இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எல்லாமே தேவ சித்தமா? எதற்கும் ஜெபம் வேண்டாமா?


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
எல்லாமே தேவ சித்தமா? எதற்கும் ஜெபம் வேண்டாமா?
Permalink  
 


என்னுடன் வேலை பார்த்த கிறிஸ்தவ  நண்பர் ஒருவரிடம்  எந்த ஒரு கொடூரமான செய்தியை சொல்லி வருத்தப்படாலும் அவர்  மிக சுலபமாக 'நடப்பது எல்லாமே தேவ சித்தம் சார், அது எல்லாம்  நடந்தே தீரும்! நாம் எதுவும் செய்ய முடியாது" என்று மிக சுலபமாக சொல்லிவிடுவார்.
 
ஆனால் தனது சொந்த விஷயங்களை தனக்கு சாதகமாக முடிக்க மிகவும் விழிப்பாக இருந்து அனேக பிரயாசங்களை எடுப்பார்.அவ்வாறு  தனக்கு ஊதிய உயர்வு கேட்டு மீண்டும் மீண்டும் நிர்வாகத்தை  தொந்தரவு செய்த அவர் வேலையை விட்டு போக வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது.   
 
அப்பொழுது அவரிடம்  நான் "நண்பரே உங்களுக்கு இன்ன ஊதியம்தான் கிடைக்கவேண்டும் என்று தேவன் நிர்ணயிதபடிதானே நடக்கும்? பிறகு ஏன் நீங்கள் மீண்டும் மீண்டும் அவர்களை தொந்தரவு பண்ணி ஊதிய  உயர்வு கேட்டீர்கள்?   உங்கள் தேவைகள் பூர்த்தியடைய மட்டும்  தேவனின் சித்தம் என்னவென்பதை சற்றும் கவனிக்காமல் முயற்சி செய்வீர்கள், ஆனால் அடுத்தவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அது தேவனின் சித்தம் என்று விட்டு விடுவீர்கள்" அப்படிதானே?"  என்று கேட்டபோது அவரால் சரியான பதில் சொல்ல முடியவில்லை.
 
இன்றும் அதுபோல் பலர்  "உலகில் என்ன நடந்தாலும் அது தேவ சித்தம், அதற்காக நாம் ஜெபிக்கவோ அல்லது வருத்தப்படவோ தேவையில்லை என்கிறார்கள். இலங்கையில் குண்டுபோட்டு தமிழர்களை கொல்கிறார்கள் என்று வருத்தத்தோடு சொன்னால் "அது தேவ சித்தம் சார், அப்படி நடந்தே ஆகவேண்டும் அதற்காக நாம் ஜெபித்து ஒன்றும் ஆக போவது இல்லை" என்று மிக சாதாரணமாக பதில் சொல்லும்  பல சகோதரர்களை காணமுடிகிறது . 
 
இவர்கள் தாங்கள் தேவனுக்கு கீழ்படிய விரும்பாமல் செய்யும் பல அயோக்கிய காரியங்களுக்கான பழியை துணிந்து தேவன் மேலேயே  சுமத்த முயல்வதோடு, பிறரையும் கீழ்படிய விடாமல் இடரலடைய செய்கிறார்கள் என்றே கருதுகிறேன்.  
 


__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

இந்த பூமியில் நடக்கும் நன்மைதீமை எல்லாமே இறைவனின்  சித்தம்தான் என்றும், ஏதோஒரு நல்ல முடிவுக்காக இறைவன் இவ்வாறு தானே தீமையை அனுமதித்து அனைத்தையும் நடத்துகிறார் என்றும், நாம்  ஏதாவதுசெய்து தேவனுக்கு உதவி செய்யவேண்டிய அவசியம் இல்லை என்றும்., நாம் என்னதான் கிரியை செய்தாலும்,இறைவனின் சித்தம் எதுவோ அதுதான்  நிறைவேறும்  என்றும்  கீழண்ட வசனங்களின்   அடிப்படையில்  விவாதிக்கிறார்கள் சில கிறிஸ்த்தவ சகோதரர்கள்.  
 
ஏசா 45: ஒளியைப் படைத்து இருளையும் உண்டாக்கினேன்,சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்."

யோபு42:.2. தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.

பிர 1:13.மனுப்புத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்குத்தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்.

21. அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.

ரோம 9:18‍‍ ‍‍‍‍... ஒரு பாத்திரத்தை கனவீனமான காரியத்துக்குப் பண்ணுகிறதற்கு அவனுக்கு அதிகாரமில்லையோ?"

 ஏசா 63:17 கர்த்தாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளை விட்டுத் தப்பிப்போகப்பண்ணி, எங்கள் இருதயத்தை உமக்குப் ப்யப்படாதபடிக்கு கடினப்படுத்துவானேன்?.
 
ரோமர் 11:32 எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்.
 
தேவனுடைய செயலைக் கவனித்துப்பார்; அவர் கோணலாக்கினதை நேர்மையாக்கத்தக்கவன் யார்?
 
அப் 17:26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;
 
ஏசா 46:10 அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என்ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளை யெல்லாம் செய்வேன்
 
இதே கருத்தை சில இந்து சகோதரர்களும் சொல்வதை நான் கேள்விப்பட்டுள்ளேன "
 
அவனின்றி அணுவும் அசையாது" என்பது இந்துத்துவாவின் தத்துவம் . சில திரித்துவ சகோதரர்கள்கூட "தீமைகள் அனைத்துக்கும் காரணம் தேவன்தான்" என்றும் நம்புகின்றனர். 
 
இந்த கருத்துப்படி பார்ப்போமாகில்,நோவா காலத்து மனுஷர்களை இறைவன் படைக்கும்போதே அவர்கள் தீயவர்களாகவோ  அல்லது தீமை செய்வார்கள் என்று அறிந்தேதான்  படைத்திருப்பார். பின்னர் அவர்கள் அவரின்
திட்டப்படி  தீயவர்களாகி தீமை செய்தபோதோ அவர் மனஸ்தாபபட  வேண்டிய அவசியம் என்ன?   
 
ஆதியாகமம் 6:6 தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.
 
எந்த ஒரு மனுஷனாவது தன்னுடய சித்தம் சரியாக நிறைவேறி வருவதற்காக மனஸ்தாபபடுவானா? ஆனால் இங்கு இறைவன் மனஸ்தாபபடுகிறார் என்றால் அதை அவர் எதிர்பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது.   
 
அதேபோல் சவுலை ராஜாவாக ஆக்கியதும் கர்த்தர்தான் ஆனால் அவன் கர்த்தரிட்ட  கட்டளையை மீறியபோது  கர்த்தர்:  
 
நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார்; I சாமு 15:11
 
இங்கு சவுல் தன்னுடய வார்த்தையை மீறுவான் என்று கர்த்தருக்கு முன்னமேயே தெரிந்திருந்தால் அல்லது மீறவேண்டும் என்பது இறைவனுடைய சித்தமானால் அதேபோல் சவுல் மீறும்போது அவர் மனஸ்தாபபடவேண்டிய அவசியம் நிச்சயம் இல்லையே
 
எனவே சுயசித்தம் செய்யும் மனுஷன்  "மதில்மேல் பூனை" போன்றவர் அவன் எந்த பக்கம் சாய்வான் என்பது யாருக்கும் தெரியாது. எனவேதான் வுலின் மீருதலுக்காக கர்த்தர் மனஸ்தாபபட்டிருக்க வேண்டும் என்று எடுத்துகொண்டாலும், தான்  ராஜாவாகபோகும்  மனுஷன் என்னசெய்வான் என்பதை சர்வவல்ல இறைவனால் முன்னால் அறியமுடியாதா? என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறதே.  
 
 இதற்க்கான விளக்கம் என்ன?
 


-- Edited by இறைநேசம் on Friday 15th of July 2011 03:41:06 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: எல்லாமே தேவ சித்தமா? எதற்கும் ஜெபம் வேண்டாமா?
Permalink  
 


இதுபோன்ற காரியங்களை குறித்து அனைத்தும் அறிந்த  தேவன் ஒருவருக்கு விளக்கம் கொடுக்காவிட்டால் யாரும் சரியான உண்மையை கண்டறிய முடியாது! அவ்வாறு தேவனிடமிருந்து அறிந்த உண்மைகளை இங்கு பதிவிட்டாலும் யாரும் ஏற்க்கப் போவதும் இல்லை.
 
ஒருபுறம் பார்த்தால் சவுல் தேவனின் வார்த்தைகளை மீறி நடந்தான் அதற்க்கு காரணம் யார்?  சவுலா அல்லது சவுலினுள் குடிகொண்டிருந்த ஆதாமின் பாவமா ஆதாமின் மீறுதலே அவனை தேவனின் வார்த்தைகளை மீறி நடக்க வைத்தது. ஏனெனில் ஒரு மனிதனுக்குள் இயல்பாகவே தீமை செய்ய தூண்டும்  பாவத்தின் சாயல் இணைந்தே இருக்கிறது.   
 
ஏறக்குறைய பூமியில் நடக்கும் அனைத்துமே தேவனின் சித்தப்படி அவரது தனிப்பட்ட விருப்பபடிதான் நடக்கிறது என்பதை அனேக வசனங்கள் சொல்கின்றன.  
 
தானியேல் 4:35 பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.
 
எரேமியா 10:23 கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.

யோபு 42:2 தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.
 
போன்ற வார்த்தைகள் தேவன் சகலத்தையும் தன்னுடயஞானத்தின் அடிப்படையில் தான் விரும்பியபடியே நடத்துகிறார் என்பதை நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன.
 
ஆனால் தேவனே ஒருகாரியத்துக்கு முற்றும் பொறுப்பாளியாக்வும் அனைத்தையும் செய்யவல்ல சர்வ வல்லவராகவும் இருந்துகொண்டு மனுஷனை ஏன் குற்றம் கண்டுபிடிக்கிறார் என்ற கேள்வி இங்கு எழுகிறது.
 
"மனுஷன்தான் ஒன்றுமில்லை" என்று வசனம் சொல்கிறதே, பின்னர் அந்மனுஷனை பார்த்து "நீ உள்ளதை உள்ளதென்று சொல்" என்றோ "நீ பாவம் செய்யாதே" என்றோ சொல்வதில் என்ன பயன்?
 
இதுபோன்ற கேள்விக்குதான் வசனம் இவ்வாறு பதில் சொல்கிறது
 
ரோமர் 9:20 அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?
 
தேவன் தன்னிடம் கேட்கும் எவருக்கும் உத்தரவு கொடுக்க விருப்பம் உள்ளவராக
இருந்தாலும்,  தேவனிடம் யாரும் எதிர்த்துதர்க்கித்து உண்மையை அறிந்துகொள்ள முடியாது. அவருக்கு கீழ்படிந்து நடந்து தொடர்ந்து பல நாட்கள் மன்றாடி கேட்பதன் மூலமே சில உண்மைகளை அறியமுடியும்! ஆகியும் எல்லோருக்கும் எல்லா உண்மைகளையும் தேவன்  சொல்லிவிடுவதில்லை.    
 
இங்கு என்னுடய கருத்து என்னவெனில்:
 
II பேதுரு 3:9  ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
 
I தீமோ 2:4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
 
என்ற வசனங்களின் படி, ஒருவரும் கெட்டுபோகாமல் எல்லோரும் மீட்கப்பட வேண்டும் என்பதே தேவனின் சித்தம் என்பதை நாம் அறிய முடிகிறது. தேவன் தன்னுடயசித்தத்தை நிறைவேற்ற வல்லவராகவும் இருக்கிறார்! எனவே தேவனின்
அந்த சித்தம் நிறைவேறும் வழியிலேயே  நம்போன்ற மனிதர்கள் பிறக்கிறோம் வாழ்கிறோம். 
 
இங்கு நாம் செய்யவேண்டியது என்னவெனில் நடப்பது நடக்கபோவது எல்லாமே தேவனின் சித்தப்படிதான் நடக்கும் ஆனால் தேவன் நமக்கு என்ன கட்டளை யிட்டிருக்கிராரோ அதை செய்ய வேண்டியது நம்மேல் விழுந்த கடமையாக இருக்கிறது.
 
தேவன் எல்லோருக்கும் பொதுவாக திருப்ப திரும்ப சொல்லியிருக்கும் முக்கியமான  வார்த்தைகள் என்ன?
 
ஏசாயா 1:16/17 தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்;  நன்மை செய்யப் படியுங்கள்
 
III யோவான் 1:11 பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை.
 
சங்கீதம் 37:27தீமையை விட்டு விலகி, நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்.
 
நீதிமொழிகள் 3:7நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.
 
ஆமோஸ் 5:14நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்
 
ரோமர் 12:9 தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள்.
 
II தீமோத்தேயு 2:15  உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு
 
தீத்து 3:8   தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்
 
இப்படி அனேக வசனங்களை அடுக்கிகொண்டே போகலாம்.  இந்த வசனங்களின் அடிப்படையில் தேவன் மனிதனிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை ஒரு சிறு பிள்ளை கூட அறியமுடியும்.
 
தேவனுடைய சித்தம் நிச்சயம் நிறைவேறும்! ஆனால் தன்னுடய சித்தத்தை நிறைவேற்ற வல்ல தேவன்  "எனது  சித்தம் எப்படியாகிலும் நிறைவேறும் உன்னுடய கையில் ஒன்றுமில்லை, நீ எப்படிவேண்டு மானாலும் வாழ்" என்று எங்காவது  சொல்லியிருக்கிறாரா? இல்லவே  இல்லை! தன்னுடய கிரியையி நிமித்தம எந்த ஒரு மனுஷனும்  எவ்விதத்திலும் மேன்மை பாரட்டவும் முடியாது
அதே நேரத்தில் தன்னுடய கிரியின் பலனை தேவனின் தலையில் சுமத்தவும் முடியாது!   
 
சுருங்கமாக சொல்லின், தேவனின் சித்தம் நிறைவேறுவதில் நாமெல்லாம் தேவனால் நியமிக்கப்பட்ட பாத்திரமாக இருக்கிறோம்
 
மனுஷனின் கிரியைகளால் தேவனுக்கு நன்மையா தீமையா  என்பதெல்லாம் இங்கு கேள்வியே இல்லை. நாமெல்லாம் அப்பிரயோஜனமான கழிமண்கள்! அவர் வார்த்தைகளை குறித்து பட்சபாதம் பண்ணாமல் அவர் சொன்னதை மாத்திரம்
செய்து கை வாய் இவற்றை பொத்திக்கொண்டு அமர்ந்திருப்போமாக!    
 
லூக்கா 17:10 அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.
 
அனந்த ஞானமுள்ள தேவன் அனைத்து செய்ய வல்லவராக இருந்தும், நம்மிடம்
அதை இப்படி செய்! இதை செய்யாதே! இதை செய்! என்று  திரும்ப திரும்ப சொல்கிறார் என்றால் அதில் நிச்சயம் பல மறைவான காரணங்கள் இருக்கிறது! அதை தேவன் விளக்கினால் மட்டுமே உங்களுக்கு புரியும். உண்மை அறியாமல் எல்லோருக்கும் இடரலை ஏற்ப்படுத்தும் வண்ணம் உளறிக்கொண்டு அலைய வேண்டாம்.
 
நாம் தேவனைவிட அறிவாளிகள் அல்ல! எனவே  நமக்கு கட்டளையிட்டவைகளை நாம் முழுமுயற்சியுடன் செய்யவே  கடமைப்பட்டுள்ளோம்!  ஜெபிக்க சொன்னால் ஜெபிப்போம், தீமையை  விட்டு விலகசொன்னால் விலகுவோம், நன்மை செய்ய சொன்னால் செய்வோம்! அதில் எந்த அளவுக்கு நாம் வெற்றிபெறுவோம் என்பது
நமது பொறுப்பல்ல!  அதை வாய்க்கபண்ணுவதோ மனுஷனை தனக்கு ஏற்ற வழியில் நடத்தும்   தேவனாலேயாகும்.     
 
கலாத்தியர் 6:9 நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.
 
ஆனால் அவரின் வார்த்தைகளை குறித்து அலட்சியம் செய்து, அதை கைகொள்ளாமல் பட்சபாதம் பண்ணுகிறவர்களுக்கு தேவன் தரும் எச்சரிக்கை:
 
மல்கியா 2:9நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம் பண்ணினபடியினால்நானும் உங்களை எல்லா ஜனத்துக்கு முன்பாகவும் அற்பரும் நீசருமாக்கினேன்.
 
என்னுடய இந்த கருத்தை  ஒரு  சிறு  உதாரணத்தின் மூலம் விளக்கலாம் என்று  கருதுகிறேன்.........   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

ஒரு கம்பனி சுமார் 1லட்சம் பொருட்களை  உற்பத்தி செய்யவேண்டும் என்று முன் திட்டமிட்டு 1000பேரை வேலைக்கு அமர்த்தி, ஒவ்வொருவருக்கும் சில குறிப்பிட்ட வேலையை நிர்ணயித்து  பகிர்ந்து கொடுக்கிறது.
 
அந்த ஆயிரம்பேரில் சிலர்"இந்த கம்பனி யார் வேலை செய்தாலும் செய்யா விட்டாலும் கண்டிப்பாக தன்னுடயஇலக்கை அடைந்துவிடும்! எனவே நாமெல்லாம் வேலைசெய்வது அவசியமற்றது" என்று எண்ணிக்கொண்டு, வேலை எதுவும் செய்யாமல் மற்றவர்களையும்  இடற செய்துகொண்டு இருந்தால், அது போன்றவர்களை அந்த நிர்வாகம் என்ன செய்யும் என்பதை யோசித்து பாருங்கள்.
 
அந்த நிர்வாகம் உங்களை தள்ளி வேறு யாரையாவது விசுவாசமானவர்களை வேலைக்கு வைத்து தன்னுடய  திட்டத்தை நிச்சயம் செய்து முடிக்கும்!  ஆனால் அதில் உங்களுக்கு எந்த பங்கும் பாத்திரமும் இல்லாமலே போய்விடும்,   
 
அதுபோலவே தேவனின் திட்டங்களும்! தேவன் தன்னுடய சித்தத்தை  ஒரு கழுதையை கொண்டேனும் செய்து முடித்துவிடுவார். ஆனால் "அவர் செய்து முடித்துவிடுவார்" என்று எண்ணிக்கொண்டு, நாம் தேவனின்  வார்த்தைகளுக்கு கீழ்படியாமல் எதிர்த்து நடந்து நமக்கு ஒப்புவிக்கபட்ட  பொறுப்புகளை தட்டிகழித்து, பிறரையும்  இடரவைத்து கொண்டு இருந்தால், இறுதியில் நமக்கு அதற்க்கான தண்டனை  கிடைப்பதோடு, தேவன் அருளும் நன்மையில் நமக்கு பங்கும் பாத்திரமும் இல்லாமல் போகும்! அதற்க்கு அனேக உதாரணங்கள் வேதத்தில் உண்டு!
 
மகிமையான ஒரு தூதன் எவ்வாறு ஆகாதவன் ஆகிபோனான்?
 
பிறரை காப்பாற்றுவதர்க்காக தேவனால் அபிஷேகம் பெற்றவன் தனக்கு நிர்ணயிக்க ப்பட்ட கடமையை செய்யாமல் பாவம்செய்தான்   
 
எசேக்கியேல் 28:16  உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன்.
 
அதனால் தன்னுடய மகிமையான நிலையைவிட்டு தள்ளப்பட்டு சாத்தானாகி போனான். "அதுவும் தேவனுடய சித்தம்தான்" என்று சிலர் எண்ணினால். அவன் தள்ளப்படுவதுபோல் அக்கினி கடலில், அவனோடு சேர்த்து நித்தியத்துக்கு தள்ளப்படுவதும் தேவனின் நியமணம்தான்!  
 
வெளி 20:15 ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.
 
தேவனை பெரியதாக உயர்துவதுபோல் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்பட்டுத்தி "தேவன் பெரியவர்! நடப்பது  எல்லாமே தேவசித்தம், நான் தவறு செய்வதும் தேவ சித்தம்" என்ற தவறான ஒரு கருத்தை போதித்து  பாவத்தை விட்டு விலகியோட மனதில்லாமல்,   தானும் இடருவதோடு அடுத்தவரையும் இடறவைப்போர்கவனிக்க வேண்டியது!  
 
கர்த்தர் நினைத்துகூட பார்த்திராத சில காரியங்களை மனுஷர்கள் செய்திருக் கிறார்கள் என்பதை  நமக்கு கீழ்கண்ட வசனம் சொல்கிறது!  
 
எரேமியா 7:31 தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் அக்கினியிலே தகனிக்கிறதற்காக, அவர்கள் இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் தோன்றவுமில்லை.
 
தேவன் மனதிலேயேதோன்றாத காரியங்களை தேவசித்தப்படிதான் மனிதன் செய்கிறான் என்பது மிகப்பெரிய அபந்தம்!
 
தேவன் விரும்பாததை மனுஷன் செய்யமுடியும்என்பதை கீழ்கண்ட வசனம் நமக்கு எடுத்துரைக்கிறது:   
 
ஏசாயா 66:4 நான் கூப்பிட்டும் மறுஉத்தரவுகொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும் அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, நான் விரும்பாததைத் தெரிந்து கொண்டதினிமித்தம், நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்.
 
"தேவன் விரும்பாததை தேவசித்தப்படிதான் மனிதன் செய்கிறான்" என்று விளக்குவது  எவ்விதத்திலும் சரியான கருத்து அல்ல!
 
கீழ்கண்ட வசனத்தை பார்த்தால் மேலும் சில உண்மைகளை அறியலாம்!  
 
I சாமுவேல் 2:35 நான் என் உள்ளத்துக்கும் என் சித்தத்துக்கும் ஏற்றபடி செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பப்பண்ணி, அவனுக்கு நிலையான வீட்டைக் கட்டுவேன்;   
 
அப்படியெனில், பல ஆசாரியர்கள் தேவனின் உள்ளத்துக்கும் சித்தத்துக்கும் ஏற்றத்தை  செய்யவில்லை என்பதை அறியமுடிகிறது!    
 
"தேவனுடய சித்தத்துக்கும் விருப்பத்துக்கும்  விரோதமாக மனுஷன் கிரியை  செய்யமுடியும்" என்பதை நாம் இன்னும் அனேக  வசனங்கள் மூலம் அறிய முடியும்!
 
இவ்வாறு தேவனுடய சித்தத்துக்கு விரோதமாக செயல்படுபவர்கள் தேவனின் நியமணத்தின் அடிப்படையில் தண்டிக்கப்படுவார்கள்! நாம்  நம் சுய தெரிவின் அடிப்படையில் செய்யும் ஒவ்வொரு காரியம் தேவனுக்கு முன்னமே தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அதற்க்கு  அந்த காரியத்தை செய்தவனே  பொறுப்பாளி
என்பதை  அறியவேண்டும்!   
 
வேதபுத்தகத்தில் உள்ள மனுஷர்களில் அநேகர் அவரவர்செய்த பாவங்களினிமித்தம் தேவனால் தண்டிக்கப்பட்டுள்ளனர்! அதில்எங்குமே  தேவன், "இவன் என் சித்தப்படி தான் செய்தான்" என்று சொல்லி அவனை  தண்டிக்காமல் விடவில்லை. மாறாக,    
   
எசேக்கியேல் 18:13  எல்லா அருவருப்புகளையும் செய்தானே; அவன் சாகவேசாவான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும்.
 
"அருவருப்புகளை செய்தவன் சாகவேசாவான்" என்று கர்த்தர்  திட்டமாக சொல்கிறார். ஆதி திருச்சபையில்  "ஆனநியாவும் சப்பீராளும்  என்னுடைய சித்தப்படிதான் என்னிடத்தில் பொய் சொல்ல துணிந்தார்கள் எனவே அவரளுக்கு தண்டனை இல்லை" என்று தேவன் சொல்லவில்லை!
 
அப் 5 : 9. பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான். 10. உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து ஜீவனை விட்டாள் 
 
தேவ ஆவியானவர் முன்னால் ஒரு பொய் சொன்னதற்கு கிடைத்த தண்டனையே இவ்வளவு பெரிதாக இருக்கிறது!
    
சரி! நடப்பது எல்லாமே தேவனின் சித்தமாகவே அவர் அறிந்து திட்டமிட்டு  செய்வதாகவே இருந்தாலும்கூட , தேவன் எந்த காரியத்துக்கு யாரை நியமித்திருக்கிறார் என்பது யாருக்குமே தெரியாது. இயேசுவை காட்டிகொடுக்க யூதசைதான் தேவன் நியமித்தார் என்பது முதலில் யாருக்குமே தெரியாது. இந் நிலையில் நாம் தேவனுக்கு பயந்து அவருடய வார்த்தைகளுக்கு கீழ்படிந்து வாழ முயற்ச்சிப்போம்! மற்றபடி நம்மீதான தீர்மானம் எதுவாக இருந்தாலும் அவர் சித்தப்படி செய்துவிட்டுபோகட்டும்!
 
மாறாக, "அவருக்கு எல்லாமே தெரியும்" "நான் இப்படிதான்  செய்ய வேண்டும் என்பது தேவனுடய சித்தம்" "எல்லோரும் பாவி என்பது தேவனுக்கு தெரியும்" என்பது போன்று எண்ணிக்கொண்டு, தேவனுக்கு  கீழ்படியாமல்  காரியத்தை செய்வோமாகில், தண்டனைக்கு தப்பமுடியாது என்பது  நிதர்சனமான உண்மை!
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
எல்லாமே தேவ சித்தமா? எதற்கும் ஜெபம் வேண்டாமா?
Permalink  
 


இந்த உலகத்தில் மனுஷனாக பிறக்கும் எல்லோருக்கும் எல்லாமே நிறைவாக இருப்பதில்லை. சிலருக்கு ஒருவேளை உணவு கூட இருக்காது, சிலருக்கு வசதி இருக்கும் ஆனால் அதை  அனுபவிக்கும் உடல் நலம் இருக்காது. சிலர்க்கு சரியான வேலை இருக்காது, சிலருக்கு குழந்தை இருக்காது, சிலருக்கு  தங்குவதற்கு வீடுகூட இருக்காது , சிலருக்கு போதுமான அறிவு இருக்காது இப்படி எல்லோருக்குமே ஏதாவது குறைகள் இருக்கத்தான் செய்யும்.
 
ஆனால் உலக சம்பந்தமான  இந்த குறைகள் இருப்பவர்கள் எல்லாம் "இது தேவனின் சித்தம்"  "நான் இப்படி இருக்க வேண்டும் என்பது அவர் நியமித்த விதி" "நான் இப்படியே இருந்துவிட்டு போகிறேன்" என்று இருக்கிறார்களா?  இல்லையே!
 
தங்களால் முடிந்த மட்டும் தங்கள் தேவைகளை பூர்த்திசெய்ய பாடுபடுகிறார்கள். பண தேவை உள்ளவர்கள் எந்த இடத்தில் போய் சம்பாதித்தால் அதிகம் வருவாய் கிடக்கும் என்ன தொழில் செய்யலாம் என்று தீவிரமாக யோசிக்கின்றனர். வியாதி யுள்ளவர்கள் எதை தின்றால் அல்லது எங்குபோய் பார்த்தால் நோய் குணமாகும் என்று தேடி அலைகின்றனர். வீடு இல்லாதவர்கள் எப்படியாது ஒரு இடத்தை வாங்கவும் கடன் வாங்கியாவது ஒரு வீட்டை கட்டவும் பிரயாசம் எடுக்கின்றனர். பிள்ளை இல்லாதவர்கள் கோவில் குளம்  மருத்துவர்கள்,  சாமியார்கள் என்று அலைந்து ஆலோசனை கேட்டாவது ஒரு குழந்தையை பெற்றுவிட துடிக்கின்றனர். போதிய அறிவில்லாதவர்கள் படித்து அறிவை பெற்றுக்கொள்ள விளைகின்றனர். யாருமே இது தேவனின் சித்தம்  அப்படியே நடந்துவிட்டு போகட்டும் என்று இருப்பது இல்லை. பண விஷயங்களில் பத்து ரூபாயை கூட சரியாக கணக்கு பார்த்து வாங்குவதில் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்கின்றனர்.
 
இவ்வாறு அழிந்து போகும் இந்த  உலக தேவைகளை அக்கறையுடன் நிறைவேற்ற நினைக்கும் மனுஷர்கள் அவர்களின் ஆன்மீக தேவையான நித்தியத்துக்கடுத்த தேவைகளை தேடி கண்டடைவதில் எவ்வளவு அதிக அக்கறையுள்ளவர்களாக இருக்கவேண்டும்? ஆனால் அதில் அநேகர் போதிய
ஆர்வம் காடுவதில்லையே ஏன்? காரணம் சாத்தானால் உருவான நிர்விசாரமே தேவையற்ற அற்ப உலக காரியங்களை பெரியதாக காட்டும் அவன் தேவையான மகிமையின் காரியத்தின் மதிப்பை குறைத்து காட்டி ஜனங்களை மோசம் போக்குகிறான்.  
 
ஒவொரு மனிதனுக்கும் உலகத்துக்கடுத்து காரியங்களில் குறைகள்  இருப்பது போல தேவனுக்கடுத்த ஆவிக்குரிய காரியங்களிலும் ஏதாவது சில குறை நிறை இருக்கத்தான் செய்யும். சிலருக்கு எடுத்ததுடன் கோபம் வரும், சிலருக்கு பாலியல் ரீதியில் அதிகமான இச்சை இருக்கும். சிலருக்கு உலகபொருட்கள் பணத்தின்மேல் அதிக ஆசை இருக்கும், சிலருக்கு அடுத்தவரை கெடுத்து வம்புபேசுவதுதான் போழுதுபோக்காக இருக்கும்.  சிலருக்கு சோம்பேறித்தனம் இருக்கும் சிலருக்கு சிகரெட், மது போன்ற கெட்ட பழக்கவழக்கங்கள் இருக்கும்.  இதில்சில காரியங்கள் அவர்கள் பிறவி குணமாக  கூட இருக்கலாம் ஆனால் ஒரு மனுஷன் எப்படி தன்னுடய உலக தேவைகள் குறைகளை பூர்த்தி செய்ய போராடுகிறானோ அதே போல் நம்முடய வாழ்வில் அல்லது சரீரத்தில் இருக்கும் தேவனுக்கு பிடிக்காத காரியங்களையும்  விட்டுவிலக போராடவேண்டும்.
 
உலகதேவையில் மட்டும் ஆண்டவர் நிர்ணயித்த நிலையில் திருப்தியடையாமல், அது அவருடைய சித்தம் என்று விட்டு விட்டாமல், எது அவரது சித்தம் என்று அறிய விரும்பாமல்   நான் ஓடி ஓடி தொழில் செய்து கோடி கொடியாக பணம் சேர்ப்பேன், அனால் ஆன்மீக காரியங்கள் அல்லது தேவனுக்கடுத்த காரியங்கள் என்று வரும்போதுமட்டும், நான் என்னை திருத்தி தேவனுக்கேற்றபடி வாழ  எந்த பிரயாசமும் எடுக்காமல் அது "தேவ சித்தம்" என்று நிர்விசாரமாக விட்டுவிடுவேன் என்பது எவ்விதத்திலாகிலும் சரியான  காரியமா? 
 
உண்மையாய் நீங்கள் "தேவனுடைய சித்தமே பெரியது, அதன்படிதான் எல்லாம் நடக்கும் என்றுஉறுதியாக எண்ணுவீர்களானால், உங்கள் உலககாரியங்கள் எதிலும் சொந்த மூளையையும் முயற்ச்சியையும்  பயன்படுத்தாமல் "நீரே எனக்கு தஞ்சம் என்னை உம்முடய சித்தபடி நடத்தும்" என்று ஆண்டவரிடம்  சரணண்டைந்து விடுங்கள். அவரே உங்களை தம்முடய சித்தப்படி சரியாக நடத்துவார்.  
 
ஆனால் நீங்களோ  உங்களின்  உலக  தேவைகள் மற்றும் விருப்பங்களை மட்டும் தேவனின் சித்தம் என்னவென்பதை அறிய விரும்பாமல்  நீங்களே உங்கள் சொந்த முயற்ச்சியால்  நிறைவேற்றிவிட்டு,  தேவனுக்கு கீழ்படியும் காரியம் என்று வரும்போது மட்டும் அதற்க்கு சற்றும் பிரயாசம் எடுக்காமல் எல்லாமே தேவ சித்தம் அவரே பார்த்து கொள்வார் நாம் எதையும் கைகொள்ள வேண்டியதில்லை என்று சொல்லி தானும் இடறி,  எல்லோரையும் இட்றவைப்பதில் எவ்வித நியாயமும் இல்லை, அது தேவனுக்கேற்ற கிரியையும்  அல்ல என்பதே என் கருத்து!    
 
உங்களுக்கு அப்படிஒரு விசுவாசம் இருக்கிறது என்றால் அதை உங்களோடு வைத்துகொண்டு மௌனமாக இருப்பதே மேல்!  
 
மல்கியா 2:9 நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம் பண்ணினபடியினால் நானும் உங்களை எல்லா ஜனத்துக்கு முன்பாகவும் அற்பரும் நீசருமாக்கினேன்.
 


-- Edited by SUNDAR on Monday 29th of August 2011 09:44:54 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard