இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இரட்ச்க்கப்படாதவர்கள் பிள்ளைகள் மரித்தால்?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
இரட்ச்க்கப்படாதவர்கள் பிள்ளைகள் மரித்தால்?
Permalink  
 


John Paul to me
show details 9:35 PM (15 hours ago)
 
அன்பு  சகோதரருக்கு  கிறிஸ்துவின்  நாமத்தில்  வாழ்த்துகள் 
இரட்சிக்கப்படடவர்களின்  பிள்ளைகள்  மரித்தல்  அவர்கள்
பரலோகமா  அல்லது  நரகம  அவர்கள்  எங்கே  போவர்கள்
எனக்கு  கொஞ்சம்  விளக்குங்களேன் .
 
 
மெயிலில் வந்த சகோதரர் ஜான்  அவர்களின் இந்த கேள்வியில் பிள்ளைகள் என்ற பதம் சிறு குழந்தைகளா அல்லது விபரம் அறிந்தவர்களையா? யாரை குறிக்கிறது என்பது சரியாக புரியவில்லை ஆகினும் இரண்டுக்கும் விளக்கம் கொடுக்க விளைகிறேன்.
 
1. விபரம் தெரிந்த பெரிய பிள்ளைகள் மரித்தால்!
 
இரட்சிக்கப்பட்டவரோ / படாதவரோ அவர்களின் பிள்ளைகள் விபரம் தெரிந்தபின் இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் மரித்தால் அவர்கள் எல்லோருமே  போகும் இடம் பாதாளம் எனப்படும் படுகுழியே. அங்கு அவர்களின் நன்மை தீமைக்கு ஏற்ப மேல்பாதாளம் அல்லது தாழ்ந்த பாதாளம் அல்லது நரக பாதாளத்தில் பங்கடைவார்கள்.
 
யோபு 21:13 அவர்கள் ........ , ஒரு க்ஷணபொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள்
    
இவ்வாறு  அங்கு இருப்பவர்கள் இறுதி நியாயதீர்ப்பின்போது உயிர்ப்பிக்கப்பட்டு தேவன் முன் நிறுத்தப்பட்டு அவரவர் கிரியைக்கு தகுந்த பலனை அடைவார்கள்.
 
வெளி 20:12 மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

 
2.  விபரம்அறியா சிறு குழந்தைகள் மரித்தால். 
  
மாற்கு 10:௧௪ இயேசு அதைக்கண்டு விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடையராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.
 
என்றும் 
 
மத்தேயு 18:3 நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
     
என்றும் இயேசு குறிப்பிட்டிருபதால். ஒருவன் பரலோகத்தில் பிரவேசிப்பதற்கு தேவன் எதிர்பார்க்கும் தகுதி ஒரு சிறு  பிள்ளையை (குழந்தையை) போல ஆக வேண்டும என்பதே. எனவே  இத்தகுதியுடைய ரட்சிக்கப்பட்டவர்/ படாவதவர்   யாருடைய பாவமறியா  குழந்தைகள் மரித்தாலும் தேவனின் ராஜ்யத்துக்குதான் போகும் என்பது எனது கருத்து.
 
ஆகினும் இறுதி நியாயதீர்ப்பின் போது "மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்" என்று வேதம் சொல்வதால் இறுதி நியாயதீர்ப்புக்கு வருபவர்களில் சிறியோரும் இருப்பார்கள் என்று அறியமுடிகிறது. எனவே சிறு குழந்தைகள் என்பவர்கள் எத்தனை வயது என்பதை முடிவுசெய்பவர் தேவனே.
 
(வேத வசனங்கள் மேற்கோள் காட்டப்பட்டிருந்தாலும் இது என்னுடைய  சொந்த கருத்து)   
 

இங்கு 
 
அது  எப்படி? சிலர் பாவமறியா  சிறு குழந்தையிலேயே மரித்து எந்த சிரமமும் இல்லாமல் பரலோகம் போய்விட, சிலர் மட்டும் நீண்ட நாட்கள் வாழ்ந்து, பாவம் செய்து பாதாளம் போவதா?  தேவன் பட்ச பாதம் உள்ளவர் அல்லவே! என்ற கேள்வி எழலாம்.
 
இதற்க்கான பதிலை பார்க்கலாம்.....
 
 


-- Edited by SUNDAR on Wednesday 28th of July 2010 05:35:33 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: இரட்ச்க்கப்படாதவர்கள் பிள்ளைகள் மரித்தால்?
Permalink  
 


SUNDAR wrote:
அது  எப்படி? சிலர் பாவமறியா  சிறு குழந்தையிலேயே மரித்து எந்த சிரமமும் இல்லாமல் பரலோகம் போய்விட, சிலர் மட்டும் நீண்ட நாட்கள் வாழ்ந்து, பாவம் செய்து பாதாளம் போவதா?  தேவன் பட்ச பாதம் உள்ளவர் அல்லவே! என்ற கேள்வி எழலாம்.

  
என்னுடைய கருத்துப்படி தேவன் எதையும் பட்ச்சபாதமாக செய்யவில்லை. அவர் நியாயகேடில்லாத பரிசுத்த  தேவன் என்று வேதம் சொல்கிறது.
 
நாம் காணும் இந்த உலக தோற்றத்துக்கு   முன்னமே  நடந்த சில சம்பவங்களின் அடிப்படையிலேயே (அந்த சம்பவங்கள் எனக்கு தெரியும் நேரம் வரும்போது அதை தெரிவிக்கிறேன்)  தேவன் சிலரை தமக்காக தெரிந்துகொண்டார் சிலரை ராஜாக்களாகவும் சிலரை தீர்க்க தரிசிகளாகவும் பிறக்கும் போதே  முன் குறித்தார் என்பது எனது கருத்து.
 
எபேசியர் 1:4  அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,

எரேமியா 1:5
நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்
 
ஆதியாகமம் 16:12 அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும்

ஆதியாகமம் 25:23
   மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார்.

போன்ற இந்த வசனங்கள், தேவன் எதோ ஒரு அடிப்படையில் சிலரை சில காரியங்களுக்காக முன்குறித்து பூமியில் பிறக்க செய்தார் என்பதை தெளிவு படுத்துகிறது!
 
அதன் அடிப்படையிலேயே சிலரை குழந்தைகளாக இருக்கும்போதே மரணம் அடைய செய்து, எல்லோருமே இந்த உலகில் பிறந்து மரித்தாகவேண்டும் என்ற நிர்பந்த நிலையை அதன் மூலம்  நிறைவேற்றுகிறார்.   
  

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard