I தீமோத்தேயு 2:4எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
மத்தேயு 18:14இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.
எல்லோரும் இரட்சிக்கப்படவும் மீட்கப்படவும் வேண்டும் என்பதும் ஒருவரும் கெட்டுபோக கூடாது என்பதும் தேவனின் சித்தமாக இருக்கிறது என்றும், அந்த சித்தம் நிறைவேருவதர்க்காக தேவன் நீடிய பொறுமையோடு காத்திருக்கிறார் என்றும் வேதம் நமக்கு தெளிவுபடுத்துகிறது
II பேதுரு 3:9தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
தேவனின் இந்த சித்தம் தானாக நிறைவருமா? அப்படி தானாக நிறைவேறும் என்றால் அவர் நீடிய பொறுமையோடு ஏன் காத்திருக்க வேண்டும்?
இவ்வாறு தேவனின் சித்தம் எல்லாம் இந்த பூமியில் தானாக நிறைவேறும் என்றால் ஆண்டவராகிய இயேசு ஏன் கீழ்கண்டவறாரு ஜெபியுங்கள் என்று நமக்கு கட்டளையிட வேண்டும்?
இவ்வாறு "உம்முடைய சித்தம் பூமியலே செய்யப்படுவதாக" என்று ஜெபியுங்கள் என்று இயேசு சொன்னதில் இருந்து ஒரு காரியத்தை நான் நிச்சயம் அறிந்து கொள்ளலாம். அதாவது தேவனின் சித்தம் இந்த பூமியில் செயல்பட முடியாதபடி ஏதோ தடைகள் இருக்கிறது என்பதையும் நாம் ஜெபிப்பதன் மூலம் அந்த தடைகள் அகல வாய்ப்பிருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ளலாம்.
மேலும் தேவனுடைய சித்தம் எல்லாமே பூமியில் அப்படியே நிறைவேறி வருகிறதா அல்லது அவர் எதிர்பார்த்தபடி நடவாமல் அவர் மனஸ்தாபபடும்/ வேதனைப்படும் சூழ்நிலைகள் இந்த பூமியில் ஏற்ப்பட்டதா என்பதைபற்றி இங்கு நாம் ஆராயலாம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நம்முடைய கருத்துக்கு ஆதாரமாக முதலில் சவுல் ராஜாவின் நடவடிக்கைகளை எடுத்து கொள்வோம். சவுலை இஸ்ரவேல்மேல் ராஜாவாக தேவனே தேர்ந்தெடுத்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் எந்தமனிதனும் தலையிடவில்லை கர்த்தரே தனது சித்தப்படி சவுலை ராஜாவாக தேர்ந்தெடுத்து சாமுவேலை அபிஷேகம்பண்ண கட்டளயிட்டார்
I சாமுவேல் 15:1பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள் மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம்பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே;
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட சவுலிடம் கர்த்தர்:
I சாமுவேல் 15:2சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். I சாமுவேல் 15:3இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய்"
என்று சொன்னார்! தேவனாகிய கர்த்தர் தனது சித்தமாகிய மனவிருப்பத்தை சாமுவேல் மூலமாக சவுலுக்கு சொன்னார்.
ஆனால் சவுல் கர்த்தரின் சித்தத்தை கருத்தில் கொண்டு அதற்க்கு கீழ்படிந்து அதை ழுமையாக நிறைவேற்றாமல் கீழ்க்கண்ட தவறு செய்தான்.
அமலேக்கியரின் ராஜாவை உயிரோடு பிடித்தான் ஆடுமாடுகளில் முதல் தரமானத்தை கொல்லவில்லை.
தேவனின் சித்தம் இங்கு நிறைவேறாமல் போனலதால் சவுலை ராஜாவாக்கியதர்க்கு கர்த்தர் மனஸ்தாபபட்டார் என்று வேதம் சொல்கிறது.
11. நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார்;
சில அர்த்தம்கெட்ட அதிமேதாவிகளின் செயல்களினால் தேவனின்சித்தம் தடைபட வாய்ப்பிருக்கிறது என்பதை இதன் மூலம் அறியமுடியும்! இவ்வாறு மதிஈனங்களை செய்து, சிலர் தடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் ஆகினும் தேவன் இவர்கள் மதியீனத்தை போருட்படுத்தாமல் இவர்கள் மனம்திரும்புவார்கள் என்றே நீடிய பொறுமையோடு காத்திருக்கிறார் என்றும் அறிய முடிகிறது
சவுலின் இந்த அதிமேதாவ செயலுக்கு கர்த்தர் கடுமையான தண்டனை கொடுத்து
அவன் பெலிஸ்தியர் கையில் மடியும்படி செய்தார்
I சாமுவேல் 28:18நீ கர்த்தருடைய சொற்கேளாமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினால், கர்த்தர் இன்றைய தினம் உனக்கு இந்தப் பிரகாரமாகச் செய்தார்.
இங்கு கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்றுவதர்க்காக அபிஷேகம் பண்ணப்பட்ட சவுல் அவர் சித்தத்தை செய்யவில்லை ஆகினும்
எண்ணாகமம் 24:20அவன் அமலேக்கைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: அமலேக்கு முந்தியெழும்பினவன்;
ஆனாலும் அவன் முடிவிலே முற்றிலும் நாசமடைவான் என்றான். என்ற வார்த்தையின்படி அவன் முற்றிலும் நாசமடைவான்! அதாவது தேவன் தனது சித்தத்தை யாராவது ஒருவர் மூலம் நிச்சயம் நிறைவேற்றிவிடுவார் என்பதில் நிச்சயம் சந்தேகம் இல்லை அனால், அவர் சித்தத்தை அறிந்தும் அதை நிறைவேற்றாமல் போனவர்கள் சவுல் தண்டிக்கப்ப்ட்டதுபோல தண்டிக்கப் படுவார்கள் என்பது உறுதி.
லூக்கா 12:47தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்
எனவே நமக்கு சொல்லப்பட்ட வார்த்தைகளை நாம் கைகொண்டு நடக்க கடமை பட்டுள்ளோம், அதன் அடிப்படையில் தேவனின் எல்லா சித்தமும் நிச்சயம் நிறைவேறும்!
கர்த்தர் தானாக எதையும் செய்யாமல், அவருக்கு பிரியமானவர்கள் மூலம் அவரது சித்தத்தை செய்கிறார். அதற்குதான் மனிதர்களை அவர் அபிஷேகிக்கிறார், அவர்கள் மூலம் அவரது சித்தத்தை செய்து முடிக்கிறார்.
மாறாக, உம்முடைய சித்தம் எப்படியாகிலும் யாரை வைத்தாவது நிறை வேறிவிடும், நான் ஒன்றும் செய்யவேண்டிய தேவையில்லை என்று அவர் வார்த்தைகளுக்கு கீழ்படியாமல் நமது இஸ்டப்படி நடந்து, அவரது வார்த்தை களை அசட்டைசெய்தால் சவுலுக்கு கிடைத்ததுபோல் தண்டனைதான் கிடைக்கும்!
-- Edited by SUNDAR on Friday 16th of July 2010 05:45:58 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
கர்த்தருக்குள் அன்பின் வாழ்த்துக்கள் சில நாட்களாக தங்களது தளத்தை பார்த்து வருகிரேன் நல்ல வாழ்க்கை வாழமுயன்றுவருகிறிர்கள் என்று உங்கள் எழுத்தின் தெரிந்தேன் நன்றி. என்னுடைய நம்பிக்கை என்றாள் கடவுளுடைய உண்மையான வார்த்தை வரும்போது முழுவதும் நல்ல எண்ணங்கள் தான் வரும் சில காலம் தங்கி பின்னர் பின்னடைவு ஏற்படாதூ. நம்மில் ந்ல்லபழக்க்ங்கள் உண்டு ஆமாம். ஆமாம் ஏன்றாள் நாம் ஏன் தவறுகின்றேஅம் ஏனென்றாள் நாம் முமூமைஅடையவில்லை. உங்களது தளத்தில் நீங்கள்வெளியிட்டுள்ள எழுத்துக்கள் மூலம் தெரிந்தேன்.ஆதலால் நம்முடைய நல் வாழ்க்கையல்ல. கடவுளின் வார்த்தை மட்டுமே உயிருள்ளது நம்முடைய வெளிவேடம் அல்ல வெளிவேடம் நிலைஅற்றது.கடவுள் கிருபை உள்ளவர்கள் பாக்கியவான்.பதிவு இன்னும் தொடரும் நன்றி.
இன்னும் ஒரு வேதாகம சம்பவத்தை தியானித்து இந்த தலைப்பை முடிக்கலாம்:
இஸ்ரவேல் ஜனங்களுக்கு கானான் தேசத்தை சுதந்திரமாக பங்கிட்டு கொடுப்பது என்பது தேவனின் சித்தமாக இருந்தது.
சங்கீதம் 105:11உங்கள் சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.
கர்த்தரின் இந்த சித்தம் நிறைவேருவதர்க்காக எகிப்த்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேல் ஜனங்களை மோசேயின் தலைமையில் கூட்டி கொண்டு வனாந்திர வழியில் பிரயாணபட்டு கானான் தேசத்தை நோக்கி அழைத்து சென்றார். அவர் தனது சித்தத்தை நிறைவேற்ற என்னதான் பிரயாசம் எடுத்து ஜனங்களை நடத்தினாலும் சில கூறுகெட்ட ஜனங்கள் வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து போகும் வழியில் பண்ணிய அழிம்பாட்டங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. எனவே அநேகரை தேவன் வழியிலேயே வாதையினால் கொல்ல வேண்டிய நிலை ஏற்ப்பட்டது! கர்த்தரின் ஒரு சிறு கட்டளையை மீறிய மோசே கூட கானானில் பிரவேசிக்கும் மேன்மையை இழந்தான்.
எண்ணாகமம் 14:30எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை
"தேவனுடைய சித்தம் நம்மை கானானில் கொண்டு சேர்ப்பதுதான் அவர் எப்படியும் நம்மை அங்கு கொண்டு சேர்த்துவிடுவார்" என்ற எண்ணத்தில் வேண்டாத வேலைகளை செய்த விபரம் கெட்டவர்கள் எல்லோருமே வழியிலேயே அடியோடு மாண்டார்கள். அவர்களின் பிள்ளைகளே கானானுக்குள் பிரவேசித்தார்கள்.
இங்கு தேவனின் சித்தம்/ திட்டம் நிச்சயம் நிறைவேறியது. ஆனால் அதில் பங்கு பெறும் சிலாக்கியத்தை அந்த நன்மையை அனுபவிக்கும் மேன்மையை இடும்பு பிடித்த அநேகர் இழந்துபோனார்கள்.
அதே நிலைதான் இன்றும் "நாம் எப்படி வேண்டுமானாலும் ஜீவிக்கலாம் தேவனின் சித்தம் எப்படியாவது நிறைவேறிவிடும்" என்று தேவனின் வார்த்தைகளை அசட்டை செய்பவர்களுக்கும் நேரும்!
தேவன் தனது சித்தமப்படி எல்லாவற்றையும் நிச்சயம் முடித்து விடுவார் ஆனால் அவரது வார்த்தைகளை அசட்டை செய்து இடும்பு பிடித்தவர்கள் அவர் அருளும் மேன்மையான சிலாக்கியத்தை அடையபோவது இல்லை!
யோவான் 12:25தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான் .
இந்த உலகத்தில் மேன்மையான வாழ்வையும் தன் ஜீவனை வெறுத்து ஆண்டவருக்காக அவரது வார்த்தைகளுக்காக எதையும் இழக்க துணியாதவன் அனைத்தையும் இழந்துபோவான் என்பது உறுதி!