முன்பின் தெரியாத ஒருவருடன் உண்டான ஒரு பிரச்சனனையினிமித்தம் சிறு வாக்குவாதம் ஏற்ப்படுகிறது நன்மைவிட சிறியவரும் மிகுந்த நோஞ்சானுமான அவர், நம்மேல் எந்த தவறும் இல்லாத போதிலும், நாம் எதிர்பாராத நேரத்தில் நம்மை பளார் என்று கன்னத்தில் அறைந்துவிடார்
இந்த சம்பவந்த்தை கையாள நமக்கு பலவிதமான தெரிவுகள் இருக்கின்றன. அவற்றில் சில:
1. அடித்தவருக்கு உடனே திருப்பி அடி கொடுப்பது.
2."ஏன் என்னை அறைந்தாய்" என்று கேட்டு அவனை திட்டுவது
3. அதற்குமேல் எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்வது
4. உடனே அவரை மன்னித்து அவருக்காக ஜெபிப்பது.
5 இன்னொரு கன்னத்தில் வேண்டுமானால் அடித்துகொள் என்று திருப்பி காட்டுவது.
1. அடித்தவரை உடனே திருப்பி அடிப்பது:
இந்தவிதமான எதிர் வினைதான் இன்று உலகில் உள்ள அதிகமான சாதாரண உலக மனிதர்களால் தெரிந்துகொள்ளபடும் ஓன்று. அதுவும் நம்மைவிட சிறியவராக இருந்தால் கேட்கவே வேண்டாம் நன்றாக இரத்தம் வரும் அளவுக்கு அடித்து விடுவார்கள். காரணம் எதுவும் இல்லாமலேயே யாரை அடிக்கலாம் என்று கொதித்துபோய் அலையும் கூட்டத்தின் மத்தியில், இதுபோன்ற செயல்கள் நடந்தால் கேட்கவே வேண்டிய தேவை இல்லை! உடனே திருப்பி அடிகொடுப்பது நிச்சயம்! .
இவ்வாறு நடந்துகொள்ளும் அநேகரை பார்க்க முடியும்!
2.ஏன் என்னை அடித்தாய் என்று கேட்டு நீதி கேட்டு செய்து அவனை திட்டுவது:
அதைவிட சற்று மேலான இரண்டாம் நிலை, யாரையும் சட்டென்று கை நீட்ட விரும்பாத சில நல்ல மனிதர்கள் நீதியாக தான் அடிபட்டதர்க்கான காரணத்தை தெரிந்து கொள்ள விளைவது. அப்படி நீதியான காரணம் கிடைக்காதபோது அடித்தவனை திட்டி தீர்த்துவிடுவது. அல்லது சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ அதை செய்ய முயல்வது.
இவ்வாறு நடக்கும் சிலரை பார்க்கமுடியும்
3. எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்வது
இரண்டாம் நிலையை விட சற்று மேன்பட்ட இந்த மூன்றாம் நிலை. பொதுவாக எதிரியை எதிர்த்து நிற்க இயலாதவர்கள்தான் அவ்வாறு அந்த இடத்தைவிட்டு நகன்றுவிடுவார்கள். ஆனால். நம்மால் எதிர்த்து அடிக்க/ திட்ட முடிந்தும், வலிமை இருந்தும் எந்த ஒரு முயற்ச்சியும் எடுக்காமல் நாம் எங்கோ ஏதோ தவறு செய்திருக்கிறோம் அதானால் இந்து நமக்கு அடி கிடைத்திருக்கிறது என்று எண்ணி அந்த இடத்தை விட்டு நகர்ந்து போவது
இவ்வாறு நடந்துகொள்ளும் மிக சிலரை பார்க்க முடியும்!
உலகத்தார்களில்கூட நியாயமான பலர் மேல்கண்ட சில நல்ல நிலைகளை தெரிந்துகொண்டு நடப்பதை நாம் வாழ்வில் அறிந்திருக்கலாம்.
ஆனால் இங்கு நமது நிலை என்ன?
பிறரின் பாவங்களுக்காக தன்னையே சிலுவையில் கிழிக்க ஒப்புகொடுத்த ஆண்டவராகிய இயேசுவை வணங்கும் கிரிஸ்த்தவர்களாகிய நாம் இதற்க்கெல்லாம் ஒருபடி அதிகம் செய்து கிறிஸ்த்துவின் சாயலை வெளிப்படுத்த கடமைபட்டுள்ளோம் அல்லவா? .
4. அடித்தவரை உடனே மன்னித்து அவருக்காக ஜெபிப்பது.
அடித்தவுடன் திருப்பி அடிக்கவோ அல்லது திட்டவோ துடிக்கும் நமது மாம்சத்தின் நிலையை ஒடுக்கி, இந்த மேன்மையான நிலையை தெரிந்துகொண்டு அடித்தவருக்காக ஒருகணம் அவ்விடத்தில் ஜெபிபோமானால் நாம் கிறிஸ்த்தவர் என்பதை அடித்தவன் அந்த இடத்திலேயே புரிந்துக்கொண்டு நம்மை அடித்ததற்காக
வெட்கப்படும் நிலை நிச்சயம் ஏற்ப்படும்!
மத்தேயு 5:44 , உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
5இன்னொரு கன்னத்தில் வேண்டுமானால் அடித்துகொள் என்று திருப்பி காட்டுவது.
இந்த நிலை எல்லாவற்றிலும் மேலான நிலை என்றாலும் நம்மால் நிச்சயம் அவ்வாறு செய்வது இயலாது. ஆனால் தேவனின் ஆவியால் நடத்தப்படும் ஒருவர் உலகத்தை மறந்து தேவனோடு சஞ்சரித்து கொண்டு இருக்கும் ஒருவர் வேண்டுமானால் இதை செய்யலாம். ஆனால் நாமும் அவ்வாறு செய்யவேண்டும் என்று முடிவெடுத்து வாஞ்சித்து முயற்ச்சிக்கலாம்.
பவுல் அப்போஸ்த்தலரை பார்த்து பிரதான ஆசாரியன் அவன் வாயில் அடியுங்கள் என்று சொன்ன போது உடனே பவுல் "தேவன் உன்னை அடிப்பார்" என்றுதான் திருப்பி சொன்னார்.ஆண்டவராகிய இயேசுவை ஒருவன் கன்னத்தில் அடித்தபோது "ஏன் அடித்தாய்" என்றுதான் திருப்பி கேட்டார்.
காரணம் இந்த மாம்சமானது தேவனின் வார்த்தைகளுக்கு கீழ்படிய கூடாததாக இருக்கிறது என்று வேதமே அதற்க்கு பதிலை தருகிறது.
நம்மேல் எந்த தவறும் இல்லாதபட்சத்தில் மேலே சொல்லப்பட்ட ஐந்து நிலைகள் எந்த ஒன்றையும் தேர்ந்தெடுத்து செய்யும் உரிமை நமக்கு கொடுக்கப்படுகிறது. ஆகினும் கிறிஸ்த்துவை பிரதிபலிக்கும் நாம், புதிய சிருஷ்ட்டியாக இருக்கிறோம் என்று மார்தட்டும் நாம், நமது பழைய மாமிச கிரியைகளை சற்றேனும் ஒதுக்கி வைத்து, முடிந்த அளவு மேன்மையான ஒரு விழியில் இதுபோன்ற நிலைகளை கையாள பிரயாசப்படுவோமாக. அதற்காக அனுதினம் ஆண்டவரிடம் மற்றாடுவோமாக!
மற்றபடி ஆய்! பூய்! நான் கிறிஸ்த்துவை வணங்குகிறேன் என்று ஆர்ப்பரிப்பதில் எந்த பயனும் ஏற்ப்படபோவது இல்லை!
(என்னுடைய வாழ்வில் அதிகபட்சமாக எந்த தவறும் இல்லாமல் என்னை திட்டிய சிலரை பார்த்து ஒரு புன்முறுவல் செய்துவிட்டு கடந்துபோவது உண்டு, பல நேரங்களில் சிறு வாக்கு வாதத்தில் ஈடுபட்டுவிட்டு சற்று அப்புறம் நகர்ந்தவுடன் "நீ இவ்வாறு விவாதித்தது தவறு" என்று ஆவியானவரால் கடிந்துகோள்ளப்பட்ட அனுபவமும் உண்டு!
ஆனால் இது எதுவும் மேன்மையானது அல்ல என்றே கருதுகிறேன் இன்னும் மேன்மையாக கிறிஸ்த்துவை பிரதிபலிக்க வேண்டும் என்று இன்றே முடிவெடுத்து வாஞ்சித்து முன்னேறவே விளைகிறேன்).
தொடர்ந்து பார்க்கலாம்.......
-- Edited by SUNDAR on Thursday 23rd of September 2010 08:32:44 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
உலகில் நடக்கும் எல்லா செயல்களுக்குமே பலதரப்பட்ட தகுதிநிலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
உதாரணமாக தேர்வில் முதல் மாணவனாக வரவேண்டும் என்று படிப்பவர்களும் உண்டு! முதல் வகுப்பில் வரவேண்டும் என்று படிப்பவர்களும், எப்படியோ பாஸ் ஆகிவிட்டால் போதும் என்று படிப்பவர்களும் உண்டு.
அதுபோல் எப்படியோ பாதாளம் போகாமல் பரலோகம் போய் சேர்ந்துவிட்டால் போதும் என்ற எண்ணத்தோடு இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களும் உண்டு தேவனுக்கு பயன்படும் மிக மேன்மையான பாத்திரமாக இருக்கவேண்டும் என்ற வாஞ்சையோடு ஆண்டவரை தேடுபவர்களும் உண்டு. நாம் வாழும் நாளில் எப்படியாது சில ஆத்துமாக்களை ஆண்டவரிடம் சேர்த்துவிடவேண்டும் என்று துடிப்போடு செயல்படுகிறவர்களும் உண்டு!
பரலோகத்தில் கூட மிகப்பெரியவர் மிக சிறியவர் என்ற பாகுபாடுகள் உண்டு என்று வேதாகமம் நமக்கு போதிக்கிறது
இதில் நாம் எந்த நிலையில் இருக்க விரும்புகிறோம் என்பதுதான் இங்கு கேள்வி!
வேத புத்தகத்தில் ஆராய்ந்து பார்த்தால் எல்லாவித கருத்துக்களுக்கும் ஏற்றாற் போன்ற வசனங்கள் இருப்பதை நம்மால் பார்க்க முடியும்.
கொலை கொல்லை செய்யகூடாது என்று போதிக்கும் வசனங்களும் இருக்கிறது, கர்த்தரே கட்டளையிட்டு சிலரை கொலைசெய்யவும் கொள்ளையிடவும் கட்டளையிட்ட வசனமும் இருக்கிறது
தேவனுடைய வார்த்தைகளை கைக்கொள்ளவேண்டும் என்பதற்கும் பல வசனம் இருக்கிறது அதே நேரத்தில் மனிதனின் நீதியால் கிரியையினால் எந்த பயனும் இல்லை என்பதை சொல்லும் வசனங்களும் இருக்கிறது.
தசமபாகம் கொடுப்பதை அறிவுறுத்தும் வசனமும் இருக்கிறது. புதிய ஏற்பாட்டில் அப்படி ஒரு பிரமாணம் இல்லை என்பதை உணர்த்தும் வசனங்களும் இருக்கிறது.
யாரையும் குறை சொல்லகூடாது என்று போதிக்கும் வசனமும் இருக்கிறது அதே நேரத்தில் கடிந்து புத்தி சொல்லுங்கள் என்று கட்டளையிடும் வசனமும் இருக்கிறது.
தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம் என்று சொல்லும் வசனமும் இருக்கிறது பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் என்று சொல்லும் வசனமும் இருக்கிறது.
"கர்த்தரை பரீட்சை பார்க்க கூடாது" என்று சொல்லும் வசனமும் இருக்கிறது கர்த்தரை பரீட்சித்து பாருங்கள் என்று சொல்லும் வசனமும் இருக்கிறது.
பட்டயத்தை எடுத்தவர்கள் பட்டயத்தால் மடிவார்கள் என்ற வசனமும் உண்டு! வஸ்த்திரத்தை விற்று பட்டயத்தை கொள்ளக்கடவன் என்றுகூட போதிக்கும் வசனம் உண்டு
இதில் நாம் நமக்கு எடுத்துகொள்ள வேண்டியது வசனம் எது? என்று கேட்போமானால்
இவற்றில் மேன்மையானது எது என்பதை ஆராய்ந்து பாருத்து எடுத்து கொள்வதுதான் சிறந்தது! ஏதாவது சில வசனத்தை காரணம் காட்டி, நம்மை திட்டியவனரை திருப்பி திட்டுவதோ பலரை குறைகூறிக்கொண்டு திரிவதோ, பட்டயத்தை வாங்கி பயினுள் வைத்துகொண்டு அலைவதோ போயபெசிக்கொண்டு புறம்கூறி திரிவதோ ஒரு கிறிஸ்த்தவருக்கு மேன்மையான ஒன்றுதானா? என்பதை நாம் சற்று யோசிக்க வேண்டும்.
சாத்தான் மனிதர்களை இப்படித்தான் வசனத்தை காட்டியே தேவனுக்கு பிரியமில்லாததை செய்ய தூண்டுவான் என்பதற்கு ஆண்டவராகிய இயேசுவை அவன் சோதித்த நிகழ்ச்சி நமக்கு ஒரு அருமை யான பாடமாகவும் எச்சரிப்பின் செய்தியாகவும் உள்ளது.
அனேக அற்ப்புதங்களை செய்த நமதாண்டவர் இயேசு நாற்ப்பது நாள் உபவாசம் இருந்து மிகுந்த பசியோடு இருந்த அந்த நேரத்தில் கற்களை அப்பமாக மாற்றி சாப்பிடுவது ஒன்றும் பெரிய காரியம் அல்ல! அது தவறு என்று சொல்வதற்கு எங்கும் வசன ஆதாரம் இருப்பதுபோல் கூட தெரியவில்லை! ஆனால் இயேசு சாத்தான் சற்றும் எதிர்ப்பார்த்திடாத, அதைவிட எவ்வளவோ மேன்மையான ஒரு வசனத்தை ஆதாரம் காட்டி அவன் சொல்லுக்கு கீழ்படிந்து கற்களை அப்பமாக்கி உண்ண மறுக்கிறார்.
மத்தேயு 4:4அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
ஆ! நமது ஆண்டவரின் இந்த மேன்மையான பதிலை தியானிக்கும்போது எனக்குள் ஒரு மிகப்பெரிய விசுவாசம் உற்றேடுப்பது அறியமுடிகிறது. நாமும் அத்போன்ற ஒரு மேன்மையான வசனத்தை தேடி தெரிந்துகொண்டு சாத்தானின் தந்திரங்களை முரியடிப்போமாக.
கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்ட ஒவ்வெருவருக்கும் பரீட்சையில் பாஸ் என்பது உறுதியாகிவிட்ட ஓன்று! அனால் நாம் வெறும் பாஸ் மார்க்காகிய 35 மதிப்பெண்களை எல்லா சப்ஜக்டிலும் எடுத்து பாசாகினால் நமது அப்பா அம்மா எவ்வளது வேதனைப்படுவார்கள்? அதுபோல் ஆவிக்குரிய வாழ்வில் மிக கீழான நிலையில் இருக்கும் ஒருவரை பார்த்து நமது ஆண்டவரும் மிகுந்த வேதனைப்படுவார் என்றே நான் கருதுகிறேன்!
உலக நிலையில் ஒரு தட்டில் ஒரு 100௦ ரூபாய் கட்டு ஒரு 500௦௦ ரூபாய் கட்டு ஒரு 1000௦௦௦ ரூபாய் கட்டு வைத்து உங்களிடம் கொண்டுவது இது உங்குக்கு இந்த வருட போனஸ்! இம்மூன்றில் உங்களுக்கு எது தேவையோ எடுத்துகொள்ளுங்கள் என்று ஒருவர் கூறினால், நாம் நிச்சயம் மேன்மையான 1000௦௦௦ ரூபாய் கட்டை தேர்ந்தெடுக்கவே விரும்புவோம் (சரியான காரணம் இல்லாமல் இலவசமாக எதையும் வாங்ககூடாது என்பது வேறுவிஷயம்)
அதுபோல் ஆண்டவரின் காரியங்களாகிய வேத வசனங்கள் இரண்டுபுறமும் கருக்குள்ள பட்டயங்கள்! அது சொல்வதில் மேன்மையாந்தையே நமது தெரிவாக என்றும் ஏற்ப்போமாக! ஆண்டவருக்கு பிரியமில்லாத காரியங்களை செய்து கொண்டு அதை நியாயப்படுத்த துணியாதீர்கள் என்பது அன்பார்ந்த வேண்டுகோள்!
நன்றி!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)