என் வாழ்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை இங்கு கூறுகிறேன்.
நான் ஒருமுறை டைலர் கடைக்கு சென்று நான் தைக்க குடுத்த சட்டையை வாங்கும்படி சென்றேன். அதை நான் வாங்கும்போது இதற்கு அறுபது ருபாய் என்று அவர் என்னிடம் கூறினார். நான் ஏன் எனக்குமட்டும் இவ்வளவு அதிகமா சொல்றிங்க எல்லாருக்கும் அம்பது ருபாய்தானே வாங்கறிங்க என்று வாக்குவாதம்பண்ணினேன்.
அதற்கு அவர் அதலாம் இல்லப்பா எல்லாருக்கும் ஒரே ரேட்தான்னு சொன்னார். ஆனால் நானோ அதை பொருட்படுத்தமால் நீண்ட நேரம் வாக்குவாதம்பண்ணினேன். கடைசியாக சரி போ நான் இவ்வளவு சொல்லியும் நீ கேட்கமாட்ர சரி அந்த பத்து ரூபாயில் என்ன ஆகபோது நீயே என் கஷ்டத்த அனுபவினு சொல்லிட்டார்.
ஆ.. ஆ.. நாமதான் கடைசில ஜெயிச்சோம் என்று மனசுல சந்தோசத்துடன் வீட்டுக்கு சென்று அதை போட்டுபார்த்தேன். நன்றா இருந்தது. சற்று நேரம் சென்ற பின்பு ஜெபிக்கலாம் என்று அருகில் உள்ள எங்கள் சபைக்கு சென்றேன். கண்களை மூடி ஒருசில ஸ்தோத்திரங்களை கூட சொல்லியிருக்க மாட்டேன் எனக்குள் இருந்து பேசும் சத்தத்தை கேட்க முடிந்தது.
நீ செய்தது தவறு என்று..!
உடனே நான் என்ன செய்தேன் என்று யோசிக்க ஆரம்பித்தேன். நான் அப்படி பேசி இருக்க கூடாது என்று மறுபடியும் கேட்டது. நான் நினைத்தேன் இது நம்முடைய மனசாட்சியாக இருக்கும் என்று அதை பொருட்படுத்தாமல் மறுபடியும் ஜெபிக்க ஆரம்பித்தேன். அதே வார்த்தையை மறுபடியும் என்னை நோக்கி வந்தது. நான் உடனே அந்த சத்தத்தோடு பேச ஆரம்பித்தேன்.
எல்லார்க்கும் அம்பது ருபாய்தானே வாங்கறாங்க என்னிடம் மட்டும் அறுபது ருபாய் கேட்டாங்க அதனால்தான் நான் வாக்குவாதம் பண்ணினேன் என்று சொன்னேன். ஆனால் எனக்குள் இருந்த ஆவியானவரோ நீ என்ன சொன்னாலும் நீ செய்தது தவறு நீ போய் அவரிடத்தில் மன்னிப்பு கேட்டு பத்து ரூபாய் குடு என்று என்னோடு பேசினார் ஆனால் எனக்கோ மிகவும் கஷ்டமாக இருந்தது.
நான் இதை எப்படி செய்யமுடியும் நான் எந்த தப்பும் செய்யலையே அதுவும் இப்படி சண்டை போட்டுட்டு வந்துட்டு எப்படி போய் மன்னிப்புக் கேக்க முடியும் என்று மிகவும் தயங்கினேன் ஆனால் அவரோ நான் சொன்னதை செய்யாவிட்டால் நான் உன் ஜெபத்தை கேட்பதில்லை என்று கூறிவிட்டார். நான் மறுபடியும் பேச ஆரம்பித்தேன். ஆண்டவரே நான் அந்த பத்து ரூபாயை காணிக்கை பெட்டியில் கூட போட்டு விடுகிறேன் அல்லது நீர் யாருக்காகிலும் குடுக்க சொன்ன நான் குடுக்கிறேன் ஆனால் நான் திரும்ப போய் மன்னிப்பு கேட்டு குடுப்பது ரொம்ப கஷ்டமா இருக்கும் அவமானமாகவும் இருக்கும் என்று கூறினேன்.
ஆனால் அவரோ நான் சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை நான் சொல்லவதை செய்யாவிட்டால் நான் உன்னுடயை ஜெபத்திற்கு பதில் கொடுப்பதில்லை என்று கூறிவிட்டார்.
நான் என்ன செய்வது என்று கொஞ்ச நேரம் யோசித்து ஆவியானவருக்கு சத்தத்துக்கு கீழ்படிவதா அல்லது கவ்ரவம் பார்க்கிறதா என்று யோசித்தேன். கடைசியில் சரி என்ன நடந்தாலும் நடக்கட்டும் கீழ்படிவோம் என்று எண்ணி அந்த கடைக்கு திரும்ப சென்றேன்.
மிகவும் வெட்கத்துடனம் தயக்கத்துடனும்..! அவர் என்னை பார்த்து என்னவென்று கேட்டார் நான் அவரிடத்தில் நடந்த காரியங்களை சொல்லி மன்னிப்பு கேட்டு பத்து ரூபாயை குடுத்தேன். அவர் என்னை மிகவும் ஆச்சர்யமாக பார்த்தார் நான் திருப்த்தியாக திரும்பி வந்தேன்.
கண்களை மூடி ஆண்டவரே நீர் சொன்னபடியே நான் செய்தேன் என்று கூறினேன். இப்படி சொல்லி முடிபதற்குள் அளவில்லதா பிரசனத்தினால் கர்த்தர் என்னை நிரப்பினார். அந்த சந்தோசத்தை இப்போது நினைத்தாலும் என் மனம் மகிழ்கிறது. ஒருவேளை நான் கீழ்படிய மறுத்து இருந்தால் ஐயோ நான் எவ்வளவு பெரிய சந்தோசத்தை இழந்திருப்பேன்.
எனக்கு தெரிந்தவரை கர்த்தர் ஒருவார்த்தை சொன்னால் அது எதுவாய் இருந்தாலும் கீழ்படிதலே மிகவும் முக்கியம் என்று உணர்ந்தேன்.
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
நல்ல அருமையான பயனுள்ள சம்பவம் சகோதரரே. பதிந்தமைக்கு நன்றி. எனது வாழ்விலும் இதுபோல் அனேக நேரங்களில் ஆவியானவரால் கடிந்துகொள்ளப்பட்டு பின்னர் என்னை திருத்திக்கொண்டு இருக்கிறேன்.
தேவனின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கு செவிகொடுத்து கீழ்படியவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆனால் மனிதர்களோ முடிந்த அளவு ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்லி அவருக்கு கீழ்படியாமல் விலகவே பார்க்கின்றனர்.
ஆவியானவர் மிகவும் மென்மையானவர் ஒரு சில கணங்கள் வருத்தப்படும் அவர் நாம் பிடிவாதமாக அவர் சொல்லும் காரியாத்துக்கு கீழ்படிய மறுக்கும்போது போராடாமல் விட்டுவிடுவார். பின்னர் அதற்க்கான பிரதிபலனை நாம் நிச்சயம் அனுபவிக்கவேண்டி வரும்.
நம்மை கண்டித்து வழி நடத்தும் ஆவியானவரின் சத்தத்துக்கு கீழ்படிந்து நடப்பதே "ஆவியில் நடத்தப்படுதல்" என்னும் புதிய ஏற்பாட்டு பிரமாணம். அவர் பிறருடைய மனதுநோக பேசவும் சம்மதிக்கமாட்டார். ஆனால் இன்று ஆவியில் நடத்தப்படுகிறோம் என்று சொல்லும் அனேக விசுவாசிகள் பாஸ்டர்கள் செய்யும் செயல்களை பார்க்கும்போது அவர்கள் என்ன ஆவியில் நடத்தப்படுகிறார்கள் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது!
கீழ்படிதல் இல்லாத ஒரு மனிதனை வைத்து தேவனால் ஒன்றும் சாதிக்க முடியாது!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)