இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வெளிப்பாடுகளும், தரிசனங்களும் :


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
வெளிப்பாடுகளும், தரிசனங்களும் :
Permalink  
 


வெளிப்பாடுகளும், தரிசனங்களும் :

அனேக ஊழியர்களும், விசுவாசிகளும் தாங்கள் கர்த்தரிடமிருந்து வெளிப்பாடுகளையும், தரிசனங்களையும் பெற்றோம் என்று மிகவும் மலைப்பாக, உணர்வு பூர்வமாக அவைகளை விவரிப்பதையும் சில ஊழியர்களும், ஜாமக்காரர்களும், விசுவாசிகளும் இவர்களை மட்டம் தட்டுவதையும், கேலி செய்வதையும் நாம் அறிவோம். இவைகள் உண்மையா அல்லது நம்பத்தகுந்தவையா அல்லது மனிதனின் கற்பனையா என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

இவ்வாறு சொல்பவர்கள் பெரும்பாலும் சொல்வது நரகத்தை பார்த்தேன் என்றோ, பாதாளத்தை பார்த்தேன் என்றோ அல்லது பரலோகத்தை பார்த்தேன் என்றோ இருக்கும். இப்படி சொல்பவர்கள் பெரும்பாலும் பொய் சொல்ல அவசியமில்லாதவர்கள்.

மனிதர்கள் பொதுவாக தங்கள் அனுபவமாகாத எதையும் நம்ப மாட்டார்கள். வேதத்தில் அசுத்த ஆவிகளை பற்றி எழுதியிருக்கவே, வேதத்தை நம்ப வேண்டும் என்பதால் அதை பற்றி நம்புகிறார்கள். இல்லாவிட்டால் அப்படி ஒன்று இருக்கிறதை யாரும் நம்ப மாட்டார்கள். ஏனெனில் அசுத்த ஆவி பிடித்தவர் என்று எடுத்து கொண்டால் மொத்த கிருத்துவர்களில் அல்லது அதற்காக கிருத்துவர்களாக மாறினவர்கள் மிக மிக குறைவான சதவிகிதமே.

பொதுவாக அதிகபட்ச மக்கள் சொல்வது உண்மையாகவும், குறைந்த பட்ச மக்கள் சொல்வது பொய்யாகவும் அதிகபட்ச மக்களால் கருதக் கூடும். அனேக நேரங்களில் இவர்கள் கிண்டல்களையும், கேலிகளையும் சந்தித்து மனமுடைந்து போக கூடும்.

இப்போது இந்த வெளிப்பாடுகளை எப்படி பெற்றார்கள்? யார் கொடுத்தது? தேவன் கொடுத்தால் அவர் எதற்காக கொடுக்கிறார்? என்பதை பார்க்கலாம்.

மனிதன் இறந்தால் என்ன ஆகிறான்? எங்கே போகிறான்? என்று மனித தோற்ற முதல் சிலர் ஆராய்ந்தும், சிலர் அவர்களுக்கேயுரிய உள்ளுணர்வாலும் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி
நரகம், பாதாளம், சொர்க்கம் உண்டு என்பது அனேக மதத்தை சேர்ந்த மக்களால் வெளிபடுத்தபட்டிருக்கிறது. இந்து மதத்தில் நரகத்தை (பாதாளம்?) பற்றி கருட புராணம் என்ற புராணமே உண்டு. புத்தரும், மாகவீரரும் கூட நரகத்தை பற்றியும், சொர்கத்தை பற்றியும் சொல்லியுள்ளனர். ஆனால் அவை எத்தனை என்பதில்தான் எல்லாரும் வேறுபடுகின்றனர்.

இந்த உலகில் எத்தனை மக்கள் வாழ்ந்தனரோ அத்தனை விதமான அனுபவங்கள் உள்ள இடமே பாதாளமும், நரகமும் ஆகும். ஆகவே இதை அவர் அவர் இஷ்டப்படி எத்தனையாக வேண்டுமானாலும் பிரிக்கலாம். இது எப்படி எனில் நம் நாட்டில் பொருளாதார நிலையை வைத்து மனிதர்களை எத்தனையாக பிரிக்கலாம் என்பதை போல. மூன்றாகவும் பிரிக்க முடியும், முன்னூறாகவும் பிரிக்க முடியும்.

ஆக பாதாளம் / நரகம் காணும் மனிதன் அதை காணும் முதல் மனிதன் அல்ல என்பதை அறியலாம். அப்படியானால் அதை ஒருவேளை தேவனும் வெளிப்படுத்தியிருக்கலாம் அல்லது அவனுடைய உள்ளுணர்வினாலும் அறிந்திருக்கலாம். இவர்களுக்கு தேவ்ன் வெளிப்படுதியிருக்கிறார் என வைத்து கொண்டால் அவர் இதை ஏன் கொடுத்தார் என்பதை பற்றி பார்ப்போம்.
இதை அவர்களுடைய ஆன்மிக முன்னேற்றத்திற்காகவும், ஆன்மிக பணிக்காகவும் கொடுக்கிறார். இவ்வாறு தரிசனம் காணும் மனிதன் தேவனோடு தான் நெருங்கிய உறவு கொண்டுள்ளோம் என்ற உணர்வை பெறுகிறான். அதனால் அவன் ஆன்மிக வாழ்வு பலப்படுகிறது.
(சிலர் இதனால் மற்ற மனிதர்களை விட தான் மேம்பட்டவன் என பெருமை பாராட்டி அவர்கள் பெருமையே அவர்களை தேவனை விட்டு தூர விலக்குவதாகவும் அமைகிறது)

அடுத்ததாக, இவ்வாறு நரக/பாதாளத்தில் துன்பப்படும் மனிதனின் கொடுமையான துன்பத்தை அறிந்தால் பிற ஆத்துமாக்களை தன்னிடம் சேர்க்கும் பணியை தரிசனம் கண்டவன் அதிக பாரத்தோடு செய்வான் என்பதினாலேயே தேவன் இந்த தரிசனத்தை கொடுக்கிறார்.

ஆனால், இந்த தரிசனம் கண்டவர்கள் இதை உணராமல் தாங்கள் கண்ட தரிசனத்தை ஆங்கில பட ரேஞ்சுக்கு விவரித்து சொல்ல, அதை கேட்பவர்கள் ஒரு காமெடி ஷோ பார்ப்பது போல கேட்டு விட்டு ரொம்ப காமெடி பண்ணாதீங்க பிரதர் என சொல்வது இயல்பான ஒன்று. அங்கு துன்பப்படும் மக்கள் மனனிலையே மிகவும் முக்கியமானது. ஆனால் இவர்களோ அந்த இடம் எப்படி இருந்தது என்பதையே மிகவும் விவரித்து சொல்வார்கள்.

இந்த தரிசனங்களை கிருத்துவர்கள் மத்தியில் சொல்வதால் ஒரு பிரயோசனமுமில்லை. ஏனெனில் அவர்கள் தாங்கள் நரக / பாதாளத்துக்கு தப்பி விட்டதாக நினைக்கின்றனர். (ஆனால் அவர்களில் அனேகர் தப்பினது நரகத்துக்கு மட்டுமே பாதாளத்துக்கு அல்ல என்பது என் வேத ஆராய்ச்சியில் நான் கண்டு பிடித்த விஷயம்.)

இந்த தரிசனத்தை சொல்வதன் மூலம் கிருத்துவை அறியாதவர்கள் ஒரு வேளை தொடப்படலாம். ஆகவே இந்த தரிசனத்தை பற்றி சொல்ல வேண்டியது அவர்களிடத்திலேயே. இதற்கு மாறாக கிருத்துவர்களிடத்தில் சொன்னால் கிண்டல், கேலியை தான் சந்திக்க நேரிடும்.
ஒரு சிலருக்கு இவனுக்கு மட்டும் தரிசனமா என்ற எரிச்சலும், பொறாமையும் வந்து அதனாலும் கேலி செய்வதுண்டு.

அடுத்ததாக அப்பர் கிளாஸ் தரிசனம் கண்டவர்கள்

தரிசனம் கண்டதாக பொய் சொல்பவர்கள் பாதாளம் / நரகம் பார்த்தேன் என்று சொல்ல மாட்டார்கள். ஏனெனில் அதற்கு மவுசு குறைவு. ப்ரலோகம் பார்த்தேன் என்றே சொல்வார்கள். ஆகவே பரலோகம் பார்த்தேன் என சொல்பவர்களில் யார் உண்மையானவர் என கண்டறிவது அவசியம். அவர்களை எப்படி அறிவது?

(தொடரும்) 


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

SANDOSH wrote:

இவ்வாறு சொல்பவர்கள் பெரும்பாலும் சொல்வது நரகத்தை பார்த்தேன் என்றோ, பாதாளத்தை பார்த்தேன் என்றோ அல்லது பரலோகத்தை பார்த்தேன் என்றோ இருக்கும். இப்படி சொல்பவர்கள் பெரும்பாலும் பொய் சொல்ல அவசியமில்லாதவர்கள்.

 


மிகவும் யதார்த்தமான நல்ல நிதாநிப்பு  சகோதரர்  அவர்களே. 

நான் பாதாளத்தை பார்த்தேன் என்று சொல்வதால் எனக்கு எந்த பயனும் ஏற்ப்பட்டு விடபோவது இல்லை. அதை வைத்துகொண்டு நான் ஐந்துகாசு கூட சம்பாதிக்க வில்லை. அனால் அந்த தரிசனங்களை நினைத்தாலே அடிமனதுவரை அசைகிறது கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது.

பொதுவாக விசுவாசத்தின் அடிப்படையில் செய்யும் ஊழியத்தை காட்டிலும் சில வெளிப்பாடுகள் அதுவும் பாதாளத்தை குறித்த வெளிப்பாடுகள் பெற்றவர்கள் ஜனங்களுக்காக மிகவும் பாரப்பட்டு ஜெபிக்கவோ பரிதபிக்கவோ அல்லது அதற்க்கான வழிகைளில் சிரமத்துடன் ஈடுபடவோ அதிகம் வாய்ப்பிருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.
 
நான் பரலோகத்தை பார்த்ததில்லை! அங்கு எப்படி இருக்கும் என்பதுபற்றி எனக்கு கவலையும் இல்லை. பரலோகம் என்ற  இடத்துக்கு மனிதர்கள் போகவேண்டும் என்ற எதிர்பார்ப்பைவிட பாதாளம் என்ற கொடுமையான இடத்துக்கு யாரும் போய்விடக்கூடாதே என்ற ஆதங்கம்தான் மேலோங்கி நிற்கிறது. அதற்காகவே நான் ஆண்டவரிடம் கண்ணீரோடு மன்றாடுகிறேன்.
 
ஆனால் அதை அறியாத அதைக்குறித்து வெளிப்பாடு இல்லாத தேவ ஊழியக்காரர்கள்கூட, அதை நம்பாதீர்கள் அது தேவையற்றது என்பது போன்ற கருத்துக்களை பரப்புவதோடு, சக ஊழியர்களை குற்றம் கண்டுபிடிப்பதில் குறியாக இருப்பதை நினைத்தால் மிகுந்த வேதனையாக இருக்கிறது. இவர்கள் பெற்றிப்பது என்ன  ஆவி என்பதே சந்தேகமாக இருக்கிறது.   
 
சாத்தனின் பிரித்தாளும்  தந்திரங்கள் எல்லா இடங்களிலும் அரங்கேறிவருகிறதே!
 

 



-- Edited by SUNDAR on Thursday 23rd of September 2010 11:05:27 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard