இந்த கேள்வி அநேகருடைய உள்ளத்தில் இருக்கும் ஒரு கேள்விதான் ஒரு மனிதன் தேவனுடைய கட்டளைகளையும் கற்பனைகளையும் மீறி நடக்கும்போது ஏன் என்னால் கீழ்படிய முடியவில்லை அல்லது இது என்னுடைய பலவீனமா என்று தங்கள் உள்ளத்திலே கேட்க தோன்றுகிறது.
ஒரு சில மனிதர்கள் தங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதற்கு கீழ்பட்டு தங்களால் ஒன்றும் முடியாது என்றும் எல்லாம் விதி என்று சொல்லிக்கொண்டு தங்களையும் தன்னை சார்ந்தவர்களையும் நம்ப வைகிறார்கள்.
பவுல் தன்னுடையு நிருபத்தில் நான் விரும்புகிற நன்மையை செய்யாமல் விரும்பாத தீமையையே செய்கிறேன் அப்படி செய்யும்போது நான் அல்ல எனக்குள் வாசமாய் இருக்கிற பாவமே அப்படி செய்கிறது என்று கூறுகிறார்.
ஒரு தேவமனிதனே நான் விரும்புகிறதை செய்ய முடியவில்லை என்று கூறுகிறாரே அப்படியானால் ஒரு சாதாரண விசுவாசியால் எப்படி தேவனுக்கு பிரியமாய் நடக்க முடியும் என்று சொன்னால் நன்றாய் இருக்கும்.........
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
ஸ்டீபன் அவர்களே நீங்கள் கேட்ட இரு முக்கியமான கேள்விக்கும் விடை இந்த ஒரே கட்டுரையில் உண்டு
தேவன் மனிதனை அவனுடைய நலனுக்காக படைக்கவில்லை. தன்னுடைய சுயனலத்துக்காகவே மனிதனை படைத்தார். தேவன் மனிதன் மூலமாக பெருக நினைத்தார். அதனாலேயே மனிதனை படைத்தார். அதாவது மனிதனுக்குள் தன் ஆவியை வைத்து அவனை தனக்கு சொந்தமாக்கி கொள்ள விரும்பினார். இவ்வாறு மனிதனில் தேவன் தன் ஆவியை வைப்பதனால் மனிதனுக்கு என்ன லாபம் என்ற கேள்வி எழக் கூடும். இவ்வாறு தேவ ஆவியை பெற்ற ஆத்துமாக்களே நித்தியத்துக்குள் பிரவேசிக்க முடியும்.
மற்ற சாதாரண ஆத்துமாக்கள் அக்கினியில் அழிக்கப்பட்டு வேறொரு உலகத்தில் மனிதன் என்ற தனித்தன்மையை இழந்து புழுவாக மாறி மறுபடியும் சிறிது சிறிதாக முன்னேறி அந்த உலகத்துக்குரிய மனிதனாக மாற வேண்டும். அதாவது அடுத்த நித்தியத்துக்குள் சென்று முன்னேறி தேவனை அடைய வேண்டும். (இதையே இந்துக்கள் மனிதன் புல்லாகி, புழுவாகி, விலங்காகி பிறக்கிறான் என்கிறார்கள் பல பிறவிகள் எடுத்து இளைத்தேன் இனி எனக்கு பிறப்பு வேண்டாம் என்று வேண்டுகிறார்கள்) தேவன் தன் எதிர்கால திட்டம் பற்றி (புதிய பூமிக்கு பிறகு) எதையும் சொல்லவில்லை என்பதை நினைவில் கொள்ளவும் அதாவது மறுபடியும் இன்னொரு பூமியை படைக்க மாட்டேன் என்றோ மனிதரை போல இன்னொரு ஜீவராசியை படைக்க மாட்டேன் என்றோ எங்கும் வாக்கு பண்ணவில்லை. ஒரு சிலர் சொல்வது போல இந்த உலகத்தில் பிறந்த எல்லா மனிதர்களும் இரட்சிக்கபட வேண்டும் என்பதே தேவ சித்தம் அதன்படியே நடக்கும் என்று சொல்வது உண்மைதான். ஆனால் எந்த உலகத்தில் எந்த நித்தியத்தில் என்பது கேள்விக்குறி. எல்லா மனிதர்களும் இரட்சிக்கபடும் வரை தேவன் புதிய உலகங்களை உண்டாக்கி கொண்டு நித்தியத்திலிருந்து நித்தியத்துக்கு போய் கொண்டே இருப்பார். தேவன் நரகத்துக்கென்றே (அடுத்த உலகம்) ஒரு சிலரை படைத்தார் என்று சொல்வதும் உண்மைதான். இந்த அண்டவெளியில் நம் சூரியக் குடும்பம் என்பது மிக மிக மிக சிறியதானது. இதுபோல பல சூரியக் குடும்பங்கள் இருக்கின்றன என வானவியலார்கள் கண்டுபிடித்துள்ளனர். சூரியன் என்பது பூமிக்கு மிகவும் அருகில் உள்ள ஒரு நட்சத்திரம். அப்படியானால் வானில் எவ்வளவு நட்சத்திரங்கள் (சூரியன்கள்) உள்ளன என பார்த்தால் வியப்பே மிஞ்சும்.
எல்லா சூழ்னிலைகளிலும் தன்னிடம் அன்பு செலுத்துபவனுக்கு தன் ஆவியை கொடுக்கும்படி தேவன் விரும்பினார்.
தேவன் மனிதனை முதலில் செம்மையானவனாக உருவாக்கி அவன் தன்னிடம் அன்பு கொள்வான் தன் ஆவியை அவனுள் வைக்கலாம் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவனோ தனக்கு பிரச்சனை ஏதும் வராததினால் தேவனை கண்டு கொள்ளவில்லை. (நோவா போன்ற ஒரு சிலரை தவிர) அடுத்தபடியாக மனிதனின் வாழ்க்கையில் அற்புதம் செய்தால் அவன் தன்னை தேடுவான் என்று எதிர்பார்த்தார். ஆனால் அந்த அற்புதம் தொடர்ந்து நிகழாமல் போனதால் அல்லது தேவை ஏற்பட்ட உடனே நடக்காததால் மனிதர்கள் முறுமுறுக்க ஆரம்பித்தனர். துன்பம் வந்தால் மனிதன் தன்னிடம் அன்பு கொள்வான் என்று எதிர்பார்த்தார். ஆனால் துன்பம் நீங்க வேண்டும் என்று வேண்டினானே தவிர தேவனை சார்ந்து எப்போதும் இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை. நீதிமானாய் இருந்தால் தன்னிடம் அன்பு கொள்வான் என எதிர்பார்த்தார். ஆனால் அவன் தேவனிடம் அன்பு உள்ளவன் போல தெரிந்தாலும் தன் நீதிக்கேற்றவாறு தன் வாழ்க்கையில் நடக்காமல் போகும் போது தேவனை குறை சொல்ல ஆரம்பித்தான். நல்லவனாய் இருந்தால் தன்னை தேடுவான் என்று எதிர்பார்த்தார். ஆனால் நல்லவனாய் இருப்பதனால் தேவன் எனக்கு எதற்கு என மனிதன் நினைத்தான். பலமானவனாய் இருந்தால் தன்னை தேடுவான் என்று எதிர்பார்த்தார். ஆனால் வேசியை தேடவே அவனுக்கு நேரம் சரியாயிருந்தது. எதனாலும் மனிதன் தன்னை தேடாமல் போகவே அவன் இருதயத்தில் உலகத்தை வைத்திருந்த தேவன் அவனுக்கு கட்டளைகளையும் கற்பனையையும் கொடுத்து அதை பின்பற்ற முடியாத மனிதனுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தி அவனை பாவம் என்னும் கூண்டில் அடைத்தார். இதிலிருந்து தப்ப தன்னை தேடுவதை தவிர ஒரு வழியில்லை என்ற நிலையை உருவாக்கி அதன் மூலம் அவனை தன்னிடமாய் சேர்க்க விரும்பினார்.
தேவனுடைய இந்த பத்து கட்டளைகளை கைக்கொண்டு வாழ்ந்து, தன் பாவ எண்ணங்கள் செயல் ஆகாமல் தன்னை பாதுகாத்து கொண்டவர்கள் தேவன் தங்களுக்கு எதற்கு என்று தேவனை தேடவில்லை. இவர்களின் இந்த தந்திரமான எண்ணத்தை தகர்க்கும் பொருட்டும், தன் ஆவியை பெற வேண்டிய அவசியத்தை மனிதர்களுக்கு உணர்த்தும் பொருட்டும் இவ்வுலகில் மனிதனாக வந்த தேவன், தவறான செயல்களை எண்ணுவதும் பாவம் என்று சொல்லி எல்லா மனிதரையும் குற்றவாளியாக்கினார். இதை அவருடைய பாணியில் பாவ எண்ணத்தோடு இருப்பதை காட்டிலும், அந்த பாவ உணர்வை செயல்படுத்தும் உறுப்புகளை அறுத்து போடுவது நலம் என்று சொல்ல, அவர் சொல்ல வந்த உட்கருத்தை உணராமல், கி.பியின் ஒரு கால கட்டத்தில் ரஷ்யாவில் வாழ்ந்த ஒரு கூட்ட மக்கள் தேவனுக்கு பிரியமாயிருக்கும் பொருட்டு ஆண்கள் தங்கள் ஆணுறுப்புகளையும். பெண்கள் தங்கள் மார்பகங்களையும் அறுத்து போட்டனர்.
இன்று தேவனை ஏற்றுக் கொண்டு அவருடைய ஆவியை பெற்றுக் கொண்ட மக்களாகிய நமக்கு தவறான இச்சையோ அல்லது பாவ உணர்வோ ஏற்பட்டால் அது உணர்த்தும் உண்மை என்னவெனில் 1. நம்முடைய ஒரு பகுதி தேவ ஆவியால் நிரப்பப்படவில்லை 2. போதுமான அளவு தேவனோடு நாம் இணைந்திருக்கவில்லை. 3. தேவனிடத்தில் நாம் கொண்டிருக்கும் அன்பு இன்னும் பூரணப்படவில்லை 4. தேவனிடத்தில் நெருங்கி சேர வேண்டிய வழிகளை தேட வேண்டும் 5. நம்மிடத்தில் இரக்கம் இல்லை, கருணை இல்லை (கருணை இருந்தால் காமம் வராது. நாம் நம்மை இரக்கமுள்ளவனாக நினைத்து கொள்ளலாம். ஆனால் அது அரை குறை உணர்வே. இரக்கம் முழுமை அடைந்தால் காமம் அகன்று போகும்.) என்பவைகளே.
வேதத்தில் முதல் தர ஆன்மிக நிலையும் உண்டு. இரண்டாம் தர ஆன்மிக நிலையும் உண்டு. மூன்றாம் தர ஆன்மிக நிலையும் உண்டு. உதாரணமாக விபசாரம் செய்வது என்பது மனிதனின் அத்தியாவசிய தேவையல்ல. விபசாரத்தில் ஈடுபடாத மக்கள் அனேகர் எல்லா மதங்களிலும் இருக்கின்றனர். ஒரு இயல்பான மனிதன் விபசாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதை பற்றி சொல்ல வேண்டியதுமில்லை. ஆனால் விபசாரம் செய்யாதிருப்பாயாக என்று சொல்ல வேண்டியிருக்கும் போது அது மூன்றாம் தர ஆன்மிக நிலையாகும். இவ்வாறு செய்ய வேண்டாதவைகளை (கொலை, விபச்சாரம் முதலியவை) செய்யாமலிருந்து அதனால் தாங்கள் நற்கிரியைகளை செய்வதாக சிலர் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் இது நற்கிரியைகள் செய்வது ஆகாது. இயல்பாக இருப்பது என்பதே சரியானது. இயல்பாய் ஒருவன் வாழ்வது என்பது தேவனுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. அதனால் அவனுக்கோ, அவனை போன்ற மனிதனுக்கு துன்பம் இல்லை அவ்வளவே.) விக்கிரகங்களை வணங்காதிருப்பாயாக என்ற கட்டளையை நிறைவேற்றும் மனிதன் தேவனுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவனாயிருக்கிறான். ஏனெனில் இவன் தன்னை படைத்த தேவனிடத்தில் அன்பு செலுத்துகிறான். இரண்டாம் நிலையில் மனிதர்கள் மற்ற மனிதர்களுக்கு உதவி செய்வதின் மூலமாக கடவுளுக்கு தொண்டு செய்கின்றனர். ஆனால் இவர்கள் செய்த உதவிக்கு பதிலாக தேவன் அவர்களுக்கு ஏதோ விதத்தில் பதில் நன்மை (இந்த உலகத்திலேயோ அல்லது நியாயத்தீர்ப்பு நாளிலோ) செய்வார். இவ்வாறு நற்கிரியை செய்பவர்களுக்கும் நித்தியத்துக்கும் சம்பந்தம் இல்லை. இவர்களும் தேவனுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் அல்ல. சில மனிதர்கள் தங்கள் முயற்ச்சியினால் மேலும் மேலும் பரிசுத்தமான வாழ்க்கை வாழ வேண்டும் என முயன்று அதை செயல்படுத்துகின்றனர். தங்கள் முயற்ச்சியினால் சிலர் தேவனுக்கு ஊழியம் செய்கின்றனர். தங்கள் முயற்சியை நம்பும் இவர்களும் தேவனுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் அல்ல. இவர்கள் தங்கள் முயற்ச்சியினால் பாவம் செய்யாமல் காத்து கொண்ட போதும் பாவ எண்ணங்கள் சூட்சுமமாக அவர்களுக்கு உள்ளே இருந்து கொண்டே இருக்கின்றன.
முதல் தர ஆன்மிக மக்களோ தங்களை முழுவதுமாக தேவனுக்கு ஒப்புக் கொடுக்கும் வழிகளை விரும்பி அதை செய்ல்படுத்துகின்றனர். தேவனுடைய பூரண சித்தத்துக்கு தங்களை ஒப்புக் கொடுக்கின்றனர். இவர்களே தேவனுக்கு முக்கியமானவர்கள். ஒரு மனிதனை கொலை செய்யாத நல்லவனான சவுலை விட தேவன் சொல்படி கொலை செய்த சாமுவேல் தேவனுக்கு பிரியமானவன். இப்படிபட்ட ஒரு நிலையை அடைவது எப்படி? என்பதை பார்ப்போம்.
இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது பரிசுத்த ஆவியானவர் மனிதனின் ஆவி என்னும் பகுதியில் அருளப்படுகிறார். இவர் ஒரு மனிதனில் இருக்கும் போதே அவன் மீட்கப்பட முடியும். அனேகர் தவறாக நினைத்து கொள்ளும் காரியம் என்னவெனில்..
1. பரிசுத்த ஆவியானவர் வந்தால் மனிதன் பரிசுத்தமானவனாக மாறி விடுவான் இல்லை. மனிதன் ஜெயம் கொள்ள வேண்டிய காரியங்கள் அனேகம் உள்ளன. ஆவிக்கு பிறகு ஆத்துமா ஆவியானவரால் நிரப்பப்பட்டு அசுத்தங்கள் நீங்கி பூரணமடைய வேண்டும். (பிறகு உடல்) சிலருக்கு இந்த காரியம் உடனே நிகழும். சிலருக்கு பல வருடங்கள் ஆகலாம். அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனிதனை அறிவேன். இரட்சிக்கப்பட்ட பிறகு அந்த அசுத்த ஆவி ஆத்துமாவை விட்டு பிரிய மூன்று வருடங்களும், பிரிந்த அசுத்த ஆவி உடலை விட்டு போக ஒரு வருடமும் ஆனது. பரிசுத்த ஆவியை பெற்ற அனேகர் இன்றும் இச்சையை வெல்லவில்லை என்பதை நாம் அறிவோம். இரட்சிக்கபட்ட ஒரு மனிதன் பாவம் செய்யும் போது ஒரு சிலர் அந்த மனிதன் உண்மையாக இரட்சிக்கப்படவில்லை , முழுமையாக இரட்சிக்கபடவில்லை என்று சொல்கின்றனர். ஆனால் இரட்சிப்பு என்பது ஒரு முறையே அது உண்மையானதும், முழுமையானதும் ஆகும். இரட்சிக்கப்பட்ட மனிதன் பாவம் செய்ய மாட்டான் என்று சொல்ல முடியாது.
2. இவ்வாறு கிருபையை பெற்றதினால் எப்போது இறந்தாலும் நித்தியத்துக்கு தகுதி உள்ளவ்ர்களாக இருப்போம் - இல்லை இது ஆரம்பம் மட்டுமே மனிதனில் இருக்கும் ஆவியானவர் நிரந்தரமாய் கொடுக்கப்பட்டவர் அல்ல. ஆனால் அவரை நிரந்தரமாய் இருக்கும்படி செய்ய முடியும். இறக்கும் போது ஆவியானவர் நம்முள் இருந்தால் மட்டுமே நித்தியத்துக்கு தகுதி உடையவர்களாய் இருப்போம். அதாவது ஆவியானவர் அக்கினியை போன்றவர். இந்த அக்கினிக்கு எண்ணெய் விடாமல் போனால் அக்கினி அணைந்து போகும். என்றும் அணையா ஜோதியாய் இருக்கும்படி பராமரிக்க வேண்டும். இயேசு போட வந்த அக்கினி இதுவே. அக்கினிக்கு எண்ணெய் விட்டு பராமரிக்காததால் ஐந்து கன்னிகைகள் மணவாளனை சந்திக்கும் தகுதி இழந்தனர். ஆவியில் கொடுக்கப்பட்ட இந்த அக்கினி பெருகி ஆத்துமாவையும், உடலையும் எரிக்க வேண்டும். இதுவே தேவன் விரும்பும் ஆன்மிக வாழ்க்கை. (இதுவே ஜீவனை இழந்து எல்லாவற்றையும் பெற்றுக் கொளவது என்று இயேசுவாலும், அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் என்று பவுலாலும் சொல்லப்படுகிறது)
3. நல்ல கிரியைகள் நித்தியத்துக்கு தகுதி உடையனாய் நம்மை ஆக்கும் - இல்லை. தேவ சித்தம் செய்வதினால் தேவன் நம் மேல் பிரிய்மாய் இருப்பதினால் மட்டுமே நித்தியத்துக்கு போக முடியும். பரிசுத்த ஆவிக்கு அடிமையாகாத ஆத்துமாவினால் செய்யும் காரியத்தால் தேவன் பிரியப்படுவதில்லை. தேவனுக்கு பிரியமானவன் நற்கிரியைகளை செய்வான். ஆனால் நற்கிரியைகளை செய்பவர்கள் தேவனுக்கு பிரியமானவர்கள் அல்ல.
தங்கள் வாழ்வில் வந்த சோதனைகளை வெல்ல ஆபிரகாம், மோசே, யோசுவா, யோசேப்பு, நோவா, ஏனோக்கு, யோபு, பவுல், இயேசு போன்ற ஒரு சிலரால் மட்டுமே முடிந்தது. இவர்கள் மட்டும் தேவன் விரும்பியவைகளை செய்தது எப்படி? தேவனுக்கு பிரியமாய் இருக்க இவர்களால் மட்டும் எப்படி முடிந்தது? இவர்களிடம் காணப்பட்ட தனித்தன்மை என்ன? என்பதை பார்ப்போம்.
நமக்குள் எழும் தீய எண்ணங்கள் நாம் இன்னும் பூரணப்படவில்லை என்பதையும், இன்னும் சில பகுதிகள் தேவ ஆவியால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் காட்டுகின்றன. ஆனால் மனிதனின் ஆத்துமா (ஒரு சிலரை தவிர) தேவ ஆவியை உடனே ஏற்றுக் கொள்ளுவதில்லை. இதற்கு பல வருடங்கள் கூட ஆகலாம். இப்படி இருந்த போதிலும் மேலே குறிப்பிட்ட தேவ மனிதர்கள் தங்கள் வாழ்கையில் வந்த சோதனைகளை வென்றனர்.
இதற்கு காரணம் இவர்கள் தேவனோடு சஞ்சரித்து கொண்டிருந்தார்கள்.
தேவனோடு சஞ்சரித்து கொண்டிருப்பது என்றால் என்ன?
24 மணி நேரமும், எல்லா நாட்களும் தேவ பிரசன்னத்தில் இருப்பது என்று பொருள். இவ்வாறு தொடர்ந்து இடைவெளியில்லாமல் தேவனோடு இருக்கும் போது வாழ்வில் வரும் சோதனைகளை வெல்வதோடு ஒரு நாளில் ஆத்துமா முழுவது தேவ ஆவியால் நிரப்பப்பட்டு பூரணமடைகிறது. நீரானது திராட்சை இரசமாக மாறுகிறது. தீய எண்ணங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின்றன. இந்த நிலை மறுபடி பழைய நிலையாக மாறுவதற்க்கு வாய்ப்பே இல்லை. இவ்வாறு தேவனோடு இருக்கும் போது நம் வாழ்க்கை தேவனால் நடத்தப்படுவது தெரிய வரும். வாழ்க்கையின் பாரங்கள் பாதிப்பதில்லை. நோய்கள் பாதிப்பதில்லை. துன்பங்கள் பாதிப்பதில்லை. எல்லாம் தேவனால் நடத்தப்படும். நாம் தேவனுடைய சந்தோசஷத்தையும், சமாதானத்தையும் எப்போதும் அனுபவித்துக் கொண்டிருப்போம்.
அப்படியானல் இந்த நிலையை அடைவது மிகவும் கடினமானதாக இருக்குமே? இல்லை
தேவனோடு சஞ்சரித்து கொண்டிருப்பது என்பது மிகவும் சுலபமான விஷயம்.
(தொடரும்)
-- Edited by SANDOSH on Thursday 26th of August 2010 09:55:53 PM
அப்படியானல் இந்த நிலையை அடைவது மிகவும் கடினமானதாக இருக்குமே? இல்லை
தேவனோடு சஞ்சரித்து கொண்டிருப்பது என்பது மிகவும் சுலபமான விஷயம்.
(தொடரும்)
அன்பு சகோதரரே!
எல்லா நாளும் 24 மணி நேரமும் அதாவது (7 x 24 ) தேவனுடன் சஞ்சரித்துகொண்டு இருப்பது சாத்தியமா?
என்ற கேள்விக்கு தாங்கள் சொல்வதுபோல் ஆம்! என்று நிச்சயம் பதில் தரமுடியும்.
ஆனால் "அது சுலபம்" என்று குறிப்பிட்டிருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது. ஏனெனில் நான் அவ்வாறு எப்பொழுதும் மனதில் தேவனை துதித்துகொண்டு இருக்கவேண்டும் என்று பல முறை முயன்றும் முடியவில்லை. உலக காரியங்களில் ஈடுபடும்போது மனது அதில் ஒன்றிபோய் விடுகிறது.
எனவே தங்கள் கருத்துப்படி தேவனோடு சஞ்சரிப்பது சுலபமாக எவ்வாறு சாத்தியம் என்பதை தங்கள் பதிவின் மூலம் அறிந்து முயற்ச்சிக்கலாம் என்று எண்ணி தங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நாம் கர்த்தருக்குள் நெருக்கமாய் இருந்தால் தாய் மனைவி மற்றும் குழந்தைகள் இவர்களால் கூட
நம்மால் தேவனுக்கு பிரியமாய் நடக்க முடியாது என் தாய் இயேசுவின் மிது அதிகம் அன்பு வைத்து இருக்கின்றார்கள்
நான் இரவில் வேதத்தை வாசிக்கும் போது என் தாய் படித்தது போதும் சீக்கிரம் படு என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள் இப்படிஅவர்கள் சொல்லி கொண்டே இருப்பது எனக்கு பெரிய தடையாய் இருந்தது
குழந்தைகள் மற்றும் மனைவி இவர்களுக்கு நாம் பிரியமாய் நடக்க வேண்டும் என்றால் நிச்சயம் தேவனுக்கு பிரியமாய் நடக்க முடியாது ( ஒரு கிறிஸ்தவனுக்கு அவன் வீட்டாரே (சத்துரு) என்று கர்த்தர் வேதத்தில் சொல்லி இருக்கின்றார் )
ஒரு கிறிஸ்தவன் கட்ட பழக்கங்கள் மற்றும் ஆசைகள் இவை எல்லாவற்றயும் விட்டு விட முடியும் விட்டு விட கூடம்
ஆனால் அன்பான மனைவி மற்றும் குடும்பத்தின் மூலம் ஏற்படும் சோதனைகள் அனுபவித்தவர்களுக்கு தெரியும்
அதை மெல்லவும் முடியல முழுங்கவும் முடியல என்ற வார்த்தை படி தடுமாறும் உண்மை கிறிஸ்தவர்கள் எத்தனை அதிகம்
அவர்களுக்கு பிரியமாய் நடக்க விரும்பி தேவனுக்கு பிரியமாய் நடப்பதை விட்டு விட்டு மனதில் வாடும் கிறிஸ்தவர்கள்
எத்தனை பேர்............இந்த காரணங்களால்கூட தேவனுக்கு பிரியமாய் நடக்க முடியாது என்பது என் கருத்து
-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 26th of August 2010 09:20:16 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
அன்பு சகோதரர் எட்வின் அவர்களே நீண்டநாட்களாக தங்களை தளத்தில் காணவில்லை. அவ்வப்பொழுது வந்து ஓரிரு பதிவுகளாவது தாருங்கள்.
ஒருவன் தன் வீட்டாரினிமித்தம் தேவனுக்கு பிரியமாக நடக்க முடியாத நிலை ஏற்ப்படுகிறது என்ற தங்களின் கருத்து நிச்சயம் ஏற்புடையதே.
ஆனால் ஒரு காரியத்தை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
தேவனின் வார்த்தைகளை கைகொண்டு நடப்பதை பொறுத்தவரை அதை யாருக்காகவும் காம்ப்ரமைஸ் பண்ணவே கூடாது. அது மனைவிய பிள்ளையா அம்மாவா அப்பாவவா உறவினர்களா என்றல்ல.
"கர்த்தருக்கு கீழ்படிதலே ஞானத்தின் ஆரம்பம்" என்று வேதம் சொல்கிறது
எபேசியர் 6:1பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள்
கர்த்தருக்குள் கீழ்ப்படியவேண்டும் என்றுதான் வேதம் சொல்கிறது கர்த்தருக்கு விரோதமான செயல்களில் நாம் நிச்சயம் கீழ்படிய வேண்டிய அவசியமில்லை(அதற்காக அடுத்தவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதை தவிர்ப்பது நல்லது)
இரண்டாவதக சாத்தானின் முக்கிய நோக்கம் எதையாவது சொல்லி அல்லது யார் மூலமாகவாவது செயல்பட்டு ஒரு மனிதனை தேவனின் வார்த்தைகளை மீறி செயல்பட வைப்பதுதான் என்பதை அவன் ஆண்டவராகிய இயேசுவை சோத்தித்த வார்த்தைகளில் இருந்தும் ஆதாம் ஏவாளை மீறுதல் செய்ய வைத்த காரியத்தில் இருந்தும் நாம் நாம் திட்டவட்டமாக அறியவேண்டும்.
அவனின் இந்த திட்டத்தை செயல்படுத்த அவன் யாருக்குள் இருந்து வேண்டுமானாலும் செயல்படலாம். மிக குறிப்பாக பலகீன பாண்டங்களாகிய ஸ்திரிகள் மூலம் அவன் தன் காரியத்தை அதிகமான நேரங்களில் நிறைவேற்றி வருகிறான். எனவே அன்பாக இருக்கவேண்டியதுதான் அனால் ஆண்டவரின் வார்த்தைகளை பொறுத்தவரை யாருக்கும் விட்டுகொடுக்க கூடாது.
ஒருமுறை ஏன் மனைவி கர்த்தரின் கட்டளையை மீறி ஒரு காரியத்தை செய்ய சொல்லி மிகவும் வருப்புருத்தினாள். நான் மறுக்கவே அவள் "அக்காரியத்தில் எந்த தவறும் இல்லை என்று விளக்கி அது தேவனின் பார்வையில சரியானது தான் என்றும் சொல்லி வேத வசனங்களை கொஞ்சம் புரட்டி காண்பித்தாள். ஆனால் எனது மனதுக்கு அது ஒத்து வராமல் போகவே நான் திட்டவட்டமாக மறுத்துவிட்டேன்.
மறுநாள் என் மனைவி என்னிடம் சொன்னது:
"நேற்று உன் கணவன் தப்பித்து கொண்டான். எனது வார்த்தைக்கு அவன் உடன்பட்டிருந்தால் அவன் என்னிடம் வசமாக மாட்டிகொண்டு இருப்பான்" என்று என் இருதயத்தில் சொல்லிவிட்டு என்னுள் இருந்து ஒரு ஆவி என்னை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு பிரிந்து சென்றது அதை என்னால் அப்படியே உணர முடிந்தது"
நேற்று நான் செய்தது மிகப்பெரிய தவறு என்று வருந்தினாள்.
ஆகையால் அன்பானவர்களே சாத்தான் எவனை யார் மூலமாக எவ்வாறு பிடிக்கலாம் என்பதில் மிகுந்த தந்திரத்தோடு செயல்படுவான் எனவே மிகுந்த எச்சரிக்கை அவசியம்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)