கன்மலைமேல் கட்டப்பட்ட வீடு நாங்களாம் கர்த்தராகிய தேவன் எங்கள் அஸ்திபாரமாம் பெரும் மழை காற்று புயல் சேர்ந்து வந்தாலும் எங்கள் வீடு எந்தநாளும் அசைக்கப்படுவதில்லையாம்!
ஆவியிலே எளிமையாக நாம் இருப்போமே! சாந்த குணம் உள்ளவராய் வழ்திருப்போமே! நீதியின்மேல் பசிதாகம் கொண்டிருப்போமே! இயேசுவுக்காய் சாட்சிகளாய் வாழ்ந்திருப்போமே!
இருதயத்தில் சுத்தம் உள்ளோர் பாக்கியவான்களே இறைவன் இயேசுவை தரிசிக்கும் நீதிமான்களே! கன்மலை மேல் கட்டப்பட்ட பட்டணங்களே கர்த்தருக்காய் ஒளி கொடுக்கும் தீபங்களே
பாவ மணலில் கட்டபட்ட வீடுகள் எல்லாம் கோர புயலில் சிக்கிவிட்டால் நொறுங்கிபோகுமே கர்த்தராகிய இயேசுவின் மேல் அச்திபாரமோ காலமெல்லாம் காத்து நிற்கும் தேவ கரமே!
ஆவியோடும் உண்மையோடும் தொழுதிடுவோமே ஆவியான தேவனின் நாமம் உயர்த்திடுவோமே இயேசு ராஜா ஒருநாள் இங்கு வந்திடுவாராம் கிரியைக்கேற்ற கிரீடம் தன்னை தந்திடுவாராம்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)