இதற்க்கான பதிலை நான் பலமுறை எழுதியிருந்தாலும் மீண்டும் பலருக்கு குழப்பமாக இருப்பதால் அதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
பழைய ஏற்பாட்டு காலத்தை பொறுத்தவரை மனிதனின் ஜன்ம பாவங்களுக்காக ஆண்டவராகிய இயேசு மரித்திராத காரணத்தால் அக்கால கட்டங்களில் மரித்த பரிசுத்தவான்/பாவி எல்லோருமே பாதாளத்தில்தான் இரங்கினார்கள்.
ஆதியாகமம் 37:35நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன்
யோபு 21:13அவர்கள் செல்வவான்களாய்த் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு க்ஷணபொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள்.
இந்த காலத்தில் பாதாளத்தின் வல்லடிக்கு யாருமே தப்பிக்க முடியாத ஒரு நிலை இருந்தது
ஆகினும், பாதாளத்தில் மூன்று அடுக்குகள் இருப்பதால், நேர்மையாய் நடந்தவர்கள் மற்றும் பரிசுத்தவான்கள் எல்லோரும் முதலாவது மேலடுக்கிலேயே தங்கி தூக்க நிலையில் வைக்கபட்டு இருந்தனர். (மேல் பாதாளம்/ தாழ்ந்த பாதாளம்/ நரக பாதாளம் வசனத்துடன் விளக்கங்களுக்கு இங்கே சொடுக்கவும் பாதாளத்தின் பயங்கரங்கள்!!! )
ஏசாயா 57:2நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள். ஏசாயா 14:18ஜாதிகளுடைய சகல ராஜாக்களும், அவரவர் தங்கள் அறையிலே மகிமையோடே கிடத்தப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையை அஞ்சனம் பாருக்கும் ஸ்திரி சாமுவேலை எழும்பி வரவைத்த செய்கையின் மூலம் வேதம் உறுதிபடுத்துகிறது.
I சாமுவேல் 28:13தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்.
தொடர்ந்து....
I சாமுவேல் 28:15சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான்.
என்னை எழும்பிவரப்பண்ணி என்னை கலைத்தது என்ன? என்று கேட்பதால் அவர் தூக்க நிலையில் இருந்து கலைக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறியமுடிகிறது!
தொடர்ந்து பார்க்கலாம்.....
-- Edited by SUNDAR on Wednesday 21st of July 2010 08:07:22 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
பவுலுக்கு தெரிந்த ஒரு மனுஷர் மூன்றாம் வானம்வரை எடுத்துகொள்ளப்பட்டார் என்று வேதம் சொல்கிறது:
II கொரிந்தியர் 12:2கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
இப்படி வானங்களில் மூன்று இருப்பதை நாம் நம்புகிறோம். அனால் வேதத்தில் மிக தெளிவாக கீழான பாதாளம், தாழ்ந்த பாதாளம், நரக பாதாளம் என்று பெயருடன் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்களை நம்புவதற்கு நம்மை முடியவில்லை என்றால் அதற்க்கு என்னிடம் எந்த விளக்கமும் இல்லை.
சிலருக்கு புரிய வைத்துவிடலாம் என்று எவ்வளவு முயன்றாலும் அதில் பயனில்லை என்று அறிந்துகொண்டதால் நாம் மேலும் பல தேவையான விஷயங்களை அறியும்படிக்கு இந்த தலைப்பை பற்றி சுருக்கமாக எழுதி முடிக்கிறேன்.
ஆண்டவராகிய இயேசுவின் மரணத்துக்கு முன்னர் மரித்த பரிசுத்தவான்கள் மேல் பாதாளம் என்ற இடத்தில் தூக்க நிலையில் இருந்ததனர். ஜன்ம பாவத்துக்காக இயேசு மரித்த உடனேயே
மத்தேயு 27:50. இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். 51. அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது. 52. கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. :53அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள்.
பழைய ஏற்பாட்டு காலத்தில் மரித்த பரிசுத்தவான்கள் மட்டும்மேல்பாதளத்தில் இருந்து எழும்பி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு விட்டனர். அந்த இடம்தான் பரதீசு எனப்படுகிறது. அந்த பரதீசு என்னும் இடம் பூமியில்தான் இருக்கிறது ஆனால் நமது கண்களுக்கு மறைவாக இருக்கிறது. அங்குதான சிலுவையில் அறையுண்ட கள்ளனை இயேசு அன்றே அழைத்து செல்வதாக கூறினார்.
வேதவசனங்களின் அடிப்படையில் நான் புரிந்துகொண்டது இதுதான்.
அனால் பவுல்,
II தீமோத்தேயு 2:18அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
என்று குறிப்பிடுவதால் அவர் குறிப்பிடும் உயிர்த்தெழுதல் முற்றிலும் புதிய ஏற்பாட்டு விசுவாசிகளுக்கு சம்பந்தமானது என்பதை அறியமுடிகிறது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)