இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சரீரம் என்பது வெகுமதியா? பெரும் தொல்லையா?


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
சரீரம் என்பது வெகுமதியா? பெரும் தொல்லையா?
Permalink  
 


மண்ணினால் படைக்கப்பட்ட மாமிசமன்று எனக்குண்டு 
எண்ணில்லா கிரியைகளை  செய்யும்திறன் அதற்குண்டு 
 
தேவனின் சுவாசத்தால் ஜீவன்தனை பெற்றுக்கொண்டு 
பாசபந்த பிணைப்புக்குள்ளே பரிதபித்து கிடக்கிறது.  
 
கண்ணிரண்டு காலிரண்டு கையிரட்டு அதற்குண்டு
விண்வரையில் சென்றுவரும் வல்லமையும் அதற்குண்டு
 
காசுபணம் சேர்ப்பதற்கு காலமெல்லாம் உழைக்கிறது
நாச மோசம்  செய்வதற்கும்  துணிந்துதான் நிற்கிறது
 
இருபத்தைந்து  வயதுவரை இளம்பிறைபோல் வளர்ந்து வரும்  
அறுபத்தைந்து வயதினிலே தள்ளாடி தவித்துவிடும்
 
குழந்தையான நாட்களிலே குதுகுலமாய் திரிந்த அது
இழந்துபோன  உலகத்தினுள்  இன்பம் தேடி அலைகிறது 
 
காலையில் எழுந்தவுடன் கடன்களை முடிக்க சொல்லும்
வாழுகின்ற நாளெல்லாம் வயிறு நிறைய உண்ண சொல்லும்
 
ஓடி ஓடி உழைத்துவிட்டால் ஒய்வுதேடி தவிக்கிறது  
வாட்டிவிடும் நோய் வந்தால் சுருண்டுதான்  படுக்கிறது!  
 
இச்ச்யினால் இழுக்கப்பட்டு இன்பம் பெற துடிக்கிறது  
இறைவனின் வார்த்தைக்கு எதிர்த்து  நின்றே கெடுக்கிறது
 
கடவுள் எனக்கு கொடுத்த இந்த "காயம்' என்னும் சரீரமது    
வெகுமதியா பெருந்தொல்லையா  புரியவில்லை இன்றுவரை!
 


-- Edited by இறைநேசன் on Friday 17th of September 2010 03:04:59 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard