட முடியாதது. ஞானமானது கர்த்தரின் பெண்சக்தியாகும்.. அவர் தன்னுடைய ஞானத்தோடு ஆலோசனை செய்தார்.

13. கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்?
யோபு 12.
13. அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.
14. தமக்கு அறிவை உணர்த்தவும், தம்மை நியாயவழியிலே உபதேசிக்கவும் தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு விவேகத்தின்வழியை அறிவிக்கவும், அவர் யாரோடே ஆலோசனைபண்ணினார்?

11. அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, மின்னலினால் மேகத்தைச் சிதறப்பண்ணுகிறார்.
12. அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும், அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியப்பண்ணுகிறார்.

யோபு 15.7  (யோபுவை பார்த்து அவர் நண்பர்)  மனுஷரில் முந்திப் பிறந்தவர் நீர்தானோ? பர்வதங்களுக்குமுன்னே உருவாக்கப்பட்டீரோ?
8. நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு, ஞானத்தை உம்மிடமாய்ச் சேர்த்துக்கொண்டீரோ?

ஞானம் சொன்னது :

நீதி8.14. (ஞானம் சொன்னது) ஆலோசனையும் மெய்ஞ்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது.
15. என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள்.
16. என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும், பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளும் ஆளுகைசெய்து வருகிறார்கள்.
22. கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.
23. பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட்டேன்.
24. ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
25. மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,
26. அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
27. அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்,
28. உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும்,
29. சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்,
30. நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.

ஞானத்தோடு சேர்ந்த தேவன் ஞான சக்தியானார்.



-- Edited by SANDOSH on Friday 9th of July 2010 08:53:14 PM

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

இந்த ஞானத்தை யார் பெற்றிருக்கிறார்களோ அவர்கள் தேவனுக்கு நிகரானவர்களாயிருப்பார்கள். ஆனால் அவருடைய படைப்புகள் (சாத்தான், தேவதூதர்கள், மனிதர்கள்) ஞானத்தினால் காரியங்களை செய்யலாமே தவிர அந்த அளவு கடந்த ஞானத்தை சொந்தமாக்கி கொள்ள முடியாது. ஏனெனில் அதை வேறு ஒருவரும் அறிய மாட்டார்கள்.

20. இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; புத்தி தங்கும் இடம் எங்கே?
21. அது ஜீவனுள்ள சகலருடைய கண்களுக்கும் ஒளித்தும், ஆகாயத்துப்பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது.
22. நாசமும் மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது.
23. தேவனோ அதின் வழியை அறிவார், அதின் ஸ்தானம் அவருக்கே தெரியும்
24. கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.

ஞானமானது தேவனுக்கு சமமாக இருந்த போதிலும் தன்னை உயர்த்தாமல் தேவனையே மகிமைப்படுத்துகிறது.

நீதிமொழிகள் 9.10. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.

8.13. தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்.

வார்த்தை :

அவர் ஞானத்தோடு சேர்ந்து தன் மனதிலிருந்து வார்த்தையை வெளிப்படுத்தினார்.

பிதாவானவர் அளவில்லா சக்தி உடையவர் ஆதலால் அவராகவே உயிர்களை படைக்க முடியாது. அளவில்லா சக்தியிலிருந்து அளவுள்ள உயிர்களை உருவாக்க அவருக்கு வார்த்தையாகிய குமாரன் தேவை. அவரால் குமாரனின் மூலமாக மட்டுமே உயிர்களை படைக்க முடியும். அதுபோலவே பிதா இல்லாமல் குமாரன் தனியாக வெளிப்பட முடியாது. ஆகவே தேவன் தன்னிடமிருந்து குமாரனை வெளிப்படுத்தினார். குமாரனும் தன்னுடைய சுயமாக ஒன்றும் செய்யாமல் பிதாவின் ஆசையையே நிறைவேற்றுகிறார்.

குமாரனை வெளிப்படுத்தின தேவன் மனோ சக்தியானார். (கட்டுப்படுத்தும் சக்தியானார்)

யோவான் 1.18. தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.

1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
4. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது

குமாரனும் தன்னுடைய சுயமாக ஒன்றும் செய்யாமல் பிதாவின் ஆசையையே நிறைவேற்றுகிறார்.

19. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.

28. ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்

42. இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.

49. நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.

10. நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.

குமாரன் பிதாவிடமிருந்த அளவிடப்பட முடியாத ஆவியை உள்வாங்கி அதை தேவைக்கேற்ற அளவுடையதாக வெளிப்படுத்தினார். இந்த ஆவியின் ஒரு பகுதி உணர்வுள்ளதாக பிதா-குமாரன் வழியாக வெளிப்பட்டது. இன்னொரு பகுதி மூலப் பொருளாக ஆனது.  உணர்வுள்ள ஆவியானவர் கிரியா சக்தியானார்.

தானே உண்டான, தன்னைதான் அறிந்த, அளவில்லா ஆவியான  பிதா தம்முள் எழுந்த ஆசையினால் ஞானத்தோடு சேர்ந்து குமாரனை வெளிப்படுத்தினார். குமாரன் பிதாவின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு பிதாவிடமிருந்து பெற்ற ஆவியினால் உலகத்தையும், உயிர்களையும் படைத்தார்.

15. (குமாரன்) அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.
16. ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
17. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
18. அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.
19. சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும்,
20. அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.



-- Edited by SANDOSH on Friday 9th of July 2010 08:49:30 PM

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

பிதா :

குமாரனை வெளிபடுத்தின பிறகு ஏக தேவன் பிதாவாக ஆனார். அவரால் தன்னுடைய மிகப் பெரிய உணர்வு நிலையை, வல்லமையை ஒரு இடத்துக்குள்ளிருந்து செயல்படுத்த வைக்க முடிந்தது. அவர் குமாரன் மற்றும் ஆவியானவர் மூலமாக வானங்களை படைத்து தன்னுடைய வல்லைமையின் பெரும் பகுதியை ஒரு இடத்தில் தக்க வைத்து கொள்ள பரலோகம் என்னும் இடத்தை தனக்கு உண்டு பண்ணிக் கொண்டார். ஆவியான பிதாவும், குமாரனும் ஒளி சரீரம் உடையவராய் ஆனார்கள்.

தேவன் பராசக்தியானார்.

சங்கீதம் 104.2. ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்.

வெளி 4.2. உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.
3. வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அதுபார்வைக்கு மரகதம்போல தோன்றிற்று.

ஆவி :

உணர்வுள்ள ஆவியானவர் வார்த்தையாகிய குமாரன் சொல்கிறபடி, பிதாவின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு மூலப் பொருளின் மேல் அசைவாடி உலகை படைத்தார்.

2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

இவ்வாறு படைக்கும் போது எது உண்டாக வேண்டுமோ அது மட்டும் உண்டாகமல் கூடவே அதற்கு எதிர் பொருள்களும் உண்டாயின. தேவன் அந்த எதிர் பொருள்கள், உயிர்களோடு போராடி அவைகளை மேற்கொண்டு படைக்க வேண்டியவைகளை உண்டாக்க வேண்டியதாயிருந்தது. மூலப் பொருளானது ஜலம் என்றும் அதில் உண்டான வேண்டாதவைகள் வலு சர்ப்பம் என்றும் வேதத்தில் சொல்லப்படுகிறது. இந்து மதத்தில் இந்த மூலப் பொருள் பாற் கடல் என்று சொல்லப்படுகிறது.

சங்கீதம் 89.9. தேவரீர், சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிறீர்.
10. நீர் ராகாபை வெட்டுண்ட ஒருவனைப்போல் நொறுக்கினீர்; உமது வல்லமையான புயத்தினால் உம்முடைய சத்துருக்களைச் சிதறடித்தீர்.
சங்கீதம்
74.13. தேவரீர் உமது வல்லமையினால், சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, ஜலத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தலைகளை உடைத்தீர்.
9. எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே, முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?
10. மகா ஆழத்தின் தண்ணீர்களாகிய சமுத்திரத்தை வற்றிப்போகப்பண்ணினதும், மீட்கப்பட்டவர்கள் கடந்துபோகக் கடலின் பள்ளங்களை வழியாக்கினதும் நீதானல்லவோ?

மேற்கண்ட வசனங்கள் செங்கடலை பிளந்த தேவனை பற்றி சொல்லுவதாக இருந்த போதிலும், படைப்பின் போது நிகழ்ந்தவைகளையும் சொல்வதாகவே நான் கருதுகிறேன்.

வானம் :

தேவன் தன்னுடைய ஆவியாகிய செறிவுள்ளதான மூலப்பொருளை வெறுமையான இடத்தில் விரித்தார். அது வானம் எனப்பட்டது.

12. தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்?

சங்கீதம் 104.2. ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்.

எரேமியா (10.12,13) 51.15. அவர் பூமியைத் தமது வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தமது ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தமது பேரறிவினால் விரித்தார்.

(தொடரும்)



-- Edited by SANDOSH on Friday 9th of July 2010 09:02:07 PM

__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

சகோதரர் சந்தோஷ் அவர்கள் தங்கள் கருத்துக்களை தொடர்ந்து எழுதும்படி கேட்டுகொள்கிறேன்.
 
ஒரு முக்கியமான புதையல் இருக்கும் இடத்தின் வரைபடம் நான்குபேர்கள் கையில் துண்டு துண்டாக இருப்பது போலவும், அந்த நான்கையும் சேர்த்து ஒன்றாக வடிவமைத்தால் சரியான முழு நிலையை அடைய முடியும் போலவும் இருக்க வாய்ப்பிருக்கிறது.
 
அவரவருக்குள்ள  வெளிப்பாடுகளை எழுதலாம் பிறகு ஒவ்வொன்றிலும் உள்ள குறைநிறைகளை ஆராயலாம்.
 


-- Edited by இறைநேசன் on Tuesday 13th of July 2010 06:56:40 PM

__________________


இளையவர்

Status: Offline
Posts: 19
Date:
Permalink  
 

சகோ பாதியில் பதிவை நிறுத்தியகாரணமென்ன

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard