இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆதியில் இருந்து நடந்தது பற்றிய விளக்கங்கள்!


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
ஆதியில் இருந்து நடந்தது பற்றிய விளக்கங்கள்!
Permalink  
 


நமது தளத்தில் ஆதியில் இருந்து என்ன நடந்தது என்பது பற்றிய வெளிப்பாடுகள் மற்றும் செய்திகள் பதிவிடப்பட்டு வருகின்றன. விவிலியத்தில்  இது  சபந்தமாக ஒரு தெளிவான விளக்கம் இல்லாத காரணத்தாலும் "I கொரிந்தியர் 4:6 சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று" நிருபத்தில் சொல்லபட்டிருப்பதாலும்  இதுபோன்ற பதிவில் எழுதப்படும் அனைத்து செய்திகளும்  அனுமானங்கள் என்ற அடிப்படையிலேயே எடுத்துக் கொள்ளப்படும்.
 
இதுபோன்ற வெளிப்பாடுகளை ஒருவர் நம்பவேண்டும் என்ற கட்டாயம் எதுவும்  இல்லை!
 
தேவனுடைய மகத்துவத்தையும் வல்லமையும்    முழுமையாக அறிந்தவர் ஒருவரும் கிடையாது. இந்த கிரகம் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்பது அறிவியலார் கருத்து. அப்படிப்பட்ட இவ்வுலகில்  நமது நாட்கள்  ஒரு புல்லைபோல சீக்கிரம் முடிந்து போககூடியது. எனவே  அனைத்தையும் அறிய முடியவில்லை என்றாலும்   உண்மையை அறிய விரும்பும் சிலருக்கு ஒரு அவுட்லைன் கிடைக்க  வாய்ப்பிருக்கிறது.  அதன்மூலம் நாம் என்ன நிலையில் இருக்கிறோம், என்ன செய்யவேண்டும் என்பதை புரிந்து கொண்டு செயல்பட இப்பதிவுகள் பயன்படலாம் என்று கருதுகிறேன்.
 
இதுபோன்ற கருத்துக்களை அறிய விரும்பாத அனைத்தும் அறிந்தவர்கள் சற்று விலகி இருக்க வேண்டுகிறேன்... 
 
 


-- Edited by இறைநேசன் on Friday 9th of July 2010 06:30:07 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: ஆதியில் இருந்து நடந்தது பற்றிய விளக்கங்கள்!
Permalink  
 


ஆதியில் இருந்து நடந்த உண்மை என்னவென்பது தெரியாத காரணத்தால் அனேக பிறமத சகோதரர்கள் வரப்போகும் விபரீதத்தை அறியாமல் "மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்" என்று மெத்தன போக்கில் காலம் தள்ளுகின்றனர். அவர்களும் உண்மை என்னவென்பதை அறியவேண்டும்.        
 
மேலும் தேவன் மிகுந்த  பரிசுத்தர்

லேவியராகமம்
11:44 
 நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர்
 
லேவியராகமம் 19:2  : உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர்

என்று வேதாகமம்   திரும்ப திரும்ப சொல்லுவதால், 
மிகுந்த  பரிசுத்தராகிய   அவரிலிருந்து அசுத்தமோ அல்லது தீமையோ தோன்றியிருக்கவோ  அல்லது அவர் அதை அனுமதித்திருக்கவும் வாய்ப்பில்லை  என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் வசனம் இவ்வாறு போதிக்கிறது. 
   
II கொரிந்தியர் 6:14 ; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
யாக்கோபு 3:11 ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?
யாக்கோபு 3:12  அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது.
 
இவ்வாறு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கையில்  
    
தீமை என்னும் அசுத்தம்  உலகினுள் எப்படி புகுந்தது? 
அசுத்த ஆவிகள் என்று விவிலியம் குறிப்பிடும் ஆவிகள் எது?
சத்துரு எனப்படும் சாத்தான் யார்? அவன் எவ்வாறு உருவானான்?
விவிலியம் குறிப்பிடும்   "தேவர்கள்" என்பவர்கள் யார்?  "ராட்சசர்கள்" என்பவர் யார்? தேவ புத்திரர்கள் யார்?  
பாதாளம் நரகம் என்றால் என்ன அவைகள் உருவாக காரணம் என்ன?
 
போன்ற  பல்வேறு கருகலான கேள்விகளுக்கு  அறிவுக்கு எட்டிய அளவு ஆராய்து எழுதலாம் உண்மை என்னவென்பதை தேவன் உணரவைப்பாராக!  
 
இதுபற்றிய உண்மை அறிந்த பிற சகோதரர்கள் இருந்தால் அவர்களும் தங்கள் கருத்துக்களை தனி கட்டுரையாக பதியலாம்.
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard