இறைவனின் நீதி நேர்மை மற்றும் பரிசுத்தம் பற்றி தெரியாதவர்கள் அவரை "ஒருபுறம்பிள்ளை கிள்ளிவிட்டு, மறுபுறம் தொட்டிலையும் ஆட்டுபவர்" போல சித்தரித்து அவரது உண்மை மற்றும் செம்மை தன்மையை கேள்விக்குரியாக்குகின்ற்றனர்.
"நீதி நேர்மையாய் உண்மையை உத்தமமாய் நட" என்று சொன்ன இறைவனே, அவனை நீதியை நடக்காதபடி தடுக்க, தானே தனக்கு சத்துரு என்னும் சாத்தானை படைத்து வைத்துள்ளார் என்ற கருத்தில், சாத்தானை வேண்டுமென்றே படைத்து தீமையையும் துன்பத்தையும் வேண்டுமென்றே உலகத்துக்குள் அனுமதித்த ஒருவராக தேவனை காட்டுவதைவிட தேவதூஷணம் என்ன இருக்க முடியும்?
இரண்டாவது "தேவனால் எல்லாம் முடியும்" என்று சாதிக்கும் இவர்கள் அவரால் ஒரு மனிதனிடம் "இன்றும் பேச முடியும்" என்று சொன்னால் "அது முடியாது" அப்படி சொல்வது தேவ தூஷணம் என்று சொல்கின்றனர். சர்வவல்ல தேவனை ஒரு மனிதனிடம் நினைத்த நேரத்தில் பேச முடியாதவராக சித்தரிக்கும் தேவதூஷநத்தை தங்களை அறியாமலே செய்து வருகின்றனர்.
தேவன் தானே எல்லாவற்றையும் சுலபமாக செய்ய முடிந்திருந்தும். தேவையற்ற திட்டம் போட்டு ஆண்டவராகிய இயேசுவை மாமிசமாக பூமிக்கு அனுப்பி அவரை அணு அணுவாக சித்திரவதை செய்ய ஒப்புகொடுத்து ,வேதனைபடுத்தி பார்த்த ஒரு கொடூரனாக தேவனை சித்தரித்து தேவ தூஷணம் செய்கின்றனர்
அடுத்து உலகில் எல்லாமே தேவனின் சித்தப்படிதான் நடக்கிறது என்று சாதிக்கும் இவர்கள் அவரதுசித்தப்படி நடந்த காரியமாகிய " அவரே ராஜாவாக அபிஷேகித்த
சவுலின் மீறுதல்" மற்றும் "மனிதனின் நினைவுகள் தீமையாய் இருபது" குறித்து கர்த்தர் ஏன் மனஸ்தாப பட்டார் என்பதற்கு சரியான விளக்கம் தர முடியவில்லை. அதாவது தானே வேண்டுமென்று திட்டம்போட்டு மனிதர்களை படைத்து பாவம் செய்ய வைத்து, பின்னர் அதற்காக தானே மனாஸ்தாபபடும் ஒரு கடவுளாக இறைவனை காடடி அவரின் நிலை பற்றிய ஒரு குழப்பத்தை ஏற்ப்படுத்துகின்ற்றனர்.
மேலும் தேவன்தான் வேண்டுமென்றே எல்லாவற்றையும் திட்டம் போட்டு செய்கிறார் என்று சாதிக்கும் இவர்கள் " எல்லோரும் மனம் திரும்பவேண்டும் என்று தேவன் நீடிய பொறுமையோடு காத்திருக்கிறார்" என்ற வசனத்துக்கு சரியான விளக்கம் கொடுக்க முடியவில்லை. தானே எல்லாவற்றையும் திட்டம் போட்டு செய்துகொண்டு யாருக்காக அவர் நீடிய பொறுமையோடு காத்திருக்கவேண்டும் என்பது புரியவில்லை!
இப்படி அநேகே அர்த்தமற்ற கோட்பாடுகளை வைத்துள்ள சகோதரர்களுக்கு உண்மையை புரியவைப்பது கடினம்! மேலும் சுபாவ அன்பே இல்லாமல் கடினமான வார்த்தைகளை உபயோகிக்கும் இவர்கள் www.kovaibereans.activeboard.com தளத்தில் பதிவிடும் எந்த கருத்துக்கும் இங்கு விளக்கம் தரவேண்டாம் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன்
-- Edited by இறைநேசன் on Saturday 14th of August 2010 10:18:42 AM
"தேவனால் எல்லாம் கூடும்" என்றாலும் உலகில் நடக்கும் அனேக காரியங்களை அவர் நேரடியாக தலையிட்டு செய்வதில்ல. ஏனெனில் தேவன் ஆவியாய் இருக்கிறார் மனிதனோ மாம்சமாய் இருக்கிறான். எனவேதான் தேவன் தனது வார்த்தையை மாம்சமாக்கி இயேசுவாகிய அவருக்குள் தானே வாசம் செய்து பாவத்திற்கான பலியை நிறைவேற்றினார்.
இன்றும் தேவன் தான் செய்யவேண்டிய பல காரியங்களுக்கு மாம்சமாயிருக்கும் மனிதனை தேர்ந்தெடுத்து அவன் மூலம் தான் தனது திட்டங்களை நிறைவேற்றுகிறார். இதனால் தேவன் மனிதனையே சார்த்து இருக்கிறார் என்று பொருள் அல்ல.
ஒரு நாட்டின் பிரதமர் நேரடியாக வந்து சிறிய மற்றும் பெரிய காரியத்தை செய்துகொண்டு இருப்பதில்லை. அவர் கட்டளையிடுவார், யாரோ ஒருவர் மூலம் அக்காரியம் நிறைவேறும். அவர் கட்டளையிடும் காரியத்தை ஒருவன் செய்ய மறுத்தால் அவனை பணி நீக்கம் செய்துவிட்டு வேறு ஒருவனை அக்காரியத்துக்கு அனுப்புவதுபோல
ஒரு மனிதன் "நான் உம்முடைய கட்டளையை எற்று நடக்க மாட்டேன்" என்று தேவனிடம் பிடிவாதம் பிடித்தால், இன்னொருவர் மூலம் அவர் அதே காரியத்தை செய்து முடிப்பார்.
தேவன் தான் நினைத்தை தன் சித்தத்தை யாரின் மூலமாவது நிச்சயம் செய்து முடித்து விடுவார்.
தேவனுக்கு யாரும் உதவிசெய்யவோ அவரை தற்க்காக்கவோ வேண்டிய அவசியம் இல்லை. ஆகினும் தங்களுக்கு கிடைத்த மேன்மையான அழைப்பை அசட்டை பண்ணுபவர்களுக்கு சவுலுக்கும் சிம்சொனுக்கும் நேர்ந்த கதிதான் நேரும் என்பதை வேதம் திரும்ப திரும்ப வலியுறுத்துகிறது!
இதற்க்கு மேலும் விளக்கம் தேவையில்லை என்றே கருதுகிறேன். தெவனதாமே குருட்டாட்டம் பிடித்தவர்களின் கண்களை திறக்க ஜெபிபோமாக!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)