ஆதிமுதலே சாத்தான் மிகுந்த தந்திரக்காரனாக இருந்தான் என்று வேதம் சொல்கிறது
ஆதியாகமம் 3:1தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது
இந்த தந்திதிரமான சாத்தான் தன்னுடைய தந்திரத்தால் இன்று உலகில் நிறைவேற்றி வரும் செயல்கள் என்னவென்பதை நாம் அறிந்துகொள்வது அவசியமாகிறது. இல்லையெனில் நாமும் நிச்சயம் அதன் தந்திரத்தில் பிடிக்கப்பட்டுவிடுவோம். சாத்தானின் தந்திரத்தில் பிடிக்கப்பட்டிருக்கும் ஒருவருக்கு இறுதிவரை அவர்களின் உண்மை நிலை என்னவென்பது தெரியாது யாரும் எடுத்து சொன்னாலும் புரியாது. கடைசியில் தங்களின் உண்மை நிலை தெரிய வரும்போது காலம் கடந்திருக்கும். உதாரணமாக சாத்தானின் தந்திரத்தால் பிடிக்கப்பட்டிருந்த யூதாசுக்கு அவனின் உண்மை நிலை தெரிய வரவில்லை ஆனால் அவன் உண்மையை உணர்ந்துகொண்டபோதோ அவன் மன்னிப்பு பெரும் நிலையை கடந்திருந்தான்.
இதை கருத்தில் கொண்டு நான் சாத்தானின் தந்திரத்தால் பிடிக்கப்பட்டிருக்கிரோமா என்பதை இப்பொழுதே ஆராய்ந்து அறிந்துகொள்ளுவது நலம்.
சாத்தானின் முதல் பிரதான தந்திரம் - தேவனின் வார்த்தைகளை மீறி செயல்பட வைத்தல்!
தேவனின் ஒவ்வொரு வார்த்தைகளும் மனிதனுக்கு ஜீவனை தருபவைகள். அதை மீறி செயல்பட்டால் அதற்க்கு நிச்சயம் தேவநிடமிர்ந்து தண்டனை உண்டு என்பது சாத்தானுக்கு நன்றாகவே தெரியும் எனவே அவனது பிரதான நோக்கம் ஒருவனை அவரது வார்த்தைகளை மீறி செயப்பட வைப்பதுதான். ஆதியில் இருந்தே அவன் அதைதான் செய்துவந்துகொண்டு இருக்கிறான்
எவாளிடம் மெதுவாகவந்து தேவன் இந்த கட்டளையை உனக்கு கொடுத்ததுண்டோ என்று கேட்கிறான்.
அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.
அதற்க்கு ஏவாள்
3. தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள்.
உடனே சாத்தான், அந்த ஒரே கட்டளையை மீறி செயல்பட தந்திரமாக செயல்பட்டு தூண்டி அவளையும் அவளோடு சேர்த்து ஆதாமையும் கெடுத்துபோடுகிறான். தனது திட்டத்தை தந்திரமாக நிறைவேற்றி தேவனின் வார்த்தையை மீறி நடக்க செய்து தேவனிடமே தண்டனையை பெற்றுகொடுக்கிறான்.
இன்றும் அதுபோல் தேவனுடைய வார்த்தையை மீறவைத்து ஜனங்களை கெடுத்து தேவ்னிடம் தண்டனை வாங்கி கொடுப்பதுவே சாத்தானின் பிரதான தந்திரமாக உள்ளது.
அதன் தந்திரத்தை சரியாக அறிந்த தேவன் வேத புத்தகத்தில் தொடக்கத்தில் இருந்து முடிவு வெளிப்படுத்தின விசேஷம் வரை அனேக இடங்களில் தேவன் "எனது கற்பனையை கைகொள்ளுங்கள் கற்பனையை கைகொள்ளுங்கள்" என்று கத்தி புலம்புகிறார்
யாத்திராகமம் 20:6என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன். உபாகமம் 7:11ஆகையால் நீ செய்யும்படி நான் இன்று உனக்குக் கட்டளையிடுகிற கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்வாயாக. பிரசங்கி 12:13காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே
ஏசாயா 48:18 ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்
யோவான் 14:15நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்
I கொரிந்தியர் 7:19 விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம். I யோவான் 2:4அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை
வெளி 22:14ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
இப்படி வேதம் முழுவதும் கற்பனையை கைகொள்ளும்படி போதிக்கும் வசனம் ஏராளமாக இருந்தும் அவைகளை சற்றும் பொருட்படுத்தாமல் சாத்தானின் தந்திரத்தால் பீடிக்கப்பட்டு ஒவ்வொரு காரியத்துக்கு ஏதாவது மூலையில் இருக்கும் யாரோ சொன்ன ஒரே ஒரு வார்த்தை தவறான வியாக்கினம் செய்து ஏதாவது சாக்குபோக்காக சொல்லி துணிகரமாக தேவனின் வார்த்தைகளை மீறி நடப்பதோடு மற்றவர்களையும் அவ்வாறு செய்யும்படி போதிப்பது எவ்வகை சேர்ந்தது என்று சற்றே யோசித்து பாருங்கள்.
கர்த்தருக்கு சித்தமானால் இது சம்பந்தமான இன்னும்சில சாத்தானின் தந்திரசெயல்களையும் வேதாகமத்தின் அடிப்படையில் பார்ப்போம்...
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)