தேவன் உடைக்கப்பட்ட அல்லது நொறுக்கப்பட்ட இருதயத்தை ஒருபோதும் புறங்கணிக்க மாட்டார்!
ஒரு மனிதன் தனக்கு வந்திருக்கும் தீராத நோயினிமித்தம் வேதனைப்பட்டு நோந்து போவதோ அல்லது தாங்கமுடியாத பிரச்சனைகள் கடன் தொல்லைகள் நஷ்டங்கள் இவற்றால் வேதனையுற்று அதை பிறரிடம் சொல்லி சுய பட்சாபதாபம் பெற்றுக் கொள்வதோ அல்லது யாரிடமாவது சொல்லி அழுவதோ முழுமையான நொறுக்கப்படுதல் என்ற நிலையில் சேராது.
கிறிஸ்த்தவ குடும்பத்தில் பிறந்து எந்த உண்மையான மனம்திரும்புதலும் இல்லாமல் இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களில் பலர் நொறுக்கப்படாமல் இருப்பதன் காரணமாக சுபாவ அன்பில்லாமலும் தாழ்மை கீழ்படிதல் மற்றும் சுயம் உடைக்கப்படாதவர்களுமாக வாழ்ந்துகொண்டு கிரிஸ்த்தவத்தின் பெயரையும் கெடுத்துக்கொண்டு அலைகின்றனர்.
ஒரு உண்மையானை கிறிஸ்த்தவ வாழ்க்கைக்கு நொறுக்கப்படுதல் என்பது மிக மிக அவசியம் அகவே இந்த நொறுக்கப்படுதல் என்ற வார்த்தைக்கான பொருளை பலர் சரியாக அறியாத காரணத்தால் அதற்க்கான விளக்கத்தை பதிவிடுவது நல்லது என்று கருதுகிறேன்.
நொறுக்கப்படுதல் என்பது மூன்று நிலைகளின் தொகுப்பு ஆகும் அந்த மூன்றும் சரியாக அமைந்தால் மட்டுமே ஒருவர் உண்மையில் நொறுக்கப்பட்டு சரியான இரட்சிப்பை கண்டடைய முடியும்.
1. கண்ணீர் சிந்துதல்
உடைக்கப்படுதலில் முதல் அடையாளம் கண்ணீர் சிந்துதல் ஆகும்! கண்ணீர் சிந்தாத கண்களை உடையவர்கள் ஒருபோதும் நொறுக்கப்பட முடியவே முடியாது
நமது தேவன் கண்ணீரை காண்கிற தேவன் எவருடைய கண்ணீரையும் அவர் புறங்கணிப்பது இல்லை
வேதனையின் உச்சைத்தில் இருக்கும் ஒருவர் உடைந்து கண்ணீர் சிந்தியே ஆக வேண்டும். மனதுக்குள் எல்லாவற்றையும் புதைத்துவைத்து கல்மனமாக இருக்க கூடவே கூடாது. மிகப்பெரிய நீதிமானாகிய யோபு நண்பர்களின் பரியாசத்தை நினைத்து கண்ணீர் சிந்துகிறான்
யோபு 16:20என் சிநேகிதர் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்; என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது.
கர்த்தர் அவனுக்கு இறுதியில் நல்லதொரு முடிவை கொடுத்தார். வேத புத்தகத்தை பொறுத்தவரை ஒரு சிலாறை தவிர கண்ணீர் சிந்திய அநேகர் விடுதலையை கண்டுள்ளனர் என்பதை அறிய முடியும்.
அழுது கண்ணீர் சிந்தி விடுதலையை பற்றவர்களின் பட்டியலில் முக்கிய இடம் வகுப்பது சாமுவேலின் தயார் அன்னாள் குழந்தை பாக்கியம் பெற்றது எனலாம்
சாமுவேல் 1:10அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி
தனது சக்களத்தியின் வார்த்தைகளின் கொடுமை தாங்காமல் உடைக்கபட்டு அழுது கண்ணீர் சித்தியதால் கர்ப்பம் திறக்கப்பட்டு சாமுவேலை பெற்றெடுத்து தனது நிந்தையில் இருந்து விடுவிக்கப்பட்டாள்.
ஆண்டவராகிய இயேசு பூமியில் வாழ்ந்த காலங்களில் கண்ணீரோடு விண்ணப்பம் பண்ணினார் என்று வேதத்தில் பதிவாகியிருக்க நாம் கண்ணீர் சிந்துதல் எம்மாத்திரம்?
எபிரெயர் 5:7 அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து,
எனவே ஒருவர் உடைக்கபட்டிருப்பதை அறியும் முதல்நிலை கண்ணீர் சிந்துதல்!
-- Edited by SUNDAR on Tuesday 7th of September 2010 04:24:01 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அழுகையோடு புலம்புவது என்பது வேண்டாத காரியம் அல்லது கோழைதனமான காரியம் என்று பலர் கருதலாம்! ஆனால்அது நிச்சயம் தவறு. புலம்புதல் என்பது தேவனால் அங்கீகரிக்கப்பட்ட ஓன்று என்பதை வேத புத்தகத்தில் அது நாற்ப்பது/ ஐம்பது முறைக்குமேல் வருவதை வைத்தும், இவ்வாறு புலம்பி அழுத பலர் பல உண்மைகளை அறிந்துகொண்டுள்ளனர் பல கட்டுகளில் இருந்து விடுதலை பெற்றிருக்கின்றனர் பல நன்மைகளை பெற்றிருக்கின்றனர் என்பதை வைத்தும் அறியமுடிகிறது!
எனவே நமது நிலையை சொல்லி புலம்புதல் என்பது உடைக்கப்ப்டுதலின் இரண்டாம் நிலை எனலாம்.
யோபுவின் புலம்புதல்கள் அவற்றின் முடிவு பற்றி நாம் அறிந்திருக்கிறோம் சங்கீதக்காரனின் புலம்புதல்கள் அவன் பெற்ற உயர்வு மற்றும் விடுதலை குறித்து அறிந்திருக்கிறோம். எரேமியாவின் புலம்புதல் குறித்து நாம் அறிந்திருக்கிறோம் இன்னும் ஏசாயா எசேக்கியேல் மீகா போன்ற எல்லா தீர்க்கதரிசிகளும் புலம்பியே தீர்த்துள்ளனர். மேலும் பல இடங்களில் கர்த்தரே புலம்பி அழுங்கள் என்று ஆலோசனை கூறியிருக்கிறார்
உங்கள் புலம்பல் வேஷமாக இல்லாமல் உண்மையான முழு இருதயத்தையும் உற்றி புலம்பும் ஒரு புலம்பலாக இருக்கவேண்டும் அப்பொழுது எசேக்கியா ராஜாவுக்கு நடந்த அதிசயம் போன்ற மிகப்பெரிய அதிசயம் கூட நடக்க வாய்ப்புண்டு
எசேக்கியா ராஜாவின் புலம்பலை கேட்ட கர்த்தர் அவனது ஆயுள் நாளில் 15 வருடம் கூட்டினார் என்று வேதம் சொல்கிறது
ஏசாயா 38:14நமுட்டைப்போலும், தகைவிலான் குருவியைப்போலும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன்; என் கண்கள் உயரப் பார்க்கிறதினால் பூத்துப்போயின; கர்த்தாவே, ஒடுங்கிப்போகிறேன்; என் காரியத்தை மேற்போட்டுக்கொள்ளும் என்றேன்
15. நான் என்ன சொல்லுவேன்? அவர் எனக்கு வாக்கு அருளினார்; அந்தப்பிரகாரமே செய்தார்;
கடும் துன்பத்தில் வேதனையில் பிரச்சனையில் வாடும் சகோதர சகோதரிகளுக்கு எனது அறிவுரை அழுது புலம்புங்கள் என்பதுதான்! உங்களுக்கு விடுதலை வரும்வரை சரியான பதில் வரும்வரை நீங்கள் புலம்பிக்கொண்டே இருக்கலாம். பலர் உங்களை பயித்தியம் என்று சொன்னால்கூட பரவாயில்லை சொல்லிவிட்டு போகட்டும் !
நமது தேவன் மிகுந்த இரக்கம் உள்ளவர் நமது கண்ணீரை காண்கிறவர் நமது புலம்பலை ஆனந்த களிப்பாக மாற்றக்கூடியவர்! அல்லேலூயா!
சங்கீதம் 30:11 என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்
-- Edited by SUNDAR on Tuesday 14th of September 2010 09:53:14 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இன்று உலகில் தாங்கள் பாடுகள் துக்கங்கள் துன்பங்கள் தாங்க முடியாமல் அழுது புலம்பும் பலரை பார்த்திருக்கிறோம்! ஆனால் இவர்கள் தேவனை நோக்கி திரும்பால் நம்போன்ற சக மனிதர்ககளையோ அல்லது மந்திரவாதியையோ அணுகி அவர்களிடம் தாங்கள் துக்கங்கள் மற்றும் வேதனைகளி சொல்லி அழுது புலம்புகின்றனர். இதனால் யாருக்கும் எந்த பயனும் ஏற்ப்படபோவது இல்லை. உங்கள் துன்பம் பலருக்கு எக்காளமாகவும் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பாகவும் அமையும் அத்தோடு இயேசுவை காட்டிகொடுத்த யூதாசின் பரிதாப முடிவுக்கு காரணமும் இதுதான். "குற்றமற்ற ரத்தத்தை காட்டிகொடுத்தேன்" என்று மனஸ்தாபபட்ட அவன் உலக ரட்சகரை நோக்கி ஓடாமல் பிரதான ஆசாரியர்களிடம் ஓடினான். அவர்கள் ஒரு வார்த்தையில் "அது உன்பாடு" என்று சொல்லிவிட்டனர் அதே தவறை நாமும் செய்யகூடாது!
உடைக்கப்பட்டு அழுது புலம்பும் ஒருவன் தேவனை நோக்கி திரும்ப வேண்டும் இதுவே உடைக்கப்ப்டுதலின் மூன்றாம் நிலை!
யோவேல் 2:12ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்களென்றுகர்த்தர் சொல்லுகிறார்.
ஒருவன் தேவனை நோக்கி திரும்பினாவ்ல் தேவன் நிச்சயம் அவனை நோக்கி திரும்புவார் என்பதை வேதம் தெளிவாக சொல்கிறது.
சகரியா 1:3கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: என்னிடத்தில் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
நமது தேவன் நம்மை அசட்டை பண்ணுகிற தேவன் அல்ல! எந்த ஒரு மனித எந்த ஒரு நிலையில் தன்னை நோக்கி திரும்பினாலும் அந்த நிலையிலேயே எந்த முக கோணலும் இல்லாமல் அன்புடன் எற்றுகொள்ளும் நமது அருமை ரட்சகர் சொல்வது என்ன தெரியுமா?
யோவான் 6:37என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.
என்பதுதான்.
எனவே அன்பானவர்களே! நீங்கள் அழுகையோடும் புலம்பலோடும் ஆண்டவரை நோக்கி முழு இருதயத்தோடும் மிகுந்த தாழ்மையோடும் திருப்பும்போது, (இங்கு நிச்சயம் தாழ்மை வேண்டும் தேவனை பரீட்சை பார்க்கும் எண்ணமோ நமது கண்டிசன்களை தேவனிடம் திணிக்கும் என்னமோ இருக்கவே கூடாது. வேண்டு மானால் ஏதாவது பொருத்தனை செய்துகொள்ளலாம்) அவ்வாறு செய்யும்போது எந்த பெரிய கடினமான சூழ்நிலையில் இருந்தும் நிச்சயம் விடுதலை உண்டு என்பதை எனது சொந்த அனுபவ அடிப்படையில் சொல்கிறேன்.
உடைக்கப்படுதல் என்பது மிகவும் அவசியமான ஓன்று! ஆவியானவரின் அபிஷேகம் ஒன்றே எந்த கடின மனதையும் உடைக்கக்கூடிய வல்லமை வாய்ந்தது. எனவே அன்பானவர்களே உங்களின் கடின மனது உடைபட பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுகொள்ளுங்கள் என்பதே எனது முதன்மையான வேண்டுகோள்!
முற்றும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)