அனேக உலக ஞானமுள்ள கிறிஸ்த்தவர்கள் வெளிப்பாடுகளை நம்புவது இல்லை காரணம், தேவனின் அனேக வெளிப்பாடுகள் ஆவிக்குரியவைகளாகவும் மனித அறிவுக்கு எட்டாதவைகளாகவும் இருக்கின்றன. எனவே அப்படிப்பட்ட காரியங்களை அவர்கள் அறிவு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது
மேலும் தேவன் அநேகதேவமனிதர்களுக்கு பல்வேறு மாறுபட்ட வெளிப்பாடுகளை கொடுக்கிறார் அதனால் எது உண்மையாது என்று அறிய முடியவில்லை எனவே அவைகள் எல்லாமே உண்மையானது அல்ல என்றும், வேத புத்தகத்துக்கு மேல் எதையுமே நம்ப வேண்டிய அவசியம் இல்லை என்பதும் அவர்களின் கருத்தாக இருக்கிறது. இது ஒரு நல்ல கருத்தும் வரவேற்க்கத்தக்க ஒன்றும்தான் என்பதில் ஐயமில்லை
காரணம் இயேசு கடைசி நாட்களில் அனேக கள்ள தீர்க்கதரிசிகள் தோன்றுவார்கள் என்று எச்சரித்துள்ளார்
ஆனால் இந்த கள்ள தீர்க்கதரிசிகள் செய்யும் முக்கிய செயல் என்ன என்பதையும் சேர்த்தே அடையாளம்காட்டி சொல்லியிருக்கிறார் அதாவது பெரிய அடையாளம் மற்றும் அற்ப்புதங்களை செய்து காட்டி வஞ்சிப்பார்கள் என்பதே! இதுபோன்ற காரியங்கள் இன்று அமோகமாக அரங்கேறி வருவது அனைவரும் அறிந்ததே! மற்றபடி தேவன் தான் எதையுமே பின்னாட்களில் வெளிப்படுத்த மாட்டேன் என்றோ அப்போச்த்தலர்களுக்கு பிறகு எந்த வெளிப்படும் என்னிடமிருந்து வராது என்றோ வேதத்தில் எங்கும் சொல்லவில்லை . மாறாக
நீதிமொழிகள் 29:18தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்
என்றே வேதம் சொல்கிறது. எனவே எல்லா தீர்க்க தரிசனங்களையும் எல்லா தேவமனிதர்கள் சொல்வதையும் ஒரேயடியாக கள்ள தீர்க்கதரிசனம் என்று ஒதுக்கிவிட முடியாது என்பதை அறியவேண்டும்.
அப்போஸ்தலர் காலத்தில் அப்போஸ்தலர்கள் மட்டுமல்ல அநேகர் தீர்க்கதரிசனம் சொன்னார்கள் என்று எழுதியிருக்கிறது.
அப்போஸ்தலர் 21:9தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற கன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள்.
அப்போஸ்தலர் 2:18என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்.
கடைசி நாட்களில் தேவனுடைய ஊழியக்காரர்கள் எல்லோருமே தீர்க்க தரிசனம் சொல்வார்கள் என்றுதான் வேதம் சொல்கிறது. மேலும் பவுல் அப்போஸ்தலர் தீர்க்கதரிசனம் சொல்வதை ஊக்குவித்துத்தான் பல நிரூபங்களில் எழுதியுள்ளாரே தவிர அப்போஸ்தலர்களாகிய எங்களுக்கு பின்னர் யாரும் தீர்க்க தரிசனமோ அல்லது வெளிப்பாடுகளோ சொல்லமாட்டார்கள் என்று எங்கும் எழுதவில்லை
I கொரிந்தியர் 14:5ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்
I கொரிந்தியர் 14:31எல்லாரும் கற்கிறதற்கும் எல்லாரும் தேறுகிறதற்கும், நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்கதரிசனஞ்சொல்லலாம்
I கொரிந்தியர் 14:39இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், .
இப்படி அனேக வசனங்களை வேதத்தில் இருந்து எடுக்க முடியும். எனவே தீர்க்கதரிசிகளை அற்பமாக எண்ணகூடாது என்று வேதம் நமக்கு போதிக்கிறது
I தெசலோனிக்கேயர் 5:20தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்
இந்த வார்த்தைகளை எல்லாம் சற்றும் பொருள்படுத்தாமல் இவ்வார்த்தைகளுக்கு விரோதமாக செயல்பட்டு இக்காலத்தில் தீர்க்கதரிசனம் எதுவும் கிடையாது என்று தப்பான எண்ணம் கொண்டு தேவனுடைய வார்த்தைகளை சொல்லும் எல்லோரையுமே தவறானவர் என்று தீர்ப்பது நிச்சயம் வேதத்துக்கு புறம்பான செயலே!
கடைசிகாலத்தில் கள்ள தீர்க்கதரிசி தோன்றுவார்கள் என்பதை நினைப்பூட்டிய யோவான் அதனால் எந்த தீர்க்கதரிசனத்தையும் நம்பாதீர்கள் என்று எழுதவில்லை அது தேவனின் ஆவிதானா என்று சோதித்து அறியும்படியே கூறியிருக்கிறார்
யோவான் 4:1பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதை ஆராய்ந்து பார்த்து உங்களுக்கு உண்மை என்று புரியவில்லை என்றால் விட்டுவிடுங்கள் அவ்வளவுதான். மற்றபடி அதற்க்கு எதிர்த்து நிற்பவர்கள் நிச்சயம் சரியானவர்கள் அல்ல! ஏனெனில் அன்றிலிருது இன்று வரை தீர்க்கதரிசிகள் அனேக உண்மைகளையும் தேவனின் இருதய நிலைகளையும் வெளிப்படுத்துவதால் தனது ராஜயத்துக்கு விரைவில் முடிவு வந்துவிடும் என்று பயந்து தத்திளிக்கும் சாத்தான் எல்லா தீர்க்க தரிசிகளையும் துன்புறுத்தி மனமடிவாக்கி வந்திருக்கிறான் என்பதை கீழ்க்கண்ட வேதவசனங்கள் மூலம் அறிய முடியும்.
அப்போஸ்தலர் 7:52தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாமலிருந்தார்கள்? நீதிபரருடைய வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள்.
வேதத்தில் நேரடியாக சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளுக்கு தங்கள் இஸ்டப்படி ஏதாவது பொருள்கொண்டு அடுத்தவர் பத்து வசனஆதாரம் கொடுத்தாலும் அதை ஏற்காமல் அக்கருத்துக்களை வேதத்துக்கு புறம்பானது என்று தீர்த்து, பிறரை மனமடிவாக்கும் சிலரை பற்றிபேசி எந்தபயனும் இல்லை. இவர்கள் வெளிப்பாடுகளை நம்பியும் எதுவும் அகிவிடப்போவது இல்லை.
ஆகினும், வெளிப்பாடுகள் பற்றி குழப்பத்தில் இருக்கும் ஒரு சில சகோதரர்களுக்கு தேவன் பல தீர்க்கதரிசிகளுக்கு மாறுபட்ட வெளிப்பாடுகளை ஏன் கொடுக்கிறார் என்பதை மட்டும் ஒரு சிரு உதாரணத்தின் மூலம் விளக்க விரும்புகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
பொதுவாக ஒரு கம்பனியோ/வங்கியோ அல்லது ஒரு அரசாங்கமாக இருந்தாலும் கூட ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் அதன் நிர்வாக அமைப்பு பற்றி ஒரு பொதுவான "புரோபைல்" என்று ஓன்று இருக்கும். அந்த புரோபைல் என்பது அந்த குறிப்பிட்ட அரசு அல்லது கம்பனி அல்லது வங்கியின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். அது ஒரு பொதுவான புத்தகமும், யார் வந்து வேண்டுமாலும் பார்த்து கொள்ளும் அளவுக்கு எல்லோருக்கும் வெளிப்படையாக தெரிவிக்க கூடிய செய்திகளாகவும் இருக்கும்.
இப்படி ஒரு புத்தகம் இருப்பதால் 'அந்த புத்தகத்தில் கம்பனியில் உற்பத்தி பிரிவில் இருந்து கணக்கு பிரிவுவரை உள்ள அனைத்து செய்திகளும் அதில் அடங்கி விட்டது
இதற்க்கு மேல் எந்த ஒரு செய்தியும் அந்த அரசிடமோ அல்லது கம்பனியிடமோ இருக்காது' என்று எண்ணுவது ஒரு அறிவுள்ள நிலை அல்ல.
அமெரிக்கா எத்தனை அணுகுண்டு வைத்துள்ளது என்பதை அது பொதுவாக எழுதி வைத்திருக்கும் ஒரு செய்தியில் இருந்து படித்து அறிந்துகொண்டு அதற்குமேல் அதனிடம் ஒன்றும் இல்லை என்று எண்ணிக்கொண்டு இருப்பது ஒரு மதியீனமே!
எந்த செய்திகளை எந்த காலத்தில் பொதுவாக எல்லோருக்கும் சொன்னால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லையோ அந்த செய்திகள் மட்டுமே அந்ததந்த காலங்களில் எல்லோருக்கும் பொதுவாக சொல்லப்பட்ட அறிக்கைகளில் அடங்கியிருக்கும். கம்பனியின்/ அரசாங்கத்தின் தனித்துவத்துக்கு பங்கம் விளைவிக்கும் செய்திகள் மற்றும் கம்பனியின் அடிப்படை ரகசியங்கள் எல்லாமே அதில் தெரிவிக்கப்படுவது இல்லை. இந்த ரகசியங்கள் எல்லாம் அந்த கம்பனியின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் மற்றும் அந்தந்த பிரிவுகளில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.
ஒரு அரசாங்கத்தின் முக்கிய ராணுவ ரகசியங்கள் அதின் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரிவிக்கப்படும் மற்றும் பொருளாதார பிரிவில் ஒரு அரசாங்கத்தின் தற்போதைய நிலை அந்த பிரிவில் அமைச்சராக அல்லது உயிர் பதவியில் இருப்பவர்கள் மட்டுமே அதை அறியமுடியும் எல்லா அடிமட்டத் தாருக்கும் அது தெரிவிக்கப்பட மாட்டாது! இந்த உண்மையை அறியாத மன்னார்குடி பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ளவர்கள், தங்கள் கையில் கிடைத்த அமெரிக்கா அரசாங்கத்தின் அறிக்கை ஒன்றை படித்துவிட்டு இதற்கு மேல் அமெரிக்க அரசாங்கத்திடம் ஒன்றும் இல்லை அதன் உண்மைகள் அனைத்தையும் நாங்கள் அறிந்துகொண்டோம் என்று மார்தட்டிகொண்டு இருந்தால் அது அவர்களின் மதியீனமே!
வேதாகமமும் அது போன்றதே! உலகம் முழுவதிலும் உள்ள எந்த ஒரு மனிதன் அதை படித்தாலும், அவனுக்கோ அல்லது ஆண்டவரின் ராஜ்யத்துக்கோ எந்த பங்கமும் வராத, அதே நேரத்தில் அதை படிப்பவர்கள் நேர்வழியில் சென்று நிதய ராஜ்யத்தை சுதந்தரித்துகொள்ள வழிகாட்டும் செய்திகள் மட்டுமே அதில் அடங்கியுள்ளது என்பதை அறியவேண்டும். மற்றபடி ஆதி முதல் இந்த உலகம் பற்றிய அனேக ரகசியங்கள் வேதாகமத்துக்குள் மறைபொருளாக வைக்கபட்டுள்ளன .
மத்தேயு 10:26வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை.
என்று ஆண்டவராகிய இயேசுவே தெரிவித்துள்ள போதிலும் அந்த ரகசியங்கள் எல்லோருக்கும் வெளிபடையாக சொல்லபடாமல் சிலருக்கு உவமையாகவும் சிலர்க்கு மறைபொருளாகவும் சொல்லப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
சிலருக்கு அருளப்பட்டது சிலருக்கு அருளப்படவில்லை! ஏனெனில் தாங்கள் நன்றாக அறிந்துள்ள சில தேவனின் வார்த்தைகளுக்கே கீழ்படிய விரும்பாத அவர்களுக்கு அந்த உண்மைகளை அறிந்வித்து எந்த பயனும் இல்லை என்பதால் தேவன் அவர்களுக்கு அவற்றை மறைத்துள்ளார்.
ஒரு அலுவலகத்தில் சுத்தம் செய்யும் பணியில் இருப்பவனுக்கு அந்த அலுவலகத்தின் உற்பத்தி பிரிவில் உள்ள உயர்ந்த ரகசியத்தை சொன்னால் அவனுக்கு புரியவும் புரியாது அதனால் எந்த பயனும் ஏற்ப்படாது எனவே எதுஎதை யாரிடம் சொல்லவேண்டுமோ அவர்களிடம் மட்டுமே சொல்லமுடியும். மனிதர்களாகிய நாமும் அப்படியே செய்கிறோம். எந்த ரகசியங்களை யாரிடம் சொல்லவேண்டும் என்பதை தீர அறிந்தே சொல்கிறோம்.
இவ்வாறு இருக்கையில் சத்துரு என்னும் ஒரு சாத்தான் எல்லோரையும் விழுங்கி தேவனின் திட்டங்களை எதிர்க்க விழிப்பாக சுற்றி திரியும் நிலையில் எல்லா ரகசியங்களையும் தேவன் பொதுவாக எல்லோருக்கும் சொல்லிவிட்டார் என்று எண்ணுவது ஒரு ஒரு சரியான நிலையா? !
முதலில் நான் இவ்வளவு எழுதி விளக்கவேண்டிய தேவையோ அல்லது யாரையும் திருப்திபடுத்த வேண்டிய அவசியமோ எனக்கு நிச்சயம் இல்லை. எனது எழுத்துக்களில் உள்ள உண்மைகளை நம்புகிறவர்கள் நம்புங்கள் நம்பாதவர்கள் விட்டு விடுங்கள் யாரும் நம்பவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அனால் எனது வார்த்தைகள் நிச்சயம் யாரையும் தவறாகவழியில் திருப்பாது என்பது மட்டும் உறுதி!
தேவன் யாருடைய இதயத்தை திறக்கிராரோ அவர்கள் மாத்திரம் இதை புரிந்து கொண்டால் போதுமானது. தேவனுக்கு தேவை ஒரு பெரிய கூட்டம் அல்ல!. ஒரே ஒரு பவுல், ஒரே ஒரு எசேக்கியேல் போன்று, திறப்பில் நிற்க துணித்து, தேவனின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கீழ்படிந்து நடக்க தன்னை அற்பணிக்கும் ஒருவரைத்தான்! அந்த ஒருவவருக்காகவே இவை அனைத்தும் எழுதப்படுகிறது!
-- Edited by SUNDAR on Tuesday 13th of July 2010 10:04:33 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
மாறுபட்ட வெளிப்பாடுகள் கிடைப்பதற்கு இன்னுமொரு முக்கிய காரணமும் உண்டு.
இந்த உலகில் வாழும் மனிதர்கள் பல்வேறுபட்ட மாறுபட காரியங்களுக்காக ஆண்டவரை தேடி வருகின்றனர்.
அநேகர் நல்ல வசதியான உலக வாழ்க்கைக்காக ஆண்டவரை தேடி வருகின்றனர், பலர் துன்பங்கள் நீங்குவதற்காக, கடன் பிரச்சனை, நோய் நொடிகள் தீர, மற்றும் சிலர் எதிரிகள் தொல்லைதீர மற்றும் பிள்ளைகளின் எதிகால நலனுக்காக, அதிக பணம் சம்பாதிப்பதர்க்காக நல்ல வியாபாரம் நடக்க, போன்று உலக பிரச்சனைகளுக்காக ஆண்டவரை தேடி வருபவர்களே அதிகம். இறைவனின் உண்மை அன்பையும் மரணத்துக்குபின் உள்ள நித்தியவாழ்வையும் அறிந்து அதை தேடி வருபவர்கள் மிக சிலரே! இந்த மிக சிலரிலும் அநேகர் எந்த உண்மையையும் அறிய விரும்புவதுஇல்லை! 'ஏதோ ரட்சிக்கப்பட்டோம நான்குபேரை இரட்சிப்புக்குள் வழி நடத்தினோம மரித்தபின் ஆண்டவரின் ராஜ்யத்துக்கு போய்சேர்ந்தால் போதும்' என்று வாழ்ந்து முடிக்கின்றனர். மற்றும் ஒருசிலர் ஆண்டவர் தன் சீரிய நோக்கத்துக்காக பயன்படுத்தும் அளவுக்கு தங்கள் வாழ்க்கையை அவர் சமூகத்தில் ஊற்றுகின்றனர், தேவன் அவர்கள் போன்றவர்கள் மூலம் பெரிய காரியங்களை செய்திருக்கிறார்.
அவரவர் எதை தேடி ஆண்டவரிடம் வந்தார்களோ அதற்க்கு தகுந்த்துபோல் தேவன் அவர்களுக்கு பதிலளித்து தன்னை வெளிப்படுத்துகிறார்.
உதாரணமாக என்னிடம் ஒரு ரூபாய் பிச்சை கேடடு வந்த ஒருவரிடம் நான் எங்கள் வீட்டில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை எடுத்து சொல்லி ஆலோசனை கேட்க முடியாது. அப்படியே எடுத்து சொன்னாலும், அவருக்கு அவர் வீட்டு பிரச்சனைதான் பெரியதாக தெரியுமே தவிர நமது பிரச்சனையை கேட்கும் மனபக்குவத்தில் அவர் இருப்பதில்லை அப்படியே அவர் கேட்டாலும் அவரால் நமது பிரச்னைக்கு எந்த ஒரு நல்ல தீர்வும் கிடைக்கபோவது இல்லை.
அதுபோல் ஒவ்வொருவரின் இருதய எண்ணங்களையும் அறிந்த ஆண்டவரும் யார் யார் என்ன என்ன எண்ணத்துடன் ஆண்டவரை தேடி வருகின்றார்கள் என்பதன் அடிப்படையிலேயே அதற்க்கான பதில்கள் மற்றும் வெளிப்பாடுகளையும் உண்மைகளையும் தெரியப்படுத்துகிறார். எல்லா உண்மைகளும் வேத புத்தகத்துக்குள் மறைபொருளாக இருந்தாலும் குறுகிய மனப்பான்மையுடனும் குறையுள்ள குறிக்கோளுடனும் தன்னை தேடி வருபவர்கள் எல்லோருக்கும் எல்லா உண்மைகளையும் தேவன் தெரியபடுத்துவது இல்லை.
ஆண்டவராகியே இயேசு பூமியில் வாழ்ந்த காலங்களில் அநேகருக்கு நன்மைகளை செய்தார் அர்ப்புதங்க்ளை செய்தார் ஆனால் அவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே தன்னை வெளிப்படுத்தி காட்டி விசுவாசிக்கும்படி கூறினார்
ஒரு இந்துவாக இருந்த நான் ஆண்டவரைத் தேடியதோ மேலே சொல்லப்பட்ட எந்த ஒரு காரணத்துக்கும் அல்ல. சிறு வயதில் இருந்தே மிகுந்த இரக்க குணத்தை ஆண்டவர் எனக்கு தந்திருந்தார். உலகில் நடக்கும் துன்பங்கள் துயரங்கள் ஜீவராசிகள் அனுபவிக்கும் வேதனைகள், மனிதனுக்கு மனிதன் விரோதமாக செயல்படும் கொடூரங்கள் நோயின் வேதனைகள் தற்கொலைகள், சிறு குழந்தைகள் படும் அவஸ்த்தைகள் இவற்றை எல்லாம் பார்த்து பார்த்து பரிதபித்த நான். இதற்க்கெல்லாம் காரணம் என்ன? இவற்றுக்கெல்லாம் ஒரு முடிவு உண்டா? என்று ஏங்கினேன்.
தான் போட்ட நாலு குட்டிகளை வைத்து பராமரிக்க இடமிலாமல் எல்லோராலும் துரத்தப்பட்ட ஒரு பூனை, அனுதினம் தன்னுடைய உணவுக்காக உயிருக்காக் போராடி வருவதோடு கஷ்டப்பட்டு தனது குட்டிகளையும் வளர்த்து வாழ்ந்து இறுதியில் தான் சாவும்முன் மீண்டும் இந்த உலகில் தன்னைப்போல தொடர்ந்து வேதனைப் பட சில சந்ததிகளை வைத்து செல்கிறது. (பெண் பூனை சும்மா இருந்தாலும் ஆண் பூனை அதை விடுவது இல்லை!)
மனிதர்களும் அதேபோலவே பிறக்கிறார்கள் வளர்கிறார்கள் சந்ததிகளை உண்டாக்குகிறார்கள் மரிக்கிறார்கள் சந்ததிகளும் அதையே திரும்ப திரும்ப செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இவை எல்லாம் ஏன் நடக்கிறது? இங்கு நடக்கும் பிரச்சனைகளுக்கு எல்லாம் அடிப்படை காரணம் என்ன? இரக்கம் உள்ள இறைவன் இவைகளை ஏன் அனுமதித்தார்? துன்பமும் துயரமும் உலகினுள் எப்படி வந்தது? "நான் பரிசுத்தர், பரிசுத்தர்" என்று சொல்லும் கர்த்தர் அசுத்தங்களை ஏன் உலகினுள் அனுமதித்தார்?
போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதிலில்லாமல் தவித்தேன். அதன் உண்மை என்னவென்பதை அறியவேண்டும் என்ற நோக்கிலேயே மற்றாடி இறைவனை தேடியதால் ஆண்டவர் எனக்கு பல அடிப்படை காரியங்களை தெரியப்படுத்தினார். அவைகளில் அனேக காரியங்கள் துண்டு துண்டாக தெரிவிக்கப்பட்டன. சில அனுமானத்தின் அடிப்படையில் அவைகளை ஒருங்கிணைத்த போது ஒரு முழு வடிவம் கிடைத்தது. இந்த வடிவம் கிறிஸ்த்தவத்தின் பல பிரிவுகளுக்குள் சிதறி கிடக்கிறது அதாவது ஒவ்வொரு பிரிவினர் ஒவ்வொரு கருத்தை கையில் வைத்துள்ளனர் ஆனால் எனக்கோ ஒவ்வொரு பிரிவினர் சொல்வதிலும் சில உண்மைகள் மற்றும் சில தேவையற்ற கருத்துக்கள் இருப்பதாக அறிகிறேன்.
எனக்கு ஆண்டவர் தெரியப்படுத்தியவற்றின் அடிப்படையிலேயே நான் கருத்துக்களை எழுதி வருகிறேன். எனவே அநேகரின் கருத்துடனும் எனது கருத்து ஒத்துபோவதில்லை. வேலையே விட்டுவிட்டு ஊழியத்துக்கு என்று சென்ற நானும் சிலருடைய கருத்துக்களுடன் என்னால் ஒத்து போகமுடியாததால் மீண்டும் வேலைக்கு திருபிவிட்டேன். இந்நிலையில் யாருக்கும் கட்டுப்பட்டு வார்த்தைகளை புராட்டாமல், சுதந்திரமாக ஆண்டவரின் கருத்துக்களை எழுதவும், சில பிரிவினருடன் ஒத்துபோகாத கருத்தை பிற தளங்களில் எழுதுவதால் எதிர்ப்பு மற்றும் தேவையற்ற வாக்குவாதம் வராமல் தவிர்க்கவும் இந்த தளத்தை பயன்படுத்தி எழுதி வருகிறேன்.
இதை படிக்கும் அன்பு சகோதரர்களுக்கு!
நான் எழுதும் இந்த கருத்துகள் தங்களுக்கு தேவையில்லை என்றால் தயவு செய்து விலகி போய்விடவும்.
எனது கருத்துக்களை உண்மை என்று நீங்கள் நம்பினால் உங்களிடம் நான் வேண்டுவது ஒன்றே ஒன்றுதான் "வேத வசனங்களை பிரித்து பட்சபாதம் பார்க்காகாமல் ஆண்டவரின் வார்த்தைகளை அப்படியே உங்கள் வாழ்வில் கைகொண்டு நடவுங்கள், நடக்க முயற்ச்சியுங்கள். அடுத்து என்னவென்பதை தேவன் உங்களுக்கு தெரிவிப்பதோடு உங்கள் மூலம் மிகபெரிய காரியங்களை தேவனால் செய்யமுடியும்!" என்பதுதான்.
வெளி 22:14ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
நன்றி.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சில மாதங்களுக்கு முன் ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது.
வெளிநாடு ஒன்றில் இருந்து ராணுவ கழிவுப்பொருட்களை ஒரு தனியார் நிறுவனம் டென்டரில் எடுத்து அதை கண்டெய்னரில் அடைத்து ஒரு கப்பலில்ஏற்றி சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வந்துவிட்டது. அதை இறக்கும் முன் உள்ளே என்ன இருக்கிறது என்று சோதித்த அதிகாரிகள் உள்ளே அனைத்தும் வெடிக்காத குண்டுகளும் சரியாக வேலை செய்யாத ஆனால் சிறிய தவறு நேர்ந்து வெடித்தால் மொத்த சென்னை பட்டணத்தையும் அழித்து விடக்கூடிய ராணுவ தளவாடங்கள் நிறைந்திருப்பதை கண்டனர். உடனே முக்கியமான அதிகாரிகளுக்கு எல்லாம் தகவல் பறந்து எல்லோரும் எழுந்தடித்து பதட்டத்துடன் ஓடிவந்து பார்வையிட்டு உண்மையை உறதி செய்த பிறகு எந்த பொருளும் கீழே இரக்கப்படாமல் ஒரேநாள் இரவில் அந்த கப்பல் திருப்பபட்டு அப்படியே ஆழ் கடலில் கொண்டுபோய் கொட்டப் பட்டது.
அந்த ஒரு இரவு அதிகாரிகளிடம் ஏற்ப்பட்ட பதட்டம் பயம் போராட்டம் இவற்றை எதையும் அறியாத சென்னை நகரவாசிகள் எந்த கவலையும் இல்லாமல் காலையில் விழித்து எழுந்து தங்கள் நார்மல் வேலையே ஆரம்பித்தார்கள்.
ஒருவேளை இந்த செய்தியை சென்னை நகரம் முழுவதும் அனௌன்ஸ் செய்திருந்தால் அநேகர் பயந்து அன்று இரவு மிகப்பெரிய களோபரமே நடந்திருக்கும் எத்தனைபேர் மாண்டிருப்பார்கள் என்று தெரியாது. எனவே பாதுகாப்பை கருதி இப்படிபட்ட காரியங்களை தேவயற்றவர்களுக்கு தெரிவிக்காமல் பொறுப்புள்ள உயர் அதிகாரிகள் மட்டுமே செய்து முடித்தனர்.
அதே நிலைதான் இன்று இந்த உலகிலும் நடக்கிறது!
சில முக்கியமான காரியங்களை எல்லோருக்கும் சொன்னால் அதனால் தேவனுக்கு கிடைக்கும் பலனைவிட அந்த பயந்தாங்கொள்ளிகளால் வரும் பாதகம்தான் அதிகம் என்பதால் தேவன் அனேக அர்த்தமற்றவர்களுக்கு முக்கியமான ரகசியங்களை தெரிவிப்பது இல்லை.
யோவான் 16:12இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.
என்று சொன்ன இயேசு பல ரகசியங்களை தன் சீஷர்களுக்கே தெரிவிக்கவில்லை என்பதை அறியவேண்டும்.
என் தாவீதுக்கு தெரிவித்த அனேக ரகசியங்களை ஞானியாகிய சாலமோனுக்கு தெரிவிக்கவில்லை! ஒரே காலத்தில் தீர்க்கதரிசனம் சொன்ன எரேமியா எசெக்கியேல் போன்றவர்களில் ஒருவருக்கு தெரிவிக்கபட்டது இன்னொருவருக்கு மறைக்கப்பட்டிருக்கிறது.
எனவே தேவனின் நம்பிக்கைக்கு பாத்திரவான் ஆனவர்களில் அவரவர் தகுதிக்கும் தாங்கும் சக்திக்கும் ஏற்ப தேவரகசியங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.
எனவே ஒருவருக்கு ஒன்றும் வெளிப்படுத்ப்படவில்லை/ தேவனின் வார்த்தைகளை கேட்கமுடியவில்லை என்றால் அவர் தேவனுக்கு ஏற்ற ஒரு பரிசுத்த நிலையை இன்னும் எட்டவில்லை என்பதே பொருளேயன்றி, தேவன் தெரிவிக்கமாட்டார் என்ற முடிவுக்கு வருவது, காதுகேளாத செவிடன் ஒருவன் "ஒலி" என்று எதுவுமே உலகில் கிடையாது, ஏனெனில் நான் எதையும் கேட்கமுடியவில்லை என்ற முடிவுக்கு வருவது போன்றது!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
/////இந்த முறை எருசலேம் மட்டுமல்ல, எகிப்திற்கும் செல்ல வேண்டும் என்று ஆண்டவர் சொன்னதால், முதலில் இவர்கள் எகிப்திற்கு சென்றார்கள். ஆனால் எதற்கு ஆண்டவர் கொண்டு செல்கிறார் என்று தெரியததால், விமான பயணத்தில், இவர் (வின்சென்ட் செல்வகுமார்) ஏன், எதற்கு என்று ஜெபித்துக் கொண்டே இருந்திருக்கிறார். அப்பொழுது ஒரு எகிப்திய ஆடை அணிந்த ஒரு பெண்(ஆவி) விமான பணிப்பெண் போல் நடந்து - இது என் ஏரியா. நீயும், சாதுவும் என்ன செய்துவிடுவீர்கள் என்று பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டு நடந்து மறைந்து விட்டதாம்.///
சாதுஜி என் கனவில் வந்து சொன்னது, " இவன் ரொம்ப நல்லவன்டா எவ்வளவு ரீல் சுத்தினாலும் சலிக்காம படிக்கிறான்... இவனை எப்படியாவது பரலோகத்துக்கு ஒரு டூர் கொண்டு போயிட வேண்டியதுதான்...////
ஆகா!!! அப்படியா!!! எனக்கு இது முன்னமே தெரியாம போய்ச்சே... இன்னும் நான் PASSPORT எடுக்கலயே...
///எனக்கு வருத்தத்தையும், ஆச்சர்யத்தையும் கொடுப்பது, இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் என்று சொல்லும் பலரும், ஆவிக்குரிய அனுபவங்களை எள்ளி நகையாடுவதுதான். ஆதியாகமத்திலிருந்து, வெளி. விஷேசம் வரை வேதம் இயற்கைக்கப்பாற்பட்ட அனுபவங்களால் நிறைந்திருக்கிறது. மோசேயையும், இஸ்ரவேல் ஜனங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். எறியும் முட்புதர், கோல், குஷ்டம், 10 வாதைகள், பிரிந்த செங்கடல், அனுதின மன்னா, பகலில் குளிர்ச்சி தரும் மேகம், இரவில் வெளிச்ச்ம் தரும் மேகம், எப்பொழுதும் நடுவில் இருக்கும் தேவ பிரசன்னம், கிழியாத சட்டை, அறுந்து போகாத பாதரட்சை என்று எத்தனை எத்தனை காரியங்கள். இதையெல்லாம் பார்க்கும் போது Mummy part 4 என்று நினைத்துக் கொண்டா வாசிப்பீர்கள்? எலியா - பகால் தீர்க்கதரிசிகளை எதிர் கொண்டது நல்ல த்ரில்லிங்கான adventure film, super climax என்று நினைப்பீர்களோ?
எசேக்கியேல், வெளி விஷேசம் வாசிக்கும் போது நல்ல Graphis காட்சிகள் என்று நினைப்பீர்களா!
இது துக்கம் - ஆண்டவருக்கு. சந்தோஷம் - சத்துருவுக்கு.
குறை பேசும் அனைவருக்கும் ஒரு கேள்வி.
சாது சுந்தர் சிங்கை எல்லோரும் நல்ல ஊழியக்காரர் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். அவர் பார்க்காத தரிசனமா, அவருக்கில்லாத ஆவிக்குரிய அனுபவங்களா? மரணமில்லாமல் வாழும் கைலாச மகரிஷியை கண்டு உலகத்ததிற்கு அறிமுகப்படுத்தியவர் இவரே. ஒரு வேளை இவரும் தேறாத கேஸ் என்று சொல்வீர்களோ?
இதெல்லாம் வேத வசனத்திற்கு புறம்பானது என்று சொல்வீர்கள் என்றால் அதை விட முட்டாள்தனம் ஒன்றும் கிடையாது. அப்படிப்பட்டவர்கள் வேதம் படிக்காதவர்கள். வேதம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள். அல்லது கண்ணை மூடிக் கொண்டு படிப்பவர்கள்.
நம் ஆண்டவரே இயற்கைக்கப்பாற்பட்டவர் தானே!
இப்படித்தான் அந்த காலத்தில் பரிசேயர்களும், வேதசாஸ்திரிகளும் எங்களுக்கு மோசே இருக்கிறார். நியாயப்பிரமாணம் இருக்கிறது. ஆலயம் இருக்கிறது. பலி இருக்கிறது. வேறு எதுவும் தேவையில்லை என்று இருந்ததால் தான் கண் முன் நடமாடிய தெய்வமாம் இயெசு கிறிஸ்துவை அவர்களால் கண்டு கொள்ள முடியவில்லை.
இப்போழுது நாமும் எல்லாம் எழுதி வைத்தாயிற்று. வசனம் போதும். வெளிப்பாடு ஒன்றும் தேவையில்லை என்று சொல்வோமானால் இரண்டாம் வருகை நடந்து முடிந்து இயேசு கிறிஸ்து மீண்டும் பூமியில் நடமாடினாலும் நம்மால் கண்டு கொள்ள முடியாது.
எனவே, உஙகளுக்கு என்னதான் பிரச்சினை என்று சொல்லுங்கள். முடிந்தால் ஏதாவது செய்வோம்!////
வெளிப்பாடுகளையே நம்பாத விவரமான கிறிஸ்த்தவ கூட்டத்துடன் சகோதரி கோல்டா அவர்கள் வெளிப்பாடுகளை பற்றி பேசிக்கொண்டு இருபது வீண் என்று அறியாமலிருக்கிரார்களே!
நான் கண்கூடாக கண்ட காட்சிகளை அநேக முறை சொல்லியும் சற்றும் செவிகொடுக்க விரும்பாத அவர்கள் சாதுஜியின் வார்த்தைகளை எள்ளி நகையாடுவதில் பெரிய ஆச்சர்யம் ஒன்றுமில்லை தான்.
தரிசனமும் வெளிப்படும் பெற்றவர்களுக்குத்தான் இன்னொருவர் அதைப்பற்றி சொல்லும்போது அதன் உண்மையை மேன்மையை புரியமுடியும் அல்லது அட்லீஸ்ட் குழந்தைபோன்ற திறந்த மனதாவது வேண்டும். இரண்டுமே இல்லாமல் கழிமண்னால் அடைக்கபட்டுபோன இருதயங்களிடம் கர்த்தரின் வெளிப்பாடுகள் பற்றி சொல்வோமாகில் பரியாசமே மிஞ்சும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)