இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவ ஊழியர்களை /ஆவிக்குரியவர்களை குறைகூறுதல்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
தேவ ஊழியர்களை /ஆவிக்குரியவர்களை குறைகூறுதல்!
Permalink  
 


கொஞ்ச நாட்களுக்கு முன்னர் ஒரு ஒரு பெரிய  சபையின் பக்கத்தில்  உள்ள பஸ் ஸ்டாப்பில் ஒரு பெரியவர் (சுமார் 60௦ வயது இருக்கும்)  நின்று கொண்டு  வேத புத்தகத்தை திறந்து வைத்துகொண்டு வருவோர் போவோர் பஸ்சுக்குள் அமர்திருப்போர் எல்லோரிடமும் ஆண்டவரைப்பற்றி ஏதேதோ வார்த்தைகளை பயித்தியம் போல உளறி கொட்டிக்கொண்டு இருப்பதை பார்க்க முடிந்தது. அவர் மனநலம் சரியில்லாதவராக இருந்தார்.
 
வேத புத்தகத்தை கையில் வைத்து தெருவின் நின்று பயித்தியம் போல ஓடி ஓடி ஒவ்வொரு பஸ்ஸாக உள்ளிருப்போரிடம் எல்லாம் கையை நீட்டி பேசிக்கொண்டு அலைந்த அவரை பார்க்க எனக்கு மிகுந்த பரிதாபமாக இருந்தது.
 
"வேத புத்தகத்தை கையில் வைத்திருக்கும் ஒருவரை ஆண்டவர் இவ்வாறு பயித்தியமாக அனுமதிக்க மாட்டாரே"  இதற்க்கு காரணம் என்ன என்று ஆராய்ந்த போதும் என்னை சுற்றி நடக்கும் சில சம்பவங்களை உற்று நோக்கிய போதும் நான் பல உண்மைகளை அறிந்துகொண்டேன்.
 
ஒருவர் தேவனை தவிர வேறு எதை  அதிக நோக்கத்தோடும்  வாஞ்சையோடு வைராக்கியத்தோடும்  நம்புகிறாரோ அல்லது தேடுகிறாரோ  அதுவே அவருக்கு ஒரு பிசாசாக மாறிவிடுகிறது என்பதுதான் அந்த உண்மை. அதாவது ஒருவர்  போகிற போக்கிலேயே தானும் கூடவே பொய்  அவர்களை அதே வழியில்  பிடிப்பதுதான் பிசாசின் சுலபமான தந்திரம்!
 
இவ்வாறு இன்று கிறிஸ்த்தவ  உலகத்தில் நடமாடும் அனேக பேய்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்!
 
பண பேய்கள்!
பேய்களில் முதலிடம் பிடிப்பது பண பேய்களே! தேவனை விட்டு மனிதனை பிரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது இதுதான். மேலும் தேவனை அறிந்துகொண்ட வர்களையும் தேவ ஊழியர்களையும் மிகசுலபமாக வஞ்சகமாக கவிழ்த்துபோடுவது இந்த பேய்தான். தன்னை பணபேய் தாக்கி இருக்கிறதா என்பதை ஒருவர் அறிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. காரணம் அது தன்னை மிக நியாயமானதாகவே பிறருக்கு காட்டிகொள்ளும்.  இயேசுவுடன் வேதவசனத்தை சொல்லியே சோதித்தது போல,  தனக்கு  சாதகமான சிலவசனங்களை வேதத்தில் இருந்து பொருக்கி எடுத்து கொள்ளும் உதாரணம் "பணம் எல்லாவற்றுக்கும் உதவும்" என்பது போன்றவை. பணம் எல்லாவற்றுக்கும் உதவுவது உண்மைதான் ஆனால் அது நம்மை பாதாளம் கொண்டுபோய்விடவும் உதவும் என்பதை மறந்துவிட கூடாது.
 
பண பேய்களை சுலபமாக அறிந்துகொள்ள சில வழிகள்!
 
1. ஏதாவது ஒரு காரியத்தை சொல்லி பிறரிடம் இருந்து பணம் பிடுங்குவதிலேயே நோக்கமாக இருக்கும் அதற்க்கான புது வழிகளை தேடுவதில் அதிக கவனம் செலுத்தும்.

2. கையில் இருக்கும் பணத்தை தனக்கு எவ்வாறு பயன்படுத்தலாம், எங்கு பத்திரப் படுத்தலாம்  என்பதைப்பற்றி அனேக நேரம்  யோசிக்கும்.

3. தனது  எதிர்கால வாழ்வுக்கு என்ன செய்வது எங்கு சேர்த்து வைப்பது தான் பிள்ளைகளுக்கு என்ன சேர்த்து வைப்பது  யாருக்கு எந்த சொத்தைகொடுப்பது என்பது பற்றி அடிக்கடி யோசிக்கும். 

4. ருசி கண்ட பூனை கருவாடு இருக்கும் இடத்தை சுற்றி சுற்றி வருவதுபோல யார் ஒருவர் பணம் அதிகம் கொடுக்கிறாரோ அவரை விடாமல் சுற்றி சுற்றி வரும்.

5. தனது தேவைகளை அதிகம் பெருக்கிகொள்ளும் அதற்க்கு தகுந்தால்போல் வருமானம் வருவதற்கு இன்னும் புது புது ஆட்களை தேடும்.

6. இரண்டு முறை விசிட் அடித்தபிறகும் பணம் ஏதும் தேறவில்லை
என்றால் அங்கு ஜெபிக்க போவதை நிறுத்திவிடும்.

7. பிறரிடம் வாங்குவதில் அதிக அக்கறை காட்டும் இவைகள் இவ்வாறு ஓசியாக வந்த பணத்தை   பிறருக்கு கொடுப்பதில்  அதிக கஞ்சத்தனம் காட்டும் (அதாவது கொடுக்கவே கொடுக்காது)

8. பணத்தை பெறுவதிலேயே கவனமாக இருக்கும் இவைகள் எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும்  ஜெபிக்கும்போது ஒரு பாரத்தோடு அல்லது கண்ணீரோடு ஜெபிபது இல்லை.            

9.I தீமோத்தேயு 6:8 உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம். என்ற வசனத்தை மாற்றி, உண்ணவும் உடுக்கவும் வீடு வாங்கவும், பைக் வாங்கவும்,  கார் வாங்கவும்,  பிள்ளைகளை உயர்ந்த பள்ளிகளில்   ஆங்கில மீடியத்தில் படிக்க வைக்கவும்,  சர்ச் கட்டவும், மேலும் அதற்க்கு இடம் வாங்கவும் போதும் என்றிருப்பதில் தவறல்ல என்று காரியங்களை செய்யும்.  
 
10. தான் விசிட் அடிக்கும் வீடுகளில் இன்னொருவர் ஜெபிக்க வந்துவிட்டால் போதும் இவர்களுக்கு பற்றிக்கொண்டு வரும். இரண்டு பெரும் ஒரே நேரத்தில் அமர்ந்து திறந்த மனதோடு பேசுவது கிடையாது.  
 
11. கஷ்டப்பட்ட ஒருவர் முன்னாள் வந்தால் கண்ணே தெரியாது ஒரு விஷ் பண்ணினால் கூட கண்டுகொள்ளாது.   காரில் இருங்கி வருபவர் மற்றும் வெளி நாட்டுகாரர் போன்றவர்ககளை பார்ப்பதற்கு  கண் நன்றாக தெரியும்.    

மேல்கண்ட காரியங்களை எல்லாமே தேவனின் காரியங்கள் என்ற போர்வைக் குள்ளே மறைந்தேகொண்டு  செய்வதால் வெளித் தோற்றத்துக்கு சீக்கிரம் இவர்கள் தெரிய வருவது இல்லை!
 
கையில் இருக்கும் பணத்தை பிறர்  கஸ்டநேரத்துக்கு கொடுத்துஉதவ விரும்பாமல் பொத்தி வைக்கும்  எல்லோருமே இவ்வகைதான்
 
இதுவே பணபேய்கள்!  இன்று உலகில் பெருத்துவிட்ட பேய்கள்


-- Edited by SUNDAR on Tuesday 7th of September 2010 04:20:26 PM

-- Edited by SUNDAR on Friday 10th of September 2010 12:21:27 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
சில வகை பிசாசுகளின் செயல்பாடுகள்!
Permalink  
 


மேலேயுள்ள பதிவில் அனேககாரியங்கள் நான் நடைமுறையில் அனுபவித்து
கேட்டு அறிந்தவைகளின் அடிப்படையிலேயே பதிவிட்டேன். மேலும் யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு எழுதாமல் பொதுவாகவே எழுதினேன். விசுவாசிகளும் ஊழியர்களும் மனிதனை நோக்கி பார்ப்பதை தவிர்த்து விசுவாசத்தினிமித்தம் தேவனையே நோக்கி பார்த்து வாழ பழகவேண்டும் என்பதே இப்பதிவின் முக்கிய நோக்கம்

ஆகினும் இப்பதிவு குறித்து ஆவியானவர் நேற்றே என்னோடு இடைபட்டு மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனேக காரியங்கள் பிசாசிநிமித்தம் உருவானவைகளே என்பதில் எந்த தவறுமில்லை, ஆகினும் இவ்வாறு ஊழியக்காரர்கள் விசுவாசிகளின் குறைகளை வெளிச்சம் போடுவது உன்னுடைய வேலை அல்ல அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறிவிட்டார்.

எனவே உடனடியாக இந்த பதிவை நீக்கிவிடலாம் என்றுதான் கருதினேன். ஆகினும் ஆவியானவரின் சில விளக்கங்களை இங்கு பதிவிடுதல் பலருக்கு பயன்படும் என்று கருதுவதால் இந்த பதிவை நீக்கவில்லை.

இந்த பதிவை குறித்து ஆவியானவர் கொடுத்த சில விளக்கங்களை விரைவில் தருகிறேன்

-- Edited by SUNDAR on Tuesday 7th of September 2010 04:21:20 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

ஆண்டவரின்  கடிந்து கொள்தலில் அறிந்துகொண்ட  சில காரியங்கள்!
 
உண்மையாக  ஆத்துமாகளின் மேலுள்ள பரிதபிப்பில்  ஆண்டவருக்காக   ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தும்  பணியில் ஈடுபடும் ஒருவர், மேலே பட்டியலிடப்பட்ட  ஓரிரு  செயலை செய்தாலும் அதில்   குற்றம்   கண்டு பிடிக்கப்படமாட்டாது.  ஏனெனில்   அழிவுக்கு நேரான  ஒரு ஆத்துமாவை ஆதாயப்படுத்தற்கு முன்னால்  இந்த உலகவேலைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை
 
உலக வேலையில ஈடுபட்டு பிறமனிதர்களுக்கு ஊழியம் செய்து சம்பாதிக்கும் என் போன்றவர்களை விட, உண்மையாக  தேவனுடைய ராஜ்ஜியம் கட்டப்படவேண்டும் என்ற உண்மை  வாஞ்சையில்  உலக வேலையை உதறி தள்ளிவிட்டு  ஊழியம் செய்பவர்கள்,  பிறரது காணிக்கையில்  வாழ்வதில் எந்த தவறும் இல்லை
 
I கொரிந்தியர் 9:14 அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.

மனிதர்களுக்கு ஊழியம் செய்யம் ஒருவர் தேவனுக்கு ஊழியம் செய்யும்  ஒருவரை குறைகூற எவ்விதத்திலும்  தகுதியற்றவர். அவர்களுக்காக கொடுக்கும் ஒவ்வொரு காசுக்கும் நிச்சயம் அதற்க்கான பலன் நமக்கு கிடைக்கும் 
 
மத்தேயு 10:42 சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்  
 
நான் பார்க்கும் இந்த  உலக வேலைக்கே  என் முதலாளியாகிய மனுஷனிடம் இருந்து எனது வாழ்க்கைக்கு  தேவையான  பணம் பெறும்போது,  தேவாதி தேவன் தனது ஊழியக்காரர்களுக்கு எவ்விதத்திலாவது தேவையான பணத்தை கொடுக்க போதுமானவர்.
 
மேலே சொல்லப்பட்ட குறைகள் உள்ள ஒரு  ஊழியரிடமோ விசுவாசியிடமோ தெரியுமாகின் உனக்கு அவர்களுக்கு பணம் கொடுத்தால் அதை தேவனுக்கு கொடுப்பதாக நினைத்து கொடுக்க வேண்டும்,  கொடுக்க விருப்பம் இல்லை என்றால் எந்த குறையும் கூறாமல் விலகிவிடுவதே நல்லது. தானும் ஊழியங்களுக்கு பணம் கொடுக்காமல் கொடுப்பவர்களையும் இடற செய்வது மிகுந்த பாவத்தையும் தண்டனையையும் கொண்டுவரும்
 
நான் அல்லது நீங்கள்   கொடுக்கவில்லை என்றால் எந்த உழியக்காரர்களும் தாங்க ஆளில்லாமல் தவிக்க போவது இல்லை ஏதாவது கல்லைக்கொண்டாவது காகத்தை
கொண்டாவது கூட  அவர்களுக்கு  தேவையானதை கொடுத்து அவர்களை பாதுகாக்க தேவனுக்கு  தெரியும்.
          
பணத்தின்மேல் ஆசைகொண்டு விசுவாசத்தைவிட்டு விலகி போவது தான் பாவம்! மற்ற எல்லா காரியங்களுக்கும் தண்டிப்பதோ அல்லது அதை அனுமதிப்பதோ தேவனின்  விருப்பம்.  அவர்களை குறைகூற நமக்கு அனுமதி இல்லை.
 
பொதுவாக தேவன் தனது ஊழியக்காரர்கள் மேல் வைராக்கியம் உள்ளவராக இருக்கிறார். அவர்களை தண்டிப்பது தட்டிகொடுப்பதும் தேவனின் விருப்பம் இங்கு நாம் தலையிட்டு குறைகூறுவது ஏற்றதல்ல!
 
ரோமர் 14:4 மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே

உலகத்துக்கடுத்த அலுவல்களில்  மாட்டிகொண்டு  சம்பாதித்து உண்பவன், தான் தேவ ஊழியக்காரரை விட உயர்ந்தவன் எற்று எவ்விதத்திலும் மார்தட்டவேண்டாம்!
 
ஏசாயா 66:14   கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரமும், அவருடைய சத்துருக்களிடத்தில் அவருடைய சினமும் அறியப்படும்


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: தேவ ஊழியர்களை /ஆவிக்குரியவர்களை குறைகூறுதல்!
Permalink  
 


எனது இந்த பதிவிற்கு நமது அன்பு சகோதரர் அற்ப்புதம் அவர்களின் பின்னூட்டம்
 
/////சகோ.சுந்தர் இங்கு சொல்லியிருக்கும் பல கருத்துக்களோடு எனக்கும் உடன்பாடு உண்டு. சகோ.சுந்தர் ஆரம்ப நாட்களில் எழுதின சில பதிவுகளால் அவர்கள் பதிவைப் பற்றிய ஒரு மனப்பான்மை எனக்கும் இருந்து வந்தது. பல வேளைகளில் அவர்கள் சில நல்ல பதிவுகளை எழுதினாலும் அவர்களின் ஆ!!! ரம்ப பதிவுகள் பலருக்கும் முரணாகவே பட்டது. சகோ.சுந்தர் அவர்களின் அனுபவங்களை குறித்து பேசாமல் தேவனுடைய வார்த்தையைக் குறித்து மாத்திரம் பேசினால் இன்னமும் பிரயோஜனமாக இருக்கும் என்று கருதுகிறேன். இது எனது தனிப்பட்ட கருத்து. ஊழியர்கள் குறித்து சகோ சுந்தர் கூறியிருக்கும் கருத்து முழுவது தவறானதாகும்.
 
SundarP Wrote on 09-09-2010 18:32:28:
குணாதிசயங்கள் என்னென்ன?
புதிய ஏற்பாட்டின் முக்கிய நிலை "ஆவியில் நடத்தப்படுதல்" எனவே ஆவிக்குரியவர்களை ஒருவரும அவ்வளவு சீக்கிரம் நிதானித்து அறிய முடியாது. எனவே தேவ ஊழியர்களின் குணாதிசயங்களை நம்மால் வரையறுக்க முடியாது என்றே நான் கருதுகிறேன்

ஏனெனில் ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான் என்று வசனம் சொல்லுகிறது. மேலும் ஒரு ஊழியக்காரன் எவ்வாறு இருக்கவேண்டும் என்று தெளிவாக தீமோத்தேயுவுக்கு எழுதப்பட்ட நிருபத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படியே ஒரு ஊழியக்காரன் இருக்கவேண்டும். கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் குணாதிசயம் விளங்கும்படிக்கு வாழ்வேண்டும். அவருடைய திவ்விய சுபாவத்துக்கு பங்குள்ளவர்களாகும்படிக்கு நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்./////

தாங்களின் கருத்துகளுக்கு மிக்கநன்றி. ஆரம்பநாட்களில் நான் இருந்த நிலையில் இருந்து  இப்பொழுது நிச்சயம் அதிகம் மாறிவிட்டேன். "விவாதங்கள் என்ற பெயரால் ஒருவர் மாற்றி ஒருவர் தங்கள் கருத்துக்களை திணிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதைவிட சொல்லப்பட்ட வார்த்தைகளை கைகொண்டு நடப்பதில் அதிகம் கவனம் காட்டுவதே மேல்" என்பதை அறிந்துகொண்டேன். ஏனெனில் தேவனுடைய ராஜ்ஜியம் பேச்சில் அல்ல பலத்தில் இருக்கிறது  எனவே எனது எழுத்துக்களில் நிச்சயம் பல  மாற்றங்கள்  இருக்கும் என்றே கருதுகிறேன். 
 
மேலும் நான் எழுதுவது மற்றும் ஆண்டவரை பற்றி  எந்த ஒரு சகோதரர்களிடம் பேசுவது எல்லாம் சொந்த  அனுபவத்தின் அடிப்படையில்தான் இருக்கும். நான் இரட்சிப்பை பெற்றது  இன்றுவரை தொடர்வது  எல்லாமே எனது சொந்த அனுபவ அடிப்படையில்தான். ஆவியானவரின் வெளிப்படுத்துதல் அனுபவம் இல்லாமல் நான் யார் சொல்வதையும் அப்படியே ஏற்ப்பது இல்லை. ஏனெனில்  "மனிதர்கள் எல்லோரும் பொய்யர்கள்" "தேவன் ஒருவரே நீதிபரர்" என்று வேதம் சொல்கிறதே!      
 
அனுபவம் இல்லாமல் வெறும் வார்த்தைகளையும் அடுத்தவர் சொல்லும்  விளக்கங்களை மட்டும் வைத்துகொண்டு உண்மையை சரியாக அறியமுடியாது என்பது எனது கருத்து. இருபுறமும்  கருக்குள்ள பட்டயமாகிய வேத வசனங்களில் அனேக வசனங்கள் இரண்டுபுறமும் பதில் சொல்லும்  அதன் உண்மை நிலையை, நமக்கு போதித்து உணர்த்த நம்முள் தங்கியிருக்கும்  ஆவியானவரிடம் பெரும் அனுபவமே விளக்கவைக்க முடியும் என்றே நான் கருதுகிறேன் ஆகினும் தாங்களின் கருத்தை ஏற்று எனது சொந்த அனுபவங்களை இங்கு  பதிவதை நிச்சயம்  விட்டுவிடுகிறேன்.
 
இப்பொழுது முக்கியமாக ஒரு வசனத்துக்கு தாங்களின் விளக்கம் தேவை!
 
அதாவது நான் எந்த வசனத்தின் அடிப்படையில் ஆவியில் நடத்தப்படுபவனை ஒருவரும் நிதானித்து அறிய முடியாது என்று குறிப்பிட்டேனோ அதே வசனத்தை மேற்கோள் காட்டி தாங்கள்  ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் நிதானித்து அறிகிறான் என்று விளக்கியுள்ளீர்கள். 
 
I கொரிந்தியர் 2:15 ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.

இந்த  வசனத்தை திரும்பவும் ஆராய்ந்தபோது இரண்டு காரியங்களை அறிய முடிகிறது  
   
1. ஆவிக்குரியவன் எல்லாவற்றயும் நிதானிக்கிறான்.
2. ஆனாலும் அவன் மற்றொருவரால் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
 
இந்த வசனம் சொல்லும் இரண்டு கருத்துக்களும் நேர் எதிரான கருத்துக்கள்.
 
நான் இரண்டாம் கருத்தின் அடிப்படையில் "ஆவிக்குரியவர்களை இன்னொருவர் நிதானித்து அவரது குணாதிசயங்களை செய்கைகளை  அறிய முடியாது" என்று எழுதியுள்ளேன். அதே வசனத்தின் முதல் பகுதியை நீங்கள தெரிந்துகொண்டு "ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் நிதானித்து அறிகிறான்" என்று விளக்கி எனது கருத்து தவறு என்று விளக்கியுள்ளீர்கள்.
 
நீங்கள் வசனத்தை ஆராய்ந்து அதன் அடிப்படையில் பதிவிட்டுள்ளீர்கள் நான் ஆவியானவருடன் கூடிய எனது அனுபவத்தின் அடிப்படையில் பதிவிட்டுள்ளேன். 
 
இதில் யாருடைய கருத்து சரியானது?
 
இந்த கேள்விக்கு பதிலை அறிந்தால் எனது கருத்து தவறாக இருக்குமாயின் எனது அனுபவம்பற்றி பொதுவான இடங்களில் பதிவிடுவதையே நான் நிறுத்திவிடுகிறேன்.
சிலர் குறிப்பிடுவதுபோல் எநது அனுபவங்கள் தவறாக இருக்குமோ? என்ற உண்மையை அறிந்துகொள்ளவே இதை  கேட்கிறேன் தயவுசெய்து விளக்கவும்.
 
மற்றபடி ஊழியக்காரர்கள் எப்படி இருக்கவேண்டும் வாழவேண்டும் என்று தாங்கள் விளக்கியுள்ள காரியங்களில் நிச்சயம் எனக்கு மாற்று கருத்து இல்லை. மனுஷ  குமாரனாகிய இயேசுவே  ஊழியம் கொள்ள வராதபோது, அவரது பணியை செய்யும் ஊழியக்காரர்கள் பிறரது கால்களை  கழுவும் அளவுக்கு தங்களை தாழ்த்தி  அவரை பின்பற்ற வேண்டியது நிச்சயம் அல்லவா?


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

இந்த திரி இன்னும் முடிவு பெறாமல் இருப்பதால் எனது  கருத்துக்கான அடிப்படை புரிதலை இங்கு விளக்கிவிடுவது நல்லது என்று கருதுகிறேன்.   
  
I கொரிந்தியர் 2:15 ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
 
இவ்வசனத்தின் இரண்டு பகுதிகள்:
   
1. ஆவிக்குரியவன் எல்லாவற்றையும்யும் நிதானிக்கிறான்.
2. ஆனாலும் அவன் மற்றொருவரால் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
 
இங்கு எழும் கேள்வி:
 
எல்லாவற்றையும் நிதானித்தரியும் ஆவிக்குரியவனால் ("மற்றொருவனாலும்  நிதானிக்க முடியாது" என்று வசனம் சொல்லும்) இன்னொரு ஆவிக்குரியவனை நிதானிக்க முடியுமா?
 
அல்லது
 
மற்றோருவாராலும் நிதானித்து அறிய முடியாத ஆவிக்குரியவனை எல்லாவற்றையும் நிதானித்து அறியும் ஆவிக்குரியவன் நிதானிக்க முடியுமா?
     
இங்கு வசனம் மிகத்தெளிவாக சொல்கிறது
 
ஆவிக்குரியவனால்  எல்லாவற்றையும் ( all things - எல்லா காரியங்களையும் எல்லோரையும் அல்ல) நிதானித்து அறியமுடியும்.ஆனால் அந்த ஆவிக்குரியவனை  மற்றோருவனால்லும் ( no one. இன்னொரு ஆவிக்குரியவனாக இருந்தாலும் நிதானித்து அறிய முடியாது என்பதுதான் இதன்பொருள் என்று நான் கருதுகிறேன்.
 
இதன் தொடர்ச்சியாக வேத அடிப்படையில் ஒரு உதாரணமும் நடைமுறை உதாரணம் ஒன்றும் பார்க்கலாம்!
 
நடைமுறை உதாரணம்.
 
சகோ. எசேக்கிய பிரான்சிஸ் அவர்களின் ஆவி அபிஷேக திட்டத்துக்கு  கட்டணம் நியமித்ததை எடுத்துகொள்ளலாம்.
 
ஆவிக்குரிய மனிதனாகிய அவர் அந்த திட்டத்துக்கு செலவாகும்  கால அளவு / செலவாகும் தொகை மற்றும் உணவு இருப்பிடம் தொடர்ந்து அதனால் எதிர் காலத்தில் பெருகப்போகும்  கர்த்தரின் சேனைகள் மற்றும் உழியர்கள்,  சொல்லப்பட போகும் சுவிஷேகம் போன்ற அனைத்தையும் ஆவியில் நிதானித்து அறிந்து ஒரு திட்டத்தை வெளியிடுகிறார்.
 
அவரது திட்டத்தின் அனைத்து காரியங்களையும் முழுமையாக அறியாத நம் போன்றவர்களால் அவரை வசனம் சொல்வதுபோல் நிதானித்து அறியமுடியாது!. அவ்வாறு இருக்கையில் அவரை அவரது திட்டத்தை குறைசொல்வது வசனத்தின் அடிப்படையில் ஏற்றதா?  
 
வேத அடிப்படையில் உதாரணம்!
 
ஆவிக்குரியவராகிய பவுல் எழுதிய அனேக காரியங்களை ஆவிக்குரிய அப்போஸ்த்தலனான பேதுருவாலேயே  அறிவதற்கு அரிதாகவும் நிதானிக்க முடியாததாகவும் இருந்தது!  ஆகினும் அதை குறை எதுவும் கூறாமல்  மற்றும் தவறாக எதுவும் விமர்சிக்காமல்  கீழ்கண்டவாறு கூறுகிறார்.
  
II பேதுரு 3:16 எல்லா நிருபங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது
 
ஒருவருடைய அனுபவமோ அல்லது ஒருவருக்குள்ள வெளிப்பாடோ இன்னொரு வருக்கு இல்லை என்றால் உடனே அவரை தவறாக விமர்சிப்பது ஏற்றதல்ல என்பது எனது கருத்து.  ஆண்டவரின் நாமத்துக்கு பங்கம் வராமல் அவரின் ஏவுதலின் அடிப்படையில்  ஒருவர் செய்யும் எவ்வித காரியமும் தவறல்ல, அதனால் ஏற்ப்படபோகும் நன்மை தீமைகளை நிதானிக்க நமக்கு போதிய ஞானம் இல்லை என்றே நான் கருதுகிறேன். 
 
எவ்வாறேனும் ஆண்டவரின் நாமம் மகிமைப்பட வேண்டும்!   அதுவே எல்லோரின் எதிர்பார்ப்பும்.
 
(சமீபத்தில் வலைத்தளத்தில் உள்ள கருத்துக்களை படித்து  ஒரு அருமை  இந்து சகோதரர் தன் நண்பர்களுடன் என்னை சந்திக்க வந்தார். அவரிடம் நான்  "நீங்கள் முதலில் இயேசுவை சொந்த ரட்சகராக ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று கூறினேன். அதற்க்கு அவர் வலைத்தளம் முழுவதும் உங்களுக்குள்ளேயே வாக்கு வாதமும் ஒருவரை குறைத்து ஒருவரும், ஒருவரின் திட்டத்தை இன்னொருவர் விமர்சித்தும் ஒருவர் அனுபவத்தை இன்னொருவர் பரிச்கசித்தும் பதிவுகளை இட்டுக்கொண்டு இருக்கும்போது, யாரிடம் என்போன்றவர்கள் உண்மையை அறிவது?    முதலில் நீங்கள் ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று பதில் தந்தார்   
 
அந்த அன்பருக்கு  ஒராவ்ளவு சரியான பதில் எழுதி அனுப்பிவிட்டாலும், நாம்   முடிந்த அளவு சக ச்கோதரர்களையும்  அவர்களது திட்டம் மற்றும் போதனைகளை அனைத்துமத அன்பர்களும் வந்துபோகும் பொதுவான தளங்களில் தனிப்பட்ட முறையில்  விமர்சிப்பதை தவிர்க்கலாம் என்பது எனது  கருத்து. பொதுவான கட்டுரைகள் மூலம் புரிய வைக்க முயற்சிப்பதே நல்லது என்று கருதுகிறேன்  
 
(இல்லை எனக்கு அந்த தகுதி இருக்கிறது தேவையான ஆதாரம் இருக்கிறது
என்று ஒருவர் கருதுவாராகில் அதில் நான் தலையிட
விரும்பவில்லை)
 
நன்றி!  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
தேவ ஊழியர்களை /ஆவிக்குரியவர்களை குறைகூறுதல்!
Permalink  
 


அனுபவத்தோடு கூடிய புரிதலுக்கும் அனுபவமற்ற எழுத்தின் பிரகாரமான
புரிதலுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை ஒரு சிறு உதாரணம் மூலம் விளக்க விரும்புகிறேன்.
 
"சுவிட்சை போட்டால் லைட் எரியும்"  என்பது சரியான வார்த்தை. இதில் எந்த குழப்பமும் இல்லை.  இதை யாரும் மறுக்க முடியாது. நானும் நாலு முறை  சுவிட்சை போட்டு பார்த்தேன் லைட் சரியாக எரிந்தது. எனவே இதில் எந்த குழப்பமும் இல்லை என்று விட்டுவிட்டேன் . ஆனால் ஒருநாள் நான்  சுவிட்சை போட்ட போது லைட் எரியவில்லை. அப்பொழுது எனக்கு முதல் முதலில்  குழப்பம் வந்தது.  ஏன் இந்த லைட் சுவிட்சை போட்டும் எரியவில்லை என்று குழம்பிபோன நான் இறுதியில் பவர் இல்லை என்பதை அறிந்து பவர் வந்தால்தான் சுவிட்ச் போட்டதும் லைட் எரியும் என்பதையும் அடுத்ததுடுத்து வந்த அனுபவத்தில் அந்த பவர் எங்கே இருந்து எவ்வாறு வருகிறது போன்ற பல உண்மைகளை அறிந்து கொண்டேன். 
 
சுவிட்சை போட்டு பார்க்காத அனுபவம் உள்ளவர்கள் "சுவிட்ச் போட்டால் லைட் எரியும்" என்ற கொள்கையில் பிடிவாதமாக இருந்துகொண்டு  யார் அனுபவத்தையும் ஏற்க்கமாட்டேன் எந்த ஆராய்ச்சிகாரன் சொன்னாலும் நம்பமாட்டேன்   நானும் அனுபவபட்டு பார்க்கமாட்டேன் என்று  குழப்பமேஇல்லாமல் இருந்துகொள்ளலாம்.    ஆனால் முழு உண்மைகளை  மட்டும்தான்  அறிய முடியாமல் போய்விடும்.

 
இப்பொழுது நமது கருத்துக்கு வருவோம்.
 
"ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்"
 
இது வசனம்      
 
இந்த வசனத்தை சகோதரர் அற்ப்புதம் அவர்கள் கீழ்க்கண்டவாறு பொருள் கொள்கிறார்.
 
///ஆவியை உடையவன். கிறிஸ்துவின் சிந்தையைப் பெற்றிருப்பவன். ஆகவே அவன் தேவன் தனக்குத்தந்த ஞானத்தினால் எல்லா காரியங்களையும் ஆராய்ந்து நிதானித்து அறிகிறான்///.
(இவ்விளக்கத்தின்  அடிப்படையில் இன்னொரு தேவஊழியரை குற்றம் கண்டுபிடித்து குறை கூறுவதில் தவறு இல்லை என்பது அவரது கருத்து)
 
அதை நாம் அப்படியே எடுத்துகொள்வோம்
 
அப்படி எல்லா காரியங்களையும் (அனைத்தையும்)  ஒரு ஆவிக்குரியவனால் நிதானித்து அறிய முடிந்ததென்றால்  ஆவிக்குரியவனின் வாயில் இருந்து  "தெரியாது" "அறியேன்" போன்ற வார்த்தைகளே வரகூடாது.  ஆனால் இந்த நிருபத்தை எழுதிய  ஆவிக்குரிய பவுலே பல இடங்களில் அறியேன் என்ற வார்த்தை பயன்படுத்தியிருபதை நாம் பார்க்க முடியும்.
 
அப்போஸ்தலர் 20:22 இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன்.

I கொரிந்தியர் 1:16
ஸ்தேவானுடைய வீட்டாருக்கும் நான் ஞானஸ்நானங் கொடுத்ததுண்டு. இதுவுமல்லாமல் இன்னும் யாருக்காவது நான் ஞானஸ்நானங் கொடுத்தேனோ இல்லையோ
அறியேன்.

அப்போஸ்தலர் 23:5
அதற்குப் பவுல்: சகோதரரே, இவர் பிரதான ஆசாரியரென்று எனக்குத் தெரியாது;
 
பவுல்  மாத்திரமா? தேவ குமாரனாகிய  இயேசுவே ஓரிடத்தில்  " குமாரனும் அறியார்". என்று குறிப்பிட்டிருக்கிறார். 
 
இங்கு வசனம் கூறும்   "அனைத்தையும் நிதானித்து அறியும்"  ஆவிக்குறியவன் இயேசுவை விட பவுலை விட  பெரியவனா?

அப்படி எந்த மிகப்பெபபபபபபபபபரிய ஆவிக்குரியவன் இன்று இருக்கிறானோ? நான் அறியேன்.  நீங்கள் அறிந்தால் எனக்கும் கொஞ்சம்  தெரியப்படுத்துங்கள்.  
 
இதற்க்கு பதில் கிடைத்தபின் எனது இன்னும் பல கருத்துக்களை தொடர்ந்து எழுதுகிறேன்!
 
எனது அனுபவ  கருத்துப்படி ஆவிக்குரிய ஒருவன் தேவன் அவனுக்கு எதை வெளிப்படுத்த சித்தம் கொண்டுள்ளாரோ அவை  அனைத்தையும் மட்டுமே
நிதானித்து அறிந்துகொள்ள முடியும்! 

மற்றபடி எல்லோரையும் எல்லாவற்றையும்  நிதானித்து அறிந்துவிட முடியாது.

அவன் ஆவிக்குரியவனானாலும் சரி ஆவியே இல்லாதவனானாலும் சரி, ஒருவனின் இருதய கடினம் மற்றும் மேட்டின்மயிநிமித்தம் தேவன் ஒன்றை அவனுக்கு வெளிப்படுத்த விரும்பவில்லை என்றால் அவனுககு எத்தனை முறை சொன்னாலும் 
அவனது அடைபட்ட இருதயம் திறக்காது!


(அதற்காக ஊழியர்கள் எல்லோரும் சரியானதை மட்டும்தான் செய்கிறார்கள் அவர்களை யாரும் குறைகூறகூடாது என்பது எனது கருத்தல்ல. ஒருவர் செய்வது தவறு என்று  சந்தேகம் இல்லாமல் தெரிந்தால் அதை அறியும் தகுதி மற்றும் அதை கண்டித்து உணர்த்தும் அதிகாரம் தேவனால் நமக்கு கொடுககப்பட்டிருந்தால் நிச்சயம்  அவ்வேலையை செய்யலாம் செய்யவேண்டும்! மற்றபடி, முழுமையாக எதையும் அறியாமல் இன்னொரு குறைகூறும் ஆவியை உடையவர் சொல்லும் கருத்துக்கு ஒத்துபோவது ஏற்றதல்ல)
 
 

-- Edited by SUNDAR on Thursday 16th of September 2010 04:26:51 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: தேவ ஊழியர்களை /ஆவிக்குரியவர்களை குறைகூறுதல்!
Permalink  
 


தேவனின்  இருதய விருப்பங்களையும் அவரின் எதிர்பார்ப்புகளையும் நிதானித்தறிந்து நிறைவேற்ற வேண்டிய மிகப்பெரிய காரியங்கள் எத்தனையோ நிறைவேற்றப்பட்டாமல் இருக்கின்றன.
 
"தன்னை தானே சோதித்தறிந்தால் நியாயம் தீர்க்கப்படோம்" என்ற வார்த்தைக்கு ஏற்ப நம்மை நாமே  வசனத்தின் அடிப்படையில் சோதித்து அறியவேண்டிய வேலைகள் இன்னும்  பாக்கி இருக்கின்றன
 
கண்களை மூடிக்கொண்டு பாதாளத்தை நோக்கி பணிக்கும் ஜனங்களுக்கு சுவிசேஷம் சொல்லி இரட்சிப்புக்குள் வழி நடத்தும் பணிகள் மிக தாமதமாக நடந்துகொண்டு இருக்கின்றனர்,
 
ஜனங்களின்  ரட்சிப்புக்ககாக கண்ணீருடன் மன்றாடும் மற்றாட்டு பணியை செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
 
இவைகளே ஒரு கிறிஸ்த்தவனுக்கு நீங்காத மன வாஞ்சையாக இருக்கவேண்டுமே தவிர, தேவனின் நியாயதீர்ப்பு  வேலையை தன்  கையில் எடுத்துகொண்டு சக சகோதரர்களையும் தேவ ஊழியர்களையும் குறைகூறிக்கொண்டு ஒரு சில சகோதரர்களின் சிறு குறைகளை ஊரறிய வெளிச்சம்போட்டு காட்டி நேரத்தை வீணடிப்பதும், அதை நியாயப்படுத்த முயல்வதும்   யாருக்கும் பயன்படபோவது இல்லை!



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard