பழய ஏற்பாட்டு கட்டளைப்படி, சாதாரணமான யாதொரு வேலையைகூட ஒய்வு நாளில் செய்யகூடாது. "ஓய்வு நாளில் நன்மை செய்வது நியாயம்தான்" என்றுகூட பழயஏற்பாட்டில் சொல்லப்படவில்லை செய்யவேண்டிய நன்மையை செய்ய மற்ற ஆறுநாட்கள் உண்டே அதில் செய்யவேண்டியதுதான்.
யாத்திராகமம் 20:10ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், ...... ........... அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து இக்கட்டளையை மாற்றி "ஒய்வுநாளில் நன்மை செய்வது நியாயம்தான்" என்று சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்ல பழைய ஏற்பாட்டின் பல கட்டளைகளை இயேசு மாற்றி போதித்திருக்கிறார். அவர் தேவனின் குமாரன், அவருக்கு மாற்ற நிச்சயம் அதிகாரம் உள்ளது. அதற்காக தேவன் தன்கட்டளையை மாற்றிவிட்டார் அது வலுவிழந்தது என்று பொருளாகாது. தேவனின்
அதே சமயம் இயேசு தேவனுடையகுமாரன் என்றும் அவர் தேவனுக்கு சமமானவர் என்று வேதம் சொல்வதால் அவர் சொன்னது செய்தது எதையுமே தவறு என்றுகூற யாருக்கும் அதிகாரமில்லை.
ஆகினும் இங்கு நாம் அறிந்துகொள்ளவேண்டிய காரியங்கள் சில இருக்கின்றன.
இயேசுவின் மாற்றப்பட்ட ஒரு கட்டளையை கையில் எடுத்து கொண்டு ஓய்வு நாளில் நன்மை செய்யலாம்/ வேலை செய்யலாம் தவறில்லை என்று கூறுபவர்கள் அவரின் மாற்றப்பட்ட மற்ற கட்டளைகளையும் சற்று நோக்க வேண்டும்.
உங்களுக்குண்டானவற்றையும் விற்று பிச்சை கொடுங்கள்
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை திருப்பி கொடுங்கள்
கேட்பவனுக்கு எவனுக்கு கொடுங்கள், கடன் வாங்குபவனுக்கு மனம் கோணாதீர்கள்
உங்கள் வீட்டில் விருந்துபண்ணும்போது ஏழை/ பிச்சை காரர்களை அழையுங்கள்
வஸ்திரத்தை கேட்டால் அங்கியையும் விட்டுவிடுங்கள்
உலகத்தில் பொக்கிசங்களை சேர்த்து வைக்காதீர்கள்
என்று சொன்னதோடு "தன் சிலுவையை எடுத்துகொண்டு என்னை பின்பற்றாதவன் எனக்கு பாத்திரன் அல்ல" என்றே சொல்லிவிட்டார். எனவே அவரது வார்த்தைகளை கைகொள்ளாமல் அவர் மாற்றிய கட்டளைகளை மட்டும் உரிதாக்கி கொள்பவன் அவருக்கு பாத்திரன் அல்ல என்பதை அறியவேண்டும். எனவே அவரின் வார்த்தைகளை எல்லாம் உங்கள் வாழ்வில் கைகொண்டு நடந்தால் ஒருவர் இயேசு செயல்பட்டதுபோல் ஓய்வுநாளை மீற அனுமதிக்கப்படலாம்!
அடுத்ததாக இயேசு எப்படி தேவனின் பல கட்டளைகளை மாற்றினாரோ அதுபோல் அதன் சம்பந்தப்பட்ட வாக்குதத்தையும மாற்றிவிட்டார் என்பதையும் நாம் அறியவேண்டும்.
பிரசங்கி 8:5கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்
இது பழய ஏற்பாட்டு கற்பனையை கைகொள்பவர்களுக்கு தேவனாகிய கர்த்தரால் அருளப்பட்ட வாக்குத்தத்தம். ஆனால் தேவ குமாரனாகிய இயேசுவால் மாற்றப்பட்ட புதியஏற்பாடு வாக்குதத்தாமோ:
யோவான் 16:33உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
"உலகத்தில் உபத்திரியம் உண்டு ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து மேலுள்ள விசுவாசம் ஒன்றின் மூலம் அதை மேற்கொள்ளவேண்டும்" என்பதுதான் புதிய ஏற்பாட்டு வாக்குத்தத்தம். தேவனின் கட்டளைகள் அடங்கிய பழைய ஏற்பாட்டு காலத்தில் சொல்லப்பட்ட ஒரு சிறு கற்பனையை மீறினாலும் உலகத்தில் உபத்திரியம் வரும் என்பதை அறிந்த இயேசு அந்த கட்டளைகளை சிலவற்றை மாற்றியதோடு வாக்குத்தத்தத்தையும் மாற்றிவிட்டார்.
இதில் எவ்விதத்திலும் தேவனின் வார்த்தைகளுக்கு பங்கம் வராதபடி எல்லா நீதியையும் அவர் சரியாக நிறைவேற்றினார். ஆனால் எதையுமே முழுமையாக கைகொண்டு நடக்க விரும்பாத எதன் வழியாக எஸ்கேப் ஆகலாம் என்று எதிர் பார்க்கும் மனிதர்களுக்குத்தான் அதை புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது.
வார்த்தைகளையும் அதன் வல்லமைகளையும் யாராலும் மாற்றவே முடியாது .
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)