அன்பு நண்பர்களே பாவம் என்பது ஆதியில் இருந்தே இருக்கிறது, அதன் பலனாக தான் ஜன்ம ஜென்மமாக தண்டனைகள் மற்றும் பிறவிகள் தொடர்கிறது என்ற கருத்தை இந்து சகோதரர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று நான் கருதுகிறேன். அதையே கர்மபலன் என்று அதை இந்து மதம் போதிக்கிறது
ஆனால் தங்களால் கிறிஸ்த்தவ போதனைபடி ஆதாமில் இருந்து முதல் பாவம் வந்தது என்ற கொள்கை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நல்லது!
இப்பொழுது இரண்டையும் இணைத்து பார்த்தால் இதற்க்கான விளக்கம் எளிது!
தங்களின் கருத்க்க்களில் எந்த தவறும் இல்லை. இந்து முறைப்படி ஒரே ஒரு பொய் சொன்னாலும் தண்டனை என்றொரு நிலையில் மனிதர்கள் வாழ்ந்து, கர்ம பாவத்தை பிறவி கணக்கில் சுமந்து இறைவன் எதிர்பார்க்கும் தகுதியை பெற்று "சுமார் நூற்றியைந்து படி நிலைகளை கடந்து பரிசுத்தம் அடைந்து வள்ளலாரின் கூற்றுபோல் அருட்பெரும் ஜோதியாம் மிகவும் பரிசுத்தம் உள்ள இறைவனோடு கலப்பது என்பது முடியாத காரணத்தால் கோடானு கோடிபேர் ஜன்ம பாவத்தில் பலயுகம் உழன்றுகொண்டு இருந்தனர்
ஜன்ம ஜென்மமாக அனேக காலமாக தொடர்ந்து வந்து மனிதர்களை நாசமாக்கி வேதனைப்படுத்தும் அந்த பாவத்துக்கு ஒரு முடிவை கொண்டுவர தேவன் திட்டமிட்டார். (எதற்குமே ஒரு முடிவு உண்டு அல்லவா? நீங்கள் முடிவு தேவையில்லை என்று நினைக்கலாம் ஆனால் இறைவன் அவ்வாறு விரும்ப வில்லலை. தீயவன் வாழவும் நல்லவன் தாழவும், சிலர் சுக போகவாழ்க்கை வாழவும் சிலர் சோற்றுக்கு கூட வழியில்லாமல் சங்கடப்படுவதையும் பார்த்து இவைகள் அனைத்துக்கும் ஒரு முடிவை கொண்டுவர நினைத்தார்.
தாங்கள் அனைவரும் கருதுவதுபோல் பாவம் என்பது ஆதாம்ஏவாளின் படைப்புக்கு முன்னரே உலகில் இருந்தது. அந்த பாவம்தான் சர்ப்பமாக கடவுளின் தோட்டத்தில் இருந்தது. அந்த சர்ப்பத்துக்கு ஒரு முடிவை கொண்டுவரவே ஆதாம் ஏவாளின் மூலம் தன் திட்டத்தை நிறைவேற்றினார்.
ஆதாம் ஏவாள் பாவம்தான் ஆதிபாவம் என்று வேதத்தில் எங்கும் சொல்லப்பட வில்லை "அனால் உன் ஆதி தகப்பன் பாவம் செய்தான்" என்றுதான் வேதம் சொல்கிறது. எனவே ஆதிபாவம் என்பது ஆதாம் ஏவாள் பாவம்தான் என்ற கருத்து அவ்வளவு சரியானது கூற்று அல்ல என்றாலும். ஆதாம் வழிவந்த அனைவருக்கும் அது ஆதிபாவம்தான்.
இவ்வாறு பாவத்தின் பிடியில் பலஜன்மம் எடுத்து உழலும் மனித வர்க்கத்தை நியாயம் தீர்த்து, எல்லாவற்றிக்கும் ஒரு முடிவை கொண்டுவர பாவத்துக்கு பலியாக ஒப்புகொடுக்கப்பட்டவரே தேவனின் திட்டத்தின் நிறைவேருதலாக வந்த இயேசுகிறிஸ்த்து.
இப்பொழுது விடை மிகவும் சுலபம்.
இயேசுவின் இரத்தத்தின் பலனால் நீங்கள் இதற்கும் முன் எந்த ஜன்மத்தில் எத்தனை பாவங்கள் செய்திருந்தாலும் சலுகை முறையில் அவரை விசுவாசித்த மாத்திரத்தில் அத்தனையும் மன்னிக்கப்பட்டு நீங்கள் புது சிருஷ்டியாகிறீர்கள் அத்தோடு உங்களுக்கு நித்திய வாழ்வும் வாக்களிக்கப்படுகிறது
ஒரு சிறு உதாரணத்தை நான் சொல்ல விளைகிறேன்:
சமீபத்தில் ROC எனப்படும் (கம்பனி ரெஜிஸ்ட்ரார்) ஒரு அறிக்கையை வெளியிட் டிருந்தனர். அதாவது இந்தியாவில் உள்ள அனேக கம்பனிகள் அரசாங்கத்தில் செய்யவேண்டிய பதிவுகளை சரியாக செய்யாமல் சட்டப்படி தண்டனை பெரும் நிலையில் இருந்தனர். அதன் தொகை அதிகமாக இருந்ததால் அரசாங்கள் ஒரு திட்டத்தை கொண்டுவந்தது. "அதாவது 31/8/2010 க்குள் தங்களுடைய பதிவுகளை எல்லாம் சரிசெய்வதற்கு ஒரு கன்செசன் முறையை அதுவும் மிக சுலபமான முறையை அறிமுகம் செய்தது. அதை பயன்படுத்தி 31/08/2010௦ க்குள் நீங்கள் சட்டப்படி செய்யவேன்டியவற்றை செய்துவிட்டால் உங்கள்மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. அதன்பிறகும் தவறை நிவர்த்தி செய்யாதவர்களுக்கு கடுமையான தணடனை மற்றும் அபதாரம் விதிக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு.
இதை அப்படியே தேவனின் பாவமன்னிப்பு திட்டத்துடன் பொருத்தி பாருங்கள். ஜன்ம ஜென்மமாக பாவத்தில் இருந்து வெளியேவர முடியாமல் தவிக்கும் மனிதகூட்டததை பாவத்தின் பிடி மறுபிறவி துன்பம் துயரம எல்லாவற்றிலும் இருந்து விடுவிக்க கடவுள் ஒரு கன்செசன் திட்டத்தை அறிமுகம் செய்தார் அதுவே "இயேசுவின் பலி"
இப்பொழுது கிருபையின் காலம் என்றொரு காலத்தை தேவன் நியமித்து அந்த காலம்வரை இயேசுவை ஏற்றுக்கொண்டு தங்கள் பாவங்களை போக்கி கொண்டவர் களுக்கு முற்றிலும் விடுதலை! ஆனால் அதை கேலி செய்து அசட்டை செய்து தொடர்ந்து பாவத்தில் நிலை நிற்ப்பவர்களுக்கு கடுமையான தண்டனை.
இது நியாயமானதுதானே!
பாவம் மிக கொடியதும். பாவிகளின் முடிவு மிக கொடுமையானதாக இருப்பதால், இயேசுவை தேவன் ஒரு கொடும் சித்திரவதையான மரணத்துக்கு ஒப்புகொடுத்து எல்லோர் பாவத்தையும் அவர்மேல் சுமத்தி பாவிகளை மீட்டார். இப்பொழுது சலுகை அடிப்படையில் அனைவருக்கும் மீட்பு கிடைக்கும் காலம்!
அவர்கொடுத்த சலுகை வேண்டாம் என்று ஒதுக்கி தள்ளுவீர்களானால் முடிவு மிக மோசமானது!
(இயேசுவோ தேவனோ ஒரு அந்நிய தேவன் என்று ஏன் எண்ணுகிறீர்கள் இந்து மத வேதமாகிய ரிக் / யஜூர் காட்டும் ஏக இறைவன்தான் கிறிஸ்த்தவம் காட்டும்இறைவனும் எனபது எனது கணிப்பு. இறைவன் ஒருவரே!)
-- Edited by SUNDAR on Wednesday 22nd of September 2010 03:10:20 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஆதிபாவம் குறித்த கருத்துக்களில் அரைகுறை உண்மைகளை தெரிந்துகொண்டு, அதை தவிர வேறு எதுவும் இல்லை என்று எண்ணி, தாங்கள் கருத்ததை நிலை நாட்ட முயலும் சிலரின் கருத்துக்களை பார்த்து நீங்கள் குழம்பிவிட வேண்டாம். அவர்கள் சரியான வழியை தெரிந்துகொண்ட போதிலும் அதை முழுவதும் விளக்கி கூறமுடியாத ஒரு நிலையில் இருக்கிறார்கள் அவ்வளவுதான். அவர்களின் சில பதிலால் தாங்கள் குழப்பம் அடைந்து உண்மை வழியை அறிய விரும்பாமல் விட்டுவிடவேண்டாம் என்று அன்புடன் வேண்டுகிறேன்.
ஒரு பக்கா இந்துவாகிய நான் எது உண்மையாக யார் சொன்னதயும் நம்பாமல் எது உண்மையான மார்க்கம் என்று அறியவேண்டி மிகவும் அழுது மன்றாடி அனேக உண்மைகளை இறைவனிடம் இருந்து அறிந்துகொண்டேன்.
இந்துக்களாகிய தங்களுடைய எந்த கேள்விகளுக்கும் நான் விளக்கமளிக்க தயாராக இருக்கிறேன். மிக பழமையான மதம் இந்து மதம் என்பதிலும், அனேக இந்து புராணங்கள் உண்மைகளின் திரிவுகள்தான் என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.
மனிதனை ஜன்ம ஜென்மமாக தொடர்ந்துவரும் ஜன்ம பாவத்தில் இருந்து விடுவிக்கவே கடவுள் திட்டமிட்டு ஒரு சலுகை வழியை ஏற்ப்படுத்தி கொடுத்தார் அதற்க்கு ஒரு உதாரணத்தோடு எனது முந்தய பதிவில் விளக்கமளித்துள்ளேன்.
நான் மறுபிறப்பு என்பது இருந்தது என்பதை நம்புகிறவன். ஆண்டவராகிய இயேசுவின் பிறப்புக்கு பிறகே "ஒரேதரம் பிறப்பு பின்னர் நியாயதீர்ப்பு" என்ற நிலை உண்டானது என்பதே எனது கருத்து.
எத்தனையோ மதங்கள் உண்டு! அனால் இறைவன் ஒருவரே! பிற மத சகோதரர்கள் சொல்வதுபோல் அவரை அடைய வேறு வழிகள் இருக்கலாம். ஆனால் அவரை அடையும்படி நமக்கு கிடைத்த சலுகைவழி அல்லது சுலபவழி ஒன்றே ஒன்றுதான்.
உண்மையை அறியவேண்டும் என்ற திறந்த மனதை உடையவர்கள் கிறிஸ்த்தவம் பற்றி தங்களுக்குள்ள சந்தேகங்களை இங்கு ஒவ்வொன்றாக பதியலாம். என்னால் முடிந்த அளவு விளக்கம் அளிக்க முயல்கிறேன்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
அன்புடன்
சுந்தர்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)