ஆண்டவராகிய இயேசு தன்னை விசுவாசிக்காத பரிசேயர் சதுரெயரை பார்த்து இந்த வார்த்தைகளை கூறியதாக வேதம் சொல்கிறது.
இதன் பொருள் என்ன?
வேதன் வாக்கியத்தை அறிந்த நீங்கள், நித்திய ஜீவன் உண்டு என்பதை நம்புகிறீர்களே, அவைகள் என்னை குறித்தும் சாட்சி கொடுக்கிறது என்பதையும் ஆராய்ந்து பாருங்கள் என்பதுதான்.
அதாவது என்னை குறித்து வேதவாக்கியங்கள் சாட்சி கொடுக்கிறது என்பதை நீங்கள் வேதத்தை ஆராய்ந்து பார்த்தால் கண்டுபிடிக்கலாம் என்பதே.
இந்த பொருளிலேயே இயேசு குறிப்பிட்டாறேயன்றி உங்கள் அறிவை வைத்து ஆராய்ந்து வேதத்தின் பொருளை கண்டுபிடியுங்கள் என்பதற்காக அல்ல!
வேத புத்தகத்தில் உள்ள வசனங்களை அறிவால் ஆராய்து உண்மையை அறிய விளைவது நல்லதுதான் அதன் மூலம் ஒருவர் நல்ல பண்புகளை பெறமுடியும் மற்றும் ஆண்டவரை பற்றிய மூளை அறிவில் வளரமுடியும். ஆனால் அந்த அறிவு நம்மை பரலோகம் கொண்டு சேர்க்காது.
எனது கருத்துப்படி வேதத்தை ஆராய்வதை விட ஆண்டவர் துணையுடன் தியானிப்பதுதான் உண்மையை அறிய சிறந்த வழி. ஒரு காரியத்துக்கு உண்மையான விளக்கம் ஆண்டவரிடம் இருந்து வரும் வரை அவரை விடாமல் மன்றாடி விசாரிக்க வேண்டும் அப்பொழுதுதான் உண்மையை அறியமுடியும்.
வேத ஆராய்ச்சி என்ற பெயரில் எல்லா மொழியையும் ஆராய்ந்து அல்லது பல அராய்ச்சியாளர்கள் எழுதிய தொகுப்பை படித்து ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்பவர்கள், உண்மையாக தேவன் ஒரு தீர்க்கதரிசியிடம் என்ன பொருளின் அடிப்படையில் ஒரு வார்த்தையை சொன்னார் என்பதை சரியாக அறியமுடியாது. முதலில் அதை எழுதும் தீர்க்கதரிசிக்குகூட அதன் சரியான பொருள் தெரியாது ஏனெனில் அவரை அவ்வாறு எழுத வைப்பது தேவனே!
II பேதுரு 1:20வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.
பொதுவாக "பாதாளம்" என்ற தமிழ் வார்த்தையை எடுத்து கொள்வோம். இந்த வார்த்தைக்கு என்ன பொருள் என்பதை தீர்மானித்தது யார்? யாரோ ஒரு மனிதன். அவன் ஒருவனுக்குத்தான் எதன் அடிப்படையில் இந்த பெயரை வைத்தான் என்பது மிக சரியாக தெரியும்.
மாம்பழம் என்ற ஒரு பழத்தை பற்றி எவ்வளவுதான் விளக்கி எழுதினாலும் அதை பார்க்காதவர்கள் இப்படித்தான் இருக்கும் என்று சரியான முடிவுக்கு வரமுடியாது அதை பார்த்தவர் மட்டுமே அதன் உண்மை தன்மையை அறிய முடியும்.
அதுபோல் ஆண்டவர் ஒரு குறிப்பிட்ட வார்த்தையை ஒரு தீர்க்கதரிசிக்கு சொல்லும் போது அதன் உண்மையான பொருள் என்னவென்பது ஆண்டவர் ஒருவருக்கே தெரியும். அதை அவர் ஒருவரிடம் மட்டுமே கேடடு தெரிந்துகொள்ள முடியும். மாறாக நமது மூளையை வைத்து வார்த்தைகளை ஆராய்ந்தால் முடிவு தவறானதாகவே இருக்கும்.
திருவள்ளுவர் எழுதிய ஒரு தமிழ் திருக்குறளை தமிழை தாய்மொழியாக கொண்ட அநேகர் வேறு வேறு பொருளில் மொழி பெயர்த்து விளக்கம் கொடுக்கினற்றனர். அது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது உண்மை போன்றும் இருக்கலாம். ஆனால் வள்ளுவர் என்ன கருத்தின் அடிப்படையில் அந்த குரளை எழுதினார் என்பதன் சரியான விளக்கம் அவருக்கு மட்டுமே வெளிச்சம். இன்று வள்ளுவர் உயிரோடு இல்லை எனவேநாம் அவரிடம்கேடடு அதன்பொருளை அறியமுடியாது.
ஆனால் வேத புத்தகத்தை எழுதிகொடுத்த நமது ஆண்டவர் ஜீவனுள்ளவர். அவர் இன்றும் என்றும் ஜீவிக்க கூடியவர். அத்தோடு பரிசுத்த ஆவியானவர் என்னும் வேத வாக்கியங்களை போதிக்கும் ஒரு ஆசானை நம்மோடு தங்கி இருக்க அருளியும் உள்ளார்! மேலும் என்னை நோக்கி கூப்பிடு நான் உனக்கு உண்மையை வெளிப்படுத்துவேன் என்றும் வாக்கு கொடுத்திருக்கிறார். எனவே அவரிடம் அமர்ந்து விசாரிப்பதன் மூலமே சரியான உண்மையை அறியமுடியும்.
மறைபொருள்களை வெளிப்படுத்துபவர் பரலோகத்தின் தேவனே ஒருவரே மனிதனின் ஆராய்ச்சி அல்ல!
ஏசாயா 48:6இதுமுதல் புதியவைகளானவைகளையும், நீ அறியாத மறைபொருளானவைகளையும் உனக்குத் தெரிவிக்கிறேன்