இந்த தளத்தில் கிறிஸ்த்தவ கருத்துக்கள் அதிகம் பதிவிடப்பட்டிருந்தாலும் இது கறிஸ்த்தவத்தை மட்டுமே விவாதிக்கும் ஒரு தளம் என்று கருத வேண்டாம்.
எந்த ஒரு மதத்தில் உள்ள நல்ல கருத்துக்களையும்/ வெளிப்பாடுகளையும் இறைவனின் திட்டங்களையும் அறிந்தவர்கள் இங்கு பதிவிடலாம் அது பற்றி விவாதிக்கலாம்.
சில தளங்களில் தங்கள் கருத்துக்கு ஒவ்வாத அல்லது தங்களுக்கு சிறிதேனும் பிடிக்காத கருத்துக்கள் இருந்தால் உடனே நீக்கிவிடுவதுபோல, இங்கு நீக்கப்படுவது இல்லை. அனால் பிறரை மட்டமாக விமர்சித்து தர குறைவான வார்த்தைகளுடன் வரும் பதிவுகள் இங்கு அனுமதிக்கப்படாது.
இங்கு எழுதப்படும் கருத்துக்களுக்கு பிற தளங்களில் விமர்சனம் எழுதுவது பற்றி யாரும் கவலைப்படவேண்டாம்! நாம் கடமையை செய்வோம் அதற்க்கான பலனை விளையச்செய்வது இறைவனாலே ஆகும்!
மேலும் கிறிஸ்த்தவத்தை மட்டுமே பிடித்துகொண்டு மற்ற எல்லா மதத்தையும் கடுமையாக தாக்கி எழுதும்பதிவுகளும் இங்கு தேவையில்லை. அதுபோல் கிறிஸ்த்தவத்தை பற்றி மட்டும்தான் எழுத வேண்டும் என்று யாரும் எதிர்பாத்து எதிர் கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
இந்த உலகம் தோன்றியதில் இருந்து எந்த ஒரு மூலையில் யார் ஒருவரால் செய்யப்படும் காரியமும் இறைவனுக்கு தெரிந்தே நடைபெறுகிறது. அவரின்றி இந்த உலகில் எதுவும் இல்லை. இவ்வாறிருக்கையில், பைபிள் என்றொரு புத்தகத்தை மட்டும் வைத்துகொண்டு அதற்க்கு உள்ளேயா? வெளியேயா? என்று பார்ப்பது அவசியமற்றது என்றே நான் கருதுகிறேன்.
ஏனெனில் திரு விவிலியத்திலேயே மேலும் அனேக புத்தகங்கள் பற்றி மேற்கோள் காட்டப்பட்டுள்ளன: (உதாரணமாக யாசேரின் புத்தகம்/ நாத்தானின் பிரபந்தம் மற்றும் பல) மேலும் RC பைபிளில் உள்ள பல ஆகமங்களை CSI பைபிளில் காணவில்லை. இவற்றை எல்லாம் நீக்க யார் அனுமதி கொடுத்தார் என்பது புரியவில்லை.
இவ்வாறு இருக்கையில், இறைவனின் வார்த்தைகள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்று நான் கருதுகிறேன். அத்தோடு முக்கியமாக நான் கருதுவது என்னவெனில் கடவுளை தேடி அவருக்கு பயந்து அவர் வாத்தைகள்படி வாழ தங்களை அர்ப்பணிப்பவர்களுக்கு அனேக உண்மைகளை/ வழிகளை இறைவன் தெரிவிக்கலாம் என்பதை கீழ்க்கண்ட விவிலிய வசனம் தெரிவிக்கிறது.
சங்கீதம் 25:14கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; சங்கீதம் 25:12கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.
எனவே இறைவன் வெளிப்படுத்தும் எந்த காரியமானாலும் தயக்கமின்றி இங்கு எழுதலாம்! நம்புகிறவர் நம்பட்டும், நம்பாத ஞானிகள் விட்டுவிடட்டும்!
மேலேயுள்ள நிர்வாகியின்பதிவு விவிலியத்தின் மதிப்பை குறைத்து மதிப்பிடுகிறது என்று யாரும் கருத வேண்டாம். வேத புத்தகத்தின் மதிப்பை அது எவ்விதத்திலும் குறைக்கவில்லை. யாராலும் அதன் மதிப்பை குறைக்கவும் முடியாது! ஏனெனில் ஜீவனுள்ள தேவனின் வார்த்தைகள் உள்ள புத்தகம் வேதாகமம் ஆகும். மேலும் பைபிளில் உள்ள அனைத்தும் உண்மை என்பதையும் நித்திய ஜீவனை அடைய சரியான நேர்வழி வழி என்பதையும் நான் அறிவேன். வேறு எந்தஒரு புத்தகத்துக்கு இல்லாத மகிமையாகிய வேதபுத்தகத்தை முழு மனதோடு வாசிக்கும் போதே ஆவியாகிய தேவன் நம்மோடு இடைபடுவதை அறியமுடியும்
ஆனால் வேதாகமத்துக்கு வெளியே தேவனின் வார்த்தைகள் எதுவும் இல்லை என்பதை என்னால் ஏற்க்க முடியாது. தேவனின் வார்த்தைகள் செயல்கள் அனைத்த்ம் ஒரு புத்தகத்துக்குள் அடங்கியுள்ளது என்று சொல்வது தேவனின் மதிப்பை குறைத்து மதிப்பிடுவது என்றே நானும் கருதுகிறேன். மேலும் வேத புத்தகத்தில் உள்ள "ராட்சசர்கள்" "தேவர்கள்" "தேவ குமாரர்கள்" போன்ற பல வார்த்தைகளுக்கு சரியான விளக்கம் வேதத்தில் இல்லை. இதுபோன்ற வார்த்தைகளுக்கு அவரவர் அவரவர் விருப்பத்துக்கு கட்டுக்கதையை தயாரித்து வழங்குகின்றனர்.
இதன் அடிப்படையில் நான் மீண்டும் சொல்லும் கருத்து என்னவெனில்:
"வேதாகமத்தில் எல்லாம் அடங்கியுள்ளது அதற்க்கு மேல் எனக்கு எதுவும் வேண்டாம்" என்று கருதுபவர்களை நான் குறை எதுவும் சொல்லவில்லை! ஆம்! ஒரு மனிதனின் மீட்புக்கு தேவையான அனைத்தும் வேதாகமத்தில் அடங்கியிருக்கிறது என்பது உறுதி! அது ஒன்றை அறிந்தால் மட்டுமே போதுமானது வேறு எதுவும் தேவை இல்லை.
ஆனால் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள விரும்பாத மற்றவர்களுக்கு வேதாகமம்தான் உண்மையானது என்பதை விளக்க வேறு எங்காவது இருந்து ஆதாரங்களை திரட்டியே ஆகவேண்டும்! அதன்மூலமே நாம் வேதாகமம் உண்மை என்பதை புரியவைக்க முடியும்
பிறமத சகோதரர் ஒருவரிடம் "கர்த்தரின் வேதம் குறைவற்றது" என்று பைபிள் சொல்கிறது எனவே அது குறைவற்றது என்று சொன்னால் :முதலில் பைபிள் உண்மையானது என்பதற்கு என்ன ஆதாரம்? அதுவும் "நீ கையில் வைத்திருப்பது தான் கர்த்தரின் வேதம் என்பதற்கு என்ன ஆதாரம்?" என்று கேட்பார்கள். சரி பைபிளில் இவ்வாறு வசனம் உள்ளது அதனால் அது உண்மைதான் என்று நீங்களும் நானும் ஏற்றுக்கொள்ளலாம் அனால் பைபிளை பிற வேதங்களை போல் ஏதோ கட்டுக்கதை என்று எண்ணுபவர்கள் அதை ஏற்க்க மாட்டார்கள்.
இங்கு எழுதப்படும் செய்திகள் வெறும் கிறிஸ்த்தவர்களின் திருப்திக்காகவோ அல்லது கிறிஸ்த்தவர்களின் அன்பை பெறுவதற்காகவோ அல்ல. இங்கு வரும் அனைவரும் உண்மை வழியை அறியவேண்டும் என்பதற்காகவே எழுதப்படுகிறது. எனவே வெறும் வேதாகம வார்த்தைகளை மட்டும் வைத்து எழுதிக்கொண்டு இருந்தால் பிறமத சகோதரர்களுக்கு இங்குள்ள செய்திகளை வாசிக்க, உண்மையை அறிய விருப்பம் வராது என்பதற்காகவே ஏன் வாழ்வில் நடந்த அனேக உண்மை சம்பவங்கள் அடிப்படையில் கருத்துக்களை எழுதி வருகிறேன், பொய்யான கட்டுகதைகள் எதையும் இங்கு எழுதவில்லை. நடந்த உண்மைகளை எழுதுவதற்கு எந்த ஒரு தடங்களும் எங்கும் இல்லை!
கிறிஸ்த்தவர்களுக்கு பாடம் சொல்பவர்கள் சகோதரருக்குள்ளே குற்றம்சொல்லி கொண்டு திரிபவர்கள் சொல்லிவிட்டு போங்கள், அதில் எனக்கு ஆர்வமில்லை! காரணம் "ஒரு மனிதனின் எதிரி அவன் வீட்டாரே" "ஒரு தீர்க்கதரிசிக்கு அவன் சொந்த வீட்டில் மதிப்பில்லை" போன்ற இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில் எனது வார்த்தைகளின் உண்மைகளை ஏற்கும் மனபக்குவம் அனேக கிறிஸ்த்தவ சகோதரர்களுக்கு இல்லை. எனவே அவர்களுக்காகவே பதிவுகளை தந்துகொண்டு இருப்பதில் எந்த பயனும் இல்லை என்றே நான் கருதுகிறேன். அதற்காக அவர்கள் தவறான பாதையில் உள்ளார்கள் என்றும் நான் சொல்லவில்லை.
என்னுடைய பணியும் அழைப்பும் வேறு அவர்களது அழைப்பு வேறு !
ஒரு உண்மையான நேர்மையான பிறமத சகோதரனும் என் வார்த்தைகளை அனுபவங்களை படிப்பதன் மூலம் நான் அறிந்துகொண்டதுபோல ஜீவனுள்ள தேவனை அவர்களும் அறியவேண்டும் என்பதே என்னுடைய முக்கிய குறிக்கோள்!
இதற்க்கு பிற அழைப்பை உடைய கிறிஸ்த்தவர்கள் தடைக்கல்லை வைக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
தேவனின் மகத்துவத்தை குறைக்காத உங்களுடைய கருத்துக்களை நீங்கள் தாராளமாக பதிவிடலாம். இங்கு யாருடைய கருத்துக்களும் முன்னறிவிப்பின்றி தகுந்த காரணம் இன்றி நீக்கப்படாது. அவர்களே முன்வந்து நீக்கிகொண்டால் அதற்க்கு நிர்வாகி பொறுப்பும் அல்ல!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
மேலே எழுதப்பட்டுள்ள கட்டுரைகளில் வேதாகமத்தின் மகிமையை குறைக்கும் எந்த வார்த்தையோ அல்லது வேதாகமத்தை தேவவார்த்தை என்று அறிந்தவர்கள வேறு வேதங்களை படிக்க வேண்டும் என்றோ வலியுறுத்தும் எந்த கருத்தும் சிறிதும் இல்லை. எழுதப்பட்ட அந்த வார்த்தைகளில் எந்த தவறும் இல்லை என்பதையும்
தெரிவித்து கொள்கிறேன்.
ஒரு இந்துமத நண்பனிடம் ஆண்டவரை பற்றி சொன்னபோது அவரின் கேள்விகளுக்கு பதில் கொடுப்பதற்காகவும் மற்றும் அவருக்கு வேதாகமம்தான் உண்மை தேவவார்த்தை என்பதை புரியவைக்க நாம் என்னயுக்தியை கையாளலாம் என்பதை ஆராய்வதற்காகவே பிறமத வேதங்களை படிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதையே அப்பதிவு விளக்குகிறது
அதன் அடிப்படையில் மேலேயுள்ள கட்டுரையில் நாம் மிக தெளிவாக
"வேதாகமத்தில் எல்லாம் அடங்கியுள்ளது அதற்க்கு மேல் எனக்கு எதுவும் வேண்டாம்" என்று கருதுபவர்களை நான் குறை எதுவும் சொல்லவில்லை! ஆம்! ஒரு மனிதனின் மீட்புக்கு தேவையான அனைத்தும் வேதாகமத்தில் அடங்கியிருக்கிறது என்பது உறுதி! அது ஒன்றை அறிந்தால் மட்டுமே போதுமானது வேறு எதுவும் தேவை இல்லை.
என்று போல்ட் செய்து கொடுத்துள்ளேன்.
எங்கு சிறிய குறைகிடைக்கும் உடனே நமது ஜென்ம குணத்தை கொட்டி தீர்க்கலாம் என்று கண்ணில் எண்ணெய்ஊற்றி திரிபவர்களுக்கு கொஞ்சம் ஹோல் கிடைத்தால் போதும் திரித்து நாராக்கிவிடுவார்கள் கோபத்தை கொட்டி தீர்த்து விடுவார்கள். இது புதிதல்ல! எனவே மேலும் இவர்களைபற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை!.
அதாவது, வேதவார்த்தைகள்படி வாழுங்கள் என்று எவ்வளவுதான் எடுத்துரைத்தாலும் இவர்களும் திருந்த மாட்டார்கள் இவர்களை ஒதுக்கிவிட்டு நேர்மையாக நடக்கும் பிறமத சகோதரர்களுக்கு கட்டுரை எழுதி அவர்களாவது திருப்பிவிடலாம் என்றால் அதற்கும் விடமாட்டார்கள்!
"சாத்தானின் சாம்ப்ராஜ்யத்துக்கு முடிவை கொண்டுவரும் வழியை காட்டும் வேத புத்தகத்தை கையில் வைத்திருக்கிறீர்கள்! நீங்களும் அதன்படி நடந்து அவனது ஆட்சிக்கு முடிவை கொண்டுவருவதில்லை, புதியதாக வரும் ஒருவனையும் அதற்க்கு முடிவை கொண்டுவர விடுவதில்லை"
காரணம் தனது முடிவு எங்கே இருக்கிறது என்பது சாத்தனுக்கு நனறாகவே தெரியும்! அவ்வளவு சீக்கிரம் அவன் விடுவானா என்ன?
வேதாகமானது நமது கையில் ஒரு புத்தகவடிவில் இருப்பதால் அதைஒரு புத்தகம் என்று சொன்னதில் எந்த தவறும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை. மேலும் என்னை பொறுத்தவரை புத்தகம் எனப்படும் பொருளுக்கு எந்த மதிப்பும் இல்லை "ஆவியும் ஜீவனுமாய்" இருக்கும் அதில் உள்ள வார்த்தைகளுக்கு மட்டுமே என்றும் மதிப்புண்டு!
சகோதரர் சில்சாம் அவர்களின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கும் தேவையற்ற சாபத்துக்கும் இழிவான வார்த்தைகளுக்கும் நான் பதில் தந்து என்னை தற்காத்து கொள்ள தேவையில்லை அதற்க்கான அவசியமும் இல்லை என்றே நான் கருதுகிறேன்!
-- Edited by SUNDAR on Saturday 21st of August 2010 04:55:08 PM
-- Edited by SUNDAR on Saturday 21st of August 2010 05:21:33 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஆனால் வேதத்துக்கு இணையாக இன்னொன்றைக் கொண்டு வந்து கோர்த்துவிடுவதையே கண்டிக்கிறோம்; இன்னும் பைபிள் மட்டுமே முழுமையானதல்ல என்னும் துணிகரமான கருத்தையும் கண்டிக்கிறோம்;
புத்தர் மூலமும் ப்ளாட்டோ மூலமும் கூட சர்வவல்ல தேவன் பேசினார் என்று நீங்கள் கூறமுயற்சித்தால் சாத்தான் யார் என்பது உமது எழுத்துக்களிலேயே புரிந்துவிடும்.
அன்பர் சில்சாம் குற்றச்சாட்டில் எதுவுமே உண்மை இல்லை எல்லாம் அவரின் மனப்ரம்மை. இல்லாத கருத்துக்களை அவரே கற்ப்பனை செய்து தவறான வார்த்தைகளை பிரயோகித்து வருகிறார்.
எமது பதிவில் இருந்து:
இந்த உலகம் தோன்றியதில் இருந்து எந்த ஒரு மூலையில் யார் ஒருவரால் செய்யப்படும் காரியமும் இறைவனுக்கு தெரிந்தே நடை பெறுகிறது. அவரின்றி இந்த உலகில் எதுவும் இல்லை. இவ்வாறிருக்கையில், பைபிள் என்றொரு புத்தகத்தை மட்டும் வைத்துகொண்டு அதற்க்கு உள்ளேயா? வெளியேயா? என்று பார்ப்பது அவசியமற்றது என்றே நான் கருதுகிறேன். இறைவனின் வார்த்தைகள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.
பைபிளில் உள்ளது மட்டும்தான் இறைவன் செய்தது என்றால் பைபிளில் இல்லாத எல்லோரையும் பூமியில் பிறக்க வைத்து வாழவைப்பது யார்?
அவர் நல்லோர் மேலும் பொல்லார் மேலும் மழையை பெய்யசெய்து எல்லோரையும் தற்காத்து பூரண சற்குணராக இருக்கும் பிதா என்றல்லவா வேதம் சொல்கிறது. எனவே அவர்களை வாழவைப்பதும் அதே இறைவன் அல்லவா? இதில் என்ன குறை கண்டார்? புரஜாதியில் உள்ள ஒரு சிறு குழந்தை மூலமாக கூட இறைவனால் நம்மிடம் பேசமுடியும் மற்றும் புத்தர் மூலம் மட்டுமல்ல ஒரு கழுதை மூலமாக கூட உம்மிடம் பேசி உமக்கு புத்தி புகட்ட முடியும். ஆனால் அதை புரிந்துகொள்வதற்கு நமக்கு ஞானம் வேண்டும் அவ்வளவுதான்
அவர் உண்மையில் எங்களை பழிக்கவில்லை அறியாமல் தேவனின் மகத்துவத்தை பழிக்கிறார்.
சுந்தரின் பதிவு
"வேதாகமத்தில் எல்லாம் அடங்கியுள்ளது"
இக்கருத்தை ஏற்றுக்கொள்ள விரும்பாத மற்றவர்களுக்கு வேதாகமம்தான் உண்மையானது என்பதை விளக்க வேறு எங்காவது இருந்து ஆதாரங்களை திரட்டியே ஆகவேண்டும்! அதன்மூலமே நாம் வேதாகமம் உண்மை என்பதை புரியவைக்க முடியும்
இதில் என்ன தவறு இருக்கிறது? விவிலியம் உண்மை என்று நிரூபிக்க அறியவில்கோட்பாடுகளை ஆதாரமாக காட்டுவது இல்லையா? அல்லது அகழ்வாராச்சிகளை ஆதாரமாக காட்டுவதில்லையா? அல்லது ரிக் வேதத்தில் இயேசுவின் பலி பற்றி எழுதியிருக்கிறது சுட்டிகாட்டி விளங்க வைப்பது இல்லையா?
இதில் என்ன குறையை கண்டார்? "மாக்கன்" "களியை கிண்டுகிறான்" "சோற்று பண்டாரம்" இதெல்லாம் ஒரு ஆவிக்குரிய (அவரை எல்லாம் ஆவிக்குரியவன் என்று சொல்ல வெட்கப்படுகிறேன்) கிறிஸ்த்தவன் எழுதும் வார்த்தைகளா"? வேதத்தை காப்பாற்றுவது இருக்கட்டும் முதலில் அவரை தற்காத்துகொள்ளுவது நல்லது.
எங்கள் தளம் எல்லா மதங்களை பற்றியும் விவாதிக்கும் எல்லாமத கருத்துக்களும் இங்கு பதியப்படும் "கொக்குக்கு ஒரே புத்தி அதுவும் கோணபுத்தி" என்ற நிலையில் இருக்கும் அறிவு ஜீவிகள் இங்கு தலையிட வேண்டாம். அவரவர் தளத்தில் கொட்டிவைத்து தாங்கள் யார் என்பதை உலகத்துக்கு வெளிப்படுத்துங்கள்.
இனி இத்தளத்தில் யாரையும் இழிந்து பதிவிடும் பதிவுகள் நீக்கப்படும்!
-- Edited by இறைநேசன் on Monday 23rd of August 2010 10:33:12 PM