இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: படைப்பும், வேதியியல் வெளிப்பாடும் :


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
படைப்பும், வேதியியல் வெளிப்பாடும் :
Permalink  
 


படைப்பும், வேதியியல் வெளிப்பாடும் :

(இது என்னுடைய சொந்த வெளிப்பாடு. சிறிது அறிவியலும் உண்டு)

ஆதியிலே தேவன் உணர்வுள்ள ஆவியாயிருந்தார். அவர் தன்னை சுற்றிலும் இருந்த உணர்வில்லாத வாயுவை (மூலப் பொருள்) தெரிந்து கொண்டார். அதன் பிறகு சூனியம் மட்டுமே இருந்தது. தன்னுடைய உணர்வை மேலும் விரிவாக்கும் பொருட்டு (மூலப் பொருளையும் உணர்வுள்ளதாக ஆக்கும் பொருட்டு) தன்னுடைய படைத்தலை அவர் ஆரம்பித்தார்.
அந்த மூலப் பொருள் தீப்பற்றி வெடிக்கக்கூடியது. தேவன் மூலப் பொருளின் மேல் அசைவாடினார்.இதனால் உண்டான் உராய்வினால் இந்த மூலப் பொருள் தீப்பற்றிக் கொள்ள ஒளி உண்டானது. அங்கு இந்த மூலப் பொருள் மட்டுமே இருந்ததனால் பெரு வெடிப்பு நிகழ்ந்தது. மிகப் பெரிய ஜோதி உண்டானது. தேவன் ஜோதிகளின் பிதாவானார். ஜோதியின் நடுவே அந்த ஜோதியினால் பாதிக்கபடாதவராக அவர் இருந்தார். இதன் மூலம் தேவன் ஒளி என்ற இன்னொரு சக்தியை கண்டு கொண்டார். இந்த பெரு வெடிப்பினால் சூனியத்தில் நெருப்பு தழல்கள் பரவியது.
தேவன் இந்த ஒளியையும், மூலப் பொருளையும் வைத்துதான் அடுத்த தனிமத்தை படைக்க முடியும். ஆனால் மூலப் பொருள் மொத்தமே எரிந்ததால் மூலப் பொருள் இல்லாமல் போனது. மொத்த பொருளுமே தீப் பற்றி கொள்ள தேவனுடைய முதல் முயற்ச்சி தோல்வியில் முடிந்தது.
ஆனால் அந்த மூலப் பொருள் சூனியத்தில் பரவியது. இன்றும் அது தொடர்கிறது. இவ்வாறாக தேவன் தனனிடமிருந்த செறிவுள்ள மூலப்பொருளை சூனியத்தில் விரித்தார். அது வானம் எனப்பட்டது. மிக குறைவாக ஆனால் செறிவாக இருந்த மூலப் பொருளை திரையை போல சூனியத்தில் அவர் விரித்தார். அண்ட வெளியானது மிக சிறிதாக இருந்து மென் மேலும் விரிந்து கொண்டே போனது என்பது அறிவியலாரின் கூற்று. இந்த விரிதல் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. (பார்க்க படம்) இவ்வாறு சூனியத்தில் பரவிய நெருப்பு தழல்கள் குளிர்ந்து (நடுவில் வெற்றிடம் இருந்ததால் அல்லது தேவ ஆவியினால்) பல பிரிவுகளை உடைய மூலப் பொருளாக ஆனது.

http://en.wikipedia.org/wiki/File:Universe_expansion2.png

The Big Bang is the prevailing cosmological theory of the early development of the universe. Cosmologists use the term Big Bang to refer to the idea that the universe was originally extremely hot and dense at some finite time in the past and has since cooled by expanding to the present diluted state and continues to expand today. The theory is supported by the most comprehensive and accurate explanations from current scientific evidence and observation.[1][2] According to the best available measurements as of 2010[update], the initial conditions occurred around 13.3 to 13.9 billion years ago.[3][4]

தேவன் ஒளியையும், பிரிந்த மூலப் பொருளையும் வைத்துதான் அடுத்த தனிமத்தை படைக்க முடியும். ஆனால் மூலப் பொருள் மட்டுமே இருப்பதனால் உராய்வினால் மொத்த மூலப் பொருளும் பற்றி கொள்ள அவரால் வேறு எதையும் செய்ய முடியவில்லை. என்ன செய்வது என்று யோசித்த தேவன் தன்னுடைய ஒரு பகுதியை அந்த தீயில் பலியாக்கினார். உலகின் முதல் பலியும், வேள்வியும் தொடங்கியது. தேனுடைய இந்த பலியினால் ஒரு தனிமம் உருவாகியது. இதுவே அணு எண் ஒன்று கொண்ட முதல் தனிமம். இதுவும் எளிதில் தீப்பற்றக் கூடியது. இன்று அண்ட வெளியில் மிக அதிகமான சதவிகிதத்தில் காணப்படுவது இதுவே. இது ஹைட்ரஜன் என்னும் தனிமம். உதாரணத்துக்கு இதை பிதாவுக்கு சமமாக சொல்லலாம். இது முதலாம் காலமாகும்

இதுவும் உராய்வினால் எரிந்து போகும் தன்மையுடையதால் தான் விரும்பியதை படைப்பதற்காக தன்னுடைய ஒரு பகுதியை இந்த தீயில் பலியாக்கினார். அதன் மூலம் ஹீலியம் என்னும் அணு எண் இரண்டு கொண்ட தனிமம் தோன்றியது. இது ஒரு மந்த வாயுவாகும். இது எரிவதில்லை, பிற பொருள்களோடு இணவதில்லை. இதனால் தேவனால் மூலப் பொருளை இரண்டாக பிரிக்க முடிந்தது. இரண்டு பக்கமும் ஹைட்ரஜன் இருக்க நடுவில் ஹீலியம் இருக்க மூலப் பொருள் மொத்தமும் பாதிக்கபடாமல் ஒரு பகுதியை மட்டும் தான் விரும்பியவாறு மாற்ற தேவனால் முடிந்தது. இந்த இரண்டாம் பொருளை தான் மட்டும் தனியாக செயல்படாமல் தேவனோடு இணைந்து செயல்படும் ஞானத்துக்கு சமமாக சொல்லலாம். இது இரண்டாம் காலமாகும்.

இந்த இரண்டு தனிமங்கள், ஒளி, உராய்வு என அனைத்தையும் பயன்படுத்தி மூன்றாவது தனிமத்தை அவர் கண்டார். இந்த தனிமமே வெகு குறைந்த அடர்த்தியுள்ள திடப் பொருளாகும். முதன் முதலில் மூலப் பொருளை எதிர்த்து கொண்டு அந்த மூலப் பொருளில் சேராத ஒரு பொருள் படைக்கப்பட்டது. இதன் மூலம் மூலப் பொருளிலிருந்து பல்வேறு தன்மையுள்ள பொருள்களை படைக்கும் வழி பிறந்தது. இந்த மூன்றாவது பொருளை தேவ குமாரனுக்கு சமமாக சொல்லலாம். இது மூன்றாம் காலமாகும்.

இதன் பிறகு லித்தியம் என்ற நான்காவது தனிமத்தை தேவன் உண்டாக்கினார்.

இவ்வாறு தனிமத்தை உண்டாக்கும் போது அதற்கு எதிரான பொருள்களும் உருவாயின. ஆனால் தேவன் அந்த பொருள்களோடு (வலு சர்ப்பம் இது சாத்தான் அல்ல) போராடி அவைகளை வென்று தான் உருவாக்க நினைத்ததை படைத்தார்.

Baryon asymmetry

It is not yet understood why the Universe has more matter than antimatter.[33] It is generally assumed that when the Universe was young and very hot, it was in statistical equilibrium and contained equal numbers of baryons and antibaryons. However, observations suggest that the Universe, including its most distant parts, is made almost entirely of matter. An unknown process called "baryogenesis" created the asymmetry. For baryogenesis to occur, the Sakharov conditions must be satisfied. These require that baryon number is not conserved, that C-symmetry and CP-symmetry are violated and that the Universe depart from thermodynamic equilibrium.[53] All these conditions occur in the Standard Model, but the effect is not strong enough to explain the present baryon asymmetry.

வலு சர்ப்பத்தோடு போராட்டமும், தன்னுடைய பலியும் தேவனுக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

(தொடரும்)


-- Edited by SANDOSH on Sunday 22nd of August 2010 10:01:01 PM

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

தேவன் பெரு வெடிப்பின் மூலமாக முதல் தலைமுறை நட்சத்திரங்களை உருவாக்கினார். இவைகளில் முதல் நான்கு தனிமங்கள் மட்டுமே காணப்பட்டது. இவைகள் அளவில் மிகவும் பெரிதாக இருந்தன. இவைகள் மிகவும் தீவிரமாக எரிந்ததால் எரிபொருள் விரைவிலேயே காலியாகி வெடித்தன. இந்த வெடிப்பிலிருந்து மேலும் பல தனிமங்கள் தோன்றின.

இதற்கு பிறகு இது போன்ற சூப்பர் நோவா எனப்படும் பல சிறு வெடிப்புகளை நிகழ்த்தி தேவன் தான் நினைத்தபடியெல்லாம் வானத்தில் நட்சத்திரங்களை உண்டாக்கினார்.

யோபு 26.13. தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கரம் நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உருவாக்கிற்று.

இரண்டாம் தலைமுறை நட்சத்திரங்கள் மேலும் பல தனிமங்கள் உடையவனவாய் இருந்தன.அதற்கு பிறகு உருவாக்கப்பட்டவை மேலும் ப்ல தனிமங்களோடு இருந்தன. நமது சூரியக் குடும்பம் மூன்றாம் தலைமுறையை சேர்ந்ததாகும். இந்த ஒரே ஒரு சிறு பெரு வெடிப்பானது ஒரு சூரியக் குடும்பத்தையே உண்டாக்க வல்லது. நமது சூரியக் குடும்பம் இது போன்ற ஒரு வெடிப்பிலிருந்தே தோன்றியது.

A supernova (plural supernovae) is a stellar explosion that is more energetic than a nova. Supernovae are extremely luminous and cause a burst of radiation that often briefly outshines an entire galaxy, before fading from view over several weeks or months. During this short interval a supernova can radiate as much energy as the Sun is expected to emit over its entire life span.[1] The explosion expels much or all of a star's material[2] at a velocity of up to 30,000 km/s (10% of the speed of light), driving a shock wave[3] into the surrounding interstellar medium. This shock wave sweeps up an expanding shell of gas and dust called a supernova remnant.

(சூரியன் தோன்றும் முன்னரே ஒளி தோன்றியது என்று ஆதியாகமத்தில் சொல்லப்பட்டுள்ளதே அது எப்படி என்று பலர் கேட்கின்றனர். தேவன் பூமியிலே உயிர்களை உண்டாக்கவும், சூரிய குடும்பத்தை உண்டாக்கவும் சித்தம் கொண்டு சூப்பர் நோவா எனப்படும் சிறு பெரு வெடிப்பை முதலில் நிகழ்த்தினார். இதுவே ஒளி உண்டாயிற்று என சொல்லப்படுகிறது. இந்த வெடிப்பு தான் நினைத்தது போலவே பலன் தரக்கூடியது என்று தேவன் கண்டதால் இந்த வெடிப்பு (ஒளி) நல்லது என சொன்னார். இது போன்ற நான்கு வெடிப்புகளை தேவன் நிகழ்த்தியுள்ளதாக தெரிகிறது (நான்காம் நாள் வரை)

தேவனின் உலகத்தை உருவாக்கின இந்த மிகப் பெரிய செயலுக்கு சவால்விடும் வகையில் இது போன்ற பெரு வெடிப்பை செய்ய (மாதிரியை) மனிதர்களாகிய எங்களாலும் முடியும் என்று விஞ்ஞானிகள் ஒரு கருவியை உருவாக்கி பெரு வெடிப்பின் மாதிரியை செய்ய முயன்று வருகின்றனர்.)

இவ்வாறு நட்சத்திரங்களை உருவாக்கும் போது தன்னுடைய காலத்துக்கு முன்பே சில நடசத்திரங்கள் தோன்ற அவைகளை தேவன் அடைத்து வைத்தார். இது பற்றி ஏனோக்கின் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. (ஏனோக்கின் புத்தகத்திற்க்கு யூதா அதிகாரத்தில் 1.14 அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது)

யோபு 9.7. அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்; அவர் நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறார்.

யோனோக்கின் புத்தகம் :

15. Then the angel said, This place, until the consummation of heaven and earth, will be the prison of the stars, and the host of heaven.

16. The stars which roll over fire are those which transgressed the commandment of God before their time arrived; for they came not in their proper season. Therefore was He offended with them, and bound them, until the period of the consummation of their crimes in the secret year.

இவ்வாறு உண்டான தனிமங்களில் கார்பன் (6) , நைட்ரஜன் (7), ஆக்ஸிஜன் (8) முதலியவை முக்கியமானவையாகும்.

திட மற்றும் வாயு நிலையிலான தனிமங்களை உருவாக்கின தேவன், ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனை சேர்த்து தண்ணீரை உருவாக்கினார். இந்த தண்ணீரை மேகத்தினால் அடைத்து வைத்து மேகங்கள் சூழ்ந்திருக்கும் பரலோகம் என்ற இடத்தை உருவாக்கி, ஆவியான தேவன் தனக்கு ஒளி சரீரத்தை உருவாக்கி கொண்டார்.

3. தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார்.

யோபு 26.8. அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்; அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை.

9. அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாசத்தை ஸ்திரப்படுத்தி, அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார்.

2 சாமு 22.12 ஆகாயத்து மேகங்களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.

அவரிடம் இருந்து ஏழு ஆவிகள் புறப்பட்டது.

வெளி 4.5. அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.

அதன் பிறகு தன் ஆவியால் நிரம்பிய, உணர்வுள்ள பரலோகத்தின் சேனைகளை உண்டாக்கினார். இந்த பரலோக சேனைகள் வாயு, நீர், நெருப்பு, ஆகாயம் என்பவைகளின் மேல் அதிகாரம் கொண்டு கர்த்தர் நினைத்தது போல அவைகளை மாற்றக் கூடியது.

தன்னுடைய பரிசுத்த நெருப்பால் ஆன ஆறு இறக்கைகள் கொண்ட சேராபீன்களை உண்டாக்கினார். (சே-இந்தியில் ஆறு)

ஏசா 6.2. சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து;
3. ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.
4. கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது.

வாகனமாகவும், சிங்காசனத்தை தாங்கவும் சாருபீன்களை உண்டாகினார்.(கேருபீன்கள்-சார் பீன்கள் (சார்- இந்தியில் நான்கு, நான்கு இறக்கைகள் உடைய ஜீவன்கள்)

எசே1.5. அதின் நடுவிலிருந்து நாலு ஜீவன்கள் தோன்றின; அவைகளின் சாயல் மனுஷ சாயலாயிருந்தது.
6. அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு முகங்களும், ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு செட்டைகளும் இருந்தன.

எசே 10.1. இதோ, கேருபீன்களுடைய தலைக்குமேல் இருந்த மண்டலத்தில் இந்திரநீலரத்தினம்போன்ற சிங்காசனச் சாயலான ஒரு தோற்றத்தைக் கண்டேன்; அது அவைகளுக்குமேல் காணப்பட்டது.

நெகேமியா 9.6. நீர் ஒருவரே கர்த்தர்; நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்; வானசேனைகள் உம்மைப் பணிந்துகொள்ளுகிறது.

யோபு 25.3. அவருடைய சேனைகளுக்குத் தொகையுண்டோ? அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது?

சங்கீ 104.4. தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜுவாலைகளாகவும் செய்கிறார்.

காற்றை தமது தூதர்களாகவும், அக்கினி ஜுவாலையை தமது ஊழியக்காரராகவும் செய்கிறார் என ஆங்கில வேதாகமத்தில் உள்ளது ஆங்கில வேதாகமே சரி என கருதுகிறேன்.

இவ்வாறு தேவன் உண்டாக்கிய சேனைக்கு ஒரு எடுத்துகாட்டாக நீரின் மேல் அதிகாரம் கொண்ட (உண்டாக்க கூடிய)சேனையின் ஒரு பகுதியை பற்றி சொல்கிறார்.

யோபு 38. 28. மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளை ஜநிப்பித்தவர் யார்?
29. உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? ஆகாயத்தினுடைய உறைந்த பனியைப்பெற்றவர் யார்?

தேவன் இவ்வாறு உறைந்த பனியை உண்டாக்கி அதை சேர்த்துக் வைத்துக் கொண்டார்.

யோபு 38.22. உறைந்த மழையின் பண்டசாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ? கல்மழையிருக்கிற பண்டசாலைகளைப் பார்த்தாயோ?
23. ஆபத்து வருங்காலத்திலும், கலகமும் யுத்தமும் வருங்காலத்திலும், பிரயோகிக்கும்படி நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன்.

இவ்வாறு பரலோகத்தின் சேனைகளை உருவாக்கின தேவன் தன்னுடைய ஏழு ஆவியால், மூன்று பிரதான தூதர்களை உருவாக்கினார். பரலோக சேனைகள் அல்லாமல் இவர்களே தேவனின் முதல் படைப்பு. படைப்பு துவங்கின நேரம் அதிகாலை எனப்படுகிறது. இவர்கள் மூவரும் அதிகாலையில் தோன்றிய விடிவெள்ளி நட்சத்திரம். (இயேசு இருளிலும் பிரகாசிக்கும் விடிவெள்ளி நட்சத்திரம்)

இவர்களின் பெயர் மிகாவேல், லூசிபர், ஊரியேல் என்பவைகளே. மிகாவேல் பிதாவின் அம்சமாகவும், லூசிபர் குமாரனின் அம்சமாகவும், ஊரியேல் பரிசுத்த ஆவியின் அம்சமாகவும் தோன்றினர். இவர்கள் ஒளி சரீரம் உடையவர்களாய் இருந்தனர். இவர்கள் தேவனிடத்திலும், ஒருவருக்கொருவரும் அன்பாக இருந்தனர். இவர்கள் தங்களுக்கென்று உலகத்தை உருவாக்கி கொண்டு சேனைகளையும் உண்டாக்கி கொண்டனர். இவர்களில பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகியோரின் வல்லமைகள் சரியான விகிதத்தில் இருந்தன. இவர்கள் தேவனை துதித்துக் கொண்டு, தங்கள் படைப்பில் மகிழ்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் அன்போடு இருந்தனர். எல்லாம் மகிழ்ச்சியாய் இருந்தது.

இதில் லூசிபர் என்ற தூதன் அரசாண்ட பகுதி பூமி எனப்பட்டது. அந்த நாட்களில் பூமி 2-டைமென்சன் ஆக இருந்தது. தட்டையாக வாயு மண்டலம் உள்ளதாக ஒளி வடிவமாக இருந்தது. அக்கினி மயமான கற்கள் உடையனவாய் இருந்தது. ஒளி வடிவ ஜீவன்கள் இந்த வாயு மண்டலத்தில் மிதந்து கொண்டு இருந்தனர். (ஒரு சில சினிமாவில் வருவதை போல)

இப்படியே பல யுகங்கள் கழிந்தன. இதில் லூசிபர் என்னும் தூதனுக்கு இந்த ஒரே மாதிரி சந்தோஷமான வாழ்க்கை அலுப்பு தட்ட ஆரம்பித்தது. வித்தியாசமான அனுபவம் பெற வேண்டும் என இந்த தூதன் ஆசைப்பட்டான். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் வல்லமை சரியான விகிதத்தில் இருந்த இந்த தூதன் பிதாவின் வல்லமையை அதிகமாக பெற ஆசை கொண்டான். அதற்காக பரலோகத்துக்கு ஏறி போய் பிதாவின் வல்லமையை அதிகமாக பெற்றான். இதனால் இவனில் இருந்த சமனிலை மாறி அவன் பெற்ற வல்லமை அவனை எரித்தது. இதனால் எரிந்து கொண்டே தன்னுடைய உலகமாகிய பூமியின் மேல் வந்து விழுந்தான். தன் மேன்மையை இழந்து வேறு சரீரம் உடையவனாய் ஆனான். இப்படியாக லூசிபர் என்ற தூதன் தற்கொலை செய்து கொண்டான். இவன் சாத்தானாக ஆனான். சாத்தானுக்கு எடுத்துகாட்டாய் விளங்கும் சவுலும், யூதாசும் தற்கொலை செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசா 14.12. அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
13. நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,
14. நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
15. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.

பெரு நெருப்போடு வந்து சாத்தான் விழுந்த இடம் பள்ளமாகியது (முதலில் பள்ளம், மேடு எல்லாம் இல்லை) இது பாதாளம் எனப்பட்டது. இந்த பெரு நெருப்பினால் பூமி அழியும் அபாயம் தோன்றியது. பூமியை அழிவிலிருந்து காப்பாற்ற தேவன் தான் முன்பு முன்னேற்பாடாக சேகரித்து வைத்திருந்த தண்ணீரை வானத்திலிருந்து பொழியப் பண்ணிணார்.

திரளான தண்ணீர் பூமியை சுற்றிலும் மூடிக் கொண்டது. பூமியின் ஒரு பகுதி மாத்திரம் அக்கினி கடலாக இருக்க மற்ற பகுதிகளில் பற்றிய தீ அணைந்து போனது. ஆனால் இன்னொரு ஆபத்து தோன்றியது. பூமி நீரில மூழ்கி போனது. இப்போது தண்ணீரை கட்டுப்படுத்துவது பெரிய விஷயமாகி போனது.

2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

தேவன் பூமியை நீரிலிருந்து எடுத்து அது மறுபடியும் நீரில் மூழ்காதபடி அதை ஆதாரங்கள் மேல் ஸ்தாபித்தார். (இதையே இந்து புராணங்கள் வராக அவதாரமாய் குறிப்பிடுகின்றன)

9. பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
10. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

இந்த வேதி வினையால் கற்களும், மண்ணும் தோன்றியது. பூமி 3-டைமென்ஷன் ஆனதாய் மாறியது. தட்டையான வாயு மண்டலமான பூமி உருண்டை வடிவமானதாய் ஆனது. மேடு பள்ளமாய் ஆனது. flatness problem என்ற தலைப்பில் விக்கியில் இதை பற்றி உள்ளதாக தெரிகிறது. ஆனால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. புரிந்தவர்கள் இது இதை பற்றிதானா என்பதை உறுதி செய்யலாம்.

http://en.wikipedia.org/wiki/File:End_of_universe.jpg

யோபு 38.14. பூமி முத்திரையிடப்பட்ட களிம்பைபோல் வேறே ரூபங்கொள்ளும்; சகலமும் வஸ்திரம் தரித்திருக்கிறதுபோல் காணப்படும்.

சங்கீ 104.5. பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார்.
6. அதை வஸ்திரத்தினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; பர்வதங்களின்மேல் தண்ணீர்கள் நின்றது.
7. அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துபோயிற்று.
8. அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது.
9. அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி கடவாதிருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர்.

முதலில் மூலப் பொருளில் மூழ்காமல் உணர்வுள்ளவராக இருந்த தேவன் மூலப் பொருளிலிருந்து தனக்கு வேண்டியவற்றை எடுத்தார். பிறகு இந்த மூலப் பொருளுக்கு அடையாளமாக தண்ணீர் மாற தண்ணீரிலிருந்து பூமியை எடுத்தார். நோவாவின் காலத்தில் இதே நிகழ்ச்சி ரீ-பிளே செய்யப்பட்டது. பூமி மொத்தமும் தண்ணீரில் மிதக்க அதிலிருந்து நோவாவின் பேழையை மாத்திரம் தேவன் எடுத்தார்.

1. அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.
2. அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்.
3. சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களே அவரைத் துதியுங்கள்.
4. வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; ஆகாயமண்டலத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.
5. அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.
6. அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார்.

(தொடரும்)



-- Edited by SANDOSH on Sunday 22nd of August 2010 09:59:24 PM

__________________


இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

// தேவன் பெரு வெடிப்பின் மூலமாக முதல் தலைமுறை நட்சத்திரங்களை உருவாக்கினார். இவைகளில் முதல் நான்கு தனிமங்கள் மட்டுமே காணப்பட்டது. இவைகள் அளவில் மிகவும் பெரிதாக இருந்தன. இவைகள் மிகவும் தீவிரமாக எரிந்ததால் எரிபொருள் விரைவிலேயே காலியாகி வெடித்தன. இந்த வெடிப்பிலிருந்து மேலும் பல தனிமங்கள் தோன்றின. //

நண்பர் சந்தோஷ் அவர்கள் இதுபோன்ற கருத்துக்களை எடுத்தாளும் ஆதாரக் குறிப்புகளையும் அதன் தொடுப்புகளுடன் வெளிட்டால் மிகவும் உதவியாக இருக்கும்; அது ஆங்கிலத் தொடுப்பாக இருந்தாலும் சரி; ஏற்கனவே நான் இந்த கோரிக்கையை முன்வைத்தது நினைவிருக்கலாம்.


__________________

"Praying for your Success"
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard