மத்தேயு 7:3நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? மத்தேயு 7:5மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
இது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவின் அருமையான வார்த்தைகளில் ஓன்று. ஒருவர் பிறரது குறைகளையும் குற்றங்களையும் நோக்கும் முன், தன்மீதுள்ள குறைகளை அலசி ஆராய்ந்து தன்னை திருத்திக்கொள்வதே சிறந்தது! அவ்வாறு திருத்திக்கொள்ள நினைக்கிறவன் அவ்வளவு சீக்கிரம் பிறர் மீது குறைகாண தீவிரப்பட மாட்டான்!
பல விசுவாசிகள் மட்டுமல்ல சிலர் ஊழியக்காரர் என்ற நிலையில் இருந்துகொண்டு மற்ற தேவமனிதர்களின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளின் குற்றம் கண்டு பிடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். "ஒருவரையும் குற்றவாளிகள் என்று தீர்க்காதிருங்கள்" என்று வேதம் பல இடங்களில் சொல்வதால் அடுத்தவரை விமரிசிக்கும் ஒருவர் தன்னை ஒரு முறைக்கு பலமுறை ஆராய்ந்து கொள்வது நல்லது.
I கொரிந்தியர்2:15ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்
இவ்வார்த்தையின் அடிப்படையில் பார்த்தால் ஆவியில் நடத்தப்படும் எந்த ஒருவனையும் இன்னொருவனால் நிதானித்து அறிய முடியாது என்று வசனம் தெளிவாக சொல்கிறது! எனவே சகோதரர் எசேக்கியா பிரான்சிஸ் மட்டுமல்ல எந்த ஒரு ஆவிக்குரிய ஊழியர்களும் செய்வதில் எந்த ஒரு தவறும் சொல்ல நம்மால் கூடாது! அப்படியே ஒரு தவறு இருந்தாலும் அதை இன்னொருவரால் நிதானித்து அறியமுடியாது என்று வேதம் தெளிவாக சொல்கிறது.
ஒரு தேவமனிதர் ஒரு திட்டத்தையோ அல்லது ஒரு கூட்டத்தையோ அல்லது ஆண்டவர் சம்பந்தப்பட்ட காரியம் ஒன்றை செய்வதற்கு விளைவாராகில் அதற்க்கு ஆவியானவரின் தூண்டுதல் நிச்சயம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தன் சுய மேன்மைக்காக அல்லது பணம் சம்பாதிக்க்கும் நோக்குடன் ஒரு காரியத்தை தானே திட்டமிட்டு செய்வாராகில் அது நிச்சயம் தேவ தண்டனைக்குரியது ஆனால் அதை நம்போன்ற மனிதர்களால் நிதானித்து அறியமுடியாது என்பதே எனது கருத்து.
ஒருவேளை அது ஆவியானவரின் தூண்டுதலால் ஒரு ஊழியர் ஒரு திட்டத்தை நிறைவேற்றி செயல்படுத்தும்போழ் நாம் அவசரப்பட்டு அதை குறைகூறி தேவ கோபத்துக்கு ஆளாக நேரிடலாம்! எனவே முடிந்தவரை ஆவிக்குரியவர்களை குறை சொல்வதை தவிர்ப்பது நல்லது.
சில ஊழியர்கள் செய்வது மட்டும் வியாபாரம் என்று குறிப்பிட்டு தீர்மானித்தல் மற்ற ஊழியர்கள் செய்வது என்ன? இயேசுவின் பெயரை சொல்லி ஐந்து காசு சம்பாதித்தாலும் அது வியாபாரம்தான் ஆயிரம் ரூபாய் சம்பாதித்தாலும் அது வியாபாரம்தான். அதே வியாபாரத்தை நாமே செய்துகொண்டு அடுத்தவரை குறை கூற ஒருவருக்கு என்ன உரிமை இருக்கிறது. யார் பவுலைப்போல உண்ணவும் உடுக்கவும் உண்டாயிருந்தால் போதும் என்று வாழ்வது?
இங்கு பிற ஊழியர்மீது கோபம்வர முக்கிய காரணம் அவர் அதிகம் சம்பாதிக்கிறார் அவரிடம் அதிகமக்கள் போகிறார்கள் அதிக காணிக்கை அனுப்புகின்றனர் நம்மால் அதுபோல் வாழ முடியவில்லையே என்ற ஆழமான ஆதங்கம்தான் வேறுவிதமாக வெளிப்படுகிறதேயன்றி வேறொன்றும் காரணம் இல்லை என்றே நான் கருதுகிறேன்
பல விசுவாசிகள் மற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச தாழ்மைகூட இல்லை, எதையும் விட்டுக் கொடுக்கும் மனபக்குவம் கொஞ்சமும் இல்லை, மனிதர்களை மதிக்கும் அடிப்படை தன்மை இல்லை, வார்த்தைகளில் ஒரு வரைமுறை இல்லை வயதுக்குகூட மரியாதை கொடுப்பதில்லை இப்படி இருக்கும் சிலர் தங்களையும் தேவ ஊழியர்கள் என்றும் ஆவிக்குரியவர்கள் என்றும் சொல்லிக்கொண்டு கிறிஸ்த்துவின் அன்பையும் அவரது பெயரையும் கெடுத்துக்கொண்டு அலைகிறார்கள் அவர்களை விட புறமதத்தார் எவ்வளவோ மேல் என்றே நான் கருதுகிறேன்
புறஜாதி சமாரிய ஸ்திரிக்கு இயேசு முதலில் அவர்ளுக்கு அற்ப்புதம் செய்ய மறுத்தாலும் பிறகு அவளின் விசுவாசத்தை பார்த்து வியந்து அற்ப்புதம் செய்தார் ஆனால் ."ராஜ்யத்தின் புத்திரர்ரோ புறம்பான இருளில் தள்ளப்படுவார்கள்" என்று எச்சரித்தார்
ஒரு புரஜாதிக்காரனைவிட கேவலமாக நடதுகொண்டால் தேவன் யாரென்று பார்க்கமாடார்
உலகில்நடக்கும் அனைத்து செயல்களையும் ஒவ்வொருவருடைய இருதயங்களின் நிலையையும் ஆண்டவர் ஆராய்ந்து அறிந்துகொண்டு இருக்கிறார் அதற்க்கு தகுந்த பிரதிபலனை அவர் நிச்சயம் கொடுப்பார். இந்நிலையில் எங்கோ இருக்கும் ஊழியர்களை பொதுவான வலைத்தளத்தில் குற்றம் கண்டுபிடித்து எழுதி மொத்த கிறிஸ்த்தவத்தின் பெயரை கெடுத்துக்கொண்டு இருப்பது சகோதரரின் நிர்வாணத்தை வெளிச்சம்போட்டு காட்டி அதில் திருப்தியடையும் ஒரு நிலைக்கே சமம் என்றே நான் கருதுகிறேன்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நேற்று எனது அருகில் வந்து அமர்ந்த கம்பனி முதலாளி "உலகம் ரொம்பவும் மோசமாக போய்விட்டது ஸ்பெக்ட்ரம் ஊழலை குறித்து கேள்விப்பட்டீர்களா பல ஆயிரம்கோடி ஊழல் செய்துள்ளார்கள் இவர்கள் எல்லாம் மக்கள் பணத்தை தின்னுவிட்டு எப்படி நன்றாக வாழ்வார்கள்" என்பது போல பேசிக்கொண்டு இருந்தார்.
இவற்றை கேட்ட எனக்கு வெறுப்பாக இருந்தது காரணம் என்னவெனில் இவரும் பரம யோக்கியர் இல்லை. இறைவனைப்பற்றிய பயம் இருந்தாலும் அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டிய வரியை எப்படி
கொடுக்காமல் தவிர்ப்பது மற்றும் பிறருக்கு தெரியாத வழியில் பணங்களை சுருட்டுவது என்பதை செய்பவர் தான். இப்படி தன்னிடம் ஆயிரம் குறையை வைத்து கொண்டு அடுத்தவரை விமர்சிக்க அதிக ஆர்வம் காடுபவர்கள் அநேகர் இவ்வுலகில் உண்டு!
எனவே நான் அவரிடம் "ராசா மட்டுமல்ல இந்த உலகில் இன்று அவரவர் அவரவர் தகுத்திக்கு தகுந்தால்போல் கள்ளத்தனமும் ஏமாற்றுதல் வேலையும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர் பெரிய லெவலில் இருப்பதால் ஆளும் கட்சியின் உதவியுடன் பெரிய தொகையை சுருட்டி பங்கு போட்டுகொண்டார். மற்றவர்கள் எல்லோரும் என்ன பரம யோக்கியர்களா? தெருவில் தெரு பெருக்க கொடுக்கப்படும் துடைப்பானில் இருந்து பெரிய பெரிய கமிஸ்னர் பதவியில். இருப்பவர்வரை ஆவரவர் அவரவர் தகுதிக்கு தகுந்த திருட்டை செய்கின்றனர். எனவே அடுத்தவரின் கண்ணில் இருக்கும் துர்ம்பை பார்க்கும் முன் நாம் சுத்தமா? என்பதை மீண்டும் ஒருமுறை ஆராய்ந்து பார்ப்பதுதான் நல்லது.
பிறரை திருத்துவது கடினம்! ஆனால் அவரவர் திருந்துவது அவரவர் கையில் இருக்கிறது எனவே நம்மை நாம் நிச்சயம திருத்தி கொள்ள முடியும்.
உலகம் திருந்துவது என்பது பிறரை திருத்துவதும் பிறருக்கு உபதேசம் செய்வதும் அல்ல. முதலில் நாம் சரியாக திருந்தவேண்டும். நாம் செய்யும் தவறுகள் நமது கண்ணுக்கே தெரியாததோடு அது நமக்கு நியாயமாகவும் தெரியும்.
சரியாக திருந்தியவன் தன்னை தானே அதிகம் அதிகமாய் ஆராய்ந்து திருந்துவதோடு பிறரின் குற்றத்தை மன்னிப்பானேயன்றி அடுத்தவரு குறைகளை வெளிச்சம் போட்டுகொண்டு இருக்க மாட்டான் என்றே நான் கருதுகிறேன்.
"நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந் தீர்க்கப்படோம் " என்கிற எண்ணம் ஒவ்வொருவருக்கும் இருக்குமேயானால் நிச்சயமாக வரப்போகும் ஆக்கினைக்கு தப்பித்துக்கொள்வோம்.