நவீன கிறிஸ்த்தவ உலகை ஆராய்ந்து பார்த்தால் வேறு எந்த மதத்திலும் இல்லாதஅளவு அனேக (சுமார் 2000௦௦த்துக்கும் மேற்ப்பட்ட)பிரிவுகள் இருப்பதை அறிய முடிகிறது.
இதற்க்கு காரணம் என்ன?
அனைவரும் ஒரே ஆவியால் நடத்தப்படுகிறோம் என்று சொல்கிறார்கள் ஆனால் ஒருவரின் கருத்து இன்னொருவருக்கு ஏற்புடையதாக இருப்பது இல்லை.
"ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் நிதானித்து
அறிகிறான்" என்று வசனம் சொல்கிறது ஆனால் சக சகோதர்களை தேவ ஊழியர்களை நிதானித்து அறிய முடியாமல் பிரிவுகள், போதனை குழப்பங்கள் நேரடி தாக்குதல்கள் போன்றவைகள் மலிந்து கிடக்க காரணம் என்ன?
இரண்டு ஆவிக்குரிய மனிதர்களிடம் ஒத்த கருத்தை பார்க்க முடியாத நிலை இருக்கிறது. அவரவர் தாங்கள் கருத்தை நிலைநாட்ட முயல்வதை அறிய முடிகிறது. இது ஏன்?
இறைவனே இவ்வாறு இடறுதல் கல்லை வைக்கிறாரா? அல்லது இது சாத்தானின் வேலையா?
ஆதி திருச்சபயிலேயே "பவுலை சேர்ந்தவன்" "அப்பொல்லோவை சேர்ந்தவன்" என்ற பிரிவினை உண்டாகிவிட்டது. ஆனால் பவுல் அந்த பிரிவினையை கடுமையாக எதிர்த்து எல்லோரையும் ஒன்றாகக முயன்றார் என்பதை அறியமுடிகிறது.
ஆனால் இன்றோ கணக்கற்ற சபைகள் கணக்கற்ற போதனைகள். எது சரியான சபை? என்பதை அடையாளம் காண்பதே அரிதான செயலாகபோய்விட்டது. அவரவர் ஏதாவது ஒரு வசனத்தை பிடித்துகொண்டு "நாங்கள்தான் சரியான வழியில் போகிறோம் மற்றவர்கள் எல்லோரும் சரியில்லை என்பதுபோல் போதிக்கின்றனர்.
உதாரணமாக "கிறிஸ்த்துவின் சபை" என்று பெயர் வைக்காதவர்கள் எல்லோரும் தவறான வழியில் இருப்பதாக சில ஊழியர்கள் கூறுகிறார்கள். சில மேதைகள்
சபைகளில் வாத்திய கருவி பயன்படுத்து வோரெல்லாம் தவறானவர்கள் போல் போதிக்கின்றனர். சில அதி மேதாவிகளுக்கு எல்லோரையும் குறைசொல்லி எழுதுவதே பிரதான வேலையாகிபோனது
சில பிரிவினர்கள் மற்ற சில பாஸ்டர்களுடன் சேர்ந்து தங்களை இணைத்து ஊழியம் செய்கின்றனர் ஆனால் சில பிரிவினரோ யாருடனும் கூட்டு சேர்வதில்லை. இப்படி புதுபுது பிரிவுகளுக்கும், புதுபுது கொள்கைகளுக்கும் கிறிஸ்த்தவத்தில் என்றுமே பஞ்சம் இல்லை.
"தேவன் ஒருவர்" "கிறிஸ்த்துவும் ஒருவர்" ஆனால் சபைகளுகுள்ளோ 2000௦௦௦ பிரிவுகள். ஏன்?
ஒரு ஆவியைதான் பெற்றிருகிறோம் என்று சொல்லும் இரண்டு பிரிவுக்குள், ஒரு கொள்கையும் ஒரேநோக்கமுமாகிய ஒன்றுமை வரமுடியாத காரணம் என்ன?
-- Edited by இறைநேசம் on Monday 30th of May 2011 09:35:10 PM