இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவன் விரும்புகிறது என்ன......?


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
தேவன் விரும்புகிறது என்ன......?
Permalink  
 


ஒரு மனிதனிடத்தில் கர்த்தர் எதை விரும்புகிறார். என்பதை தெரிந்து கொண்டால் அப்படி இருபதற்கு முயற்சி செய்யாலாமே ஏனெறால் தேவனால் உருவாக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு நோக்கத்தையும் திட்டத்தையும் கர்த்தர் வைத்து இருகிராரர். அதுபோல மனிதனிடத்தில் கர்த்தர் எதிர்பார்கிறது என்ன..? (வேதத்தின்  அடிப்படையில்)  சகோதரர்கள் தங்கள் கருத்துகளை பதித்தல் இதை படிபவருக்கு மிகவும் ப்ரோயோஜனமாக இருக்கும் என்று நினைக்கிறன்....!


__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

Stephen wrote:

 

ஒரு மனிதனிடத்தில் கர்த்தர் எதை விரும்புகிறார். என்பதை தெரிந்து கொண்டால் அப்படி இருபதற்கு முயற்சி செய்யாலாமே ஏனெறால் தேவனால் உருவாக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு நோக்கத்தையும் திட்டத்தையும் கர்த்தர் வைத்து இருகிராரர். அதுபோல மனிதனிடத்தில் கர்த்தர் எதிர்பார்கிறது என்ன..? (வேதத்தின்  அடிப்படையில்)  சகோதரர்கள் தங்கள் கருத்துகளை பதித்தல் இதை படிபவருக்கு மிகவும் ப்ரோயோஜனமாக இருக்கும் என்று நினைக்கிறன்....!


இது சிக்கலான நல்ல ஒருகேள்வி! பதில் கொடுப்பது சுலபமானது அல்ல! எத்தனை பக்கங்கள் எழுதினாலும் இதற்க்கான பதில் முழுமை அடையாது என்றே நான் கருதுகிறேன்.
 
நாம் இந்த உலகில் வாழும் காலங்களில் எல்லாம் மூன்று விதமான காரியங்களை  நிறைவேற்றுகிறோம் அதாவது இந்த உலகில் நாம் செய்யும் செயல்கள் எல்லாமே 
கீழ்க்கண்ட மூன்று நிலைக்குள் அடங்கிவிடும்  
 
1. பிதாவின் சித்தம்
2. சுய சித்தம்
3. பிசாசின் சித்தம்
 
இதில் சுய சித்தத்தையும் பிசாசின் சித்தத்தையும் தவிர்த்து எப்பொழுதும் பிதாவின் சித்தத்தை செய்பவர்ககளோடு பிதா தங்கியிருக்கிறார் என்று வேதம்  சொல்கிறது  
 
யோவான் 8:29 ,பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும்
 செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார்.
 
எனவே பிதாவின் சித்தம் அறிந்து அதை செய்தால் தேவனுக்கு பிரியமாக வாழ முடியும் என்று அறியமுடிகிறது. அவரது நோக்கம் மற்றும் சித்தம் என்ன? என்பதற்கான பதிலை இரண்டு பிரிவாக பிரிக்கலாம்.
 
1.  தேவனின் பொதுவான திட்டம்/சித்தம்    
 
தேவனின் பொதுவான திட்டம் அனைத்தும்  வேதாகமத்தில் நமக்கு எழுதி கொடுக்க ப்பட்டுள்ளது. அதற்கே முதலிடம் தரப்படும் அதன் அடிப்படையிலேயே தனி மனிதனின் திட்டம் செயல்படும். தேவன் மிக முக்கியமாக மனிதனிடம் எதிர்பார்ப்பது என்னவென்பதை அவர் வேதபுத்தகத்தில்  பல இடங்களில் தெளிவாக சொல்லியிருக்கிறார். ஆனால் பிசாசினால் பீடிக்கப்பட்டிருக்கும் நமக்குத்தான் அது சரியாக மண்டையில் ஏறுவது இல்லை!   
 
ஒரு மனிதனிடத்தில் கர்த்தர் எதை விரும்புகிறார்? என்ற தங்களில் கேள்விக்கு கீழ்க்கண்ட வசனம் நேரடியாக  பதில் தருகிறது.
 
மீகா 6:8 மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
 
இதை சரியாக அறிந்த பவுல் கீழ்க்கண்டவாறு போதிக்கிறார்

கொலோசெயர் 3:12
ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;
 
தேவன்  "நியாயம், நீதி என்றும் இரக்கம், மனத்தாழ்மை என்றும் வேத புத்தகம் முழுவதும் கத்துகிறார். அனால் அவர் எதிர்பார்க்கும் இந்த காரியங்களை செய்யாமல் தவிர்க்க, நாம் என்னென்ன சாக்குபோக்கு சொல்ல முடியுமோ அத்தனையும் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.
 
சிலர் இயேசு நமக்காக  மரித்துவிட்டார் எனவே நாம் எதுவும் செய்ய வேண்டியது இல்லை என்கின்றனர், சிலர் என்ன செய்தாலும்  எல்லோருக்கும் நிச்சயம் மீட்பு உண்டு  எனவே நாம் எதுவும் செய்யவேண்டிய தேவையில்லை என்கின்றனர். சிலர் நமது கிரியை பயனற்றது தேவன்தான் எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இதுபோல் அனேக சாக்குபோக்குகள் சொல்லி தேவன் எதிர்பார்க்கும் நியாயத்தையும் இரக்கத்தையும் விட்டுவிட்டோம்
 
நமது சுய நீதியினால் தேவ நீதியை எட்ட முடியாது என்பது முற்றிலும் உண்மை! அதற்காக தேவனின்  வார்த்தைகளை  அசட்டை செய்யாமல் அவர் செய் என்று  சொன்னதை .கருத்தில் கொண்டு   நம்மால் செய்யமுடிந்த நீதியை நிச்சயம் செய்யமுயல வேண்டும். 

நம்மால் செய்யமுடியாத காரியத்தை நம்மேல் சுமத்தி இதைசெய் அதைசெய் என்று தேவன் தவறாக சொல்லி விடவில்லை.  நம்மால் முடிந்த நீதி நியாயம் இரக்கம் போன்றவற்றை   செய்ய முயற்சித்தால் தேவன்  நமக்கு  ஆவியில் கூடுதல் பெலன் தந்து  அவரது இருதய திட்டங்களை அறிவித்து நம்மூலம் அதை நிறைவேற்றுவார். 

இங்கு  நான் மீண்டும் சொல்லும் ஒரு முக்கியமான கருத்து என்ன வெனில்  நாம் என்ன செய்கிறோம் என்பதைவிட, நமது மனதின் நிலை என்ன? என்பதன் அடிப்படையிலேயே தேவனுக்கு பிரியமானவர்களாகவோ அல்லது தேவனால் நிராகரிக்கப்படும்  நபராகவோ மாறமுடியும். 
 
எனவே தேவனின் அன்பையும் அவர் வழி நடத்துதலையும் நாம் பெறுவதற்கு முதலில் அவரது வேதம் சொல்லும்  பொதுவான வார்த்தைகளாகிய நீதி நேர்மை இரக்கம் இவைகளை கைகொண்டு அவரது நம்பிக்கைக்கு பாத்திரவானாக மாற வேண்டும்!         
 
அதன் அடிப்படையிலேயே அடுத்த நிலைக்கு முன்னேற முடியும்!  
  


-- Edited by SUNDAR on Friday 23rd of July 2010 02:58:31 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

2. ஒரு  தனி  மனிதனுக்கான   தேவனின்  சித்தம்!
தேவன் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான தேவசெய்தியை வேத புத்தகத்தில் எழுதி கொடுத்திருந்தாலும், அவர் படைக்கும் ஒவ்வொரு மனிதனின் மேலும் அவரது தனியான சித்தம் ஓன்று இருக்கிறது.
 
ஒருவரைகூட தேவன் வேலையில்லாமல்  விளையாட்டுக்கு படைக்கவில்லை. எல்லோர் மேலும் தேவனின் திட்டம் அல்லது சித்தம் ஓன்று நிச்சயம் உண்டு. ஆனால்அது எவரொருவர் தேவனின் பார்வைக்கு உத்தமமாக நடக்கிறாரோ அல்லது தேவன் எழுதி கொடுத்த பொதுவான பிரமாணங்களுக்கு கீழ்பட்டு நடக்க வாஞ்சிக்கிராறோ அவர்களுக்கே வெளிப்படுத்தப்படும். சிலருக்கு பிறப்பின்போதே கூட வெளிப்படுத்தப்படலாம் சிலருக்கு இளவயதில் சிலருக்கு முதுமையில் என்று எப்பொழுது வேண்டுமானாலும் எந்த மதத்தில் இருக்கும்போதும் அந்த திட்டம் வெளிப்படுத்தப் படலாம்.
 
அவ்வாறு தன் மேலுள்ள தனிப்பட்ட சித்தத்தை அறிந்து சரியாக நிறைவேற்றி தேவனிடம் நற்சாட்சி பெற்ற  ஆபிரகாம்,மோசே, யோபு,  எரேமியா, தானியேல், பவுல் போன்ற பலரையும்,
 
தன்மேலுள்ள தேவனின் தனிப்பட்ட சித்தத்தை அறிந்தும் அதை சரியாக நிறைவேற்றாமல் இழந்துபோன சவுல், சிம்சோன், யூதாஸ்போன்ற சிலரின் வாழ்க்கை  வரலாற்றை  உள்ளடக்கியதே நமது வேதாகமம்.
 
அதுபோல் இன்றும் இந்த பூமியில் பிறந்துள்ள ஒவ்வொரு மனிதன் மேலும் தேவனின் தனிப்பட்ட  சித்தம் அல்லது திட்டம் ஓன்று இருக்கிறது. அதை அறிய முயலவேண்டும் அதற்க்கு தேவனுக்கு  ஏற்றாற்போல் நல்மனசாட்சியுள்ள  ஒரு வாழக்கை முறையை அமைத்து அவரது நம்பிக்கைக்கு பாத்திரவானாக மாற வேண்டும் 
 
ஒரு தகப்பன் தன் மகன்களில் எவனொருவன் தந்து வார்த்தைக்கு கட்டுப்பட்டு தன் நம்பிக்கைக்கு பாத்திரவானாகிரானோ அவனுக்குத்தான் தனது முழுஇருதயத்தையும் வெளிப்படுத்துவான். ஊதாரியாக ஊர் சுத்தும் ஒருவனுக்கொ தன் வார்த்தைகளை பற்றி பட்சபாதம் பண்ணிக்கொண்டு இருக்கும் ஒருவனுக்கோ  எந்த ஒரு உண்மையும் தெரிவிப்பதில்லை அவனுக்கு அவனின் பொறுப்பு பற்றி சொனாலும் அதனால் பயனில்லை.
 
அதுபோல் நம்மேலான தேவனின் தனிப்பட்டசித்தம் என்னவென்பதை அறிந்து கொள்ள முதலில் அவரது நம்பிக்கைக்கு பாத்திரவானாக வேண்டும். பின்னர் நமக்கு நம்மீதான தேவனின் திட்டம் அறிவிக்கப்படும்! அதை நாம் சரியாக நிறை வேற்றினால் ஆண்டவராகிய இயேசு போல் பிதாவின்  சித்தத்தை நிறைவேற்றிய திருப்தியில் தேவ ராஜ்யம் போகலாம். 
 
தேவன் தனது  சித்தத்தை தெரிவிக்க  எந்த மதம் என்ன ஜாதி எந்த கூட்டம் எந்த நிலை  என்றெல்லாம் பார்ப்பதில்லை மனிதனின் மனதை மட்டுமே பார்க்கிறார்.  சவுல் எனப்பட்ட பவுல் தேவனின் சபையை துன்புருத்தியவந்தான் ஆனால் அவருக்கு அவர் மீதான தனது திட்டத்தை தெரிவித்ததுடன் பவுலும் உடனடியாக கீழ்படிந்தார்
 
கலாத்தியர் 1:16 தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும்பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும்;
 
அவர் சித்தம் நிறைவேற்ற தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தார் இறுதியில் 
 
II தீமோத்தேயு 4:7 நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
 
என்ற திருப்தியில் தேவனுக்கு பிரியமானதை நிறைவேற்றி தன் ஓட்டத்தை முடித்தார். 
 
எனவே  தேவனுக்கு பிரியமானதை செய்ய இரண்டு நிலைகள் உண்டு.
 
முதலில் தேவனுக்கு உகந்தவனாக நடத்து  நம்மீதான தேவ திட்டத்தை அறிய வேண்டும்  
 
பின்னர்
 
அதை நமது வாழ்வில் முழுமையாக  நிறைவேற்றவேண்டும்
 
அதன்மூலம் அனேக  ஆயிரங்கள் மட்டுமல்ல மொத்த மனுகுலத்தை கூட மீட்க தேவனால்  முடியும்!

இதுவே தேவன் மனிதனிடம் எதிர்பார்ப்பது!


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard