இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவ ஊழியர்களை பிசாசு கடினமாக தாக்குவானா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
தேவ ஊழியர்களை பிசாசு கடினமாக தாக்குவானா?
Permalink  
 


"தேவ ஊழியர்களை பிசாசு கடினமாக தாக்குவான்" என்பது பரவலாக எல்லோராலும் நம்பப்படும் ஒரு கருத்தாக இருக்கிறது. 
 
அன்றிலிருந்து இன்றுவரை நாம் சரித்திரத்தை கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் அனேக தேவ மனிதர்கள் கொடூரமாக கொலை செய்யபட்டும்  கொடூர நோயினால் பீடிக்கப்பட்டும் மிக குறைந்த காலத்தில்  மரித்திருப்பதை  அறிய முடிகிறது.
 
தற்காலங்களில்கூட அநேகருக்கு மிகப்பெரிய அற்ப்புதங்களை செய்த   பல தேவ ஊழியர்கள் கடுமையான நோய்களினால் பாதிக்கப்பட்டு காப்பாற்ற முடியாமல் மரிக்கின்றனர்.
 
எனக்கு தெரிந்த தனிசபை வைத்து நடத்திய  ஒரு  ஊழியர் வாயில் கேன்சர் வந்து குறைந்த வயதில் மரித்துள்ளார். இன்னொரு நல்ல ஊழியக்கார சகோதரியின் கணவர் மிக குறைந்த வயதில் எந்த நோயும் இல்லாமல் திடீர் என்று மரித்து விட்டார். சகோதரி விதவையாக இருக்கிறார்கள்  மேலும் சில இன்றைய  பாஸ்டர்களுக்கு இல்லாத நோயே  இல்லை என்று சொல்லும் அளவுக்கு உடம்பெங்கிலும் நோய்கள்  மலிந்து கிடக்கிறது.
 
சாத்தானின் சாம்ராஜ்யத்தை உடைத்து தேவ ராஜ்யத்தை கட்டும் ஒரு ஊழியர் எப்பொழுதும் சாத்தானின் கவனத்தில் இருப்பதும் அவன் அவர்களை நெருக்குவதும் உண்மைதான்  என்கின்றபோதிலும்  உலகில் இருப்பவனைவிட நம்மில் இருக்கும் தேவன்  பெரியவர் அல்லவா?
 
பிறகு ஏன் இத்தனை சோதனைகள் துன்பங்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது?


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

தேவனின் கரத்தின் பாதுகாப்பின் கீழ் இருக்கும் யாரையுமே சாத்தானால் அவ்வளவு எளிதாக தாக்கிவிட முடியாது ஆகினும் ஊழியக்காரர்கள்  கொஞ்சம் அதிகமாகவே சாத்தானால்  தாக்கப்படுவதற்கு  இரண்டு முக்கிய காரண காரியங்களை என்னால்
கூற முடியும்!  
      
1. தாங்கள் போதித்த போதனையின்படி அவர்களே நடவாமை!
 
சாத்தானால் ஊழியர்கள் கடுமையாக தாக்கப்படுவதற்கு இதுஒரு முக்கிய காரணம் எனலாம்.
 
யாக்கோபு 3:1 என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக.

இந்த வார்த்தை வேதத்தில் எச்சரிப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது ஒருவன் போதனை செய்வானாகில் அவன் முதலில் அதன்படி நடக்க வேண்டும்.   இல்லையேல் அவரவர்களின் வார்த்தைகளே அவர்களை குற்றவாழியாக தீர்க்கும்  அதாவது தன்னை  தானே குற்றவாளியாக்கி கொள்கிறான்.
 
அன்பை பற்றி அதிகம் பேசுவார்கள் ஆனால் அவர்களிடமோ அன்பிருக்காது இரக்கத்தை பற்றி இரண்டு நாட்கள் போதிப்பார்கள் ஆனால் அவர்களிடமோ இரக்கம் இருக்காது. கொடுப்பது பற்றி குற்றம் கண்டுபிடித்து பேசுவார்கள் ஆனால அவர்களுக்கோ வாங்கத்தான் தெரியுமே தவிர  கொடுக்க தெரியாது.    
 
லூக்கா 4:23 : வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்
 
சாத்தான் சாதாரணமானவன் அல்ல உன்னுடைய வார்த்தைகள் ஓவ்வொன்றையும் பிடித்து தந்து  ரெக்கார்டரில் பதிவு செய்து வைத்திருப்பான் என்பதை மறக்க
வேண்டாம்.
 
ஒரு போதகராகிய  நீங்கள் கடினமான தண்டனையிலிருந்து தப்பிக்க வேண்டுமா?
ஓன்று  நீங்கள்  போதிப்பதுபோல உங்கள்  வாழ்க்கையில் நடங்க முயற்ச்சியுங்கள் அல்லது எப்படி நடக்கிரீர்களோ அதை மட்டும் போதியுங்கள்.
  
"இப்படியிருக்க வேண்டும்" அப்படியிருக்கவேண்டும் என்று அடுத்தவர்களுக்கு குற்றமனசாட்சியை தூண்டிவிட்டு, நீங்கள் சுலபமாக  விலகிவிடலாம், ஆனால் பிசாசு உங்களை விட்டு விலகமாட்டான்    
 
மத்தேயு 5:19   இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான் 
 
ஆண்டவரின் வார்த்தைகளை கைகொண்டு அதன்படிபோதிக்கிறவன் இம்மையிலும் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதோடு பரலோக ராஜ்யத்திலும் பெரியவன் எனப்படுவான்!


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

தேவ  ஊழியர்களை  சாத்தான்  அதிகம்  தாக்க  இரண்டாம்  காரணம்!  

2. தாங்கள் பெற்ற காணிக்கையை செலவு செய்யும் விதம்

தான் உழைத்து சாப்பிடும் ஒரு விசுவாசியை விட, பிறருடைய காணிக்கையில்/ உழைப்பில்  வாழ்க்கை நடத்தும் ஊழியர்கள் தாங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு காசுக்கும் ஆண்டவரிடம்  கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
 
முடிந்த அளவு ஆடம்பர வாழ்க்கை மற்றும் உலகத்தோடு ஒத்துபோகும் வாழ்க்கை
மற்றும்   தேவையற்ற செலவுகளை தவிர்த்து, பணத்தை தேவனுக்கு  பயனுள்ளதாக செலவு செய்ய வேண்டும். மேலும் தங்களுக்கு காணிக்கை வழங்கும் விசுவாசிகளுக்கு இடறல் ஏற்ப்படாதவாறு நடந்துகொள்ளவேண்டும் என தேவன் எதிர்பார்க்கிறார்.   
 
அதாவது உலகில் வேலைபார்த்து சம்பாதிக்கும் ஒருவன் தான் சம்பாதித்த பணத்தை தனக்கு  விருப்பமான  எந்த  வழியிலும் செலவு செய்ய முடியும். ஆனால் ஊழியக்கரர்கள் அப்படி செய்யமுடியாது.  தாங்கள் பெற்ற காணிக்கை மற்றும் அதற்க்கான செலவு வகைகள் பற்றி தேவனுக்கு சரியான  கணக்கு ஒப்புவிக்க வேண்டும். 
 
ஒரு விசுவாசி செய்யும் தவறு பொதுவாக  பெரியதாக எல்லோருக்கும் தெரியாது  ஆனால் ஒரு ஊழியர் செய்யும் தவறு அனேக விசுவாசிகளை பாதிப்பதால் அது பலர் இடற வழி செய்கிறது.   
 
இவ்விஷயங்களில் தேவன்  மிகவும் கண்டிப்பான தகப்பன் போல இருக்கிறார். அதனால்  ஊழியர்கள் தவறு செய்யும் போது  தண்டணையை பெற நேரிடுகிறது! 
 
நான் அறிந்த வரை தேவ ஊழியர்கள் சாதாரண விசுவாசிகளைவிட அதிகம் சோதனைகளை சந்திப்பதற்கு இவைகளே  காரணமேஅன்றி வேறொன்றும் இல்லை. ஆண்டவரின் அனுமதி இன்றி யாரும் நம் மேல் கை வைக்க முடியாது. அதுபோல் நம் மேல் குற்றம் இல்லாமல் ஆண்டவர்  யாரையும் நம்மை தொட அனுமதிப்பது இல்லை
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

தேவ ஊழியர்கள் அதிகம் சோதனைக்குள் நடத்தபடுவதர்க்கு இரண்டு முக்கிய 
காரணத்தை பார்த்தோம்.
 
ஆனால் இந்த இரண்டு காரணமும் இல்லாத உண்மையான பல தேவ ஊழியர்கள் கூட கடும்  நோயில் மரித்துள்ளனர்.
 
உதாரணமாக வெளிநாட்டில் இருந்து தங்கள் உயிரை பணயம் வைத்து இந்திய வந்து தங்கள் ஊழியத்தை செய்த பல தேவ ஊழியர்கள் இயேசுவுக்காக தங்கள் இன்னுயிரையே தியாகம் செய்த தேவ மனிதர்களில் பலர் குறைந்த வயதிலேயே
மரணத்தை தழுவியுள்ளனர்.
 
இவ்வாறு எந்த பணஆசையும் இல்லாத தங்கள் சொந்த சொத்தை விற்று ஊழியம் செய்து  தியாக வாழ்க்கை வாழ்ந்த ஊழியர்கள் கடும் நோயினால் பாதிக்கபட்டு மரணிக்க காரணம் என்ன?
 
தேவன் தன் ஊழியக்காரர்களை கடும் நோய்களில் இருந்து காக்க முடியாததாலா?

இல்லவே இல்லை! 

அதற்க்கான காரணத்தை பலர் நம்புவது கடினம் என்றாலும்  அடுத்து வரும் பதிவில் அதைப்பற்றி பார்ப்போம்.  
 


-- Edited by SUNDAR on Saturday 11th of September 2010 04:11:47 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard