இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவனால் எல்லாம் கூடும்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
தேவனால் எல்லாம் கூடும்!
Permalink  
 


மாற்கு 10:27 இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

தேவனால் கூடாதது எதுவுமே இல்லை. அவரால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று வேதம் சொல்கிறது எனவேதான் யோபு அவரை "சர்வவல்லவர்" என்ற அழகான பெயரில் அழைக்கிறான்.
 
தேவனால் எல்லாம் செய்ய முடியும் என்பதற்காக, அவரே எல்லாவற்றயும் செய்து விடுவார் நாம் எதற்கும்  எந்த பிரயாசமும் எடுக்கவேண்டிய தேவையில்லை என்று சொல்லி  ஜனங்களை திசை திருப்பும் சிலருக்கு அறிவை உணர்த்தும்படி சில காரியங்களை பதிவிட விரும்புகிறேன்.
 
மனிதனாகிய நாம் நம்மால் செய்யமுடியும் என்பதற்காக ஓடிபோய் கூவம் நதியில் குதித்து விடுவோமா?  அல்லது ஒரு கையை வெட்டிபோட்டு விடுவோமா?
 
கொஞ்சம் மூளையை கசக்கி யோசித்து பாருங்கள் சகோதரர்களே!
 
நம்மால் செய்யமுடியும் என்பதற்காக எல்லாவற்றையும் நாம் செய்வது இல்லை. முடிந்த அளவு தேவையான நல்ல காரியங்களை மட்டும் செய்கிறோம். இன்னும் எத்தனையோ காரியங்கள் செய்ய முடிந்தும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு,  எழுத்துக்கு கட்டுப்பட்டு அல்லது வாக்குக்கு கட்டுப்பட்டு அல்லது வலிக்கு  பயந்து அதை செய்வதில்லை.    
 
சாதாரணமாக கூவம் நதியில் குதிக்க விரும்பாத நாம், ஒருவேளை நமது பிள்ளை தவறி கூவம் நதியில் விழுந்துவிட்டது என்றால் நாம் நிச்சயம் அதில் குதித்து பிள்ளையை காப்பாற்ற முயல்வோம்! ஆனால் அந்த பிள்ளை, கூவம்நதி நீரில் சுகம்கண்டு நம்மைவிட்டு விலகி விலகி உள்ளே ஓடினால் நாம் என்ன செய்ய முடியும்? எக்கேடும் கேடடு போ என்று சொல்லிவிட்டும் அதற்காக பரிதபிக்கதான் முடியுமே யன்றி வேறொன்றும் செய்ய முடியாது!   
 
அதுபோல்
 
இந்த உலகம் என்பது ஒரு "துன்மார்க்க ஊளை" என்று வேதம் சொல்கிறது அதில் எல்லோரும் விழுந்து புரண்டு குளித்து கொண்டாடி கூத்தடித்து  கொண்டு இருக்கிறோம். தேவன் மிகுந்த பரிசுத்தராக இருந்தும்,  தன்னால் எல்லாம்  முடியும் என்ற ஒரே  காரணத்தால் இயேசுவாக பூமியில் அவதரித்து துன்மார்க்க ஊளயினுள் தானும்  விழுந்து "வருத்தப்பட்டு பாரம் சுமக்கிரவர்களே வாருங்கள் என்னிடத்தில் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்று கூவி அழைக்கிறார். ஆனால் மனிதனோ நான் உம்மிடம் வரமாட்டேன் எனக்கு இங்குதான் இதமாக சுகமாக இருக்கிறது இங்கேயே இருந்துகொள்கிறேன் என்று சொல்லி அவரை விட்டு விலகி விலகி ஓடுகிறான். 
 
ஆண்டவர் மிகுந்த இரக்கம் உள்ளவராக இருந்தாலும் "அவர் மனிதனின் ஆவியோடு என்றும் போராட விரும்பாதவர்" என்பதால் அவனுடன் போராட விரும்பாமல் அவன் போக்கிலேயே விட்டுவிடுகிறார்.
 
"தேவனால் எலாம் கூடும்" என்று சொல்லும் அதே வேதாகமம்தான் 
 
ஆதியாகமம் 6:3 அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை ........ என்றார்.  

என்றும் சொல்கிறது

தேவன் சமநிலையை
காக்ககூடியவர். தேவனின் முதல் வார்த்தைக்கு எவ்வளவு மதிப்பு உண்டோ அவ்வளவு மதிப்பு அவரது கடைசி வார்த்தைக்கும் உண்டு!  எனவே அவரின் எல்லா வார்த்தைகளையும் நாம் கருத்தில் கொண்டு சமநிலையில் வேதத்தை ஆராய வேண்டும்.
இல்லையேல் விளுதுபோவது நிச்சயம்.
 
நமக்கு இன்னொரு கேள்வி கூட எழலாம்!
 
சங்கீதம் 138:8 கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; 
 
என்று சகீதக்காரன் சொல்கிறானே! நாம் சும்மா இருந்தால் போதும் கர்த்தரே எனக்காக எல்லாவற்றையும் செய்து முடித்துவிடுவார் என்று சொல்வதில் என்ன தவறு?

என்று கேட்கலாம்.
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

////மாற் 10:26. அவர்கள் பின்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று தங்களுக்குளே சொல்லிக்கொண்டார்கள்.

27. இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

இந்த வேத பகுதியை முழுமையாக வாசிக்காமல், இயேசு கிறிஸ்து ஏன் இப்படி ஒரு பதிலை தருகிறார் என்கிற கேள்வியை கூட வாசிக்காமல், அதுவும் மனுஷரால் இது கூடாததுதான் என்று இயேசு கிறிஸ்து சொன்ன பிறகும் அவர் சொன்னார் தான் ஆனால் அப்படி இல்லை என்று வாதிடுவதற்கு பெயர் விதண்டாவாதாம். நாம் கிரியை தானே போதிக்கிறோம்///

ஒரு மனிதனின் இரட்சிப்பு என்பது மனிதனால் தானே எட்டமுடியாத ஓன்று. யாரும் தன்னைதானே ரட்சித்துகொள்ள முடியாது  அதை தேவன்தான் நிறைவேற்ற வேண்டும் எனவே அதை தேவன் இலவசமாக எல்லோருக்கும் தருகிறார். யார் இரட்சிக்கப்பட  கூடும் என்ற கேள்விக்கு  இதைதான்  இயேசு சரியாக சொன்னார்:  

 27. இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
 
இது ஓசியில் கிடைப்பதால் இதை நாம் உறுதியாக பிடித்து கொள்வோம்! ஆனால் இரட்சிப்பு இலவசம் என்று சொன்ன  அதே  இயேசு கட்டளையிட்ட  மற்ற சில மனிதனால்  செய்ய முடிந்த  காரியங்களை   எவனுக்கோ சொன்னதாக விட்டு விடோவோம். ஏனெனில் அது கைகொண்டு நடக்க கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும்.
  
மத்தேயு 19:17   நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.
யோவான் 14:15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள் 
 
அவர் வார்த்தையை கைகொள்ளதவர்கள்  மணலில் அஸ்திபாரம் போட்டு கட்டப்பட்ட வீடுகள். அது ஒரு நாளில் விழுந்துபோகும் என்று இயேசு கூறி சென்றிருக்கிறார். அவர் வார்த்தைகள் நிச்சயம் ஓர் நாளில் நிறைவேறும்.

அப்படியே இவர்கள் சொல்வதுபோல் இயேசு எல்லோருக்காகவும் எல்லாவற்றையும் செய்து  முடித்திருந்தால் நமது கிரியைகள் அவசியம் இல்லை என்றால்  வெளிப்படுத்தின  விசேஷ  புத்தகத்தில் 
 
"உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்" என்று தெரிந்துகொள்ளப்பட்ட கூட்டமாகிய
எல்லா சபைக்கும் தவறாமல் குறிப்பிடதோடு 5. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக
 
என்று கிரியைகள் பற்றிய  எச்சரிப்பை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை!  
  
உட்கார்ந்து இருந்து ஓசியில் நொங்கு தின்ன ஆசைப்படும் சில அறிவாளிகளுக்கு யாராவது மரத்தில்ஏறி பரித்தால்தான் நொங்கு வரும் என்ற உண்மையை உணர்த்தும் ஆண்டவரின்  கட்டளையும்   நமது கருத்தும் புரியாமல் போவதற்கு ஆச்சர்யம் இல்லை. இதில் அடுத்தவர்களை அற்பமாக விமர்சிக்கும் வார்த்தைகள் வேறு!   இவர்களுக்கு பதில் எழுதி பயனேதும் இல்லை!
 
சாத்தானின் முக்கிய தந்திரமே இதுதானே!  தேவனுடைய வார்த்தைகள் கட்டளைககளை அற்பமாக காட்டி அவற்றை மீறவைத்து ஆண்டவரிடம் தண்டனை வாங்கி கொடுபதுதானே!
 
ஆதாம் ஏவாளில் இருந்து அவன் வஞ்சக வலையில் விழுந்தவர்கள் ஆயிரமாயிரம் பேர்.  ஆனால் அவன் வேலை  என்னிடம் பலிக்காது! 
 


-- Edited by SUNDAR on Friday 23rd of July 2010 09:29:08 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

சங்கீதம் 138:8 கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்;  என்று நம்பிக்கையோடு சொன்ன தாவீது தன் எதையுமே கைகொள்ளாமல் அடுத்தவருக்கும் அதுபோல் போதித்து வந்தானா?
 
இல்லை!
 
சங்கீதம் 119:6 நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது வெட்கப்பட்டுப்போவதில்லை.
 
அதாவது தேவனின் எந்த ஒரு கட்டளையையும் பார்க்கும்போது ஐயோ இதை நாம் கைகொண்டு நடக்கவில்லையே என்ற அவமானம் வராத அளவுக்கு அனைத்தையும் கைகொண்டான். 

சங்கீதம் 19:11 அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.
 
என்றும் போதிக்கிறான் எனவேதான் கர்த்தர் அவனைப்பற்றி கீழ்க்கண்ட நற்சாட்சியை கொடுக்கிறார்.
 
I இராஜாக்கள் 15:5 தாவீது ஏத்தியனாகிய உரியாவின் சங்கதி ஒன்றுதவிர கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடிருந்த நாளெல்லாம் ஒன்றையும் விட்டு விலகாமல், அவர் பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான்.
  
இவ்வாறு கர்த்தர் இட்ட கட்டளையை விட்டு விலகாமல் நடந்தால் மட்டுமே  நாம் தாவீது சொன்னதுபோல துணிந்து கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் என்று கூறமுடியும்.
 
தானியேல் 9:4  உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவன் அவர்

ஆம் தாவீதுபோல   அவரிடம் அன்புகூர்ந்து அவாது கட்டளையை கைகொண்டால் அவர் நமக்காக எல்லாவற்றையுமே அவர்  செய்து முடிப்பார் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை!
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

இன்னும்  ஒரே  ஒரு   வேதாகம  சம்பவத்தை  சொல்லி  இந்த தலைப்பை முடித்துவிடலாம் என்று கருதுகிறேன்.
 
இஸ்ரவேலின் ராஜாவாகிய யோசபாத் என்பவனின் ஆட்சி காலத்தில்
 
1.  மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள்.

அப்பொழுது இசரவேல் ஜனங்கள் அந்த ஏராளமான கூட்டத்துக்கும் முன்னால் எதிர்த்து நிற்க முடியாத காரணத்தால். ஆண்டவரே எங்களால் இது முடியாது ஆனால் உம்மால் முடியும் என்று சொல்லி கர்த்தரிடத்தில் சகாயம் தேடினார்கள்.

II நாளாகமம் 20:12
எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது என்றான்.

14. அப்பொழுது சபையின் நடுவிலிருக்கிற மத்தனியாவின் குமாரனாகிய ஏயெலின் மகனான பெனாயாவுக்குப் பிறந்த சகரியாவின் புத்திரன் யகாசியேல் என்னும் ஆசாப்பின் புத்திரரில் ஒருவனான லேவியன்மேல் கர்த்தருடைய ஆவி இறங்கினதினால் அவன் சொன்னது:

15. சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது.
  
இந்த வார்த்தைகள் அப்படியே நமக்கு பொருந்தும். இந்த உலகில் நடக்கும் எந்த காரியத்தையும் நமது அறிவாலோ அல்லது நமது பெலத்தலோ மேற்கொள்ள முடியாது. இங்கு நடக்கும் எல்லாமே கர்த்தருடைய யுத்தம் அவருடைய ஆவியாலேயே எல்லாம் ஆகும், நடக்கும் ஆகினும் கர்த்தர் நம்மை நோக்கி சொல்வது என்ன தெரியுமா?
 
16. நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள்;  
 
ஆம்! "யுத்தம் என்னுடையது ஆகவே நீங்கள் எதுவுமே செய்யவேண்டாம்" என்று கர்த்தர் சொல்லவில்லை மாறாக நீங்கள் அவர்களுக்கு விரோதமாக சும்மா புறப்பட்டு போங்கள் மற்றவற்றை நான் பார்த்துகொள்கிறேன் என்பதுதான்.
 
அதே வார்த்தைகளைத்தான் நானும் சொல்கிறேன்! தேவனால் எல்லாமே கூடும் அவர்தான் எல்லாவற்றையும் செய்து முடிப்பார்.  ஆகினும் நாம் செய்யவேண்டியது என்ன? அவரது வார்த்தைகளுக்கு  கீழ்படித்து எதிரிக்கு எதிராக  புறப்பட்டு போக வேண்டும்! அப்பொழுதுதான் வெற்றி கிடைக்கும். அதேபோல் நாமும் தேவன் சொன்ன கற்பனைகளுக்கு கீழ்படிந்து சாத்தனுக்கு விரோதமான செயல்பாட்டில்   நம்மால் முடிந்த பிரயாசத்தை எடுப்போம். மற்றவற்றை தேவன் பார்த்துகொள்வார்!
 
இதற்க்கு மேலும் புரியாதவர்களுக்கு என்னிடம் பதில் இல்லை!
   
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard