இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பரலோகம்/பாதாளம் மனுஷன் காண்பது சாத்தியமா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
பரலோகம்/பாதாளம் மனுஷன் காண்பது சாத்தியமா?
Permalink  
 


மாம்சமாக இருக்கும் மனிதன் ஆவிக்குரிய இடங்களாகிய பரலோகம் பாதாளம் இவற்றை பார்த்துவர முடியுமா?

இந்த கேள்வி இன்று பலரை குழப்பும் ஒரு கேள்வியாக உள்ளது. காரணம் இந்த இடங்கள் நமது கண்களுக்கு மறைவாக உள்ள இடங்கள். அறிவியலால் ஆராய்ந்து அங்கு நடக்கும்  உண்மையை  கண்டுபிடிக்க முடியாது! எந்த கருவியை கொண்டும் இந்த இடங்களை காண முடியாது. எனவே அப்படி ஒரு இடம் இல்லை என்று உலகத்தார் சொல்வதுபோல் சொல்வதோ அல்லது  இடம் இருக்கிறது ஆனாலும் ஒருவரும் அங்கு போய்வர முடியாது என்றோ சொல்லிவிடுவது மிக எளிது.
 
நம்மால் போக முடியவில்லை நம்மால் பார்க்க முடியவில்லை நமக்கு அந்த அனுபவம் இல்லை என்பதற்காக அப்படி ஒரு இடம் இல்லை அது பொய் என்றோ, அதை பார்த்தேன் என்று சொல்பவர்கள் பொய்யர்கள் என்றோ ஒரு  முடிவுக்கு நம்மால் வர முடியாது. வேத வசனங்கள் இதை குறித்து என்ன சொல்கிறது என்பதை சரியாக ஆராய்ந்து பார்த்து ஒரு முடிவுக்கு வருவதே நல்லது.
 
அதன் அடிப்படையில், ஒரு மனுஷன் பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட முடியுமா? பரலோகத்தை இங்கிருந்தே பார்க்க முடியுமா?  பரலோக தரிசனங்களை பெற முடியுமா?  என்ற எல்லா கேள்விகளுக்கும் ஆம்! ஆம்! ஆம்! என்றே வேதாகமம் பதில் தருகிறது.
 
 
முதலில் பவுல் குறிப்பிடும் மனிதனின் அனுபவம்!
 
II கொரிந்தியர் 12:2 கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.  
 
முழு  விளக்கம் எதுவும் தராமல் இது  குறித்து ஒருசில  ஒரு வசனத்தை பவுல் அவர்கள் வேதத்தில் பதிவு செய்து வைத்திருப்பதற்கு காரணம். ஒருவன் மூன்றாம் வானம் வரை எடுத்துகொள்ளப்ப்ட முடியும் என்பதை மனுஷர்கள் விசுவாசிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
 
பாதாளம் என்பது எப்படி மூன்று அடுக்குகளாக இருக்கிறதோ அதேபோல் வானங்களும் மூன்று அடுக்குகள் இருக்கிறது அதில் மூன்றாம் வானம்வரை எடுத்துகொள்ளப்பட்டதாக பவுல் கூறுகிறார்.   
 
3. அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.

அத்தோடு அங்கு மாறுபட்ட பாஷைகளை கேட்டேன் என்றுகூறி அதைகுறித்து தான் மேன்மை பாராட்டுவதாகவும் கூறுகிறார்.  அவர் எந்த இடம் வரை எடுத்துகொள்ளப்ப்ட்டார் என்பதை நம்மால் உறுதியாக அனுமானிக்க முடியாவிட்டாலும் அது பரதீசு என்றொரு இடம் என்பதை அறிய முடிகிறது.
  
ஒரு அதிசயமான இடத்தையோ  அல்லது அறிவுக்கெட்டாத ஒரு காரியத்தையோ நாம் அறிந்துகொண்டால் அதை குறித்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைப்பது இயற்கையே. அதுபோல் சிலர் தாங்கள் கண்ட சில அபூர்வ காரியங்கள்
மனதில்வைத்து ஜீரணிக்க  முடியாமல் அதைப்பற்றி அடிக்கடி பேசுவது தவறுபோல் எனக்கு தெரியவில்லை.
 
மேற்கூறிய காரியங்கள் ஒருமனுஷன் பூமியில் வாழ்ந்துகொண்டு இருக்கும்போதே ஆவிக்குரிய ஒரு இடத்துக்கு எடுத்துகொள்ளப்பட முடியும் என்ற அடிப்படை உண்மையே நமக்கு உணர்த்துகிறது. மேலும் பவுலுக்கு ஏற்ப்பட்டதுபோலவேதான் இன்னொருவருக்கு ஏற்ப்படவேண்டும் என்ற எந்த கட்டாயமும் நிச்சயம் இல்லை அல்லது பவுல் சொன்னது போலத்தான் இன்னொரு அனுபவம் உள்ளவர் சொல்ல வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. அவரவர் தங்களுக்குள்ள அனுபவங்களை "உள்ளதை உள்ளது" என்று சொல்வதுதான் நல்லது. அவ்வாறு சொல்லும் சிலரை
"அவர்கள் சொல்வது பொய்" என்று நியாயம் தீர்ப்பது வேதத்தின் அடிப்படையில் சரியானதா?  
 
தொடர்ந்து பார்க்கலாம்........


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

ஸ்தேவானின் அனுபவம்:  

அடுத்ததாக பூமியில் இருக்கும்போதே பரலோக தேவமகிமையையும் அவரது குமாரனையும் பார்க்கும் பக்கியம்பெற்ற இரத்த சாட்சியாகிய தேவானின் அனுபவம் பற்றி பார்க்கலாம்:
 
அப்போஸ்தலர் 7: 55. அவன் (ஸ்தேவான்)  பரிசுத்த ஆவியிலே நிறைந்ததவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து: தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசு நிற்கிறதையும் கண்டு;
56. அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.

பரிசுத்த ஆவியினால் ஒருவன் வல்லமையாக நிரப்பப்படும்போது கண்கள் திறக்கபட்டு மாம்சகண்கள் பார்க்கும் காரியங்களுக்கு மேலான காரியங்களை பூமியில் இருந்தே பார்க்க முடியும் என்பதை இவ்வார்த்தைகள் நமக்கு தெரிவிக்கின்றன.
 
பரிசுத்த ஆவி என்பது நமக்கு கொடுக்கப்படும்  ஒருசிறு அக்கினி பொறி போன்றது. அது தேவனோடு நமக்கு ஒரு உறவு நிலை /தொடர்பு இருப்பதற்கான ஆதாரம்தான். ஆனால் அந்த ஒரு சிறுதொடர்பு நிலையின் மூலம் நாம் அளவில்லாத தேவ ஆவியினால் நிரப்பபட்டு அபூர்வ நிலையையும் அடையவும் அதிசய காரியங்களை பார்க்கவும் முடியும். அதே நேரத்தில் எந்த அனலும் இல்லாமல் அலட்சியமாக இருந்து  பெற்ற ஆவியை மட்டுபடுத்தி  புதைத்து வைப்பதுபோல் வைத்துவிட்டு  ஒரு சிறு ஆவிக்குரிய வெளிப்பாடோ அனுபவமோ கூட இல்லாமலும் இருக்கமுடியும். அது நமது விசுவாச நிலையிலும் கீழ்படிதலிலும்தான் இருக்கிறது. 
 
வேதம் இவ்வளவு தெளிவாக ஸ்தேவான் பரிசுத்த ஆவியில் நிறைத்து தேவ மகிமையையும் இயேசுவையும் கண்டான் என்று கூறும்போது இங்கு அனுபவம் இல்லாதவர்கள் அனுபவபட்டவர்களை பொய்யார்க்க என்று வர்ணிப்பது சற்றேனும் ஏற்றதா? அவர்கள் ஒருவளை பொய்யர்களாக இருந்தால் கூட இக்காரியங்கள் வேத வசனத்தின் அடிப்படையில் சாத்தியமாக இருக்கும்போது நம்மால் உறுதியாக அவர்களை பொய்யர்கள் என்று கூறிவிட முடியாது என்பதே எனது கருத்து.
 
உங்கள் மன கடினத்துக்காகவே தேவன் உங்களுக்கும் ஒன்றையும் வெளிப்படுத்த விரும்ப வில்லையேஅன்றி தரிசனங்களை  கண்டவர்கள் பொய்யர்கள் அல்ல தேவனிடம் மனம் கசந்து அழுங்கள் ஒருவேளை உங்களுக்காக இரங்கி உண்மைகளை  உணர்த்தலாம். 
 
எப்பொழுது ஒருவர் ஆண்டவரை பற்றிய  காரியத்தில் தீர்மானமாக  இவ்வளவுதான் இதற்குமேல் ஒன்றும் இல்லை. நான் அறிந்துகொண்டதுதான் சரி அதற்குமேல் ஒன்றுமேயில்லை என்று கருதி அடுத்தவர்கள் கருத்தை மதிக்காமல் பெரிய வியாக்கீனம் கொடுக்க ஆரம்பிதுவிடுகிரானோ அன்றோடு அவனது  ஆவிக்குரிய நிலை பளுதடைந்துவிடும் என்பதை கருத்தில் கொள்க.
 
தேவனிடமிர்ந்து ஒன்றைஅறிய மிகுந்த தாழ்மை அவசியம்! மாய்மாலமான தாழ்மை அல்ல,  குழந்தை போன்ற தாழ்மை அவசியம்! 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

யோவானின்  அனுபவம்!

அடுத்ததாக நாம் பார்க்கபோவது திவ்ய வாசகனாகிய யோவானின் அனுபவம்.  யோவான் அனேக தரிசனங்களை கட்டு எழுதினான் அதில் பரலோக தரிசனமும் அடங்கும். இத்தரிசனங்களை அவன் காணும் முன்னர் ஆவிக்குள்ளாக்கப்பட்டான் என்று வேதம் சொல்கிறது.     
 
வெளி 1: 10. கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்
 
தேவனால் முற்றிலும் ஆவிக்குள்ளாக்கபட்ட மனிதன் இயற்க்கைக்கு அப்பாற்ப்பட்ட விதமாக தரிசனங்களை காண முடியும் என்பதை யோவானின் அன்பவம் உணர்த்துகிறது.
 
ஆவிக்குள்ளக்கப்பட்ட யோவான்:

1. இயேசுவை மகிமை அடைந்தவராக காண்கிறான் (1:13)
2. சபைகளின் தூதர்களை குத்துவிளக்குகலாக காண்கிறான் (1:20௦)
3. பரலோகம் திறக்கப்பட்டிருப்பதை பார்க்கிறான் (4:1  )
4. சிங்காசனத்தின் மீது வீற்றிருப்பவரை காண்கிறான் (4:3)
5. தேவனின் ஏழு ஆவிகளாகிய அக்கினி தீபங்களை காண்கிறான் (4:5) 
 
இப்படி ஆரம்பித்து இன்னும் அனேக காரியங்களை அவன்கண்டு எழுதுகிறான். இது நமக்கு ஒரு சாட்சியாக இருக்கிறது. தேவனால் ஆவிக்குள்ளக்கப்பட்ட ஒருவர் பரலோகத்தையும் அங்கு நடப்பவைகளையும் ஆவியில் உணர்ந்து  பார்க்க முடியும் என்ற உண்மையை இது உணர்த்துகிறது. 
 
மேலும் ஆவிக்குள்ளன ஒருவன் காணும் பொருள் அறியமுடியாத காட்சிகள் எல்லாமே அவனுக்கு விளக்கி சொல்லப்படும். அவர்கள் கேட்கும் பாஷைக்கு பொருள் இருதயத்திலேயே சொல்லிகொடுக்கப்படும்.தேவன் ஒருவருக்கு போதிக்க நினைத்தால் அவர் எப்படி வேண்டுமானாலும் அவனுக்கு போதித்துவிட முடியும். தேவன் ஒருவருக்கு ஒன்றை காண்பிக்க நினைத்தல் அவர் எப்படி வேண்டுமானாலும் காண்பித்துவிட முடியும். 

வசனப்படி இதுவெல்லாம் சாத்தியமாக இருக்கும் பட்சத்தில், இப்படிப்பட்ட ஒரு உன்னதமான அனுபவம் இல்லாமல் வெறும் விசுவாசத்தில் மட்டும் வாழும் ஒருவர்  பிறரின் அனுபவங்களை அவமதிக்க வேண்டாம்!  என்பதே எனது வேண்டுகோள்!

(சிலர் பொய்யான சில காரியங்களை தாங்கள் அனுபவமாக கூறினாலும் அதன் உண்மை தன்மை நமக்கு தெரியாத பட்சத்தில் அதை திட்டமாக தீர்ப்பு செய்வது சரியான செயல்அல்ல)
     

 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard