தேவன் தன்னை பரிசுத்தர் என்றும், கிருபையும் நீடிய சாந்தமும் மிகுந்த இரக்கமும் உள்ளவர் என்றும் நியாய கேடில்லாதவர் என்றும் பட்சபாதம் பார்க்காதவர் என்றும் தன்னை பல இடங்களில் வெளிப்படுத்துகிறார்.
சங்கீதம் 103:8கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். சங்கீதம் 145:8கர்த்தர்இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர். யாக்கோபு 5:11கர்த்தர்மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே
யோவேல் 2:13அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.
இவ்வாறு பல வசனங்கள் கர்த்தர் மிகுந்த இரக்கம் உள்ளவர் என்று சொல்லும் பட்சத்தில்
என்ற வசனத்தை தவறாக புரிந்துகொண்டு, நீதியும் இரக்கமும் இல்ல தேவனை, வேண்டுமென்றே தனக்கு சத்துரு என்னும் சாத்தானை தானே உருவாக்கி, மனிதர்கள் எல்லோரையும் இந்த உலகில் வேதனையிலும் துன்பத்திலும், துள்ள துடிக்க மரணத்திலும் போட்டு சோதனை செய்து நித்தியத்துகென்று ஆட்கள தேர்ந்தடுக்கும் ஒரு சோதனைகாரராக சித்தரிப்பது தேவ தூஷணமா?
அல்லது
தன்னை நியாயகேடில்லாத தேவன் என்றும்
உபாகமம் 32:4அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.
யாரையும் மனப்பூர்வமாக சஞ்சலப்படுத்துவது இல்லை என்றும்
என்றும் வேதம் சொல்லும் பட்சத்தில், சில நீதி நியாயமான நிர்பந்தங்களுக்கு உட்பட்டு தேவன் இவ்வாறு சில தீமைகளை மனிதர்களிடம் அனுமதிக்கிறார் என்பது சரியான கருத்தா என்பதை சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்!
யாரையும் மனப்பூர்வமாக சிறுமைபடுத்த விரும்பாத தேவன் சாத்தானின் நிர்பந்தத்தின் அடிப்படையில் யோபுவை சிறுமை படுத்தியதுபோல இன்றும் மனுஷர்களை சிறுமைபடுத்த அனுமதிக்கிராறேயன்றி இங்கு நடக்கும் எந்த துன்பங்களையும் அவர் வேண்டுமென்று அனுமதிக்கவில்லை.
இரண்டாவதாக
தேவன் காட்டியுள்ள வழியை பின்பற்றாமல் சாத்தான் காட்டும் வழியிலேயே போய் சாத்தானுடனே நானும் இருப்பேன் என்று பிடிவாதம் பிடிக்கும் ஒரு மனிதனை அவனுடனேயே அவனுக்காக ஆயத்தப்படுதப்பட்டுள்ள இடத்துக்கு அனுப்புவது என்பது அந்த மனிதனின் விருப்பபடியே நடக்கிறதேயல்லாமல் இங்கு தேவனின் மதிப்பு சற்றும் குறையவில்லை! ஏனெனில் அவர் ஆவி மனிதனின் ஆவியோடு போராடுவது இல்லை.
என்று வாக்கு கொடுத்திருக்கிறார் அதையும் அவர் காப்பாற்ற வேண்டும்.
எனவே அது எவ்விதத்திலும் தேவனின் நீதிநியாயத்துக்கு ஒவ்வாத செயல் அல்ல எனவே அதை தேவதூஷணம் என்று சொல்வது எவ்விதத்தில் நியாயம் என்று புரியவில்லை. இங்கு தேவன் மனிதன் விரும்பிய காரியத்தையே அவனுக்கு அளிக்கிறார் அவர் நீதிகேடு செய்யவில்லை. இங்கும் அவர் தன் நீதியை நிலைநாட்டுகிறார்.
அவர் எவ்வளவு இரக்கம் உள்ளவரோ அவ்வளவு நீதியும் உள்ளவர்! அவர் எல்லாவற்றிலும் சமநிலை காப்பவர்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)