எண்ணாகமம் 23:19பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?
என்று வேதம் நமக்கு போதித்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் ஆழமான மனம் திரும்புதலின் அடிப்படையில் மிகுந்த இரக்கம் உள்ள நம் தேவன் பல இடங்களில் தனது செய்கைகளை மனிதனின் செய்கைகளுக்கு ஏற்ப மாற்றி அமைத்திருக்கிறார் என்பதை அனேக வேத ஆதாரங்களின் மூலம் அறியமுடியும்.
இதற்க்கு ஆதாரமாக எசேக்கியா ராஜாவின் வரலாற்றை எடுத்து கொள்ளலாம். எசேக்கிய நோய்வாய்பட்டு மரிக்கும் தருவாயில் இருந்தபோது தேவன் ஏசாயா தீர்க்கதரிசி மூலம் இவ்வாறு சொல்கிறார்
ஏசாயா 38:1அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும், நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
இது கர்த்தரின் வார்த்தையே. அதை கேட்ட எசேக்கிய மிகவும் மற்றாடி தேவனை நோக்கி அழுகிறான்
2. அப்பொழுது எசேக்கியா தன்முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி: 3. ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான்.
அவனின் அழுகையோடு கூடிய ஜெபத்தை கேட்ட தேவன் உடனே மனமிரங்கி ஏசாயா மூலமே தனது வாக்கை மாற்றினார்
5. நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.
என்று கூறி தனது முதல் வாக்கை தானே மாற்றி வேறு வாக்கு கொடுத்து அதை நிறைவேற்றினார்.
இங்கு அழுகையோடு கூடிய ஜெயம் தேவனின் முடிவை மாற்ற கூடும் என்றும் அறிய முடிகிறது.
மேலும் இதைவிட மிக தெளிவாக ஒரு உதாரணம் இதோ:
கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்த்து தேசத்தில்இருந்து அழைத்து வரும்போது ஆரோனுக்கும் அவன் சந்ததிக்கும் நித்திய ஆசாரியபட்டத்தை வாக்கு பண்ணுகிறார்
யாத்திராகமம் 29:8பின்பு அவன் (ஆரோனின்) குமாரரைச் சேரப்பண்ணி, ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நித்திய கட்டளையாக இருக்கும்படி, அவர்களுக்கும் அங்கிகளை உடுத்துவாயாக
அனால் அந்த ஆசாரிய வம்சத்தில் வந்த ஆசாரியனாகிய ஏலியின் நாட்களில் அவனது இரண்டு குமாரர்கள் கர்த்தரை மதிக்காமல் பேலியாளின் மக்களாக இருந்ததால்
12. ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை.
கர்த்தர் அவர்களை அழித்தார் அப்பொழுது முன்பு ஆசாரியப்பட்டத்தை நித்திய உடன்படிக்கையாக வழங்கியஇஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். (I சாமுவேல் 2:30)௦
இவ்வாறு கர்த்தர் மிக தெளிவாக நான் மனிதர்களின் நடக்கைகளுக்கு தகுந்தால் போல் மனம் மாறுவேன் என்றும் சொல்கிறார் மேலும் அதை கீழ்கண்ட வசனத்தின் மூலம் உறுதி படுத்துகிறார்
எரேமியா 18:10 அவர்கள் என் சத்தத்தைக்கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், நானும் அவர்களுக்கு அருள்செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு மனம் மாறுவேன்.
இவ்வளவு தெளிவாக அவர் சொல்லும்போது தேவன் தன் திட்டத்தை மாற்றவே மாட்டார் என்று எதன் அடிப்படையில் சிலர் சொல்கிறார்கள் என்பது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது!
அதுபோல் நினிவே ஜனங்களையும் யோனா தரிசியையும் எடுத்து கொண்டால், மதில்மேல் பூனையாக கர்த்தரின் பார்வையில் அழிவை நோக்கி நினிவே ஜனங்கள் போய்கொண்டு இருந்தனர். யோனா தீர்க்கதரிசியின் எச்சரிப்பை கேட்டு மனம் திரும்பி உபவாசித்து ஜெபித்தபோது தேவன் அவர்களை அழிக்கவில்லை
யோனா 3 அதிகாரம்
10. அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.
நம் தேவன் மிகுந்த இரக்கம் உள்ளவர்
நம் தேவன் மிகுந்த இரக்கம் உள்ளவர்
2. நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடியசாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்
எவனொருவன் எந்த ஒரு கேடான இறுதி நிலையில் நின்றுகொண்டு அந்நேரம் மனம்திரும்பி ஆண்டவரிடம் வந்தாலும் கொஞ்சமும் வெறுப்பு காட்டாமல் அவனுடைய குற்றங்களை மன்னித்து அணைத்து ஏற்றுக்கொள்ள கூடியவர், அவனுக்குண்டான தண்டனையை குறைப்பவர் என்பதற்கு, காயீனின் அடையாளத்தில் இருந்து விபச்சார ஸ்திரியை இயேசு மன்னித்தது வரை பல உதாரணங்களை கூறமுடியும்.
இவை எல்லாம் எதை காட்டுகின்றன?
மனிதனின் ஆழமான மனமாறுதல் மற்றும் அழுகையுடன் கூடிய கீழ்படிதலுள்ள ஜெபத்துக்கு செவிகொடுத்து, தேவன் தனது செய்கைகளை மாற்றுகிறார் என்பதையே தெரிவிக்கின்றன!
-- Edited by SUNDAR on Wednesday 1st of September 2010 03:56:09 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
மேலேயுள்ள கட்டுரையின் அடிப்படையில் என்னென்ன காரியங்களினிமித்தம் தேவன் மனம் மாறுகிறார் அல்லது தன்னுடய நியமணத்தை மாற்றுகிறார் என்பதை இங்கு நாம் சற்று ஆராயலாம்!
1. தீமை செய்பவர்கள் மனம்திரும்பி நன்மை செய்தால் தேவன் அவர்களுக்கு செய்ய நினைத்த தீங்கை செய்யாமல் மனம் மாறுவார்!
எரேமியா 18:8நான் விரோதமாய் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்.
உதாரணம்: பாவம் செய்த நினிவே பட்டணத்தார் மனஸ்தாபபட்டு மனம்திரும்பிய போது அவர்களை அழிக்காமல் தேவன் மனம்மாறினார்.
10. அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.
2. அழுகையுடன் கூடிய மனதிரங்கிய விண்ணப்பத்துக்கும் கெஞ்சுதலுக்கும் செவிகொடுத்து தேவன் மனம் மாறுகிறார்
இதற்க்கு மேலேயுள்ள திரியில் சொல்லபட்ட எசேக்கியா ராஜாவின் சம்பவம் ஒரு உதாரணம் மேலும் மனாசே என்னும் யூதா ராஜாவின் கெஞ்சுதலுக்கு தேவன் மனம் இரங்கியதும் ஒரு உதாரணம்.
II இராஜாக்கள் 21:16 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்யும்படியாக, மனாசே யூதாவைப் பாவஞ்செய்யப்பண்ணின அந்தப் பாவமும் தவிர, அவன் எருசலேமை நாலு மூலைவரையும் இரத்தப்பழிகளால் நிரப்பத்தக்கதாய், குற்றமில்லாத இரத்தத்தையும் மிகுதியாகச் சிந்தினான
II நாளாகமம் 33:11 ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
II நாளாகமம் 33:13 அவரை நோக்கி, அவன் விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்; .
3. உத்தமன் ஒருவருக்கு தேவன் ஒரு நன்மையை வாக்கு பண்ணியிருக்க அவன் கடின மனம் கொண்டு பொல்லாததை செய்வானாகில் அவனுக்கு வாக்கு பண்ணிய நன்மையை செய்யாமல் மனம் மாறுவார்!
எரேமியா 18:10 அவர்கள் என் சத்தத்தைக்கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், நானும் அவர்களுக்கு அருள்செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு மனம் மாறுவேன்.
உதாரணம்: இஸ்ரவேல் தேசத்தாருக்கு அனேக நன்மைகளை வாக்கு பண்ணியிருந்தாலும் அவர்கள் செய்த தீமையிநிமித்தம் அவர்களை பாபிலோனுக்கு
சிறைகளாக கொண்டுபோனது.
இஸ்ரவேல் தேசத்தாருக்கு கானானை வாக்கு பண்ணியிருந்தாலும் அவர்களின் கீழ்படியாத தன்மையிநிமித்தம் தேவன் தன் உடன்படிக்கையை மாற்றி அவர்களை நாற்ப்பது வருடம் வனாந்திரத்தில் அலையவிட்டது.
சவுலுக்கு தேவன் ராஜ்யபாரத்தை வாக்கு பண்ணியிருந்தாலும் அவனது கீழ்படியமையிநிமித்தம் அதை பிடுங்கி தாவீதுக்கு கொடுத்தது!
4. பொதுவாக ஒரு நியமணத்தை தேவன் நியமித்திருந்தாலும் ஒரு குறிப்பிட்ட தனி மனுஷனின் நீதியினிமித்தம் அல்லது வேண்டுதலி நிமித்தம் அந்த நியமணத்தையே மாற்றக்கூடியவர்.
மோவாபியர் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது என்ற கட்டளை இருந்தும் மோவாபிய ஸ்திரியாகிய ரூத்த்தை இஸ்ரவேல் வம்ச அட்டவணையில் சேர்த்துகொண்டது.
யோசுவாவின் விண்ணப்பத்தை கேட்டு வானத்தின் நியமணமான சூரிய சந்திரனை தரித்து நிற்க வைத்தது!
பொதுவாக தேவன் ஒருமனுஷனின் செயல்பாடுகளின் அடிப்படையிலேயே அவனுக்கு நன்மையயோ அல்லது தீங்கையோ அனுமதிக்கிறார் என்பதை
நாம் இதன் மூலம் அறியமுடியும்!
வேறு ஏதாவது காரணத்துக்காக தேவன் தன்னுடய மனதை வார்த்தைகளை அல்லது நியமணத்தை மாற்றியிருக்கும் சம்பவம் வேதத்தில் இருக்குமானால் சகோதரர்கள் பதிவிடவும்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)